வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

நரிக்குறத்தியும் பார்க் ஷெரட்டனும்


அது சென்னையின் மிக சிறந்த ஸ்டார் ஓட்டல்களில் ஒன்று. "சுற்றுப்புறங்களில் நிறுவனங்களின் பங்கு" என்ற தலைப்பில் தொழில் கூட்டமைப்புகளின் சார்பில் நடந்த கருத்தரங்கம் பங்கேற்பிற்காக சென்றிருந்தேன். சிறப்பாக நடந்த கொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் சார்பில் பேச வந்த அந்த பெண்மணிக்கு 35 வயதை ஒட்டி இருக்கும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த அந்த பெண் ஒரு லட்சம் வண்ணம் பொதிந்த ஜோதிகா பட்டுப்புடவையில் பேச்சை ஆரமித்தார். அட்டகாசமான ஆங்கில உச்சரிப்புகளும், முறைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களும், சிறப்பாக வடிமைக்கப்பட்ட pptயும் அவரை ஸ்டார் பேச்சாளர் என அனைவரும் சொல்லியதில் தவறே இல்லை என எனக்கு உணர்த்தியது. கேள்வி நேரத்திற்கு முன் தேனீர் இடைவேளை வந்ததால் எல்லோரும் வெளியில் உள்ள அறைக்கு வந்தோம். தேனீர் பருகிக்கொண்டே கீழே சாலையை பார்த்த போது, நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டு இருந்தது.
அது ஒரு குப்பை மேடு. அதன் அருகில் குருவிக்காரி என சென்னை மக்களாலும், குறத்தி என இதர பகுதிகளிலும் அழைக்கப்படும் ஒரு பெண்ணும் அவள் குடும்பமும் சேர்ந்து குப்பையில் பொறுக்கி கொண்டிருந்தார்கள் (தட்டச்சு செய்யும் போதே இந்த வார்த்தையை அடிக்க மனசு வலிக்கிறது, பார்க்கும் போது அது ஏனோ இல்லை. கண்கள் பார்த்து பழகிகொண்டு விட்டது, ஆனால் விரல்களுக்கு இது புதிது ). அவள் கையில் ஒரு கூர்மையான நீளமான கம்பி. அவள் அதை பயன்படுத்தி அங்கே இருந்த பிளாஸ்டிக் பைகளை குத்தி மேலே இழுத்து தன் தோளில் இருந்த பெரிய கோணிப்பையில் போட்டுக்கொண்டாள். அவள் இடுப்பில் சிறிய தொட்டி போன்ற வடிவமைப்பில் உள்ள துணியில் ஒரு பச்சிளம் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அருகில் அவள் கணவன் கையிலும் அதே மாதிரி நீளமான கம்பி, ஆனால் கம்பியின் முனை கூர்மையாக இல்லை. அதில் காந்ததை மாட்டி இருந்தான். அதை வைத்து கம்பி, இரும்பாலான மூடிகள் போன்ற பொருட்களை சேர்த்து தன் பையில் போட்டுக்கொண்டிருந்தான். அவன் தோள்பட்டைக்கு மேலே ஒரு குழந்தை உட்கார்ந்து இருந்தது. மூக்கு ஒழுகும் போல இருக்கிறது. மூக்கை தேய்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு இந்த காட்சி சில கேள்விகளை எழுப்பியது.அடுக்களையில் இருந்த பெண்கள் சிறப்பாக சமூதாயத்திற்கு தங்கள் பங்கை உயர்த்தி வரும் வேளையில் இந்த குறவர் சமுதாயம் மட்டும் அப்படியே இருக்க என்ன காரணம்.? அவர்களின் சுய கட்டுப்பாடுகளா இல்லை சமூதாய திணிப்பா??


குழந்தை கருத்தரித்த நாளில் இருந்து குழந்தை பிறக்கும் வரை மருத்துவ ஆலோசனை பெற்றும் கடைசியில் சிசேரியன் ஆகும் பெண்களுக்கும், மருத்துவமனை பக்கமே போகாமல் சுக பிரசவம் ஆகும் குறத்தி பெண்களுக்கும் உடல் ரீதியாக அப்படி என்ன வித்தியாசம்?

