வெள்ளி, 31 ஜூலை, 2009

ஐ லவ் யூ

லவ் யூ அவ்வளவு சாதாரணமானதாக எனக்கு தெரியவில்லை. அதுவரை பேசாத பெண்ணாகட்டும், இல்லை பழகிய தோழியாகட்டும் சொல்வதற்கு முன் லப் டப்புகள் எங்கோ போய்விடும். ஒப்புக் கொள்வாளோ, தப்பாய் எடுத்துக் கொள்வாளோ என்று நிறைய காதல்கள் சொல்லாமலேயே முடிந்திருக்கின்றன. ஓரினச்சேர்க்கையே சரி என்று சொல்லும் இன்றைய சூழ்னிலையில் காதலித்தால் தப்பில்லை என்றே சொல்வேன். ஏனென்றால் இப்போதைக்கு யாரையும் நம்ப முடியவில்லை. காதலரை/காதலியை தெரிந்து,அறிந்து கல்யாணம் செய்வது ஒன்றும் எனக்கு தப்பாக தெரிய வில்லை. எல்லோரும் அதை வாழ்வில் ஒருவரிடம் சொல்லி அந்த த்ரில்லிங்கை அனுபவிப்பதில் தவறில்லை. ப்பா,.. மறக்க முடியாத தருணங்கள். முதன் முதலில் காதலியிடம் சொல்வதாகட்டும் இல்லை காலம் முழுக்க வரும் மனைவியாகட்டும் முதன் முதலில் அதை சொல்லும் போது அது கண்டிப்பாக த்ரில்லிங்க்தான்,..

இன்று அப்படிப்பட்ட சுவாரஸ்யமான எனக்கு பிடித்த " லவ் யூ"க்கள் உங்களுக்காக,..

அலை பாயுதே

நேர்த்தியாக படமாக்கி இருப்பார் மணிரத்னம்.இந்த கதை நிறைய பேருக்கு பிடிக்காவிட்டாலும் எனக்கென்னவோ பிடித்துதான் இருந்தது. மணி ரத்னத்தின் பவித்ரமான காதல்களில் இதுவும் ஒன்று. மாதவனும், ஷாலினியும் காதலர்களாக போட்டி போட்டு நடித்திருப்பர். எனக்கு பிடித்த லவ் யூக்களில் இது முதன்மையானது. (என்னா songs இல்ல??)
காக்க காக்க
அடுத்து ஆயுசு முழுக்க காதலிக்கவே பிறந்த ஜோடி ஜோதிகா மற்றும் சூர்யா. ஜோதிகாவின் அழகில் ஜோதி மயங்கிருந்த வேளை பார்த்து சூர்யாவிடம் தன் காதலை சொல்லிவிடுவார் (ஹி ஹி சரி சரி). கடல் கரை ஓரத்தில் நடக்கும் இந்த காதலின் வெளிப்பாடு மிக ரம்யமாக இருக்கும். ஆனால் ஜோதிகா கடைசியாக நடித்த மூன்று படங்களிலும் முற்றிலும் வித்தியாசமான பாத்திரங்களில் செம கலக்கல் நடிப்பு (பச்சை கிளி முத்துச்சரம், மொழி, சில்லென்று ஒரு காதல்). காக்க காக்க படத்தில் வரும் இந்த சீன் எனக்கு பிடித்த லவ் யூக்களில் ஒன்று. பார்த்து ரசியுங்கள்.
மௌனராகம்
இதுவும் மணி ரத்னம்தான். காதல் காட்சிகளை ரசிக்கும்படி எடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். இளையராஜாவின் மிக மிக மிக அட்டகாசமான மனதை சுழட்டும் அந்த பிண்ணனி இசையில், மௌனராகத்தில் கார்த்திக் ரேவதியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தடாலடியான காட்சி எனக்கு பிடித்த லவ் யூக்களில் ஒன்று. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை தமிழுக்கு சொன்ன படம். அப்போது கார்த்திக் எல்லா திரைப்படத்திலும் கதா நாயகனாக செம கலக்கு கலக்கினார். இப்போது கூட கலக்குகிறார் அரசியலில் காமெடியனாக,..

வழக்கம்போல் தமிழிஸில் ஓட்டுப் போட மறந்துவிடாதீர்கள் நண்பர்களே,..

வெள்ளி, 24 ஜூலை, 2009

வெளி நாடு வாழ் இந்தியர்கள் சிங்கங்களா இல்லை குரங்குகளா??

இந்த பதிவை முழுசாக படிக்க நினைப்பவர்கள், நேற்றைய இதன் முந்தைய பதிவையும் சேர்த்து படியுங்கள். இது முந்தைய பதிவு மன்றத்தின் தொடர்ச்சி,..


தீர்ப்பு என்ன சொல்ல ?

வெளி நாடு வாழ் இந்தியர்கள் என்றாலே உங்களுக்கு இளக்காரமாய் போய்விட்டது. உலகிலேயே பிறந்த மண்ணிற்கே பணத்தை அனுப்பும் கூட்டம் எது தெரியுமா? அது இந்தியனின் கூட்டம்தான். 2007 ஆம் ஆண்டு உலக வங்கி கணக்குப்படி இந்தியாவிற்கு வந்த NRI பணம் மட்டும் 27 பில்லியன் டாலர்கள்,.. (1.2 லட்சம் கோடி இந்திய ரூபாய்). சொந்த மண்ணிற்கு தேசத்திற்கு பணம் அனுப்பும் நாட்டு மக்களில் இந்தியாவே முதலில் இருக்கிறது. இது அன்னிய நேரடி தொழில் முதலீடுகளைவிட மூன்று மடங்கு அதிகம். இந்த பொன் முட்டையிடும் வாத்தை இழக்க இந்தியா தயாரில்லை. அதனால்தான் NRIகளுக்கு சலுகையாக வழங்குகிறது. உங்கள் பணத்தை கலர் டிவியாகவும், கேஸ் ஸ்டவ்வாகவும் அரசு வழங்கிய போது அமைதி காத்த நீங்கள் NRI என்றதும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? நாங்கள் என்னதான் சம்பாரித்தாலும் எங்கள் பணம் இங்குதானே வருகிறது? அது உங்களுக்கு போனஸ்தானே. துபாய் சொன்னதுபோல் ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வை சௌகர்யமாக அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. அது சிங்கமாக இருந்தாலும் சரி, இல்லை குரங்காக இருந்தாலும் சரி. அது அவைகளின் சொந்த உரிமை. எனக்கொரு பிரச்சனை என்றால் யார் வருவார்? நான் தானே பார்த்து கொள்ளவேண்டும்? நீங்கள் யாரும் வருவீர்களா?? இல்லையே, எனக்கும் என் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கும் நாங்கள் சேர்க்கிறோம்.இதில் அடுத்தவர்களுக்கு என்ன பிரச்சனை?? என் பாதுகாப்பிற்காக என் உழைப்பில் நான் சம்பாரிக்கும் பணத்தை கேள்வி கேட்க நீங்கள் யார்??

இப்படியெல்லாம் நம்ம வெளி நாடு வாழ் இந்தியர்கள் கேக்குராங்க,..ஆனா எனக்கு தோன்றது இது தான்,..நீங்கள் (NRI) எவ்வளவு பேர் போயி எவ்வளவு காசு அனுப்பினீங்க,.. என்ன மாற்றம் வந்துச்சு? இல்லையே ஏன்.? காரணம் என்ன? நீங்கள் சம்பாதிப்பதை உங்களின் குடும்பம் முன்னேற பயன்படுத்துகிறீர்கள். வீடு வாங்க, நிலம் வாங்க, பேங்கில் போட இப்படி பல. இதனால் உங்கள் குடும்பம் முன்னேறியது. ஆனால் நாடு?? இது ஏற்ற தாழ்வுகளை உருவாக்கும் காரணியா இல்லையா? ஆனால் அன்னிய நேரடி முதலீடுகள் வரும் போது அது நாட்டிற்கு நல்லது. காரணம் பணம் வீடாகவும், காராகவும் முடங்குவதில்லை.அன்னிய முதலீடு தொழிலை பெருக்குகிறது. உற்பத்தியை அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கும் போது நாட்டினுடைய வளர்ச்சியை கண்கூடாக காணலாம். அதனால்தான் அரசாங்கம் நேரடி அன்னிய முதலீடுகளில் கவனம் செலுத்துகிறது. இதுதான் காரணம்.

