நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 மார்ச், 2011

விள‌ம்ப‌ர‌ங்க‌ள் - வாய் விட்டு சிரியுங்க‌ள்


சிரிப்பை த‌ரும் பொறுப்பான‌ எச்ச‌ரிக்கை விள‌ம்ப‌ர‌ம்




எச்ச‌ரிக்கை சாமியார்க‌ளை ந‌ம்பாதீர்க‌ள் (பெய‌ர் புராண‌ம் சூப்ப‌ர்ல‌)




மிக‌ அதிக‌ செல‌வில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விள‌ம்ப‌ர‌ம் (முடிந்தால் head phoneல் கேளுங்க‌ள்,.. அருமையான‌ இசை சேர்ப்பு)





எச்ச‌ரிக்கை : பெண்க‌ளை ந‌ம்பாதே க‌ண்க‌ளே பெண்க‌ளை ந‌ம்பாதே





வாய் விட்டு சிரிச்சாச்சா? ரைட்டு என‌க்கும் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது,..??

ரொம்ப நாளாச்சு பதிவெழுதி,.. (பதிவராய் இருப்பதைவிட பார்வையாளராய் இருப்பதில் ரொம்ப சந்தோசம்,..)

என்னன்னே தெரிலைங்க,.. வர வர மூளையே வேலை செய்ய மாட்டிங்கீது,.. சமீபத்தில் அப்படி பாதித்தவை,..

--------------------------------------------------------------------------------

நான் எப்பவுமே சொன்ன டைமில் ப்ரொஜெக்டை முடித்து கொடுக்காததால் எனக்கும் என் ஜெனரல் மேனஜருக்கும் சண்டை,.. ஒரு கட்டத்தில் இது தினமும் நடப்பது போலாகிவிட்டது,.. நான் இது பற்றி என் முன்னாள் ஜுனியரிடம் புழம்பிக் கொண்டு இருந்தேன்,..

"ஏன்தான் எனக்கு வர்ற தலைங்களெல்லாம் இப்படி இருக்கனுங்கன்னு தெர்ல,..ச்சைன்னு ஆகி போச்சு "

"விடுங்க சார், இதுக்கெல்லாம் டென்சன் ஆக கூடாது . நேத்துதான் நான் ஒரு ஜோக் படித்தேன்,..அதாவது பாஸோடு விவாதிக்கிறது பன்னியோடு சகதியில் சண்டை போடுவது மாதிரி,. ஒரு டைமுக்கு அப்புறம் நாம ச்சை நாம இந்த பன்னிகூட சகதியோட நிக்கிறோம்னு சகதியோட நினைப்போம்,. ஆனா அந்த பன்னி என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கும்"

"ஹ ஹ " சிரித்து வந்தேன்,.. மனசில்ல இருந்த பாரமெல்லாம் இறங்கிருச்சு,..

"என்னங்க,.." மனைவி ,..

பன்னிக்கதையை சொன்னேன்,..

"சுரேசுக்கு மொதல்ல நீங்கதானே பாஸ்,..""

"#$%$^%^&*#^*&*&^"

பல்ப் வாங்கினதக்கு அப்புறம் அது குண்டு பல்பாய் இருந்தால் என்ன? டியுப் லைட்டாய் இருந்தால் என்ன??

-------------------------------------------------------------------------------------------------------------
என் நண்பரின் மகன் வீட்டிற்கு வந்திருந்தான்,.. DAV யில் ரெண்டாவது படிக்கிறானாம் (அது ஏன் DAV DAV ன்னு எல்லாம் அடிச்சுக்கிராங்கன்னு தெர்ல),. நான் வீட்டில் இருந்து ஆப்பிள் பழங்களை எடுத்துக்கொடுத்தேன்,.

"அங்கிள் வேணாம்"

"யே,. பழம் சாப்பிடு உடம்புக்கு நல்லது"

"சரி,. கழுவி தாங்க,..தோல்ல கிருமிகெல்லாம் இருக்கும்"

ச்ச்ச்சை,.. அவமானம்,. கழுவி கொடுத்தேன்,..

"உங்களுக்கு??????"

" நான் ஆரஞ்சு சாப்பிடுறேன்"

எடுத்து சாப்பிட உட்கார்ந்தேன்,.. ச்ச்ச்சை,..கழுவலையான்னு அவன் கேட்டாமறுபடியும் அவமானம் ஆகிவிடும்,.. கழுவி விட்டு வந்தேன்,..

"அங்கிள்,..நீங்கதான் ஆரஞ்சு தோலை சாப்பிட மாட்டிங்களே,.. ஏன் கழுவி தண்ணியை வேஸ்ட் பண்ணிங்க ????

" Brilliant" வழிந்துவிட்டு வந்தேன்,..


நண்பன் வந்தவுடன் முழுக்கதையை சொன்னேன்,..

"தோலை கீழே போட்டவுடன் அதை மாடுகள் சாப்பிட்டால் அவை பாதிப்பாகும் சொல்லி சமாளிக்கலமுன்னு பாத்தேன்,.. அப்புறம் எதுக்குன்னு விட்டுட்டேன்,.."

" நல்ல வேளை, நீ சொல்ல வில்லை" இது என் நண்பன்

" ஏன்"

"மாடுங்க எதையுமே கழுவி சாப்பிடறதில்லைன்னு என் மகன் சொன்னாலும் சொல்லுவான்"

பல்ப் வாங்கினதக்கு அப்புறம் அது டியுப் லைட்டாய் இருந்தால் என்ன?? கலங்கரை விளக்கம் பல்ப்பா இருந்தால் என்ன??

கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது,..??

-------------------------------------------------------------------------------------------

சரி வந்ததுக்கு ஒரு நியூஸ் சொல்லிவிட்டு போறேன்,..

கீழே உள்ளதுதான் கல்யாணத்துக்கான உலக முத்திரை,.. நம்ப முடியலைல்ல?????



மறந்துவிடாமல் தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க,.. (வந்து ரெண்டு வருஷம் ஆனாலும் இப்போதுதான் தமிழ்மணத்தில் என் பதிவு வருகிறது,...)


.

திங்கள், 27 செப்டம்பர், 2010

பதிவுலக அருஞ்சொற்பொருள்

பொதுவாக நம் பக்கத்திற்கு வரும் புதிய பதிவர்களின் கஷ்டத்தை போக்க இந்த அருஞ்சொற்பொருள் சேவை,..

சொம்பு :
பதிவுலக பிரச்சனைகளில் நடுவில் மாட்டிக்கொள்ளும் அப்பாவியை துவம்சம் செய்யும் ஆயுதம். இரண்டு குரூப் டமால் டுமீள் என சண்டை போட்டுக் கொள்ளும் போது "நாமெல்லாம் சண்டை போட வேணாம் தல" என வரும் இவர்களை ரெண்டு க்ரூப்பும் சேர்ந்து காலி செய்துவிடும், சண்டைகளில் பஞ்சாயித்து பண்ண கையில் "சொம்பை" தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான் என வர்ணிப்பதால் இப்பெயர்க் காரணம் வந்தது.

ஆப்பு:
இப்படி ரொம்ப நல்லவனாக நாம் சமாதனத்தூதுவனாக செல்லும் போது நம் நண்பன் ஒருவனே காலை வாரிவிடுவான். இதன் பெயர்தான் ஆப்பு. சில நேரங்களில் நம் எழுத்து இடறி நாமே நம்மை வாரிக் கொள்வோம். இது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு,..

தோப்பு
தனியாக இது போன்ற சண்டைகளில் நாம் மாட்டிக்கொள்ளும் போது அங்கிருக்கும் மொத்த பதிவர் கூட்டமே நமக்கு சேர்த்து வைக்கும் எண்ணிக்கையிலடங்கா ஆப்புகளுக்கு தோப்பு என பெயர்,.. பொதுவாக தோப்பில் சிக்கி கொள்ளும் பதிவர் ஒன்று பதிவுலத்தைவிட்டு ஓடி விடுகிறார்,. இல்லை என்றால் தன் நிலை பிறள்கிறார் (பாருங்க ,.. நான் எப்படி டீசண்டா சொல்லுறேன்)

பின்னூட்டம்
ஆப்பு வாங்குவதற்கு/வைப்பதற்கு நாம் பயன்படுத்தும் உளி. இது முழுக்க ஒரு பதிவை படித்தபின் தமிழீஷ் ஓட்டைத் தவிர இதையும் சன்மானமாக அளிக்க வேண்டியது. ஆனால் பலர் படிக்காமலேயே எழுதி வைத்துவிட்டு செல்வதுதான் கொடுமை. இதைதான் ஆப்புடன் கூடிய பல்பு என பதிவுத்துறை வர்ணிக்கிறது (அதாம்பா,.. பதிவர்கள் இருக்கும் துறை). யாருக்கும் ஆப்பு வைக்காமல் தன் வருகையை மட்டும் பதிவு செய்வதை "மீ த ப்ர்ஸ்ட்" என வரையரை செய்யப்படுகிறது (burst இல்ல first,.. வந்த உடனே ஒரு மனுஷன் burst ஆனா என்னவாகிறது),.. இதன் மூலம் (அட,.ச்சை,.. அதாம்பா origin) என்னவென்றால் முதல் காலத்தில் பின்னால் (இது பேக் சைடு இல்ல) குத்தி குத்திக் காட்டி பதிவர்களை ஊக்கப்படுத்தியதால் பிற்காலத்தில் இது மறுவி பின்னூட்டம் என அழைக்கப்படுகிறது. (ஷ்ஷ்ஷ்ப்பாடா,. மூச்சு வாங்குது)

மொக்கை
ஒரு பதிவரால் ஹிட் ஆகுமா/ ஆகாதா என சந்தேகத்துடன் எழுதும் பதிவு. ஆனால் பதிவுலக நடைமுறைகளின்படி (அப்படின்ன இன்னாபா??) இவை ஹிட் ஆகிவிடும். இதன் மூலம் எப்படியென்றால் முதலில் பதிவுகளை அனுபவம் இல்லாமல் பெரிதாக (அதாம்பா மொக்கையாக) எழுதிவிடுவர், அது பெரும்பாலும் ஒத்தை ஓட்டுடன் சொத்தையாக நிற்கும்.

