அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 மார்ச், 2011

ச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்?

    ச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் ஏன் ஏன் ஏன்? இத‌ற்கான‌ விள‌க்க‌ம் இந்த‌ டிப்ஸ்க‌ளை ப‌டித்த‌பின்,.
    • லைட் சுவிட்சுகள் மிக‌ சிற‌ந்த‌ மின்சார‌ சேமிப்புக‌ள். விள‌க்கு எப்போதெல்லாம் தேவையில்லையோ அப்போதெல்லாம் அணைத்திடுங்க‌ள். தேவைப்ப‌டும் விள‌க்குக‌ளை ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள். உதார‌ண‌மாக‌ பூஜைய‌றைக்கு அத‌ற்கான‌ குறைந்த‌ செய‌ல்திற‌ன் ப‌ல்பை ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள். முழு அறையையும் ஒளியூட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. தேவைப்ப‌ட்டால் ஒழிய‌.
    • தூசுக‌ள் உங்க‌ள் விள‌க்கின் ஒளியில் 50% விழுங்கிவிடும். என‌வே ப‌ல்புக‌ளின் வெளிப்புற‌ம் உள்ள‌ தூசிக‌ளை அடிக்க‌டி சுத்த‌ப்ப‌டுத்துங்க‌ள்.
    • வீட்டில் உருண்டை விள‌க்கு (அதாங்க‌ குண்டுப‌ல்ப்) இருந்தால் முத‌லில் அத‌னை மாற்றிவிட்டு ப்ள‌ர‌சென்ட் லைட்டோ, குழ‌ல் விள‌க்கோ (டியூப் லைட்) மாற்றுங்க‌ள். இத‌னால் வெளிச்ச‌த்திற்காக‌ நாம் வ‌ழ‌க்க‌மாக‌ செல‌விடும் மின்சார‌த்தில் 75% ச‌த‌வீத‌ம் வ‌ரை மிச்ச‌ப்ப‌டுத்த‌ முடியும். உதார‌ண‌மாக‌ உருண்டை 60watt த‌ரும் வெளிச்ச‌த்தை 15wattப்ளூர‌செண்ட் விள‌க்கு த‌ந்துவிடும். உருண்டை விள‌க்கினால் அறைக்கு அதிக‌ம் வெப்ப‌ம் என்ப‌தையும் நினைவில் கொள்ளுங்க‌ள்
    • கோடை கால‌ வெயிலுக்கு எதிராக‌ முத‌லில் காற்றாடி (பேன்) ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள். வேறு வ‌ழியில்லை எனும் போது AC ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பியுங்க‌ள். கார‌ண‌ம் அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே. பேன் ஓடும் போது ஒரு ம‌ணி நேர‌த்திற்கு 30 பைசா செல‌வாகும்போது ஏ.சிக்கு 7 ரூபாய் வ‌ரை செல்வாகிற‌து.
    • வீட்டிற்குள் வெயில் வ‌ருவத‌ற்கான‌ வ‌ழிக‌ளை (ஜ‌ன்ன‌ல் போன்ற‌வை) ம‌ர‌ங்க‌ளையோ இல்லை ம‌றைப்பான்க‌ளையோ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் 40% வ‌ரை ACக்கான‌ மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்.
    • ஏசி வெப்ப‌னிலையை மிக‌ குறைந்த‌ நிலையில் (set@ 21 செல்சிய‌ஸ்) வைப்ப‌த‌ற்கு ப‌தில் கொஞ்ச‌ம் மித‌மான‌ நிலையில் (set@ 25 செல்சிய‌ஸ்) வையுங்க‌ள். இத‌னால் க‌ணிச‌மான‌ அள‌வில் (10-15%) மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ முடியும்.