எனக்கு தெரிந்தவரை பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஆனால் பணமின்றி வாழ்க்கையும் இல்லை. அதனால் உங்கள் தேவைகளுக்கு உங்கள் லட்சியங்களுக்கு வெளிநாடு செல்வதில் தவறில்லை. போய் உலகத்தை தெரிந்து கொள்ளுங்கள். உலகத்திலுள்ளவனுக்கு என்ன தேவை என அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உயர்வதற்கு என்ன என்ன வழி இருக்கிறதென்று பாருங்கள். உன் இந்தியன் ஒருவன் உயர்வதற்கு கூட வழி இருக்கா என்பதையும் பாருங்கள். பருந்துகள் மேலே பறக்கும்போது சின்ன பட்டங்களையும் தூக்கிகாட்டுவதில் ஒன்றும் தவறில்லை. பருந்திற்கும் ஒன்னும் நட்டமில்லை. நீங்கள் எப்படியோ நாட்டின் பவளங்கள்தான். கடல்தான் பெரிய பரப்பு அதுதான் நிம்மதி என பவளம் எங்கோ ஒரு கடலில் நீங்கள் கிடப்பதில் என்ன பலன். அது இருக்கிற இடத்தில் இருந்தால் தங்கத்திற்கும் பதிப்பு, பவளத்திற்கும் மதிப்பு.

உலகிலேயே முதல் நிலை பணக்காரரான லஷ்மி மிட்டல் தெரியுமா? நிறப்பாகு பாடு காட்டும் கூட்டத்திலிருந்து வர எப்படி போராடிருப்பார். பாராட்டக்கூடிய விஷயம். ஆனால் அவர் மகள் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? தங்கத்தை குழைத்து அதில் வைரத்தை ஒட்டி ஆடையாய் செய்து மகளிற்கு திருமணம் செய்தார். இவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். ஆனால் எல்லா நாடுகளிலும் முதலீடு செய்துள்ளார். இந்தியாவிலும் ஏதோ பிச்சைகாசு அளவிற்கு முதலீடு என்று கேள்வி. என்னைப் பொருத்தவரை மிட்டல் ஒரு தவறான உதாரணம். (மகள் கல்யாணத்திற்கு முன்னூறு கோடி செலவழித்த புண்ணியவான்) அவனைபோல் யாரும் இருக்காதீர்கள் என்பதற்குத்தான் இந்த பதிவு மன்றமே. அந்த ஆளிற்கு சத்யம் ராஜூ எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்வேன்.அதனால் வெளி நாடு செல்லுங்கள், உழைத்து பொருள் ஈட்டுங்கள். அந்த பொருளை வைத்து அங்கேயே இருக்காதீர்கள். நம் நாட்டிற்கு திரும்ப வாங்க. முதலீடு கொண்டு புதிய தொழில் தொடங்குங்கள். அங்கு வேலையில்லாமல் அடாவடியாக திரியும் நம்ம மாடசாமிக்கு ஒரு வேலை போட்டுக்கொடுங்கள். திருந்துவான்.

அதனால் நீங்கள் யாருக்கோ உழைப்பதற்கு இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் உழை என்று சொல்கிறேன்.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்
கோன் உயர நாம் உயர்வோம்.

சிங்கங்கள் குரங்காவதில் தப்பில்லை. சுற்று சூழலில் பெரும் ஆபத்து வந்தால் உணவில்லாமல் சிங்கங்கள்தான் முதலில் சாகும். குரங்குகள் அல்ல. உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் குரங்குகள் துபாய்லேயே இருந்து கடைசி காலத்தில் இங்கு வந்தால் மற்ற சிங்கமும் கண்டுக்காது, எந்த குரங்கும் கண்டுக்காது. அது காட்டிற்கு நல்லதில்லை.

பதிவு பிடித்திருந்தால் மத்தவங்க காவ்யா மாதவானிற்கு போட்ட ஓட்டை நீங்க எனக்கு போடுங்க,..


NRI சிங்கங்களா இல்லை குரங்குகளா??அந்த வறண்ட இந்திய வனவிலங்கு சாலையில் ஒரு சிங்கம் வெறுத்துப்போய் இருந்தது. நமக்கு தினமும் ஒரு கிலோ கறிதான் கொடுக்குறாங்க, நமக்கு பத்தவே மாட்டிங்குது என்று. அப்போது துபாயிலிருக்கும் வனவிலங்கு சாலைக்கு ஒரு சிங்கம் வேண்டும் என்று ஒரு ஷேக் வந்தார். சிங்கத்திற்கு ஒரே மகிழ்ச்சி,.. தன் மனைவிகளையும் (??) குட்டிகளையும் விட்டு விட்டு ஒரு நாளைக்கு இரண்டு ஆடு கிடைக்கும் என்று எண்ணி துபாய் வனவிலங்கு சாலையை அடைந்தது.

அங்கு போனதும் முதல் நாள் சாப்பாடு பார்சல் வந்தது. பார்த்தால் ரெண்டு வாழைப்பழம். சரி, நம்ம முதலாளிக்கு நம் உடம்பின் மேல் கரிசனம் என்று விட்டுவிட்டது. அடுத்த ரெண்டு நாட்களும் தொடர்ந்து அதே வந்த படியால் சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. இதை விட கூடாது என்று எண்ணி நேராக மேலாளரைப் பார்த்தது." என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கீர்கள், நான் அந்த வனவிலங்கு சாலையில் ராஜாவாக இருந்தேன், இங்கு வந்து எனக்கு என்ன வாழைப்பழம் போட்டு ஏமாற்றப் பாக்குறீர்களா???" என எகிறியது. அதற்கு அந்த மேலாளர் சொன்னார் "ஐயா, நீங்கள் அங்கு சிங்கம் என எனக்கும் தெரியும், ஆனால் நீங்கள் வந்திருப்பது குரங்கின் விசாவில், எனவே உனக்கு குரங்கிற்கான உணவே வழங்க வேண்டும் என்பது எனக்கு வந்த உத்தரவு" என கோபப்படாமல் சொன்னான். இப்போது அந்த சிங்கம் தனக்கு அந்த ஒரு கிலோ கறியாவது கிடைக்காதா என ஏங்கிக் கொண்டு உள்ளது"

கதையின் கருத்து ; எங்கோ குரங்காக இருப்பதைவிட இந்தியாவில் சிங்கமாக இருங்கள் NRIக்களே,..

என்னை மின்னஞ்சலில் வந்த இந்த கதை மிகவும் சூடாக்கியது. ஆனால் யோசித்துப் பார்த்தால் கருத்து சரியானது போலவும் தோன்றியது. எனவே இதை விவாதமாக நடத்த இரண்டு குழுக்களாக நானே பிரித்து உள்ளேன். கருத்திற்கு மறுப்பு தெரிவித்து துபாய், லண்டன் சிங்கப்பூர், ஒரு அணியாகவும், மேலே சொன்ன கருத்து சொன்னது சரியே என்று மதுரை, சென்னை, கோவை என இன்னோரு அணியாகவும் விவாதிக்கலாம்.

துபாய் (தவறு)

ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வை சௌகர்யமாக அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. அது சிங்கமாக இருந்தாலும் சரி, இல்லை குரங்காக இருந்தாலும் சரி. அது அவைகளின் சொந்த உரிமை. அவைகளின் அதிர்ஷ்டம். வீட்டு நாயிற்கு தினமும் பால் சோறு கிடைக்கிறது என்பதற்காக வெளியில் இருக்கிற நாய் குரைக்க கூடாது. வீட்டு நாய்க்கு அதிர்ஷ்டம் உமக்கு இல்லை அவ்வளவே. தானும் தன்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று இந்த சிங்கம் நாயாகி, குரங்காகி அங்கே போய் உழைத்து கஷ்டப்பட்டு ஆடு ஆடாக சேர்த்து சேர்க்கிறது. இங்கே வந்தவுடன் இங்கே இருக்கிற தன் சக சிங்களுக்கு ஆட்டை அடித்து பிரியாணி வைக்கிறது. தான் குரங்காகி மற்ற தன் ரத்த சிங்கங்களை செழிப்பாக வைத்திருக்கிறது. தினமும் அரைக்கிலோ சாப்பிடும் சிங்கத்திற்கு பொறாமை, ஒரு குரங்கு சம்பாரித்து தன் சொந்தங்களுக்கு மட்டுமே தந்து கொழு கொழுவென இருக்கிறது, நாம் எழும்பும் தோலுமாக இருக்கிறோம் என்ற வயிற்றெச்சல் அவ்வளவுதான்.

