வியாழன், 30 ஏப்ரல், 2009

இது பெண்களை பற்றி மட்டுமல்ல

எனக்கு 10 வருடங்களாக ஒரு சந்தேகம். எல்லா தேர்வுகளிலும் முதல் மதிபெண்கள் வாங்கும் பெண்கள் படிப்பிற்கு பின் எங்கே போகிறார்கள்? எது அவர்களை முன்னேர விடாமல் தடுக்கிறது? இதற்கு என்ன காரணம்? பெற்றோர்களா? கணவனா? குடும்ப பொறுப்பா? சமூக சூழ்னிலையா? இல்லை தாங்களேவா? (வேறு காரணம் இருப்பதாய் தெரியவில்லை,.. நண்பர்கள் உதவலாம்)

பெற்றோர்களா?

இதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. காரணம் படிக்க வைக்கும் பொதே தன் மகள் நன்கு வர வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களின் தயவில்தான் பெண்கள் ஜொளிக்கிறார்கள். ஒவ்வொரு சாதனையிலும் தன் மகள், தன் மகள் என பெருமை கொள்பவரே பெற்றோர். இது அவசியம் இல்லாத காரணியே.

கணவனா?

மனைவி அமைவது எப்படி இறைவன் கொடுத்தது என நம்புகிறோமோ அதை போலவேதான் கணவனும். என் நட்பு வட்டாரத்தில் பாதிக்கு பாதி ஆண்கள் தன் மனைவி தனக்கு மேல் படிப்பதையோ சம்பாதிப்பத்தையோ விரும்பவில்லை. ஆனால் பெண்கள் சமூகத்தில் சிறப்பாக ஜொளிக்க அவர்களின் கணவன் ஒரு மிக முக்கிய காரணி என்பதை மறுப்பதற்கில்லை.M.S.சுப்புலட்சுமிக்கு ஒரு சதாசிவம் ,கிரன் பேடிக்கு ஒரு ப்ர்ஜ் பேடி, ப்ரத்திபா படேல்க்கு ஒரு ஷெகாவத், அஞ்சுவிற்கு ஒரு பாபி ஜார்ஜ் என எல்லாருக்கும் அமைவதில்லை என்பது மிக உண்மை. படிப்பதற்கு பெற்றோர் உற்சாகம் தந்ததை போல் கணவரும் தருவர் என எதிர்பர்க்க முடியாது. மேலும் சிறப்பாகத தன் பணியை செய்யும் பெண்களை நொல்லது சொல்லும் கணவனை நிறையவே பார்க்கலாம். இது சமையலிற்கும் பொருந்தும். வெளி மனிதர்களை handle செய்வத்திற்கும் பொருந்தும். ஆனால் நிறைய பெண்கள் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள், அவற்கள் தங்கள் பணியை சிறப்பாகவே செய்கிறார்கள் (சென்னை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி சுமதி இதில் விதிவிலக்கு).ஆனால் இன்றைய ஆண்கள் ஓரளவு திருந்தி இருக்கார்கள் என்பது உண்மை. இன்றைய தலைமுறை ஆண்கள் நிறைய பேர் அடுப்படிக்கு வந்து உதவி செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இன்னும் மாறவேண்டியது நிறையவே இருக்கிறது.

குடும்ப பொறுப்பா?