தங்கமணி
பதிவுலகத்தால் துவைத்துப்போடப்படும் விவரமான அப்பாவி மனைவிமார்கள். (ஆனால் வீட்டில் எல்லாத்துணியையும் துவைப்பது நம் பதிவர்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே,.) இதற்கான பெயர்காரணம் குறித்து முறையான ஆதாரங்கள் இல்லை,.. ஆனால் வீட்டில் உள்ள மனைவிமார்கள் அடிக்கடி "தங்கம்" வாங்க "மணி" கேட்பதால் தங்கமணி இந்த பெயர் வந்திருக்கலாம்,.. (இதில் expert நம்ம பதிவர் ஆதிதான்,.. சான்சே இல்ல,. அவரின் கற்பனை தங்கமணி கதைகளுக்கு நான்/என் அலுவலக நண்பர்கள் அடிமை என்றே சொல்லலாம், நேரம் கிடைத்தால் புது பதிவர்கள் அங்கே விஜயம் செய்யுங்கள்,. தானாகவே எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்)

பிரபலப்பதிவர்
இது மிகமிக முக்கியம் நண்பர்களே,.. இவர் பதிவர்களுக்கு முன்னோடியாக பதிவுலகத்தால் கருதப்படுகிறார். ஆனால் செயல்கள் எல்லாம் பின்னால் இருந்து நகர்த்துபவையாக இருக்கும். இவர்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என அரிச்சுவடிகளில் (அரிச்சுவடியா? ஆத்திச்சூடியா,.. அய்யயோ சரியா தெர்லயே) தேடிப்பார்த்த போது இவர்கள் போற இடமெல்லாம் பிராபலம் வருவதால் பிராபலப்பதிவர், பிராபலபதிவர் என அழைக்கப்பட்டு பின்னர் தொழில்னுட்ப வளர்ச்சியால் பிரபலப்பதிவர்கள் ஆனார்கள்,..

இவர்கள் இல்லாமல் மூத்தபதிவர்கள் என்ற வகை உள்ளது. இவர்களில் இரண்டு பிரிவு உள்ளது. ஒன்று வயதான பதிவர்கள் (மரியாதைக்காக யாரும் இவர்களை ஒண்ணும் சொல்லமாட்டார்கள்,..), இன்னொன்று 2007ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள். வருஷத்திற்கு ஒரு 10 பதிவைப் போட்டுவிட்டு பாத்துக்கப்பா,.. நான் ஜெயிலுக்கு போய்ட்டேன், ஜெயிலுக்கு போய்ட்டேன்,, நானும் ரௌடிதான் (பதிவர்தான்) என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் ஒரு பதிவு போட்டாலும் சும்மா நச்சுன்னு போடுவாங்க,.. நேரப்பற்றாக்குறையாலும், தங்கமணிகளின் தொந்தரவாலும் இவர்கள் இப்படி பாதி பதிவராகவும், முக்கால்வாசி வாசகராகவும் ஆகிவிட்டார்கள்.

கவிஜ
இது கூட மிக மிக முக்கியம். கிட்டதட்ட மனசாட்யே இல்லாமல் எல்லா பதிவரும் கைவைக்கும் இடம் இதுதான். (நான் கூட அந்த கொடுமையை இரண்டு முறை செய்திருக்கேன்,. நல்ல வேளை ஹிட் ஆகாததால் யாரிடமும் " ஹிட்" ஆகாமல் தப்பித்தேன். சில நேரங்களில் கவிதையின்பால் உள்ள ஆர்வக்கோளாற்றில் நண்பர்கள் கவிதையை விளக்கம் கேட்டு "இது கூட தெர்ல" என பெரிய தோப்பு (விளக்கம் மேலே) வாங்கிய அனுபவம் கூட உண்டு). இதற்கு உள்ள ஒரே பிளஸ்பாய்ன்ட் இப்படிதான் இதை எழுத வேண்டும் என்ற எந்த எந்த வரையரையும் இல்லாதது. இப்போது நம் புத்திசாலி பதிவர்கள் படங்களில் வந்த நல்ல பாடல்களையே பதிவாய் போட்டு கவிதை எபக்டில் பேமசாகி விடுகிறார்கள். நான் கூட அப்படி போடலாம் என இருக்கேன் யாராச்சும் சாப்ட் காப்பி இருந்தா என் மெயிலுக்கு அனுப்பிவையுங்க,.. நான் எப்படியாச்சும் அதை கஷ்டப்பட்டு பதிவாக்கிவிடுகிறேன்,..
இதற்கான பெயர்காரணம் மிக எளிது,. தன் படைப்பு கவிதை என உறுதியாக நினைக்கும் புலவர்கள் தன் படைப்பை கவிதை என்றே அழைக்கிறார்கள். ஆனால் சிலர் இதை போய் நாம் கவிதைன்னு சொல்லலாமா?? நீதி தாங்குமா,..செங்கோல் வீங்குமா என நினைத்துவிட்டு அதை கவித, கவிஜ, கவி, கவித்தை (இவர் வித்தக கவிஞராம்,. அதனால் தன் படைப்பை இப்படி அழைக்கிறார்,.நான் கூட குரங்காட்டியா இருந்து கவிதை எழுத தாவிட்டார்னு நினைச்சேன்,..) என பயந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழைக்கிறார்கள்.

பெயரில்லா
பழம் தின்னு கொட்டை போட்ட பதிவர்களையே சும்மா நடு நடுங்க வைக்கும் வினையூக்கிகள் (அதாம்பா catalyst),.. இதன் பெயர்காரணமும் மிக சிம்பிள்.பெயரே இல்லாமல் வந்து பேர் போனபதிவர்களின் பேரை நாறடித்ததால் இந்த பெயர். பெயரில்லாங்கற பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல,..

ங்க்கொய்யால,.
சமீப காலமாக பதிவுலகில் பயன்படுத்தப்பட்டாலும் இதன் மூலமும் அர்த்தமும் இப்போது தெரியவில்லை. இதற்கு நம் பதிவர் கூட்டம் எனக்கு உதவும் என நினைக்கிறன்,..