மதுரை (சரி)

அண்ணே, வணக்கண்ணே. நீங்க சிங்கம்மா இருங்க, இல்ல அசிங்கமா இருங்க, எங்களுக்கு கவலை இல்லண்ணே. ஆனா, இங்கன்ன நாங்க தோட்டத்துல கஷ்டப்பட்டு சம்பாரிச்சு தேங்காயை நீங்க பத்து ரூபாய்க்கு வாங்குறீங்க,. நாங்க கேனப்பய மாதிரி 2 ரூபாய்க்கு விக்கிறோம். எதுக்கு?? எங்கல தூக்கிவிட அரசாங்கம் இருக்குன்னு ஒரு நம்பிக்க,. என்னைக்காவது எம்புள்ளையும் ஆபீஸ்ல உக்காரும் ஒரு நப்பாசை. ஆனா இந்த அரசாங்கம் என்ன பண்ணுது? ஒரு இஞ்சினியர ரெடி பண்ண 10 லட்சம் செலவு பண்ணுது, ஒரு டாகடர ரெடி பண்ண 25 லட்சம் செலவு பண்ணுது. நீங்க என்னா பண்றீங்க?? அரசு பணத்துல படிச்சுட்டு அமெரிக்கா, லண்டன்னு போய்றீங்க,. நாங்க கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற அரிசி நாங்க தின்றதில்லயா, இவிங்கலுக்குதான் அனுப்பி விட்டராய்ங்க,.. ந எமக்கு 2 ரூபா அரிசியையும், சீமத்தண்ணியயையும் குடுத்து முடிச்சுபுடுறாய்ங்க. நாங்க இங்கன அடுப்பெறிய ராவெல்லாம் ஊதிக்கிட்டுருக்கோம்.

மொதல்ல டாக்டருக்கு படிச்சு முடிச்சொனே ரெண்டு வருஷம் எங்க சிலுக்குவார்பட்டிக்கெல்லாம் வந்து சேவகம் செஞ்சிட்டு, அப்புறம் அது சிங்கம்புணேரில வேல செஞ்சா யென்ன, சிங்கப்பூர்ல வேல செஞ்சா யென்ன? என்னாண்ணே நாஞ்ச்சொல்றது?/

லண்டன் (தவறு)
இங்கே இருக்கிற அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அன்னிய முதலீடுகளேயே இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கூடுதலாக உள் நாட்டில் அதிக அளவு உற்பத்தி இருக்க வேண்டும் இன்னும் அது நமக்கு பலம். நீங்கள் இறக்குமதியை குறைத்து அதிகளவு ஏற்றுமதி செய்வதால் உங்களுக்கு உங்களின் ரூபாயின் மதிப்பு கூடுகிறது. நீங்கள் தானியங்களையும், துணிகளையும், சர்க்கரையயும், மருந்துகளையும் ஏற்றுமதி செய்கிறீர்கள். எங்களுக்கு அவ்வளவு வசதியில்லை. அதனால்தான் எங்களையே விற்பனை செய்கிறோம். அது சிலருக்கு அறிவு சார்ந்த மூளையாக இருக்கிறது, சிலருக்கு கடின உழைப்பை தரும் கை, கால்களாக இருக்கிறது. இந்தியாவில் உயிரை கொடுத்து செய்யும் உடல் வேலையை (physical work) எடுத்துக் கொள்ளுங்கள். இருபது மாடி கட்டிடங்களில் எந்தவித பாதுகாப்பு கருவிகளில்லாமல் வேலைசெய்யும் ஒருவனுக்கு அதிகபட்சம் எவ்வளவு சம்பளம் உங்கள் பணக்கார முதலாளிகள் தருவார்கள். ஒரு 25 ஆயிரம் அதிகபட்சம்?? ஆனால் கீழே உள்ள படத்தில் வேலை செய்பவர்க்கு சம்பளம் 5 லட்சம். நான் இவரையும், அவரையும் ஒப்பிட முடியாதது உண்மைதான், ஆனால் உயிர் ஒன்றுதானே? அது இருபது மாடியில் போனால் என்ன? இல்லை 200 மாடியில் போனால் என்ன?.நாங்கள் வேலை செய்வது இந்தியாவை வளம் கொழிக்கத்தான் முதலில் இங்கு இருப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
சென்னை (சரி)
நமஸ்காரம். நீங்க ஒன்ன பாக்கணும் பெரியவாளே, எந்த உயிருக்கும் அதோட தர்மப்படி வாழ்றதுக்கு உரிமை உண்டுங்கிறது வாஸ்தவம்தான். அது எப்போதுன்னு நோக்கினானேன்னா அடுத்தவாளை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும். எப்படி? நா மேலை பாக்குற பேங்குளேயே தனியா NRIக்கு அக்கவுண்ட் திறந்திர்ராள். அவாளுக்கு தனி க்யூ, நேக்கு தனி க்யூ. அவாளுக்கு ட்ரீட்மெண்ட் வேற, மத்தவாளுக்கெல்லாம் வேற, இது தான் சம நீதியான்னு கேக்குன்றேன். இங்க கஷ்டப்பட்டு உற்பத்திய பெருக்கிறவாளுக்கு ஒரு நீதி, படிப்ப முடிச்சன்னே அமெரிக்கா, பேரிக்கான்னு போறவாளுக்கு ஒரு நியதி. ஏன் நேக்கு கூடதான் மலேசியா offer வந்தது, நான் ஏன் ஜோய்ன் பண்ணல்ல? நேக்கு பெரியாவல்லாம் இருக்கா, அவாளுக்கு கடைசி காலத்துல சேவகம் பண்றத விட்டு விட்டு கண்டவாளுக்கெல்லாம் பண்ண சொல்றியாளா?. என் கேள்வி என்னன்னு கேட்டியாள்னா நீ அங்க பண்ற வேலையை இங்கே பண்ணினா ஏன் குறைஞ்சு போயிருவேள்னு கேக்குறேன். வெள்ளிக்கிழமைன்னா மொதல்லெல்லாம் எல்லாம் அம்பாள் சன்னதிக்கு வருவாள், இப்போ டாஸ்மார்க்குல்ல போறாள். இப்படி புத்தி இல்லாம திரியிர கூட்டத்த யார் கட்டுப்படுத்துவா? யாரும் பொறக்கும்போதே மஹாலஷ்மிய அழைச்சுண்டு வர்ரதில்ல, அது அவா அவாளுக்கா அமையுறது. சரி அன்னிய முதலீட்டுன்னாலதான் பலன் உண்டு, சொல்றேள் வாஸ்தவம். அதுக்கு நீ ஏன் துபாய்க்கு போறேள். நான் ஒரே ஒரு எக்சாம்புள் சொல்றேன். அந்த பாலும் குழந்தைக்கு 27 வயசு.(???) ஆனால் அவாளுக்கு கீழே 200 பேர் வேலை பாக்குறாள், கோடி கோடியா சம்பாதிக்கிறாள் யார் அவாள்? ஒரு குடிசை வீட்டுல பொறந்து எப்படி சரத் பாபு வந்தார். ஏன் அவாளுக்கெல்லாம் கஷ்டம் இல்ல? அவாளுக்கு ஒரு நோக்கம் இருந்தது, நோக்கு பணம்தான் நோக்கம், அதுதான் ப்ராணனை எடுக்கிர்றது.. சரத்பாபு நினைச்சா கிளம்பிருக்க முடியாதா? ஏன் அவாளுக்கு குடும்பம் இல்ல?? அவா மட்டும் எப்படி தன்னையும் உயர்த்திக்கிட்டு அடுத்தவாளையும் தூக்கிவிட்டா?. ஏன் அது மாதிரி நீ நினைக்கமாட்டீர்ரேள்னு எல்லாம் கேக்குறா, நானும் கேக்குறேன். அதுக்கு பதிலை சொல்லும்,.. அரசாங்க பணத்தில வளர்ந்துட்டு, எவனோ ஒருவன் நெல் விதைக்க நீ பொங்கி சாப்பிட்டுட்டு இந்தியாவுல வளர்ற அடுத்தவாளை பத்தி பேச நோக்கு என்ன யோக்யதை இருக்கு??

அடுத்த இரு விவாதங்களும், தீர்ப்பும் நாளைக்கு,.. (அது கூட உங்கள் பின்னூட்டத்தை பொறுத்தது.)

ஆகா,.. வர்ரவுங்க பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஒரு குத்து குத்திட்டு போங்கப்பா.