இதை ஒரு முக்கிய காரணியாக நான் கருதுகிறேன். ஆண்களிற்கும் குடும்ப பொறுப்பு உண்டென்றாலும் பொதுவாக அவர்களின் பொறுப்பு சம்பாதிப்போதோடும், பாதுகாப்பு வழங்குவதோடும் நிறுத்திகொள்ளப்படுகிறது. ஆனால் சமைப்பது,குழந்தையை பார்த்து கொள்வது, பெரியவர்களுக்கு பணிவிடை செய்வது,துணிகளையும் வீட்டையும் சுத்தம் செய்வது என பெண்களின் வேலைகள் பல. இதில் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை இன்னும் மோசம். வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகள் நிலை இன்னும் உண்மையில் பாவம். அவர்கள் ஒரு தாயிடம் எவ்வளவு இழக்கிறார்கள் என்பதை அவர்கள் தாயை பார்த்தவுடன் க்ரச்சை விட்டு ஓடி வரும் அந்த வேகம் சொல்லும். இன்றைய சூழ்நிலையில் கூட்டு குடும்ப முறை இல்லை என்ற நிலையே உருவாகி வருகிறது. இதனால் பெண்கள் தானே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.இது போன்ற நிலையில் குடும்பமே வாழ்க்கை என்றாகி போகிறது. இதனால் இவர்களின் வெளி உலகதிற்கான தொடர்பு கொஞசம் கொஞ்சமாக குறைகிறது. உற்றமும் சுற்றமுமே வாழ்க்கையை காட்டுகிறது. நட்பு வட்டாரங்கள் சுருங்குகின்றன. எனவே பெண்கள் வெளி உலகத்துடன் உறவு முறியக் கூடிய காரணி இதுவே. என்னாதான் TV யும், நாளிதலும் நாட்டு நடப்பை பற்றி சொன்னாலும் நம்மாலும் முடியும் என்ற உந்து வேகத்தினை தருவது தன்னுடன் படித்த சக தோழியும் அவளின் முன்னேற்றமே.

சமூகமா?

என்னை பொறுத்தவரை இதுவும் ஒரு காரணியே அன்றி, இதுவே ஒரு காரணகர்த்தகவாக அமைய முடியாது. இன்றைக்கும் சக பெண் பணியாளி மேலே வரும் போது கேட்க முடியாத கமெண்ட்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டியும் ஒதுக்கிதள்ளியும் வந்துகொன்டு தான் இருக்கிறாள். தன்னுடன் நன்றாக பேசும் நபரின் வாயிலிருந்து வரும் அதை அவள் கேஸ்வலாக எதிர் கொள்வதே அவளின் பலம். வயதிற்கு வந்ததிலிருந்தே கமென்ட்டுகளை எதிர் கொள்ள இயற்கையாக அமைந்தது இது. பெண் என்பதால் ஜொள் விட்டு கொண்டு பதவி உயர்வு கொடுக்கும் தலைகளும் உண்டு. அது போன்ற ஆட்களிடம் இருந்து நழுவி வருவது பெண்கள் மட்டுமே அறிந்த கலை. ஆனால் இன்றைக்கு ஒரு ஆண் செய்ய முடியாத சாதனையை பெண் செய்யும் போது சமூகத்திடமிருந்து வரவேற்பும், பப்ளிசிட்டியும் மிக அதிகம். சோனியா மிஜ்ரா நல்ல உதாரணம்.

தாங்களேவா?

இதுவே ஓரளவிற்கு உண்மை என்றாலும் ஒப்பு கொள்ள முடியாத உண்மை. ஒரு பெண் என்னதான் திறமை இருந்தாலும் கணவன் மற்றும் குடும்பத்தின் துணை இன்றி, ஒப்புதல் இன்றி சாதனை செய்ய முடியாத நிலையில் உள்ளது. எத்தனை பேர் ஜெயலலிதாவை போல, மாயாவதியை போல "தனித்து" என்று திடமான முடிவை எடுக்க முடியும்? சோனியா காந்தியே, ராஜீவ் காந்தி இறந்து ஓரளவு குடும்ப பொறுப்புகள் முடிந்த பின்பே அரசியலிற்கு வர முடிந்தது? என்னதான் வேலை என்றாலும் குழந்தைக்காக என வரும் போது பெரியோரின் துணை இல்லை என்றால் பெண்தானே வேலையை விட வேண்டி வருகிறது?

இவை அனைத்தையும் பார்க்கும் போது பெண் ஆணை சார்ந்து வாழ்வதே பாதுகாப்பு என்றாகி விட்டபடியால் அவளின் ஒவ்வொரு முன்னேற்றமும் அவள் கணவனின் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.அடங்க மறு என வெளியில் கூப்பாடு போடும் நபர்கள் வீட்டில் பெண்களை அடிமையாக்குகிறர்கள். பெண்களுக்கு 33% சதவீதம் என்பது கனவாகவே உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் இதில் தெளிவாக உள்ளன. நண்பர்களே நாடு கிடக்கட்டும். வீட்டில் சம உரிமை கொடுங்கள், நாட்டில் அது தானே வரும். வீடு உயர்ந்தால் நாடு உயரும். நாடு உயர்ந்தால் நாமும் உயரலாம்.