.

வியாழன், 23 செப்டம்பர், 2010

என்ன ஒரு ஒற்றுமை???

சிவகாசியில் ஆதி காலத்தில் போக்கிரியாய் ஒரு அழகிய தமிழ் மகன் சுத்திக் கொண்டிருந்தார். குருவி பிடிக்க வில்லு எடுத்துக்கொண்டு ஒரு நாள் வேட்டைகாரனாய் சதுப்புநில காட்டிற்கு சென்றார். காட்டில் இருந்த அனைத்தும் வில்லையும், வேட்டைக்காரனையும் பார்த்து பயந்து ஓடிவிட்டன.

இந்த முறை உஷாரான அவர் காட்டைவிட்டு கடலுக்கு படகில் சுறா பிடிக்க சென்றார். முடியுமா அவரிடம்? சிக்கியது ஒரு சுறா. நண்பகலில் "சன்" வெளிச்சத்தின் உதவியோடு இந்த சுறாவாவையாவது பிடித்துவிடலாம் என நப்பாசையோடு இழுத்துப்பார்த்தார் முடியவில்லை. கிழிந்ததுதான் மிச்சம் நைலான் வலை,.. ஒரு கட்டத்தில் உதவி தந்த தந்த சன்னும் ஓடிப்போக இருட்டில் தனியே படகுடன் நின்றார். இருக்கிற ஒரே ஒரு படகையும் விட்டுவிடக்கூடாதென அதற்கே இப்போது காவலனாய் இருக்கிறார் ஒரே ஒரு வேலாயுதத்தை வைத்துக்கொண்டு கடும் கோபமாய்,... "ஆடுங்கடா என்னை சுத்தி,.. நான் அய்யனாரு வெட்டுக்கத்தி",...

எப்போது விடியும்????,. (அவருக்கல்ல நமக்கு,..)

மேலேயுள்ள கதைக்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தமில்லை. படத்தில் உள்ளது சுறாவையல்ல,.. திமிங்கலத்தையே பிடித்த ரியல் ஹீரோஸ்,..






ஆக மொத்தம் சிவகாசியில தோட்டா வாங்கி, குருவிக்காரண்ட்ட துப்பாக்கியை புடுங்கி, காவலன் மூலமா நம்மை மறுபடியும் சுட்டுடாங்கப்பா,..

செத்து செத்து விளையாடுறதே நம்ம பொழப்பா போச்சு,..

.

வியாழன், 16 செப்டம்பர், 2010

நமக்கு காதல் வந்து விட்டதை எப்படி தெரிந்து கொள்வது???

நம் காதலுக்கு நம் காதலி ஓகே சொல்றது இருக்கட்டும். நாம் காதலில் விழுந்துவிட்டோம் என்பதை நாமே எப்படி தெரிந்து கொள்வது???

  • மனசு ஒரே பக்கம் சுத்திக் கொண்டிருக்கும். அது ஒரு பிகரின் பக்கமாக இருக்கவேண்டும் என சொல்ல வேண்டியதில்லை. துரதிர்ஷ்டவசமாக மூன்றாம் நபரின் கண்களுக்கு அந்த பிகர் பேய் மாதிரி இருந்தாலும் அது பற்றி கவலையில்லை.
  • நண்பர்கள் தொடர்பு குறையும்.அதற்காக பிகருடன் தொடர்பு அதிகரித்துவிட்டது என அர்த்தமில்லை. பிகருடன் எப்படி பேசுவது என்ற யோசனையில் காலத்துடன் நாம் தனித்திருக்கும் நேரம் அதிகரிக்கும். மூளை முழுக்க அதுக்கு மட்டுமே செலவழிக்கப்படுவதால் படிப்பிற்கும் நமக்கும் தொடர்பு அத்துப்போகும். தேர்வில் முட்டை வாங்கி அதை வேக வைத்து சாப்பிட்டாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. ஆகையால் வகுப்பில் முதல் இடத்தில் வருவோம், கடைசியிலிருந்து!!!!!!!!!!!.

  • காதலியுடன் தொத்திக்கொண்டே செல்லும் அவள் தோழி பேயாக தெரியும். எப்போதோ தனியே வரும் நம் ஆளுடன் பேசலாமெனப் பார்க்கையில், நம் கூடவிருக்கும் நமது நண்பர்கள் நாயாக தெரியும்.

  • நண்பர்களுக்கு தொத்தலாக தெரிவது நமக்கு ஸ்லிம்மாக தெரியும். நண்பர்களுக்கு தொப்பையாக தெரிவது நமக்கு கட்டையாக தெரியும். நமக்கு அழகான மாதுளை தோரணாமாக தெரிகிற பற்கள் நண்பர்களுக்கு கூரான மாவிலை தோரணமாக தெரியும். நமக்கு மின்னலாக தெரிகிற பார்வை நண்பர்களுக்கு 1.5 பின்னமாக தெரியும். நமக்கு பொழிவான நிலவாக தெரிகிற முகம், நண்பர்களுக்கு மலிவான டாஸ்மார்க்காக தெரியும்,.. இப்படி நிறைய்ய இடம்மாறு தோற்றப்பிழைகள்.