    • ந‌ல்ல‌ ஏசி 30 நிமிட‌த்திற்கு ஒரு முறை சுழ‌ற்சி முறையில் குளிரூட்டிக்கொண்டு இருக்கும். இதனால் டைம‌ரில் வைத்து குறிப்பிட்ட‌கால‌ இடைவெளியில் அணைத்து வையுங்க‌ள். ஏசி போட்டிருக்கும் போது க‌த‌வுக‌ளை மூடியே வைத்திருக்க‌ குழ‌ந்தைக‌ளையும் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்துங்க‌ள். ஏசி பிள்ட‌ர்க‌ளை மாத‌ம் ஒரு முறை சுத்த‌ப்ப‌டுத்துங்க‌ள். செப்ப‌னிட‌ப்ப‌டாத‌ ஏசி பிள்ட‌ர்க‌ள் ஏசியின் ஆயூட்கால‌த்தை குறைப்ப‌துட‌ன் அதிக‌ மின்சார‌த்தையும் இழுக்கிற‌து.
    • குளிர்சாத‌ன‌ப்பெட்டியை வெப்ப‌மான‌ இட‌ங்க‌ளில் வைப்ப‌தை த‌விருங்க‌ள். உதார‌ணமாக‌ நேர‌டியாக‌ சூரிய‌ வெளிச்ச‌ம் ப‌டுத‌ல், ஓவ‌ன் அருகில் வைத்த‌ல் போன்ற‌வை. ப்ரிட்ஜின் உட்புற‌ லைட் க‌த‌வு மூடி இருந்தாலும் வெளியே வெளிச்ச‌ம் தெரிந்தால் க‌த‌வின் ர‌ப்ப‌ரை மாற்றுங்க‌ள்.
    • ப்ரிட்ஜில் உள்ள‌ மோட்ட‌ர்/க‌ம்ப்ர‌ஸ்ஸ‌ர் தொட‌ர்ந்து வெப்ப‌த்தை வெளியே விடுவ‌தால், ப்ரிட்ஜின் பின் புற‌த்தை சுவ‌ற்றை ஒட்டி வைக்க‌தீர்க‌ள். கொஞ்ச‌ம் இடைவெளி விட்டு வைப்ப‌தால் காற்று சுழ‌ற்சியினால் ப்ரிட்ஜ் அதிக‌ம் வேலை செய்ய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இருக்காது.
    • சூடான பொருட்க‌ள் ஆறின‌ பின் உள்ளே வைக்க‌வும். அதே போல் ப்ரிஜில் வைத்த‌ மாவை எடுத்து தோசை சுடும் போது ஒரு அரை ம‌ணி நேர‌ம் முன்ன‌தாக‌ வெளியே எடுத்து வைத்துவிடுங்க‌ள். இது மின்சார‌த்தை சேமிக்க‌ உத‌வாது. மாறாக‌ கேசினை ப‌ய‌ன்ப‌டுத்தும் அள‌வை குறைக்கும்.
    • ப்ரிட்ஜ் பின்னால் உள்ள‌ காயில்க‌ளில் தூசி ப‌டிந்தால் துடைத்து விட‌வும்,. அதிக‌மான‌ தூசி மின்சார‌த்தை அதிக‌ப்ப‌டுத்தும்.
    • ஹீட்ட‌ர்க‌ளை தேவையில்லாம‌ல் அதிக‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தாதீர்க‌ள். ஹீட்ட‌ர்க‌ளின் உள்ளே உள்ள‌ coilக‌ளை முறையாக‌ சுத்த‌ம் செய்ய‌வும். சுத்த‌ப்ப‌டுத்த‌ப‌டாத‌ coilக‌ளினால் அதிக‌ம் மின்சார‌ம் செல‌வாகிற‌து
    • க‌ம்ப்யூட்ட‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல் இருக்கையில் அணைத்துவிடுங்க‌ள். அப்ப‌டியே CPU மட்டும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டுமென்றால் மானிட்ட‌ரை ஆப் செய்துவிடுங்க‌ள்.
    • பேட்ட‌ரி சார்ஜ‌ர், லேப்டாப் ப‌வ‌ர் க‌னெக்ட‌ர் போன்ற‌வை மாட்டி இருந்தாலே மின்சார‌த்தை இழுக்கும். என‌வே அவ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை என்றால் அணைத்துவிடுவ‌து ந‌ல்ல‌து.
    • கம்பியூட்ட‌ர்க‌ளை ஸ்லீப் மோடில் வைப்ப‌தால் 40% வ‌ரை மின்சார‌ம் மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்