திங்கள், 20 ஜூலை, 2009

கூகுள் என்ஜினியரிங் - சுவாரஸ்ய பதிவு

எல்லோரும் சுவாரஸ்ய பதிவு, சுவாரஸ்ய பதிவுன்னு எழுதி தள்ளுராங்களே,. அதுக்கு விருது வேற வாங்கி கலக்குறாங்களேன்னு நினைச்சுகிட்டு இருக்கிறப்ப செந்தாழல் ரவியின் விருது என் அன்பிற்குரிய பதிவாளர் திரு எவனோ ஒருவன் வழிமொழிதலின் காரணமாக எனக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவருக்கு எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

இதன் காரணமாக எனக்கு ஒரு வேட்கையும், உற்சாகமும் தோன்றியது. இது வரை எப்படி எழுதினாய் என்பது முக்கியமில்லை. இனிமேலாவது ஒழுங்காய் எழுத வேண்டும் என தோன்றியது. அதன் காரணமாக மிக,மிக,மிக யோசித்தேன். எல்லோரும் டெக்னிக்கல் பதிவு போடுகிறார்கள்,.. நாமும் ஏதாவது போடலாமே என தோன்றியது. ஆனால் அதற்கு ஏதாவது டெக்னிக்கலாக ஏதாவது தெரிந்திருக்க வேண்டுமே என யோசித்த போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எல்லாரையும் போல் SAP, ஜாவா, சுமத்ரான்னு ஓவராக போக கூடாது, என் அறிவுக்கு எட்டியதாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் எல்லோருக்கும் பலனளிப்பதாகவும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்த போதுதான் எனக்கு கூகுள் நியாபம் வந்தது. எங்கள் பொறியியலில் எந்த ஒரு சிக்கலுக்கும் நாங்கள் விடை நாடி செல்வது கூகுள். ஒரு கேள்வியை நீங்கள் தூக்கி வீசினால் அது ஓராயிரம் பதில் தரும். இப்படி கூகுள் மூலம் நாங்கள் உருவாக்கும் என்ஜினியரிங், கூகுள் என்ஜினியரிங் என எல்லோராலும் அழைக்கப்படுகிறது (ஹி ஹி தலைப்பு வந்துருச்சு).

எனக்கு இருக்கும் தலையாய பிரச்சனை கடவு சொல்லும், ரகசிய குறியீடும் (அதாங்க user name, password). ரகசிய குறியீட்டை நான் அடிக்கும் போது யாராவது பார்த்துவிடுவார்கள் என பீதியின் காரணமாக நான் தப்பு தப்பாய் அடித்து நிறைய அக்கவுண்டுகள் காலியாகிவிட்டன. எனவே இதையே நம் தலைப்பாக கொள்ளலாம் என நினைத்து தேடி அழைந்தபின் கூகுளினால் எனக்கு அட்டகாசமான பதில்கள் கிடைத்தன. இவை எனக்கு எளிய முறையாகவும், எல்லோருக்கும் புரியும்படி ஒரு டெக்னிக்கல் பதிவு போட வாய்ப்பாகவும் அமையும் என்பதால், இந்த வழி முறைகளை கீழே இணைத்துள்ளேன். எல்லோரும் படித்து உங்கள் பார்வைகளை பகிரலாம். ஆனால் ஒரு நிபந்தனை, அவை கீழே சொன்னது போல் எளிய முறையில் இருக்க வேண்டும்,.. ஆமா,..

முறை ஒன்னு

நீங்கள் கீ பேடை மறைத்துவிடுங்கள், யாராலும் பார்க்க முடியாது.முறை ரெண்டு

நீங்கள் மானிட்டரை மறைத்து விடுங்கள், ஏற்கனவே கீ பேடும் மறைந்து இருப்பதால் உங்களின் ரகசிய குறியீடு மேலும் பாதுகாப்பாகிறது.

முறை மூணு

இது மிக மிக பாதுகாப்பான முறை. இதன் மூலம் உங்கள் ரகசிய குறியீட்டை நீங்களும் உங்கள் மானிட்டரும் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் இந்த முறை வலுவானதாக இருக்கிறது. இதில் என்ன ஒரு வசதி என்றால் நீங்கள் யார் என்பது கூட தெரியாது. இதனால் நீங்கள் என்ன வேணாலும் பார்க்கலாம். இந்த முறையின் காரணமாக நீங்கள் இரட்டை பலனை அடைகிறீர்கள் (technically speaking duel benefit).என் டெக்னிக்கல் பதிவிற்கு என் ஆலோசராக இருந்த பதிவர் பரட்டைக்கு என் நன்றி.
அடுத்ததாக நான் சுவாரஸ்ய விருதை வழங்குவது மூவருக்கு,..

1. கலகலப்பிரியா,.. ( பாரதியின் தங்கை, அக்கினி குருதி தெரிக்கும் இவர்களின் கவிதைகளுக்கு நான் அடிமை)
2. சாதிக் அலியின் தமிழ் குருவி (பதிவுகள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என நினைக்கும் பதிவுகளுக்கு சொந்தகாரர்)
3. ஆகாய நதி ,.. (எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வை பக்கத்தில் நடப்பது போல் எழுத்தில் கொண்டு வரும் திறமைசாலி)

என் வாழ்த்துக்கள், நண்பர்களே,..


இந்த பதிவு சுவரஸ்யமாக இருந்துச்சுன்னு நம்புரேன்,.. இதை நம்பாதவர்கள் என் முன்னால் உள்ள பதிவிற்கு செல்ல பரிந்துரைக்கிறேன்,..

மீ ப்ர்ஸ்டுபெத்த மனசு


எவனோ ஒருவனிற்கு மீண்டும் என் நன்றிகள்.
சனி, 18 ஜூலை, 2009

தண்ணி வண்டி

மனுசன் தண்ணி அடிச்சிட்டு மையவிலக்கு விசை, மைய நோக்கு விசை கலந்து நடப்பது பார்க்க காமெடி (தள்ளி நின்னுதான்),.. இதுல விலங்குகள் தண்ணி அடிச்சா???


இன்று எதேச்சையாக ஒரு விடியோவை பார்க்க நேர்ந்தது. ஆப்பிரிக்காவில் வறட்சியான கோடைகாலங்களில் விலங்குகள் அங்கே கிடைக்கும் ஒருவித பழங்களை சாப்பிடுகின்றன. அதிக ஆல்கஹால் கொண்ட இந்த பழங்களை சாப்பிட்ட பின் ஆடுகிற ஆட்டத்தை பாருங்கள். (வீடியோதான் கொஞ்சம் பழசுமாதிரி தெரிகிறது)


.

வெள்ளி, 17 ஜூலை, 2009

எதை சொல்ல

என்னை மதித்து என் பள்ளி அனுபங்களை எழுத சொல்லி என்னை தொடர் பதிவிற்கு அழைத்த திரு. செந்தில் வேலிற்கு என் மனமான நன்றி. மற்றவர்களை போல் என் பள்ளி வாழ்க்கை பசுமை நிறைந்து இல்லாமல், இன்னல் மட்டுமே நிறைந்ததாக இருந்தது. பள்ளி வாழ்க்கை என்றதும் அது மின்னலாய் வந்து போகும். அதில் எதை சொல்ல

நண்பகல் சத்துணவிற்காக தட்டுடன்
பசி நிறைய வரிசையில் நின்றதா - இல்லை
தாமதமாய் வந்து சாம்பாரில்லாமல் வெறும்
சோற்றோடு குழாய் தண்ணி விட்டு தின்னதையா?

பேனாவில்லாமல் அடுத்தவனிடம் திருடி
கணிதத்தில் வாங்கிய 100 மதிப்பெண்ணா - இல்லை
அடிபட்டு ரத்தம் ஒழுக மைதானத்தில்
டென்னிஸ் பந்தில் விளையாடிய கால்பந்தா?

டியூசன் வராததால் நொண்டி சாக்கு சொல்லி
வாரம் முழுக்க முட்டி போட வைத்த ஆசிரியரா - இல்லை
100 ரூபாய் கட்டமுடியால் பள்ளியின் வெளியில் நின்ற போது
எனக்கு பணம் கட்டிய வெங்கடேஸ்வரன் ஆசானையா?

பதினோராம் வகுப்பில் முதன் முதலாக போட்ட
என் அண்ணனின் பழைய பேண்ட்டா - இல்லை
பத்தாம் வகுப்பு வரை நைந்து நூலாகி
ஒட்டுப்போட்ட என் காக்கி டவுசரா?

தினமும் தனியாய் செருப்பில்லாமல் 8 கிமீ
நடந்து படித்த அரசு நாடார் பள்ளியா? - இல்லை
புரியாத மாணவர்களுக்கு அணித்தலைமை மாணவனாய்
இருந்து எடுத்த சிறப்பு வகுப்புகளா?

நவம்பர் தீபாவளியின் கோஆப்டெஸின் புது துணிக்கு
சனவரியிலியே தேடி பார்த்த நாட்காட்டியா? - இல்லை
தோட்டத்தில் சாணி அள்ளனுமே விடுமுறை ஏன் வருகிறது
என பள்ளி திறப்பிற்கு ஏங்கி காத்திருந்த ஜூன் மாதங்களா?

கண்கள் சிவக்க கிணற்றில் போட்ட
கல்லை எடுத்து வந்த மூச்சு விளையாட்டா - இல்லை
கூட வந்த நண்பன் குளிக்க, பத்து ரூபாய் காசில்லாமல்
அவன் துணிக்கு வெளியில் காவல் நின்ற நீச்சம் குளமா?

ஆங்கிலத்தில் பலவீனமாய் இருக்கேன் என
கவனமெடுத்து சொல்லி தந்த தோழியா- இல்லை
அவன் விரும்பிய தோழி என்னுடன் இருக்கிறாளென
வீட்டில் சொல்லி அடி வாங்கித்தந்த நண்பனா?