  • மணிக்கணக்கில் காத்திருப்போம், நிறைய்ய்ய்ய பொய் சொல்வோம், அடிக்கடி முகம் கழுவி கண்ணாடி பார்ப்போம், தனியாக சிரிப்போம், பொய்யாக கோபப்படுவோம். மெய்யாக பைத்தியமாவோம். பசிக்கும் ஆனா சோறு இறங்காது, இரவு வரும் ஆனா தூக்கம் வராது,..தூக்கத்தில் முனங்குவோம், நேரத்திற்கு தூங்கமாட்டோம்,.. ஆனா நேரத்திற்கு விழிப்போம், பல் தேய்க்கப்போவோம் ஆனாலும் மறந்து குளித்துவிட்டு வருவோம். பரிட்சை எழுத போவோம் ஒண்ணும் தெரியாமல் முழித்துவிட்டு வருவோம்.


  • மனசு பட்டாம்பூச்சியாய் சிறகை விரிக்கும். பர்சு கொட்டாங்குச்சியாய் இழந்து நிற்கும்.


  • நேற்று இனிப்பான கனவாக இருக்கும், இன்று படபடக்கும் பட்டாம்பூச்சியாக இருக்கும், நாளை ,.???? அதைப்பற்றி என்ன கவலை,..




(பி.கு இந்த கவலை இல்லைன்னா கண்டிப்பா உங்க காதல் கைகூடும்,... ஏன்னா அந்த எதிர்கால கவலைல்லதான் நிறைய லவ்வு புட்டுக்குது,..)

ஆக மொத்தம்,..

மொபைலில் சார்ஜ் இருக்காது, airtel சிம்மில் பைசா இருக்காது,..வகுப்பில் வருகை இருக்காது, அதனால் பரிட்சையில் மார்க் இருக்காது, பேச்சில் உண்மையிருக்காது, நாக்கில் சத்தியம் இருக்காது, ஆனால் ஆச்சர்யம் வாயில் நாற்றமிருக்காது,. பர்சில் பணமிருக்காது, நெஞ்சில் பயமிருக்காது,..



இந்த இல்லை எல்லாம் ஆமாவா? அப்படின்னா சாரி,.. நீங்க லவ்வுதான் பண்றீங்க,..

உங்களுக்காக ஒரு பிகர் பண்ணிக்கிட்டு இருக்கு.கிளம்புங்க,.. நான் எப்ப yahoo mail வந்தாலும் என்னை டிஸ்டர்ப் பண்ர இந்த பொண்ணு கூட கார்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்துட்டு உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்றேன்.

திங்கள், 20 ஜூலை, 2009

கூகுள் என்ஜினியரிங் - சுவாரஸ்ய பதிவு

எல்லோரும் சுவாரஸ்ய பதிவு, சுவாரஸ்ய பதிவுன்னு எழுதி தள்ளுராங்களே,. அதுக்கு விருது வேற வாங்கி கலக்குறாங்களேன்னு நினைச்சுகிட்டு இருக்கிறப்ப செந்தாழல் ரவியின் விருது என் அன்பிற்குரிய பதிவாளர் திரு எவனோ ஒருவன் வழிமொழிதலின் காரணமாக எனக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவருக்கு எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

இதன் காரணமாக எனக்கு ஒரு வேட்கையும், உற்சாகமும் தோன்றியது. இது வரை எப்படி எழுதினாய் என்பது முக்கியமில்லை. இனிமேலாவது ஒழுங்காய் எழுத வேண்டும் என தோன்றியது. அதன் காரணமாக மிக,மிக,மிக யோசித்தேன். எல்லோரும் டெக்னிக்கல் பதிவு போடுகிறார்கள்,.. நாமும் ஏதாவது போடலாமே என தோன்றியது. ஆனால் அதற்கு ஏதாவது டெக்னிக்கலாக ஏதாவது தெரிந்திருக்க வேண்டுமே என யோசித்த போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எல்லாரையும் போல் SAP, ஜாவா, சுமத்ரான்னு ஓவராக போக கூடாது, என் அறிவுக்கு எட்டியதாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் எல்லோருக்கும் பலனளிப்பதாகவும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்த போதுதான் எனக்கு கூகுள் நியாபம் வந்தது. எங்கள் பொறியியலில் எந்த ஒரு சிக்கலுக்கும் நாங்கள் விடை நாடி செல்வது கூகுள். ஒரு கேள்வியை நீங்கள் தூக்கி வீசினால் அது ஓராயிரம் பதில் தரும். இப்படி கூகுள் மூலம் நாங்கள் உருவாக்கும் என்ஜினியரிங், கூகுள் என்ஜினியரிங் என எல்லோராலும் அழைக்கப்படுகிறது (ஹி ஹி தலைப்பு வந்துருச்சு).

எனக்கு இருக்கும் தலையாய பிரச்சனை கடவு சொல்லும், ரகசிய குறியீடும் (அதாங்க user name, password). ரகசிய குறியீட்டை நான் அடிக்கும் போது யாராவது பார்த்துவிடுவார்கள் என பீதியின் காரணமாக நான் தப்பு தப்பாய் அடித்து நிறைய அக்கவுண்டுகள் காலியாகிவிட்டன. எனவே இதையே நம் தலைப்பாக கொள்ளலாம் என நினைத்து தேடி அழைந்தபின் கூகுளினால் எனக்கு அட்டகாசமான பதில்கள் கிடைத்தன. இவை எனக்கு எளிய முறையாகவும், எல்லோருக்கும் புரியும்படி ஒரு டெக்னிக்கல் பதிவு போட வாய்ப்பாகவும் அமையும் என்பதால், இந்த வழி முறைகளை கீழே இணைத்துள்ளேன். எல்லோரும் படித்து உங்கள் பார்வைகளை பகிரலாம். ஆனால் ஒரு நிபந்தனை, அவை கீழே சொன்னது போல் எளிய முறையில் இருக்க வேண்டும்,.. ஆமா,..