    மின்சார‌ம் தொட்டால்தான் ஷாக் அடிக்கும்,. ச‌ம்சார‌ம் ந‌ம்மை பார்த்தாலே ஷாக் அடிக்கும். அதனால்தான் ச‌ம்சார‌ம் அது மின்சார‌ம்,.. ஹி ஹி இது சும்மா,.. வீட்டிற்கு எஜ‌மானி ச‌ம்சார‌ம்தானே,. என‌வே நாம் மிச்ச‌ப்ப‌டுத்தும் ஒவ்வொரு கிலோ வாட்டு(kW)க்கும் ந‌ம் ம‌னைவியின் ப‌ங்கு மிக‌ முக்கிய‌ம்.அத‌ற்காக‌ ஆண்க‌ளுக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லை என‌ அர்த்த‌மாகாது.

    -----------------------------------------------------------------------------------------

    இன்று ஏன் இந்த‌ ப‌திவு என‌ நினைக்கிறார்க‌ளா?

    நீங்க‌ள் TV போட்டுக்கொண்டு பேப்ப‌ர் ப‌டிக்கிறீர்க‌ள். உண்மையில் பார்த்தால் உங்க‌ளுக்கு தேவைப்ப‌டாத‌ மின்சார‌த்திற்கு எங்கோ ஒருவ‌ர் நில‌க்க‌ரியை எரித்து மின்சார‌த்தை அனுப்பி வைக்கிறார். ஆனால் அதை நாம் ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை. இதனால் சூழ்னிலை சூடாகிற‌து, ப‌னிக்க‌ட்டி உருகிற‌து, ஓசோன் ஓட்டை ஆகிற‌து, ம‌ழை பொய்கிற‌து. இப்ப‌டி நிறைய‌.இத‌ன் விளைவுக‌ளை இன்று முழுமையாக‌ அனுப‌விக்காவிட்டாலும் ந‌ம் ச‌ந்த‌திக‌ள் க‌ண்டிப்பாக‌ அனுப‌விக்க‌ நேரும். ஆத‌லால் மின்சார‌த்தை சேமிப்பு எந்த‌ள‌விற்கு முக்கிய‌மோ அதைவிட‌ மிக‌ முக்கிய‌ம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டாம‌ல் செல‌வாகும் மின்சார‌ம்.


    இதையெல்லாம் க‌ருத்தில் கொண்டுதான் முத‌ன்முத‌லில் பூமி நாள் 2007ல் ஆல் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. அது இன்று க‌டைபிடிக்க‌ப்ப‌டுகிற‌து. இன்று இர‌வு 8:30 ம‌ணிக்கு மேல் ஒரு ம‌ணி நேர‌ம் விள‌க்குக‌ளை அணைப்ப‌தால் மிக‌ அதிக‌மான‌ அள‌வு கொண்ட‌ மின்சார‌ம் சேமிக்க‌ப்ப‌டுகிற‌து. 2009 ஆம் ஆண்டு 100 மில்லிய‌ன் ம‌க்க‌ள் ப‌ங்கெடுத்தார்க‌ள். நாமும் இதை க‌ண்டிப்பாக‌ அம‌ல் ப‌டுத்த‌ முயற்சி செய்வோம். (த‌மிழ் நாட்டில் ஏற்க‌ன‌வே ரொம்ப‌ ப‌வ‌ர்க‌ட் என‌க்கேள்விப்ப‌ட்டேன்)





    நாம் மிச்ச‌ப்ப‌டுத்தும் ஒரு குண்டுப‌ல்பின் மின்சார‌த்தால் வ‌ரும் ப‌ல‌ன்க‌ள் நிறைய‌, அத‌னால் இந்த‌ ப‌திவை க‌ண்டிப்பாக‌ தொட‌ர்கிறேன் (பின்னூட்ட‌மோ, ஓட்டோ வ‌ர‌வில்லை ஒன்று கூட‌ வ‌ர‌வில்லை என்றாலும்),.

    .

    செவ்வாய், 15 மார்ச், 2011

    உல‌க‌ அணுக்கொள்கைக‌ளை திருப்பிபோடும் ஜ‌ப்பான் அணு உலை விப‌த்துக்க‌ள்

    சுவிட்ஸ‌ர்லாந்து த‌ன் அணு உலை பணிக‌ளுக்கு த‌டா போட்டுள்ள‌து. ஜெர்ம‌னியும் நியூக்ளிய‌ர் தொழிற்சாலைக‌ள் எதிர்கால‌ம் ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டுகிற‌து.

    தைவானும் த‌ன் ப‌ங்கிற்கு அணு மின்சார‌த்தை நீக்க வ‌ழி செய்து கொண்டிருக்கிற‌து.

    டோக்கியாவில் நிக‌ழ்ந்து கொண்டிருக்கும் அணு உலை வெடிப்புக‌ள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் புதிய‌ அணு தொழிற்சாலைக‌ளுக்கு பெரிய‌ த‌டைக்க‌ல்லாய் வ‌ந்து நிற்கிற‌து.இன்னிலையில் ஜ‌ப்பானில் உள்ள‌ இன்னும் 5 அணு நிலையங்க‌ள் நெருக்க‌டி ஆப‌த்தில் உள்ள‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌ருகின்ற‌ன‌.

