சுவிட்ஸர்லாந்து தன் அணு உலை பணிகளுக்கு தடா போட்டுள்ளது. ஜெர்மனியும் நியூக்ளியர் தொழிற்சாலைகள் எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறது.
தைவானும் தன் பங்கிற்கு அணு மின்சாரத்தை நீக்க வழி செய்து கொண்டிருக்கிறது.
டோக்கியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அணு உலை வெடிப்புகள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் புதிய அணு தொழிற்சாலைகளுக்கு பெரிய தடைக்கல்லாய் வந்து நிற்கிறது.இன்னிலையில் ஜப்பானில் உள்ள இன்னும் 5 அணு நிலையங்கள் நெருக்கடி ஆபத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கைடோ "நாட்டின் அணுத் தொழிற்சாலைகளின ஆயுட்காலத்தை நீட்டிக்க அரசாங்கம் மறுக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.
அமெரிக்க செனட் பிரதினிதியான ஜோ புதிய அணுத்தொழிற்சாலைகளுக்கான பணிகள் தற்காலமாய் நிறுத்தப்படுகிறது என சொல்லி இருக்கிறார். மேலும் அணு தொழிற்சாலை பணிகள் முறையானதா என்று இப்போது யோசிக்க வேண்டி இருக்கிறது என ஹாங்காங் நிலைஆராய்ச்சி தலைவர் சீமன் பால் சொல்லி இருக்கிறார்.
கொரியாவில் உள்ள முதல் நிலை அதிகாரி "அணு மின்சாரத்தொழில் ஜப்பான் நிகழ்வுகளால் சுருங்க வாய்ப்பிருக்கிறது" என்றார்..
அணு ஆலைகளுக்கு எதிர்ப்புகள் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் அதிகம் உணரப்படுகிறது. அணு ஆலைகளின் பாதுகாப்பு கோட்பாடுகளை இன்னும் கண்டிப்புடன் மறு ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் காற்று போன்ற மற்ற மின்சார மூலங்கள் கவனிக்கப்பட ஆரம்பித்துள்ளன.
சீனா 13 ஆலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது இன்னும் 12 ஆலைகளை கட்டிக்கொண்டு இருக்கிறது.ஜப்பான் நிகழ்வுகளை நாங்கள் உண்ணிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறோம். ஜப்பான் எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறது என்பதே எங்களுக்கு ஒரு பாடம் என்கிறது சீனா. 2020ல் 100GW டார்கெட் வைத்திருந்த சீனா இப்போது 70GW க்கு இறங்கி வரும் என தெரிகிறது.
இந்திய அரசாங்கமும் இப்போது மரபு சாரா எரிபொருட்களுக்கான வழியை தேட ஆரம்பிக்க வேண்டி இருக்கும் என அணு மின்சார கழகத் தகவல்கள் சொல்கின்றன. ஆலைகளை இன்னும் பாதுகாப்பான, ஆபத்தில்லாத இடத்தில் வைக்கவும் , வைத்ததை மறு ஆய்வு செய்யவும் வேண்டி இருக்கும் என தலைமை பதவியில் உள்ள ரோபின்தர் சச்தேவ் சொல்கிறார்.



ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் வேகவேகமாக அணுத் தொழிற்சாலைகளை கட்டிக்கொண்டு இருக்கும் கொரியாவும், ஜப்பானின் நிகழ்வுகளை கொண்டு தன் அடுத்த கட்ட நிகழ்வுகளை முடிவு செய்ய இருப்பதாக கூறுவதுதான்.
இதன் தாக்கம் பங்கு சந்தையையும் விட வில்லை. முன்னணி அணுத்தொழிற்சாலை நிறுவனங்களின் பங்குகள் 14.5% வரை சராலென குறைந்திருக்கின்றன. ஆனால் மரபு சாரா ஆற்றலை மையமாய் கொண்டு செயல்படும் நிறுவனங்களின் பங்கு உயந்திருக்கிறது.