முறை ஒன்னு

நீங்கள் கீ பேடை மறைத்துவிடுங்கள், யாராலும் பார்க்க முடியாது.







முறை ரெண்டு

நீங்கள் மானிட்டரை மறைத்து விடுங்கள், ஏற்கனவே கீ பேடும் மறைந்து இருப்பதால் உங்களின் ரகசிய குறியீடு மேலும் பாதுகாப்பாகிறது.





முறை மூணு

இது மிக மிக பாதுகாப்பான முறை. இதன் மூலம் உங்கள் ரகசிய குறியீட்டை நீங்களும் உங்கள் மானிட்டரும் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் இந்த முறை வலுவானதாக இருக்கிறது. இதில் என்ன ஒரு வசதி என்றால் நீங்கள் யார் என்பது கூட தெரியாது. இதனால் நீங்கள் என்ன வேணாலும் பார்க்கலாம். இந்த முறையின் காரணமாக நீங்கள் இரட்டை பலனை அடைகிறீர்கள் (technically speaking duel benefit).











என் டெக்னிக்கல் பதிவிற்கு என் ஆலோசராக இருந்த பதிவர் பரட்டைக்கு என் நன்றி.




அடுத்ததாக நான் சுவாரஸ்ய விருதை வழங்குவது மூவருக்கு,..

1. கலகலப்பிரியா,.. ( பாரதியின் தங்கை, அக்கினி குருதி தெரிக்கும் இவர்களின் கவிதைகளுக்கு நான் அடிமை)
2. சாதிக் அலியின் தமிழ் குருவி (பதிவுகள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என நினைக்கும் பதிவுகளுக்கு சொந்தகாரர்)
3. ஆகாய நதி ,.. (எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வை பக்கத்தில் நடப்பது போல் எழுத்தில் கொண்டு வரும் திறமைசாலி)

என் வாழ்த்துக்கள், நண்பர்களே,..


இந்த பதிவு சுவரஸ்யமாக இருந்துச்சுன்னு நம்புரேன்,.. இதை நம்பாதவர்கள் என் முன்னால் உள்ள பதிவிற்கு செல்ல பரிந்துரைக்கிறேன்,..

மீ ப்ர்ஸ்டு



பெத்த மனசு


எவனோ ஒருவனிற்கு மீண்டும் என் நன்றிகள்.




வியாழன், 16 ஜூலை, 2009

மீ த ப்ர்ஸ்டு

அது ஒரு கோடை காலம்,.. நானும் என் நண்பரும் கொடைக்கானல் சென்றோம். அதன் மலைகளையும், காடுகளையும், மற்றும் எல்லா அழகையும் ரசித்துக் கொண்டே வந்தோம். என் நண்பரும் பதிவர் மாதிரி. அவருக்கும் என்னை மாதிரியே பின்னூட்ட வியாதி உள்ளது. அவர் எழுதிய பின்னூட்டங்களை சேர்த்துப் போடாலே 100 பதிவை தாண்டிவிடும். அவரிடம் நான் அடிக்கடி கேட்பேன், "இவ்வளவு பெரிய பின்னூட்டம் போடுற நீங்கள் ஏன் பதிவுகளை அள்ளித் தெளிக்க கூடாது?

"அடே ஊருல நிறைய பேரு சோறாக்கிட்டு எல்லாரும் எல்லாரும் வாங்கன்னு சொல்லிட்டு இருக்காய்ங்க,.. அவிங்க மனசு கஷ்டப்படக்கூடாதுல, அதான் போய் சோறு தின்னூட்டு மொய் வச்சிட்டு வர்ரேன்"

"சரி மச்சான் நீ சொன்னா சரியாதான் இருக்கும், பதிவை படிச்சவுடனே பின்னூட்டமே எழுத தோணல, ஆனா என்ன பண்ணுவ"

"கேளு, இந்த மாதிரி",. கீழே குனிந்து மண்ணில் போட்டுக் காட்டினார்,.
:)

:)))))))))))))))))

:D

"அப்புறம்"இது நான்தான்

:(


:((((((((((((((


"எல்லாம் சரி, இதைவிட கொஞ்சம் பெருசா எழுதனும்னா??"

"அவ்வ்வ்வ்வ்வ்"

"என்ன படிச்சொனே வாந்தி வருதுனு சொல்றீயா?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,.."

"என்னா மச்சான் ரொம்ப வாந்தி வருதா??"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், வேணாம், நான் அழுதுறுவேன்,.." வடிவேலு மாதிரி அழுதுக்காட்டினார்.

"ஓ அந்த அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா"

"சரி, பதிவு உண்மையிலேயே நல்லா இருக்கு,.. என்ன எழுதுவ?"