    ஜெர்ம‌னியின் வெளியுற‌வுத்துறை அமைச்ச‌ர் கைடோ "நாட்டின் அணுத் தொழிற்சாலைக‌ளின ஆயுட்கால‌த்தை நீட்டிக்க‌ அர‌சாங்க‌ம் ம‌றுக்க‌ வாய்ப்பிருக்கிற‌து" என்றார்.

    அமெரிக்க‌ சென‌ட் பிர‌தினிதியான‌ ஜோ புதிய‌ அணுத்தொழிற்சாலைக‌ளுக்கான‌ ப‌ணிக‌ள் த‌ற்கால‌மாய் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து என‌ சொல்லி இருக்கிறார். மேலும் அணு தொழிற்சாலை ப‌ணிக‌ள் முறையான‌தா என்று இப்போது யோசிக்க‌ வேண்டி இருக்கிற‌து என‌ ஹாங்காங் நிலைஆராய்ச்சி த‌லைவ‌ர் சீம‌ன் பால் சொல்லி இருக்கிறார்.

    கொரியாவில் உள்ள‌ முத‌ல் நிலை அதிகாரி "அணு மின்சார‌த்தொழில் ஜ‌ப்பான் நிக‌ழ்வுக‌ளால் சுருங்க‌ வாய்ப்பிருக்கிற‌து" என்றார்..


    அணு ஆலைக‌ளுக்கு எதிர்ப்புக‌ள் வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ளை விட வ‌ள‌ரும் நாடுக‌ளில் அதிக‌ம் உண‌ர‌ப்ப‌டுகிற‌து. அணு ஆலைக‌ளின் பாதுகாப்பு கோட்பாடுக‌ளை இன்னும் க‌ண்டிப்புட‌ன் ம‌று ஆய்வு செய்து ந‌டைமுறைப்ப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிற‌து. இத‌னால் காற்று போன்ற ம‌ற்ற‌ மின்சார‌ மூல‌ங்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ ஆர‌ம்பித்துள்ள‌ன‌.

    சீனா 13 ஆலைக‌ளை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிற‌து இன்னும் 12 ஆலைக‌ளை க‌ட்டிக்கொண்டு இருக்கிற‌து.ஜ‌ப்பான் நிக‌ழ்வுக‌ளை நாங்க‌ள் உண்ணிப்பாக‌ க‌வ‌னித்துக் கொண்டு இருக்கிறோம். ஜ‌ப்பான் எப்ப‌டி அதிலிருந்து மீண்டு வ‌ருகிற‌து என்ப‌தே எங்க‌ளுக்கு ஒரு பாட‌ம் என்கிற‌து சீனா. 2020ல் 100GW டார்கெட் வைத்திருந்த‌ சீனா இப்போது 70GW க்கு இற‌ங்கி வ‌ரும் என‌ தெரிகிற‌து.

    இந்திய‌ அர‌சாங்க‌மும் இப்போது ம‌ர‌பு சாரா எரிபொருட்க‌ளுக்கான‌ வ‌ழியை தேட‌ ஆர‌ம்பிக்க‌ வேண்டி இருக்கும் என‌ அணு மின்சார‌ க‌ழ‌க‌த் த‌க‌வ‌ல்க‌ள் சொல்கின்ற‌ன‌. ஆலைக‌ளை இன்னும் பாதுகாப்பான‌, ஆப‌த்தில்லாத‌ இட‌த்தில் வைக்க‌வும் , வைத்த‌தை ம‌று ஆய்வு செய்ய‌வும் வேண்டி இருக்கும் என‌ த‌லைமை ப‌த‌வியில் உள்ள‌ ரோபின்த‌ர் ச‌ச்தேவ் சொல்கிறார்.







    ஆச்ச‌ர்ய‌மான‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் வேக‌வேக‌மாக‌ அணுத் தொழிற்சாலைக‌ளை க‌ட்டிக்கொண்டு இருக்கும் கொரியாவும், ஜ‌ப்பானின் நிக‌ழ்வுக‌ளை கொண்டு த‌ன் அடுத்த‌ க‌ட்ட‌ நிக‌ழ்வுக‌ளை முடிவு செய்ய‌ இருப்ப‌தாக‌ கூறுவ‌துதான்.

    இத‌ன் தாக்க‌ம் ப‌ங்கு ச‌ந்தையையும் விட‌ வில்லை. முன்ன‌ணி அணுத்தொழிற்சாலை நிறுவ‌ன‌ங்க‌ளின் ப‌ங்குக‌ள் 14.5% வ‌ரை ச‌ராலென‌ குறைந்திருக்கின்ற‌ன‌. ஆனால் ம‌ர‌பு சாரா ஆற்ற‌லை மைய‌மாய் கொண்டு செய‌ல்ப‌டும் நிறுவ‌ன‌ங்க‌ளின் ப‌ங்கு உய‌ந்திருக்கிற‌து.