மக்களுக்கு அணுத்தொழிற்சாலைகளின் ஆபத்துக்கள் இப்போது புரிய ஆரம்பித்து இருக்கிறது. அணுத்தொழிற்சாலையை பார்த்து பயப்படக் காரணம் அது புரியாத புதிராக இருப்பதால் இருக்கலாம். அதே நேரத்தில் ஒரு காற்றலையையோ இல்லை சூரிய மின்சாரம் தயாரிக்கும் பெரிய சூரிய தகடுகளையோ பார்த்தால் இந்த பயம் வர வாய்ப்பில்லை,.. காரணம் இங்கே மின்சாரம் தயாரிப்பு கண் முன்னே நடக்கிறது.
கடைசியாக எனக்கு இதுதான் தோன்றுகிறது. எங்கோ கொண்டாடப்படும் தீபாவளியின் மத்தாப்பிற்கு சிவகாசியில் தீப்பிடித்து எரிந்து குழந்தைகள் சாகும். ஒரு ரெண்டு நாளைக்கு அதை பேசுவார்கள் அப்புறம் மறந்து விடுவார்கள். ஜப்பான் கதையும் அப்படிதான் நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக சிவகாசியையும் குட்டி ஜப்பான் என சொல்லுகிறார்கள்.
மூலம் khaleejtimes
11 கருத்துகள்:
//ஜப்பான் கதையும் அப்படிதான் நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக சிவகாசியையும் குட்டி ஜப்பான் என சொல்லுகிறார்கள்.// நச்-னு சொல்லியிருக்கீங்க ஜோதி..நல்ல கம்பேரிசன்!
ம்ம்..சரியா சொல்லியிருக்கீங்க.
இன்னொரு கேள்வி.. உங்க துறைங்கறதால...
இந்த மாதிரி சுனாமி எல்லாம் வந்தா நடுக்கடல்ல இருக்கற எண்ணக்கிணறுகள் என்ன ஆகும்?
"அணு மின்சாரத்தொழில் ஜப்பான் நிகழ்வுகளால் சுருங்க வாய்ப்பிருக்கிறது" என்றார்//
பயமுறுத்தும் செய்திதான்
நல்ல அலசல்
வாங்க செங்கோவி,.. சிவகாசி தீ விபத்துக்களில் இறந்தவர்கள் கணக்கிலடங்கா,..
துரதிர்ஷ்டவசமாக அதில் சிக்குபவர்கள் குழந்தைகளும் பெண்களும்
வாங்க செந்தில்,.. நம்ம பதிவுப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு,..
சுவாரஸ்யமான கேள்விதான்,.
சுனாமி பெரும்பாலும் தாழ்வான பகுதியில்தான் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது. கரைக்கு வரும் போது உச்சத்தை அடைகிறது. எண்ணெய் கிணறுகள் கரையை ஒட்டி இருந்தால் அது ஆபத்துதான்.
கடலில் கட்டப்படும் எண்ணெய் கிணறுகளுக்கான மேடையின் தூண் (platform structure) பொதுவாக பூகம்பத்தை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்படும். சுனாமியானாது கடலை ஒட்டிய பகுதியில் விஸ்வரூபம் எடுப்பதால் நடுக்கடலில் அதன் தாக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நில நடுக்கத்தின் தாக்கம் (earth quake load) மட்டும் கணக்கில எடுத்துக்கொண்டு தூண் மேடை வடிவமைப்பு செய்யப்படுகிறது.
வாங்க சதீஷ்குமார்,. நன்றி
//"அணு மின்சாரத்தொழில் ஜப்பான் நிகழ்வுகளால் சுருங்க வாய்ப்பிருக்கிறது" என்றார--
பயமுறுத்தும் செய்திதான்//
அமெரிக்காவிற்கு பயமுருத்தும் செய்தி,.. காரணம் அவர்கள்தான் இதில் அதிக பணம் பார்க்கிறார்கள்
மிக மிக பயனுள்ள பதிவுங்க..
மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்..
நல்ல விளக்கம்.. நன்றிங்க.
அதிகமாக வேலை காரணமாக பதிவுப்பக்கம் வரமுடிவதில்லை.
senthil, வீடும் வேலையும்தான் முக்கியம்,.. டைம் கிடைச்சா மட்டும் பதிவு போடுங்க, பார்க்கலாம்
வாங்க கமலேஷ்,
அரசாங்கம் யோசிக்குமான்னுதான் தெரியல
மிக்க நன்றி,..
கருத்துரையிடுக