ஆடிக்காற்றில் மதிய வெயிலில் நெல்லையையும் உமியையும்
பிரித்து வேலை செய்த அந்த சாணி மொழுகிய முறமா? - இல்லை
தீபாளியன்று கறி எடுத்து சாப்பிடுகையில் அப்பாவிற்கு மட்டும்
ஏன் கறி அதிகம் என கணக்கு போட்ட தட்டுகளா??

அடிபட்ட குருதி அழிந்து போனாலும்
வலி மறைந்து போனாலும்,
அது விட்டு சென்ற காயங்கள்
சரியாய் வந்து நினைவுபடுத்தும்.
கொடியது கொடியது
இளமையில் வறுமை கொடியது ,..

அடுத்து நான் அழைக்க நினைப்பது எவனோ ஒருவன், மற்றும் ஆகாய நதி.
நன்றாக எழுத என் வாழ்த்துக்கள்.

நண்பர்களே படித்து பிடித்திருந்தால் தமிழிஸில் மறந்துவிடாமல் ஒட்டு போடுங்கள், வர வர ஒண்ணும் ஹிட் லிஸ்ட்ல வரமாட்டிங்குது.


.

வியாழன், 16 ஜூலை, 2009

மீ த ப்ர்ஸ்டு

அது ஒரு கோடை காலம்,.. நானும் என் நண்பரும் கொடைக்கானல் சென்றோம். அதன் மலைகளையும், காடுகளையும், மற்றும் எல்லா அழகையும் ரசித்துக் கொண்டே வந்தோம். என் நண்பரும் பதிவர் மாதிரி. அவருக்கும் என்னை மாதிரியே பின்னூட்ட வியாதி உள்ளது. அவர் எழுதிய பின்னூட்டங்களை சேர்த்துப் போடாலே 100 பதிவை தாண்டிவிடும். அவரிடம் நான் அடிக்கடி கேட்பேன், "இவ்வளவு பெரிய பின்னூட்டம் போடுற நீங்கள் ஏன் பதிவுகளை அள்ளித் தெளிக்க கூடாது?

"அடே ஊருல நிறைய பேரு சோறாக்கிட்டு எல்லாரும் எல்லாரும் வாங்கன்னு சொல்லிட்டு இருக்காய்ங்க,.. அவிங்க மனசு கஷ்டப்படக்கூடாதுல, அதான் போய் சோறு தின்னூட்டு மொய் வச்சிட்டு வர்ரேன்"

"சரி மச்சான் நீ சொன்னா சரியாதான் இருக்கும், பதிவை படிச்சவுடனே பின்னூட்டமே எழுத தோணல, ஆனா என்ன பண்ணுவ"

"கேளு, இந்த மாதிரி",. கீழே குனிந்து மண்ணில் போட்டுக் காட்டினார்,.
:)

:)))))))))))))))))

:D

"அப்புறம்"இது நான்தான்

:(


:((((((((((((((


"எல்லாம் சரி, இதைவிட கொஞ்சம் பெருசா எழுதனும்னா??"

"அவ்வ்வ்வ்வ்வ்"

"என்ன படிச்சொனே வாந்தி வருதுனு சொல்றீயா?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,.."

"என்னா மச்சான் ரொம்ப வாந்தி வருதா??"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், வேணாம், நான் அழுதுறுவேன்,.." வடிவேலு மாதிரி அழுதுக்காட்டினார்.

"ஓ அந்த அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா"

"சரி, பதிவு உண்மையிலேயே நல்லா இருக்கு,.. என்ன எழுதுவ?"

"அருமை, அற்புதம், கலக்கிட்டிங்க தல, கலங்கிட்டோம் தலைவா, பாராட்டுகள் தலை, சூப்பர் பாஸ், நல்லாயிருக்கு, அருமையான பதிவு, பெயர் சொல்லும் பதிவு, அழுகை வருது, சிரிச்சு சிரிச்சு வாயெல்லாம் வலிக்கிது, பக்கத்துல இருக்கவனுக்கு வயிறெல்லாம் வலிக்குது, ஹா ஹா ஹா. ஹி,ஹி,ஹி, ரைட்டு., ரொம்ப ரைட்டு, கலக்கல்.அடிச்சு ஆடுங்க!, சிங்கம் கிளம்பிடுச்சு,"

"என்ன மச்சான் அங்க சத்தம்"

"மாப்பிளே, யெதோ யான நிக்கிற மாதிரி தெரியுதுடா"

"அடே ஆமாண்டா, அய்யோ ஓடுறா, ஓடுறா,

"பள்ளம், பள்ளமா பாத்து ஓடுறா, அப்பதான் யான தொறத்தாது"

"சரிடா, சரிடா,."

ஓடினோம். எங்களுக்கும் யானைகளுக்கும் கொஞ்சம் இடைவெளி அதிகரித்து கொண்டு இருந்தது,.. (இடைவெளி என்றால் மெரினா கடற்கரை ரோட்டிலிருந்து கடல் அலை உள்ள தூரம்)

என் நண்பர் கொஞ்சம் பாசமாக வளர்ந்தவர் (அப்படினா தொப்பை ஜாஸ்தினு அர்த்தம்) என்பதால் அவரால் ஓட முடியவில்லை. பக்கத்தில் உள்ள குகை போல புதரில் பதுங்கிவிட்டார். அது மிக சின்ன இடம். பக்கத்திலேயே நானும் பதுங்கினேன். அந்த இடத்தில் நான் தான் முன்னாடி இருந்தேன். "அய்யோ யானை மிதித்தால் நம்மைதானே முதலில் மிதிக்கும்" இவன் வேறு பக்கத்தில் நீராவி ரயில் மாதிரி புஸ் புஸ்சென்று மூச்சு வாங்கி கொண்டிருக்கிறான். "ஆகா, இவன் பக்கத்தில் உக்காந்தா பாம்பு படமெடுத்தா கூட தெரியாது,.. ஓடிட வேண்டியதுதான்"

"மச்சான் நான் மரத்துல ஏறி உட்கார்ந்துர்ரென்"

"மாப்ளே எனக்கு மரமேற தெரியாதுடா"

"அதான் எனக்கு தெரியுமே"

நான் சத்தமில்லாமல் வேகவேகமாக சரசரவென பக்கத்தில் இருந்த ஆல மரத்தில் ஏறினேன். நான் ஏறியதை கண்டு மரத்தில் இருந்த குருவிகள் கீஸ்கீச்சென கத்திக் கொண்டு பறந்தன. பறவைகள் சத்தம் கேட்டு மூணு யானைகள் எங்கள் பக்கம் வந்துவிட்டன. எனக்கு கொஞ்சம் தொலைவிலும் நண்பருக்கு ஒரு ஐந்து அடியிலும் அவை இருந்தன. நண்பர் குகை புதரில் இருந்ததால் அவ்வளவாக தெரியவில்லை. இப்போது எனக்கு ஒரு SMS வந்தது. நம் பின்னூட்ட நண்பர் அந்த டென்ஷனிலும் SMS அனுப்பினார்.

"மீ த ப்ர்ஸ்டு"

யானைகளுக்கு படிக்கவா தெரியும். என் மொபைல் சத்ததை கேட்டு விரு விருவென என் மரத்திற்கு கீழே வந்தன. எனக்கு உதற ஆரம்பித்துவிட்டது. எனக்கு பயத்தில் பாத்ரும் வருவது போல் இருந்தது. வேறு வழியில்லை. அடிச்சிட வேண்டியதுதான். மொபைலில் அனுப்பி வைத்தேன்

"ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

நான் பின்னூட்ட நண்பருக்கு அனுப்பிய SMS எப்படி யானைகளுக்கு தெரிந்தது. பரவாயில்லை நல்ல ரிங் டோன்.

"ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்கங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கங்"புதன், 15 ஜூலை, 2009

பொழிலனுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

// ஸ்ஸ்ஸ்... அப்பாடா! விடிந்தாச்சு... :) இன்று முதல் இனி வருடம் தோறும் இன்னாள் தான் பொன்னாளே எந்தன் வாழ்வில் :) இன்று என் குழந்தையின் பிறந்த நாள் !//

*************************************************************
//என் வயிறு தான் தெரிந்தது. அப்புறம் ஒரு கோடுதாங்க போட்டாங்க வயித்துல.... குபுக் குபுக்னு தண்ணீர் கொட்டுச்சு! அடக் கடவுளே இவ்வளவு தண்ணீர் இருக்கேனு நினைச்சேன்... பின்ன ஏன் தண்ணீ இல்லனு சொன்னாங்கனு யோசிக்கும் போதே... டாக்டர் ஃபுல் கட்டிங் முடிச்சாச்சு போல... :)//

//ஆஹா! ஆஹா1 ஆஹா! என்ன சொல்ல எப்படி சொல்ல... அந்த ச்ங்கீதம்... வாழ்க்கையில மறக்க முடியாத இனிமையான சங்கீதம்.... "ங்கா ங்கா ங்கா"னு என் தங்கம், செல்லம், குட்டிமா சத்ததோட வந்துச்சு! :) :) :)

*************************************************************
பொழில்குட்டிக்கு தற்போது ஆறாவது மாதம் துவங்கியுள்ளது :) ஏற்கனவே தெளிவாக "அம்மா" என்றழைக்கும் என் தங்கத்திற்கு இப்போது "அப்பா" என்று அரைகுறையாக ஆனால் "அழகாக" சொல்ல வருகிறது :) இதைக் கேட்டதும் அவர் அப்பாவைக் கையில் பிடிக்க முடியவில்லை.