    ம‌க்க‌ளுக்கு அணுத்தொழிற்சாலைக‌ளின் ஆப‌த்துக்க‌ள் இப்போது புரிய‌ ஆர‌ம்பித்து இருக்கிற‌து. அணுத்தொழிற்சாலையை பார்த்து ப‌ய‌ப்ப‌ட‌க் கார‌ண‌ம் அது புரியாத‌ புதிராக‌ இருப்ப‌தால் இருக்கலாம். அதே நேர‌த்தில் ஒரு காற்ற‌லையையோ இல்லை சூரிய‌ மின்சார‌ம் த‌யாரிக்கும் பெரிய‌ சூரிய‌ த‌க‌டுக‌ளையோ பார்த்தால் இந்த‌ ப‌ய‌ம் வ‌ர‌ வாய்ப்பில்லை,.. கார‌ண‌ம் இங்கே மின்சார‌ம் தயாரிப்பு க‌ண் முன்னே ந‌ட‌க்கிற‌து.


    க‌டைசியாக‌ என‌க்கு இதுதான் தோன்றுகிற‌து. எங்கோ கொண்டாட‌ப்ப‌டும் தீபாவ‌ளியின் ம‌த்தாப்பிற்கு சிவ‌காசியில் தீப்பிடித்து எரிந்து குழ‌ந்தைக‌ள் சாகும். ஒரு ரெண்டு நாளைக்கு அதை பேசுவார்க‌ள் அப்புற‌ம் ம‌ற‌ந்து விடுவார்க‌ள். ஜ‌ப்பான் க‌தையும் அப்ப‌டிதான் நினைக்கிறேன். துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ சிவ‌காசியையும் குட்டி ஜ‌ப்பான் என‌ சொல்லுகிறார்க‌ள்.

    மூல‌ம் khaleejtimes


    சனி, 12 மார்ச், 2011

    ந‌ம் அணு உலைக‌ள் எந்த‌ அள‌விற்கு பாதுகாப்பான‌வை??

    ந‌ம் அணு உலைக‌ள் எந்த‌ அள‌விற்கு பாதுகாப்பான‌வை???

    ந‌ம் அணு உலைக‌ள் பாதுகாப்பாக‌ இருக்கின்ற‌ன‌ என‌ அணு ஆற்ற‌ல் முறைப்ப‌டுத்தும் க‌ழ‌க‌ த‌லைவ‌ர் atomic energy regulatory board (AERB) பார்த்த‌சார‌தி இன்றைக்கு சொல்லி இருக்கிறார்.

    "ந‌ம் அணு உலைக‌ள் 8.9 ரிக்ட‌ர் அள‌விற்கு தாங்கும் என‌ உறுதியாக‌ சொல்ல‌ முடியாது. ந‌ம் அணு உலைக‌ளின் ஸ்திர‌த்த‌ன்மை ப‌ற்றி க‌ழ‌க‌ம் மீண்டும் ஆய்வு செய்யும். 2001ல் 7.7 ரிக்ட‌ர் பூக‌ம்ப‌ அள‌வை குஜ‌ராத் அனுப‌வித்த‌போது ந‌ம் அணு உலைக‌ள் பாதுகாப்பாக‌த்தான் இருந்த‌ன‌. மேலும் இந்தியாவில் உள்ள‌ அணு உலைக‌ளில் 8.9 ரிக்ட‌ர் அள‌விற்கு நில‌ ந‌டுக்க‌ம் வ‌ரும் என‌ எதிர்பார்க்க‌ முடியாது. கார‌ண‌ம் இந்தியாவில் இம‌ய‌ம‌லை ப‌குதிக‌ள் ம‌ட்டுமே அதிநில‌ந‌டுக்க‌ப் ப‌குதிக‌ளில் வ‌ருகிற‌து. ம‌ற்ற‌ப‌டி ந‌ம் அணு உலைக‌ள் இருக்கும் இட‌ங்க‌ள் பூக‌ம்ப‌ம் தாக்குவ‌த‌ற்கு வாய்ப்பு குறைந்த‌ ப‌குதிக‌ள்தான்.