குற்றால குறவஞ்சி இலக்கியம் உண்டு, குறவன் பாத்திரம் நடிக்காத பிரபல நடிகர் இல்லை, குறவன் வேஷம் இல்லாத மாறுவேடப்போட்டி இல்லை,.. இப்படி பல விதங்களில் சமூதாயத்தின் பரிணாமங்களில் இருக்கும் இந்த கூட்டம் உண்மையில் மற்ற எல்லா மக்களிடமிருந்து தனித்து நிற்பது ஏன்?சொந்தமாக வீடில்லை, நடைபாதைதான். அன்றைய நாள் இரவு உணவிற்கு காலையில் உறுதியளிக்க முடியாது, இரண்டு துணிக்கு மேலிருந்தால் அதிகம், இரண்டு குழந்தைகளுக்கு கீழிருந்தால் ஆச்சர்யம். காலைக்கடனை முடிக்க கஷ்டம், பொது இடத்தில் மற்றவர் பார்க்க குளிக்கும் துர்பாக்கியம், பசித்த குழந்தைக்கு பாலில்லாமல் தண்ணீர் ஊற்றும் கொடுமை,. இவ்வளவு பிரச்சனைகளிலும் இவர்களுக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் வருகிறது (படுத்தவுடன்) 5 மணிக்கெல்லாம் முழிப்பு வருகிறது. ஹாயாக சிறிது ஒயின் அருந்தி தூக்கம் வரவழைக்க முயற்சி செய்து புரண்டு படுக்கும் கூட்டத்திற்கும், படுத்தவுடன் தூங்கும் இந்த கூட்டத்திற்கும் உடல்ரீதியாக அப்படி என்னதான் வித்தியாசம்?


உண்மையாக சுற்று சூழலை காப்பவர் யார்? 1 லட்சம் வண்ணம் பொதிப்பதற்காக பல்வேறு சாயங்களை உருவாக்கி ஆறையும், ஊரையும் அசுப்படுத்தும் சாயத்தின் விளைவை தெரிந்தே அதை அணிந்து கொண்டு நுனி நாக்கில் பிளந்து கட்டும் அந்த பெண்ணா, இல்லை தன்னை அறியாமலேயே சுற்று சூழலை சுத்தம் செய்து பாதுகாக்கும் அந்த குறத்தியா?? இந்த கேள்விதான் எனக்கு கருத்தரங்கில் கேட்க வேண்டிய கேள்வியாக தோன்றியது. ஆனால் யாரிடம் கேட்பது என்றுதான் தெரியவில்லை.

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

ஷில்பாவிற்கு முத்தம் கொடுத்த தாத்தா,..

இதற்கு தனியே விளக்கம் கிடையாது,.o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
o
புகைச்சிலில் ஓட்டை மறந்து விடாதீர்கள்,...

.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

நண்பர் தின வாழ்த்துகள்.

என்னை நண்பராய் ஏற்றுக் கொண்டு எனக்கு இந்த பரிசை வழங்கிய நண்பர் குறை ஒன்றும் இல்லைக்கு என் மனமார்ந்த நன்றிகள். முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்,.. இந்த நாளிற்காக காத்திருந்தேன்

------------------------------------------------------------------------


என் குடும்பம் என்னுடன் இல்லாத போது
எனக்கு ஒரு குடும்பமாய்
அதே அன்பை, அதே சகோதரத்துவத்தை தந்து
எழுது எழுது இன்னும் எழுது என உற்சாகப்படுத்தும்
நண்பர் பதிவு குடும்பம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது

மச்சி காசு இருக்காடா என தர்மசங்கடத்தை தராமல்
உரிமையை எடுத்துக் கொண்டு எங்கிருந்தோ
முகமறியா சக நண்பருக்கு உதவும்
இந்த பாசக்கார பயபுள்ளக் கூட்டம்
எனக்கு பிடித்துதான் இருக்கிறது

இன்னைக்கு கண்டிப்பா டிரீட் தர்ணும்டா
என பாரில் ஐநூறு ரூபாய் வருமான உயர்வுக்கு
ஆயிரம் ரூபாய் மொய் என பர்ஸை கவுக்காமல்,
நடேசன் தெருவில் அற்புதமான நட்பை பகிரும்
இந்த நண்பர் கூட்டம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது,

என் எண்ணங்களை காது கொடுத்து கேட்கும்
என் கோபங்களை சாந்தப்படுத்தும்
என் அறிவை செம்மைபடுத்தும்
என் தவறுகளை சுட்டிக்காட்டும் இந்த
நக்கீரர் பரம்பரை எனக்கு பிடித்துதான் இருக்கிறது

என் சிரிப்பை எதிரொலித்து
என் அழுகையை துடைத்துவிட்டு
என் கவலையை தூக்கியெறிந்து
என் தனிமைக்கு மருந்தளித்து
என் அன்பை ஏற்றுகொண்டு

என் வேதனையை கேட்டுக்கொண்டு
என் பார்வைகளை புரிந்து கொண்டு
என் இந்த மொக்கையை பொறுத்துகொண்டு (சிரிப்பிற்கு நன்றி)
ஆலமரமாய் இந்த சிறிய பறவைக்கு இளைப்பாறுதல் தரும்
இந்த பதிவர் கூட்டம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது.

-------------------------------------------------------------------------

அனைவருக்கும் என் நண்பர் தின வாழ்த்துகள்.

கவிதை எழுத ஆரம்பிச்சு அது கடைசியில் கவுஜவாக மாறிவிட்டது,..
இந்த கோபத்தில் ஓட்டளிக்க மறந்துவிடாதீர்கள்..