இப்போதெல்லாம் சேட்டைகள் சற்றே வலு பெற்றுள்ளன :) குப்புறப் படுத்துக் கொண்டு கண்களுக்கு எட்டும் பொம்மைகள் கைக்கு எட்டவில்லையென அடம் பிடிக்கிறார். "அம்மா... ம்மா" என்று என்னை அழைப்பார்; நான் திரும்பிப் பார்த்ததும் சிணுங்கிக் கொண்டே பொம்மையைப் பார்த்தால் அது அவருக்கு வேண்டும் என்று அர்த்தம்... நான் சென்று எடுத்துக் கொடுப்பேன் :)
எனக்கும் பகல் நேரத்தில் அதிக வேலை இருக்காது; அவர் தான் என் உலகம் நான் பகலில் என் உலகத்தை சுற்றிக் கொண்டு பல செய்திகளை அவனிடம் பேசிக்கொண்டிருப்பேன் :) அப்போது தானே அவர் விரைவில் வெளி உலகத்தை புத்திசாலித் தனமாக எதிர்கொள்ள முடியும்... :)

வேறு ஏதாவது ரைம்ஸ் பாடினால் அழுகையை நிறுத்தி சிரிப்பதில்லை. இந்த பாடலுக்கு உடனே சிரிப்பு வந்து விடுகிறது. ஒருவேளை நான் பாடுவதே அவருக்கு சிரிப்பாக உள்ளதோ என்னவோ? :) எப்படியே அழுகை நின்று சிரித்தால் சரி :)

அவனை ஊஞ்சலில் அமர வைத்து தான் முதன் முதலில் உணவூட்ட ஆரம்பித்தேன்.
அதிலும் நான் ஏதாவது பாட வேண்டும். அதிகம் "விநாயகனே வினை தீர்ப்பவனே" தான் பாடுவேன். பாவம் குழந்தை மனசு நான் பாடுறதையும் கேக்கும்.

***********
பிறகு அங்கும் இங்கும் தவழ்ந்து கொண்டே உண்ண ஆரம்பித்தார்! அப்போது அவருடைய விளையாட்டு சாமான்கள் அவரை உண்ண வைக்க உதவின. அவற்றை சுற்றிலும் போட்டுவிட்டால் சார் அந்த சாமான்களின் வட்டத்திற்குள்ளேயே இடுப்பார். ஆனால் அதுவும் சில நாட்களுக்கு தான் உதவியது.

**********

அடுத்து அவர் விளையாட்டு சாமான்களின் உலகம் கிச்சன் பாத்திரங்கள் வரை நீண்டது!
அதனால் எப்போதும் தட்டு (அ) டம்ளர் ஒன்றை அவர் கையில் கொடுத்துவிட்டு ஊட்டிவிடுவேன்! அதை போட்டு தட்டிக் கொண்டே அந்த ஒலியின் மகிழ்ச்சியில் சாப்பாடு இறங்கிவிடும்!

**********

போகப் போக நான் பாவ்லா செய்வதைக் கண்டுபிடித்துவிட்டார். அதனால் நான் சட்னியை தனியே கிண்ணத்தில் எடுத்து அவர் கண்ணுக்குப் படாமல் என் பின்னே ஒளித்து வைத்துக் கொண்டு அவருக்கு இட்லி/தோசை ஊட்டி விடுவேன். அவர் வேறு பக்கம் கவனிக்கும் சமயம் ஒரு பெரிய இட்லி பீசை எடுத்து எனக்கு பின்னால் இருக்கும் சட்னியில் பரபரப்பாகத் தொட்டு லபக்னு முழுங்கிடுவேன்! :)

**********

இப்போதெல்லாம் இரவு உணவு என்றால் அவராகவே தான் தட்டில் வைத்து சாப்பிட வேண்டுமாம்! அதை சொல்லத் தெரியாததால் ஊட்டிவிடும் போது உண்ணாமல் ஒரே அடம் :(
என் தட்டில் வைத்திருப்பதை பிய்த்து உண்ண துவங்கினான்...
*************************************************************
இன்னொரு நாள் இப்படிதான் சாந்தி அக்கா(வீட்டு வேலைக்கு வருபவர்) வைத்திருந்த கூடையை எடுத்து அதில் உள்ள குழம்பு டப்பாவை கொட்டிவிட்டு அதன் மீது உட்கார்ந்து அதை வாயில் வேறு வைத்து ஒரே அழுகை பாவம் :( நாங்கள் சிறிது வேறுபக்கம் கவனம் செலுத்துகையில் இப்படி சேட்டைகள் நிகழும்! :)

இவனுக்கு மிகவும் பிடித்த ஒரு வேளை என் கணினியின் UPS switch-ஐ அழுத்திவிடுவான் நான் கணிணியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே! :) ஒரு வேளை என்னை கவனிக்காமல் ஏன் அதனுடன் இருக்கிறாய் என்று அப்படி செய்கிறானோ என்னவோ :-)

*************************************************************

பொழில்குட்டி இப்போ நல்லாவே நிற்க, பிடித்துக் கொண்டே நடக்கிறான்; அதானால் அவனை கையில் பிடிக்கவே முடிவதில்லை! "குட்டிமா இங்கே வா"னு கூப்பிட்டாலும் திரும்பி ஒரு ராஜ பார்வை பார்த்துட்டு மறுபடியும் "கடமையே (சேட்டை(அ)விளையாட்டு) கண்கண்ட தெய்வம்" னு தொடருவான்!

ஆனால் சாப்பிட வைக்க ரொம்ப பொறுமைதான் வேணும்! ஸ்ஸ்ஸ் அப்பா! ஒரு வழியா அவனுக்கு ஊட்டி முடிச்சா எதோ பெரிய விருந்து சாப்பாடே நான் சாப்பிட்ட மாதிரி தி்ருப்தி!

*************************************************************

அவனுக்கு இப்போது ஒன்றரை வயதில் ஒரு தோழன் வேறு அதனால் அவனுடன் வெளியில் விளையாட மிகுந்த ஆர்வம் காட்டுகிறான்!!! கடவுளே இப்போதேவா???? மகிழ்ச்சிதான் ஆனாலும் சிறு குழந்தையாயிற்றே தத்தி தத்தி நடக்கையில் எப்படி தனியே நடக்கவிடுவது??? அதனால் ஹி ஹி ஹி நானும் சேர்ந்து விளையாடப் போகிறேன் :)))


நானும் பொழிலனும் உப்பு மூட்டை விளையாட ஆரம்பித்துவிட்டோம்! அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.... என் வயிற்றில் சுமந்த எங்கள் குழந்தையை இப்போது என் முதுகில் சுமப்பது மகிழ்ச்சியான அனுபவம்! :))

*************************************************************

ஃபிளைட் சத்தம் கேட்டதுமே பார்ப்பதில் ஆர்வம் காட்டிய பொழிலன் சில நாட்களாக அந்த சத்தம் தொலைவில் கேட்டதுமே அழுதுகொண்டே என் அருகில் வந்து என் காலைக் கட்டிக்கொண்டு வெளியே செல்ல வேண்டுமென வெளியே நோக்கிக் கை காட்டுவான்.... முதலில் நான் கூட சரி குழந்தை ஃபிளைட் பார்க்க இவ்ளோ ஆர்வமா இருக்கானுதான் நினைத்தேன்...

யாருக்குத் தெரியும் ஒருவேளை பொழிலன் ஒரு சிறந்த விமானியாகவோ, விண்வெளி வீரனாகவோ கூட வரலாம்!!! :)))

*************************************************************

கண்டிப்பாக பொழிலன் வருவான் ஆகாய நதி.

பொழிலனுக்கு எங்கள் குடும்பத்தின் அனைவரின் சார்பாகவும் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.

(முதன் முதலில் CTRL C மற்றும் CTRL V மட்டும் பயன்படுத்தி போட்ட பதிவு இதுவே. அனுமதி இல்லாமல் உங்கள் பதிவுகளை சுட்டதிற்கு மன்னிக்கவும்.)