    பூக‌ம்ப‌ அடிப்ப‌டையில் இந்தியாவையும் ஜ‌ப்பானையும் தொட‌ர்புப‌டுத்தி ப‌ய‌ம் கொள்ள‌ அவ‌சிய‌ம் இல்லை. கார‌ண‌ம் ஜ‌ப்பான் அதிநில‌ந‌டுக்க‌ப் ப‌குதியில் இருக்கிற‌து."

    இன்று ஜ‌ப்பானில் ந‌ட‌ந்த‌ அணு உலை வெடிப்பு.



    உண்மைதான். இந்தியாவையும் ஜ‌ப்பானையும் நில‌ ந‌டுக்க‌ வாய்ப்புக‌ளில் ஒரே வகையில் சேர்க்க‌ முடியாது. இந்தியாவின் மொத்த‌ மின் தேவையில் 4% ம‌ட்டுமே அணு உலைக‌ளில் இருந்து பெற‌ப்ப‌டுகிற‌து. ஆனால் ஜ‌ப்பானில் அணு உலைக‌ள் அதிக‌ம். ஜ‌ப்பானின் மொத்த‌ மின் தேவையில் 34% அணு உலைக‌ளில் இருந்து பெற‌ப்ப‌டுகிற‌து.

    ந‌ம் நாட்டில் உள்ள‌ பிரச்ச‌னை ம‌க்க‌ள் நெருக்க‌ம். க‌ல்பாக்க‌த்திலியோ இல்லை கூடாங்குள‌த்திலியோ பாதிப்புக‌ள் ஏற்ப‌ட்டால் அத‌ன் பின் விளைவுக‌ள் மிக‌ மோச‌மான‌தாக‌ இருக்கும். கார‌ண‌ம் சுனாமியினால் அந்த‌ த‌லைமுறையின் வாழ்க்கை ம‌ட்டுமே பாதிக்க‌ப்ப‌டும். ஆனால் அணு உலையின் பாதிப்புக‌ள் ப‌ல‌ த‌லைமுறைகளை பாதிக்கும்.அணு உலைக‌ளின் விப‌த்துக‌ள் அணு குண்டுக‌ளைவிட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌வை.

    உதார‌ண‌மாக‌ செர்னோபிலில் 1986ல் ஏப்ர‌ல் 26 நிக‌ழ்ந்த‌ அந்த‌ அணு உலை விப‌த்து மிக‌ மோச‌மான‌து. த‌குதி குறைந்த‌ ஆட்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஆலை வெடித்த போது ஜ‌ப்பான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட‌ போது வ‌ந்த‌ க‌திர்வீச்சைவிட‌ 400 ம‌ட‌ங்கு அதிக‌ம் வெளிப்ப‌ட்ட‌து. இது கிட்ட‌த்த‌ட்ட‌ 20 அணு குண்டுக‌ளை போட்டால் வ‌ரும் பாதிப்பிற்கு ச‌ம‌ம்.





    இந்த‌ க‌ட்டுரையின் நோக்க‌ம் நாம் பாதுகாப்பாக‌ இல்லை முடிவு செய்து அனைவ‌ரையும் ப‌ய‌முறுத்த‌ அல்ல‌. அணு உலைக‌ள் எந்த அள‌விற்கு ஆப‌த்தான‌வை எனச் சொல்ல‌வே இந்த‌ ப‌திவு. ந‌ம் தொழிற்சாலைக‌ளில் பாதுகாப்பிற்கு என்ன‌ விலை என்ன‌வென்று அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே. ம‌ற்ற‌ தொழிற்சாலைக‌ளில் ந‌ட‌க்கும் விப‌த்தைப் போல‌ அணுமின் உற்ப‌த்தி நிலைய‌ங்க‌ளையும் சேர்த்துக்கொள்ள‌ முடியாது.

    ஊழ‌ல் ம‌ழிந்துள்ள‌ அர‌சு நிர்வாக‌ம், க‌வ‌லைப்ப‌டாம‌ல் நிர்வ‌கிக்க‌ப்ப‌டும் ஆப‌த்து & பாதுகாப்பு கோட்பாடுக‌ள் (Hazardous & safety Law) போன்ற‌வை நம் ம‌க்க‌ளின் வாழ்க்கை ஸ்திரத்த‌ன்மையை கேள்விக்குறியாக்குகின்ற‌ன‌. ஏனெனில் ந‌ம் அர‌சாங்க‌மும், ம‌க்க‌ளும் ஒரு இந்திய‌ப்பிர‌ஜையின் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை ஒண்ணுமே (Zero) இல்லைதான் என‌ சொல்ல‌ வேண்டும். என‌வே எல்லாம் ந‌ல்ல‌ப‌டியே ந‌ட‌க்கும் என‌ வாழ்க்கையை பாஸிட்டாவாக‌ எடுத்து போய்க்கொண்டிருப்போம்.