"அருமை, அற்புதம், கலக்கிட்டிங்க தல, கலங்கிட்டோம் தலைவா, பாராட்டுகள் தலை, சூப்பர் பாஸ், நல்லாயிருக்கு, அருமையான பதிவு, பெயர் சொல்லும் பதிவு, அழுகை வருது, சிரிச்சு சிரிச்சு வாயெல்லாம் வலிக்கிது, பக்கத்துல இருக்கவனுக்கு வயிறெல்லாம் வலிக்குது, ஹா ஹா ஹா. ஹி,ஹி,ஹி, ரைட்டு., ரொம்ப ரைட்டு, கலக்கல்.அடிச்சு ஆடுங்க!, சிங்கம் கிளம்பிடுச்சு,"

"என்ன மச்சான் அங்க சத்தம்"

"மாப்பிளே, யெதோ யான நிக்கிற மாதிரி தெரியுதுடா"

"அடே ஆமாண்டா, அய்யோ ஓடுறா, ஓடுறா,

"பள்ளம், பள்ளமா பாத்து ஓடுறா, அப்பதான் யான தொறத்தாது"

"சரிடா, சரிடா,."

ஓடினோம். எங்களுக்கும் யானைகளுக்கும் கொஞ்சம் இடைவெளி அதிகரித்து கொண்டு இருந்தது,.. (இடைவெளி என்றால் மெரினா கடற்கரை ரோட்டிலிருந்து கடல் அலை உள்ள தூரம்)

என் நண்பர் கொஞ்சம் பாசமாக வளர்ந்தவர் (அப்படினா தொப்பை ஜாஸ்தினு அர்த்தம்) என்பதால் அவரால் ஓட முடியவில்லை. பக்கத்தில் உள்ள குகை போல புதரில் பதுங்கிவிட்டார். அது மிக சின்ன இடம். பக்கத்திலேயே நானும் பதுங்கினேன். அந்த இடத்தில் நான் தான் முன்னாடி இருந்தேன். "அய்யோ யானை மிதித்தால் நம்மைதானே முதலில் மிதிக்கும்" இவன் வேறு பக்கத்தில் நீராவி ரயில் மாதிரி புஸ் புஸ்சென்று மூச்சு வாங்கி கொண்டிருக்கிறான். "ஆகா, இவன் பக்கத்தில் உக்காந்தா பாம்பு படமெடுத்தா கூட தெரியாது,.. ஓடிட வேண்டியதுதான்"

"மச்சான் நான் மரத்துல ஏறி உட்கார்ந்துர்ரென்"

"மாப்ளே எனக்கு மரமேற தெரியாதுடா"

"அதான் எனக்கு தெரியுமே"

நான் சத்தமில்லாமல் வேகவேகமாக சரசரவென பக்கத்தில் இருந்த ஆல மரத்தில் ஏறினேன். நான் ஏறியதை கண்டு மரத்தில் இருந்த குருவிகள் கீஸ்கீச்சென கத்திக் கொண்டு பறந்தன. பறவைகள் சத்தம் கேட்டு மூணு யானைகள் எங்கள் பக்கம் வந்துவிட்டன. எனக்கு கொஞ்சம் தொலைவிலும் நண்பருக்கு ஒரு ஐந்து அடியிலும் அவை இருந்தன. நண்பர் குகை புதரில் இருந்ததால் அவ்வளவாக தெரியவில்லை. இப்போது எனக்கு ஒரு SMS வந்தது. நம் பின்னூட்ட நண்பர் அந்த டென்ஷனிலும் SMS அனுப்பினார்.

"மீ த ப்ர்ஸ்டு"

யானைகளுக்கு படிக்கவா தெரியும். என் மொபைல் சத்ததை கேட்டு விரு விருவென என் மரத்திற்கு கீழே வந்தன. எனக்கு உதற ஆரம்பித்துவிட்டது. எனக்கு பயத்தில் பாத்ரும் வருவது போல் இருந்தது. வேறு வழியில்லை. அடிச்சிட வேண்டியதுதான். மொபைலில் அனுப்பி வைத்தேன்

"ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

நான் பின்னூட்ட நண்பருக்கு அனுப்பிய SMS எப்படி யானைகளுக்கு தெரிந்தது. பரவாயில்லை நல்ல ரிங் டோன்.

"ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்கங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கங்"







சனி, 4 ஜூலை, 2009

நடிகையின் படம் வரைந்து பாகங்களை குறி


எல்லோரும் பெண்களை தெய்வமாக வணங்கி கொண்டிருக்க இந்த பாலாபோன சினிமா ("நான் கடவுளை" சொல்லவில்லை) மட்டும் பெண்களை எப்படி எல்லாம் கொடுமை படுத்துகிறது என பாருங்கள்.

நம் பதிவர்கள் நிறைய பேர் சின்னஞ்சிறுவர்கள் என்பதால் பொது அறிவிற்காக (வழக்கம் போல் அறிவிற்கு மரியாதை) ஒவ்வொரு பகுதியின் பலனையும் கொடுத்து உள்ளேன்.
(வண்ணங்களின் எண்ணம் : ஊதா பொது பலன். கறுப்பு சினிமா பலன்)




பின் குறிப்பு : இடப்பற்றாக்குறையால் (???) நிறைய பாகங்களை விட வேண்டியதாகிவிட்டது. எனதருமை ரசிகப் பெருமக்கள் (4 பாலோரை
வச்சிக்கிட்டு ரசிகப்பெரு மக்களாம்) மன்னித்தருவாள்வராக,..

ஆண்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம். பின்னலேயே இது போலவே நடிகர்களுக்கும் வருகிறது. அது மொளகாயில் வருத்தெடுத்த பெப்பர் சிக்கன்.

(ம்ம்ம்ம்ம்ம் பாவாடை தாவணியெல்லாம் படத்தில்தான் பார்க்க முடிகிறது. மேலேயுள்ள பூமிகா படம் சூப்பர்ல,..)