ஞாயிறு, 12 ஜூலை, 2009

பெத்த மனசுதூரல் ஆரம்பித்திருந்தது. மனதிற்குள் சந்தோஷம். நான் மீண்டும் வேளைக்கு போகிறேன். அப்பாடா ஒரு வழியாக பாலாவிடம் அனுமதி வாங்கியாச்சு. நான் வேளைக்கு போகணும்னு சொன்னது அவர் முகம் மாறித்தான் போச்சு. பார்க்க பாவமாகதான் இருந்துச்சு. ஆனால் என்ன செய்ய?? அவர் நான் என் தம்பிக்காக பணம் கேட்கும்போது அந்த வார்த்தையை சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். அந்த வார்த்தை எவ்வளவு பெரிய வார்த்தை.

வேறொன்றும் இல்லை. அப்போதுதான் என் தம்பி NIIT கோர்ஸ் சேர வேண்டும் என்று சொன்னான். என்னிடம் பணம் இல்லை. என் அப்பாவும் அடுத்த வருடம் ஓய்வு பெறுவதாலும் ஏற்கனவே என் கல்யாணத்திற்கு வாங்கிய கடன் அப்படியே இருப்பதாலும் முடியாது என்று சொல்லிவிட்டார். என் தம்பி இது வரை என்னிடம் எதுவும் கேட்டதில்லை. என்னிடம் வந்து முதன் முதலாக NIIT கோர்ஸ் சேர்வதை பற்றி விளக்கமாக சொல்லி பணம் கேட்டான். எனக்கும் அது அவசியமாகபட்டது. வேலைக்கு போனவுடன் தந்துவிடுவதாகவும் சொன்னான். ஆனால் என் கணவர் பாலாவிடம் பணம் இருக்குமா என தெரியவில்லை. சரி கேட்கலாம் என்றுதான் கேட்டுப் பார்த்தேன். "இப்படியே கொடுத்துகிட்டே இருந்தா நான் தெருவில நிக்க வேண்டியதுதான்" பாலா முகம் சிவந்திருந்தது. அது என்னை கோபப்படுத்திவிட்டது. இல்லை என்று சாதாரணமாய் சொல்லி விட்டு இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகள், என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. நான் வேலைக்கு போனால் ஏன் இந்த கஷ்டங்கள். நான் பாலாவிடம் கூனி குறுகி கேட்காமல், தைரியமாய் கேட்கலாமே. நானும் வெத்துவேட்டு இல்லைல. நானும்தானே MCA படிச்சிருக்கேன். நானும்தான ITல மூணு வருஷம் வேலை பார்த்தேன்.

போன வருஷம் ஆனந்த் வயித்துல தங்கின பின்னர்தான் என்னால் வேலைக்கு போக முடியவில்லை. பல்லை கடிச்சுட்டு பேசாம வேலையை கண்டினியூ பண்ணி இருக்கலாம். ஆனால் என்னால் ஒண்னுமே செய்ய முடியவில்லை. வாந்தியும், தலை சுற்றலும் ரொம்ப அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு பத்து முறை பாத்ரூம் போனால் என்னதான் செய்வது. வாந்தி வருவது போல் இருக்கும், ஆனா வாஸ்பேசின் போனவுடன் வராது. நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் "வரும், ஆனா வராது".

எனக்கு அதெல்லாம் காதில் விழாத மாதிரி சீட்டிற்கு வந்துவிடுவேன். வந்தவுடன் மீண்டும் வருவது போல் இருக்கும். வாஸ் பேசின் போய் நிற்பேன். சும்மா அடி வயிற்றிலிருந்து கிளம்பி வரும் வாந்தி, நான் போடுகிற சத்தம் ஆபீஸ் முழுவதும் கேட்பது போலவே இருக்கும். முடிந்தவுடன் வெளியில் உள்ள மாலதி கேட்டாள். "வராது, வந்தா முழுசா வரும்".. அவள் கல்யாணம் ஆகாதவள் என் வேதனைகள் அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இன்னும் சில சமயங்களில் தலை சர் சர்ரென்று சுற்றும். அப்பாடா,.. வேணாம்டா சாமி,.. வேலையே வேண்டாம்னாலும் பரவாயில்ல, எனக்கு என் பட்டு குட்டி நல்லபடியா வேணும்".. வீட்டில் வந்தவுடன் சொன்னேன்.

"ஏங்க,.. என்னால ஒண்ணுமே பண்ண முடியல,.. எங்க ஆபீஸ்லேயே விழுந்திருவேன்னு பயமா இருக்கு, நான் வேலையை விட்டிரவா"

"உன் முடிவுதான் முக்கியம். உனக்கு என்ன சரியென்று படுகிறதோ அதையே செய். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை" பாலு ஓகே சொல்லிட்டார்,

அடுத்த நாளே போய் ரிசைனேசன் லெட்டர் கொடுத்தேன். group head ஒத்துக்கல,..

"இது பார்மா, ரிசைன்லாம் பண்ணாத, மெடிக்கல் சர்டிபிகெட் கொடுத்துடு, சம்பளம் வராது,.. குழந்தை பிறந்து ஒரு மூணு மாசம் கழித்து வந்து join பண்ணிக்க, நான் எம்.டி.ட்ட சொல்லிர்ரேன். all the best. ஸ்வீட் கொடுத்துவிட்டுதான் திரும்பவும் join பண்ணனும், ஆமா சொல்லிட்டேன். கிளம்பு,.."

எனக்கு ரொம்ப சந்தோசமாய் போய்விட்டது. நல்லவேளை வேலை போகவில்லை. குழந்தை பிறந்தவுடன் வந்து திரும்பவும் join பண்ணனும்,.. நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அதுக்குபின் இன்றைக்குதான் போறேன். இந்த வேளை பார்த்து மழை வேறு அடிக்கிறது. பஸ்சில் கிளம்பினேன். ஒரு வழியாக பஸ்ஸில் இடம் கிடைத்தது. உட்கார்ந்திருக்கும் போதே மழை வலுக்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு டக்கென்று ஆனந்த் நியாபகம். நான் அவனை போர்த்திவிட்டுதான் வந்திருந்தேன். ஆனால் என்னதான் போர்த்தினாலும் அவன் கை, காலை உதறியே துணி எல்லாவற்றையும் வெளியே கொண்டு வந்துவிடுவான். சில நேரங்களில் ஊச்சா கூட போய்விடுவான்,.. அயோ,.. குழந்தைக்கு குளிரடிக்குமே? அம்மாவிற்கு போன் செய்தேன்.

"ம்மா, என்ன மழை ஜாஸ்தியா இருக்கா, அவனை முழுசா போத்திவிட்டுருக்கியா?/"
"மழையா, இங்க ஒண்ணும் இல்ல, எங்க இருக்க?? அவன் பால் கொடுத்துட்டு போனதிலிருந்து நல்லா தூங்கிட்டுருக்கான்,.. எங்கன இருக்க"
"சையதாபெட்மா",.. போனை வைத்துவிட்டுருந்தேன்.
போன் அடித்தது,..அம்மா மீண்டும் போனில்,..
"ரேவதி,. மழைல நனையாத,.. பால் குடுத்திட்டுருக்க,.. நியாபகம் வச்சிக்க"'
"சரிம்மா" உரையாடல் முடிந்துவிட்டிருந்தது.

ஆபீஸ் போனவுடன் எல்லோரும் நலம் விசாரிப்பு. எல்லோருமே சொல்லிவைத்தார் போல் என்ன இப்படி குண்டாயிட்ட, என்ன இப்படி குண்டாயிட்டதான்,..ஆண்களின் பார்வைகள் மாறி இருந்தது. ஒரு வழியாக ஜாய்ன் பண்ணியாச்சு.முதல் நாள் என்பதால் வேலை எதுவும் ஒதுக்கவில்லை. HR பார்மாலிட்டியை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தேன். ரொம்ப நாளைக்கு பின் உடம்பு வேலை செய்வதால் ஒரு மாதிரி இருந்தது.

சும்மாவே உட்கார்ந்து இருந்ததால் ஆனந்த் நியாபகம் வந்துவிட்டது. அம்மாவிற்கு போன் செய்தேன்.

"என்னம்மா என்ன பண்றான்?"

"இதுவரை தூங்கிட்டுதான் இருந்தான், இப்ப நீ போன் பண்ணின பின்னாடிதான் முழிச்சிட்டு அழறான், பாரு ரொம்ப அழறான், நீ அப்புறம் போன் பண்ணு."
அம்மா போனை வைத்துவிட்டு இருந்தாள்.

ஆனந்த் அழுகை குரலை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"ச்ச, நம்மாள்தான் பையன் கஷ்டப்படுறான். என்ன பண்றது, இதெல்லாம் சமாளிச்சுதான் ஆகணும்"

ஒரே இடத்தில் இருப்பதற்கு ஒரு மாதிரி இருந்ததால் நான் பக்கத்து பிளாக் மாலதியை பார்க்க போனேன்.