திங்கள், 27 ஏப்ரல், 2009

அண்ணா பல்கலைகழகமும் நொந்த கண்ணனும்

அண்ணா பல்கலைகழகத்தைப்பற்றி நிறைய எழுதலாம். இதில் மிக முக்கியமாக நான் கருதுவது அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் அதன் கீழ் வரும் மற்ற கல்லூரிகளுக்கும் வேறு வேறான "question papers" & Resultsபற்றி.நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே குப்பை கொட்டியதால் அதை பற்றி நன்றாகவே தெரியும். இங்கே வகுப்புகள் நடக்கும், ஆனால் உதவி பேராசிரியர்களோ, இல்லை மற்ற பேராசிரியர்களோ வருவது இல்லை. "செமினார்" என்ற முறையில் மாணவர்களே எடுக்கவைக்க படுகிறார்கள். இங்கே GRADE SYSTEM, 50% internal MARKS, புழுத்துப்போன ASSIGNMENT என மாணவர்கள் நசுக்கப்படுகிறார்கள். தனியார் கல்லுரிகளை quality என்ற பேரில் பல்வேறு விதங்களில் மிரட்டும் இப்பல்கலைகழகத்தின் உண்மையான தரம் என்பது அங்கே உள்ள சோதனை கூடங்களை பார்த்தால் தெரியும். நான் படித்ததற்கும் இப்போதைக்கும் 8 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் டெக்னாலஜி சொல்லி தர இங்கே வசதிகள் செய்யப்பட வில்லை, திறமையான ஆட்களும் இல்லை. இங்கே என் கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஏன் அண்ணா பல்கலைகழகம் அனைத்து கல்லுரிகளுக்கும் ஒரே syllabus வைக்கும்போது தனக்கும் மற்ற கலலுரிக்கும் தனி தனியாய் எக்ஸாம் ஏன்? மற்ற தனியார் கல்லுரிகளுக்கு மட்டும் ஏன் ranking? ஓட்ட பந்தயம் என வந்த பிறகு சிறுத்தை என்றால் என்ன ? சிங்கம் என்றால் என்ன? இங்கே சிங்கத்திற்கு நன்றாக தெரியும். அதனாலதான் வர மறுக்கிறது. உண்மையிலேயே மற்ற கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என அக்கறை அண்ணா பல்கலைகழகதிற்கு உண்டென்றால் அதுவும் அனைத்து கல்லூரிகளின் தேர்வில் தன்னயும் இணைத்து கொள்ள வேண்டும். அனைத்து கல்லூரிக்கும் பொதுவான campus interview நடத்த வேண்டும். அதுவே முறையான அளவுகோலாய் அமையும். ஆனால் இன்று கல்வியும் அரசியலும் ஒன்றாய் விட்டதால் இது நடக்கும் என எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.

புதன், 22 ஏப்ரல், 2009

நானும் கவிதை எழுதுவேன்


தமிழில் எழுதி ரொம்ப நாளாப்போச்சு. முதன் முதலாய் "பிளாக்கர்"ல் எழுதுறோம், சரி நல்ல கவிதையை எழுதுலாம்னுபார்த்தா ஒண்ணும் வர மறுக்கிறது.. சரி நம்ம காதலிக்கு முதல்ல எழுதின கவிதையை release பண்ணிரலாம்னு போட்டிருகேன்,.. (கவிதையை காதலி OK சொல்லிடதால அதுக்கப்புறம் கவிதையே தோணல)

உன் ஈட்டி விழிகள்

கண்ணைத்தான் தாக்கின,..

இதயத்தில் எப்படி

இத்தனை ஓட்டைகள்??

வந்து விடு என் காதலை

சரியென்று சொல்லிவிடு ,...