செவ்வாய், 2 ஜூன், 2009

உங்கள் பதிவு பிரபலமாக வள்ளுவன் காட்டும் வழிகள்

ஆற்றல் அழிவின்மை விதி (நன்றி : 8ஆம் கிளாஸ் அறிவியல் நன்றாய் எடுத்த ஆசிரியர்) எப்படி எல்லா இடங்களிலும் பொருந்துமோ அதைப் போலவே 2000 வருடங்களுக்கு முன் எழுதிய திருக்குறளும் எல்லா இடங்களிலும், எல்லா கால கட்டத்திற்கும், எல்லாதுறைகளிலும், பொருந்தும் என்பதை ஒரு மொக்கையாக சொல்லி இருக்கேன். மற்றபடி உங்கள் திறமையே உங்கள் புகழ் பாடும்.

அகர முதல எழுத்தெல்லம் ஆதி

பகவன் முதற்றே உலகு

முதல் பின்னூட்டம் ஆதிக்கு இட்டால் உங்கள் பெயரை எல்லோருக்கும் தெரிந்து கொள்வார்கள். காரணம்?? அவருக்கு தமிழிஸீல் வரும் ஓட்டைவிட அவருக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகம். அவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். அதனால் நிறைய பேர் பார்ப்பார்கள்!!! (தெரிந்து ஒன்னும் ஆகாது என்பது வேற விஷயம்,.. சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்,.... வசிஷ்டர் ஆதி என்னை மன்னிப்பாராக,.. )

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்

நாண நன்னயம் செய்து விடல்.

பின்னூட்டத்தில் ஹாய் சொன்னால் பதிலுக்கு ஹாய் சொல்லு. டேய் நாயே சொன்னால் பதிலுக்கு ஆருயீர் நண்பரே என்று சொல்லு.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

எல்லா பின்னுட்டத்திற்கும் ஒரு பதில் பின்னூட்டம் போடு,. நன்றி சொல்லிவிடு. மறந்துவிடாமல் அவர் வலைக்கு சென்று உங்கள் கவிதை சூப்பர்னு கூசாம பொய் சொல்லு,..

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்ற் மாகும் இறைக்கு

(பொருள்: முன்னே தன் குற்றத்தைக்கண்டு நீக்கிக் கொண்ட பிறகு பிறருடைய குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானால் அவனிற்கு என்ன குற்றம் உண்டாகும்??)

நன்றாக புலம்பு,.. அவன் இதனை கண்டுக்க மாட்டிங்றான், இவன் காசு புடுங்குறான், ஐ. நா சபையே இல்ல, இங்கே யவனும் சரி இல்ல, பொண்டாட்டி டி.வி பார்க்கவிடமாட்டிங்குறா அப்படீன்னு எல்லாத்துக்கும் எல்லாரைப்பத்தியும் ஆபீஸ் கம்ப்யூட்டர்ல, ஆபீஸ் நேரத்துல, ஆபீஸ் இன்டெர்னெட் கனெக்சன்ல மாசத்துக்கு ஒரு புகார் பதிவை போட்டுக்கிட்டே இரு,.. (யவருமே பாலோ பண்ண முடியாத குறள் இது. வெற்றியே குறிக்கோளாய் கொண்டவர்கள் குறளை ஓரத்தில் வைத்துவிட்டு உங்கள் குரலை உயர்த்திக் கொண்டே இருங்கள். எல்லோரும் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லனும்!!!)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சில நேரங்கள்ள இந்திய ராணுவம் கோவையில் க.மூ.சா தொண்டர்களிடம் தோல்வி, பிரபாகரன் இறந்தார் என செய்தி பதிவு வரும். அது போன்ற பதிவுகளை போடும் முன்பு உண்மையை தெரிந்து கொண்டு போடு.

தோன்றின் புகழோடு தோன்றுக ஆக்திலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

நீங்கள் சில நேரங்களில் மிக பிரபலமானவராக இருக்கலாம். நீங்கள் பதிவுத்துறைக்கு (இது ரெஜிஸ்டர் ஆபிஸ் இல்ல,.. பதிவுத்துறை என்றால் பதிவர்கள் இருக்கும் துறை) வந்தால் மிக குறுகிய காலத்தில் மேலே வந்து விடுவீர்கள்.

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

யாரையும் வலைப்பதிவில் கிண்டல் செய்யாதீர்கள். அதே நபர் பின்னொரு நாளில் உங்கள் மோசமான கவிதையை நாறடிப்பார்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

(பொருள் : நல்ல ஆண்மை என்பது தன் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுதல்,..) சக பதிவரின் பிறந்த நாள், அவர் குழந்தையின் பிறந்த நாள் நினைவு வைத்து ஒரு பதிவு போடு. நண்பர் ஆவியில் கதை எழுதியது பாராட்டி ஒரு பதிவு போடு. எல்லாவற்றையும் போட்டுவிட்டு பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தால், வீட்டில் பட்டினி போட்டுவிடுவார்கள். இதற்கு பரிகாரமாக நீங்கள் காதல் ரசம் சொட்ட சொட்ட காலையில் ஒரு காதல் கவித பதிவு போட்டுவிடுங்கள். மாலை வீட்டில் சுடசுட ரெடியாக இருக்கும். (எந்த அளவிற்கு சூடு என்பது உங்களுக்கு வரும் பின்னூட்டத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும்)

நன்றி : ஆசிரியர் - திருக்குறள் (ஜோதி, இம்புட்டு நல்லவனாடா நீ )