    .

    திங்கள், 27 செப்டம்பர், 2010

    அதென்ன ஓசோன் துளை???

    கொஞ்சம் முன்னுரை
    உச்சவளி மண்டலத்தின் மேற்புற படுகையாக பரவி இருக்கும் ஓசோனானது சூரியனிடம் இருந்து வரும் புறஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நேரடியாக புறஊதாக்கதிர்கள் நம்மை தாக்கும்போது நம்மை மட்டுமின்றி நம் சந்ததியையும் பாதிக்கும். எனவே இந்த புறஊதாக்கதிர்கள் நம்மை தாக்குவதை தடுக்க கூடிய ஓசோன் படலத்தை பாதுகாப்பது அவசியமாகிறது. அது எப்படி என்பதினை அறியும் முன் அதன் பின்னால் உள்ள அறிவியலைப் பார்க்கலாம்.

    கொஞ்சம் அறிவியல்.

    ஆக்ஸிஜன் அணு (O), ஆக்ஸிஜன் மூலக்கூறு வாயு (O2), ஓசோன் வாயு (O3) இவை மூன்றும் மாறி மாறி சுழல் வினையின் (cyclic reaction) காரணமாக உருவாகி, பிரிந்து, பின்னர் மீண்டும் உருவாகினறன
    நிலை ஒன்று
    முதலில் ஓசோன்வானது (O3) சூரியனின் புற ஊதாக்கதிர்களினால் ஆக்ஸிஜன் வாயுவாகவும் (O2) தனித்த ஆக்ஸிஜன் (O)அணுவாகவும் உடைகிறது. (இந்த வேதி மாற்றத்தின்போது புற ஊதாக்கதிர்கள் அதிகப்படியான வெப்பஆற்றலை (heat energy) வெளிவிடுகின்றன என்பதை நினைவில் கொள்க)

    O3 --------> O2 + O + வெப்பஆற்றல் --------(1)

    நிலை இரண்டு
    பொதுவாக வாயுனிலைத்தனிமங்கள் தனித்து இருப்பதில்லை. எனவே இந்த தனித்த ஆக்ஸிஜன் மற்றோரு ஆக்சிஜன் மூலக்கூறுடன் இணைந்து ஓசோன் வாயுவை உருவாக்குகிறது. இதுவும் சாதாரணமான வினை இல்லை. "Photodissociation" என அழைக்கப்படும் இவ்வினையானது uvயில் இருக்கும் போட்டோனை எடுத்துக்கொண்டு கீழ் வரும் வினையை அளிக்கிறது. இதன் மூலம் உடைந்த ஓஸோன் மீண்டும் உருவாகிறது. இதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இது சூரியனிடம் இருந்து வரும் மின் காந்த ஆற்றலில் ( electromagnetic energy) இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    O + O2 + ஆற்றல் --------> O3 ------------------- (2)
    இதனால் உடைந்த ஓசோன் மீண்டும் உருவாகிறது. இதுதான் மீள் வினை (reversible reaction) எனப்படுவது.

    இதனால் ஓசோனில் இருந்து ஆக்ஸிஜனும், பின்னர் அதே ஆக்சிஜனிலிருந்து ஓசோனும் உருவாகின்றன. நம்முடைய ஓசோன் படலத்தின் வேதிச்சமனிலையின் தத்துவம் (Law of ozone chemical equilibrium) இதுதான். இப்படிதான் ஓஸோன் படலம் தன்னை முழுமையாக நிலை நிறுத்தி இருக்கிறது.

    ஆக மொத்தம், நிலை ஒன்றில் ஆக்சிஜனாக உடைகிற ஓசோன் மீண்டும் நிலை இரண்டில் மீண்டும் ஓசோனாகவே மாறுகிறது. இதுதான் வழக்கமான சுழல் நிகழ்ச்சி.



    எங்கே பிரச்சனை,..??

    பொதுவாக இப்படி உடைகிற ஓஸோன் தனித்து ஆக்சிஜனாய் இருக்கையில் ஒண்ணும் பிரச்சனை இல்லை. அது உடனடியாக மற்றோரு ஆக்சிஜனுடன் இணைந்து ஓஸோனாய் மாறிவிடுகிறது.

    O + O2 + ஆற்றல் --------> O3

    அப்படி தனித்து இல்லாமல் இருக்கும்போதுதான் பிரச்சனை,..

    அது எப்போது நடக்கிறது??

    இன்றைய நாட்களில் மிக அதிக அளவு தொழிசாலை, கார், மற்றும் இன்ன பிற மாசு உருவாக்கும் காரணிகளால் உருவாகின்ற தன்னிச்சை வளைய வேதிவினையூக்கிகளான (free radical catalyst) நைட்ரிக் ஆசிட், நைட்ரஸ் ஆக்ஸைட், தனித்த நிலையில் உள்ள குளோரின், மற்றும் புரோமின் அணு, ஹாலஜன் சேர்மங்களான ப்ரோமோப்ளூரோகார்பன், க்ளோரோப்ரோமோகார்பன், ஹைட்ரக்ஸைல் போன்றவை தனித்த நிலையில் இருக்கும் ஆக்சிஜன் அணுவுடன் இணைந்து சேர்மமாக மாறுவதால் மீண்டும் ஓஸோன் உருவாக்கம் தடைபடுகிறது. கீழே உள்ள சமன்பாட்டை பார்க்க,..

    CFCl3 + UV -------> CFCl2 + Cl
    Cl + O3 -------> ClO + O2
    ClO + O3 -------> Cl + 2 O2

    நன்றாக பார்த்தீர்களானால் வழக்கமான சுழல்வினையில் (வினை 1 பார்க்க) மிச்சம் இருக்கிற தனித்த ஆக்ஸிஜன் (0) இதில் இல்லை. இதனால் ஆக்ஸிஜன் அணு மீண்டும் ஆக்சிஜன் மூலக்கூறுடன் இணைந்து ஓசோனை உருவாகும் (வினை 2) மீள்வினை (reversible reaction) இதில் தடைபடுகிறது.

    இதனால் ஓசோனின் எண்ணிக்கை உயர் வளிமண்டலத்தில் குறைகிறது. இதைதான் ஓசோன் துளை என சொல்லுகிறோம்.



    இதனால் உருவாகின்ற அதிகுறை அடர்த்தி பகுதியில் (very low density field) புறஊதாக்கதிர்கள் எளிதாக உள்ளே நுழைகின்றன,. இதன் விளைவுதான் நமக்கு உருவாகின்ற பல்வேறான உடல் உபாதைகளும், சுற்றுசூழ்னிலை மாற்றங்களும்,..

    இவற்றில் ப்ரோமோப்ளூரோகார்பன், க்ளோரோப்ரோமோகார்பன் (மேலே சொன்னவை) மிக மோசமானவை. அவை வேதிவினையின்போது மிக மிக வேகமாக ஓசோனின் எண்ணிக்கையை குறைப்பதாக கணடறியப்பட்டன. இதனால் இவற்றை உருவாக்குவதும், பயன்படுத்துவதும் உலகம் முழுக்க தடை செய்யப்பட்டு 1996 ஆம் ஆண்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.(குளிர்பாதனத்துறைக்கு பயன்படுத்தப்பட்டது)

    இத்தகைய உலக அளவிலான நடவடிக்கைகளால் இப்போது ஓசோன்படலம் ஓரளவிற்கு மூடிவிட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது நம் சுற்று சூழலிற்கு தருகிற முக்கியத்துவத்திற்கு ஒரு நல்ல மைல்கல் என்றே நாம் சொல்லலாம். நாம் கற்றுக் கொள்ளுகிற பாடங்கள் அனைத்தும் நன்மைக்கே,..

    டிஸ்கி
    இது போன்ற முழுக்க முழுக்க சமுக கண்ணோட்டத்துடன் கூடிய தொழில்னுட்ப பதிவுகள் நம் நண்பர்களால் படிக்கப்படுவதில்லை என்பது எனக்கு அறிந்ததே,.. இருந்தாலும் எங்கோ, எப்போதோ ஒரு மாணவன் ஒரு வேளை தேடி இது அவனுக்கு பயன் தந்தால் மிக்க மகிழ்ச்சி,.. அந்த வகையில் இந்த ஐம்பதாவது பதிவு எனக்கு முழு திருப்தி,.. (முழுக்க முழுக்க அறிவியல் தமிழில் ஒரு பதிவு எழுத ரொம்ப நாளாக ஆசை, அது இன்று ஓரளவிற்கு நிறைவேறியதில் மகிழ்ச்சி)

    இந்த பதிவு எழுத பின்னுட்டம் வழி தூண்டுகோளாக உதவிய சகோதரி ஆனந்திக்கும், ராஜேஷுக்கும், மிக்க நன்றி,..

    வழக்கம் போல் வாக்களித்து எழுத்துக்களை உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே,.


    .