ஆள் மாறி இருந்தாள். பணக்கார வரன் அவள் முகத்தில் தெரிந்தது.

சிரித்தாள். பேசினோம். கொஞ்ச நேரம்தான் பேசினோம்.

"பாத்ரூம் போய்ட்டு வரேன்". பாத்ரூம் சென்றேன். அந்த வாஸ்பேசினை பார்த்ததும் எனக்கு அந்த வாந்திதான் நியாபகம் வந்தது. அடுத்தவினாடியே ஆனந்த் என்ன பண்றானோ, கவலை,.. செ என்ன பொழப்பு இது," போன் செய்யவும் பயம்,.. முழிச்சிக்குவானோ கவலையா இருந்தது. மேலாடையை மாத்திவிட்டு வெளியே வந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அம்மாவிற்கு போன். நல்ல வேளை, தூங்கிகொண்டுதான் இருந்தான்.

"என்னம்மா சாப்பிட்டான்."
"என்ன சாப்பிடுவான்??, செரலாக்தான்"
அவன் எப்படி சாப்பிட்டான்னு தெரியல,.."
"ம்ம்ம்ம்ம்ம்"
"எப்பம்மா தூங்கினான்?"
"ஒரு மணி நேரம் ஆச்சு"
"சரிம்மா நான் போனை வச்சிடுறேன்"
"ஏ ஏ,.. நீ சாப்டியா??"
"சாப்பிட்டேன்"
போனை வைத்துவிட்டுருந்தேன், ,.. அம்மா சாப்பிட்டாளா என்பதை கேட்காமல்,.
இப்படியே சாயங்காலம் ஆனது. டைம் ஆனதும். கால் மணி நேரம், முன்னதாகவே பாஸிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

ஒரே ஓட்டம், பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாச்சு,.. நல்ல மழை என்பதால் சில்லென்று காத்தடித்துக் கொண்டே இருந்தது. குளிர் காற்று அவனிற்கு ஒத்துக்குமான்னு தெரியாது. இவன் ஒண்ணுக்கு போய் அம்மா பாத்தாளானு தெரியல,.. ம்ம்ம்ம்ம், சரி போன் பண்ணிரலாம். மீண்டும் அடித்தேன்.

"ம்ம்மா"
"ம்ம்"
"என்னம்மா பண்றான்"
"தூங்குறாண்டி"
"ஒண்ணும் பிரச்சனையில்லையே"
"இல்ல, இல்ல ஒடம்புதான் சாயந்தரம் கொஞ்சம் சூடா இருந்துச்சு,. கால்பால் அரை மூடி ஊத்திவிட்டேன்"
"என்னம்மா சொல்ற, ரொம்ப கொதிக்குதா??
"இல்ல, இல்லடி, சும்மா உடம்பு சூடா இருக்கு, பனிக்காத்து அடிக்குதல"
"சரிம்மா உடனே நான் வர்ரேன்"
இப்ப என்ன பண்றது?? கடவுளே நான் வேலைக்கு போற அன்னைக்கா இப்படி ஆகணும்,..கைகள் படபடக்க ஆரம்பித்து விட்டது.அம்மா சரியாதான் கொடுத்திருப்பாளா?, ஏதாச்சும் மாத்தி கொடுத்திருந்தா,.. பக்கென்றது,..அய்யயோ கடவுளே,.. சரி ஆட்டோ பிடிச்சு கிளம்பிறலாம்,.ஆட்டோ வந்தது.

"அடையார் போகணும்பா"
"130 ரூபா குடும்மா"
"80 ரூபாதானங்க"
மறு பேச்சு இல்லாமல் ஆட்டோ கிளம்பிவிட்டிருந்தது. கடவுளே என்ன இது. என் குழந்தைக்கு ஒண்னும் ஆக கூடாது.
பின்னாலேயே 23C டீலக்ஸ் வந்தது. ஏறலாமா??,. வேணாம் லேட்டாக்கிடுவான்,.. பின்னால் ஆட்டோ வந்தது.
அடையார் போகணும், ஏறி விட்டிருந்தேன்.
"150 ரூபா ஆகும்மா"
"போப்பா,.. தர்ரேன்"

திரும்ப அம்மாவிற்கு போன் பண்ணலாமா?? வேணாம் டென்ஷன் படுத்திடுவா,..2 வினாடிதான் ஆகியிருக்கும். போன் அடித்தது. அய்யோ அம்மா போன்ல
"என்ன எங்க இருக்க??"
"தேனாம்பேட்டைமா,.. எப்படி இருக்கு அவனுக்கு"
"தூங்குறான், சரி நீ சீக்கிரம் வா, டாக்டர் 7 மணிக்கு வேற கிளினிக் போய்டுவார்"
"வந்திடுறேன்மா"


ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். ஆட்டோவை வெய்ட் பண்ண சொல்லிவிட்டு உள்ளே அப்படியே ஓடினேன். அவனை பார்த்ததும் அழுகை பீறிட்டு வந்துவிட்டது. அவனும் என்னை பார்த்தது அழ ஆரம்பித்துவிட்டான். 5 நிமிடம் உட்கார்ந்து பார சுமையை இறக்கிவிட்டு, தூக்கிகொண்டு ஆட்டோவில் க்ளினிக்கு போனேன். கூட்டம். அரைமணி நேரம் இருக்கும். டாக்டர் கூப்பிட்டார்
"என்னம்மா பண்ணுது"
"பையனுக்கு காய்ச்சல்"
தொட்டு பார்த்தார். இல்லையெம்மா, தெர்மாமீட்டரை வைத்துப்பார்த்தார். நார்மலாதானம்மா இருக்கு,..
"இல்ல சார் கிளம்புபோது சூடா இருந்துச்சு, இப்ப குறைஞ்சிருக்கு போல"
'சரிம்மா, இதை தேவைப்பட்டா மட்டும் கொடு, சும்மா எல்லாத்துக்கும் மருந்து கொடுக்காதம்மா, வயறு புண்ணாகிடும் "
"சரிங்க சார்"


வீட்டிற்கு வந்து விட்டேன். அம்மா கேட்டாள்,.
"என்னடி டாக்டர் சொன்னாரு"
"காய்ச்சல்லாம் ஒன்னும் இல்லையாம், தேவைப்பட்டா மட்டும் மருந்து கொடுங்கன்னு கொடுத்திருக்கார்"
"நான் தான் அவ்வளவு சொன்னேன்ல,..நான் ஏதோ பிள்ளயே பெக்காத மாதிரி சொல்லுவா" அலுத்துக் கொண்டாள்.
"சரிம்மா, சோறு போடு பசிக்குது"

மனசு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பாலு பத்தரை மணிக்கு வந்தார். சாப்பிட்டு படுக்கையறைக்கு வந்தோம். நான் ஆரம்பித்தேன்.

"என்னங்க,.."
"ம்ம்ம்ம்"
என்ன்ன்ங்ங்க""
"ம்ம்ம் சொல்லு,.."
"நான் ஒன்னு சொல்லுவேன் கோச்சிக்க மாட்டிங்களே"
"ம்ம்ம்"
"நாளேலிர்ந்து நான் வேலைக்கு போகல"
"உன் இஷ்டம்"
அவர் கண்களில் ஒரு பிரகாசம் பூத்துக்கொண்டு இருந்தது. முகத்தில் வழக்கம்போல் மாற்றமில்லை. ஏன்னு கூட கேட்கவில்லை.
என் தோல்வியை ஏற்கமுடியாமலும், என் இயலாமையை ஒப்புக்கொள்ளாமலும் அவர் முகத்தை பார்க்க முடியாமலும் திரும்ப படுத்தேன்.
கண்களில் பொல பொலவென கண்ணீர் வந்து குழந்தையின் மேல்விட்டிருந்தது.
அடக்கமுடியவில்லை.
எனக்காக இல்லை,.
என் மகனிற்காகவும் இல்லை,..
கூடவே இருந்தும் உதவி செய்ய முடியாத இந்த கையாகாளாத ஒரே அக்காவை நினைத்து. என்ன படித்து என்ன பலன்?

வியாழன், 9 ஜூலை, 2009

எதிர் பதிவு : ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள்

இது பிச்சை பாத்திரம் சுரேஷ் கண்ணனின் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் பதிவிற்கான எதிர்பதிவு. இதையே பின்னூட்டமாக போட்டால் அவர் அடிக்கவே வந்துவிடுவார் என்பதால் இந்த தனி பதிவு.ஒருவருக்கு நான் எழுதும் முதல் எதிர்பதிவு இதுவே. மற்றபடி எனக்கும் அவருக்கும் சண்டையில்லை அவரின் கருத்து எனக்கு முரண்பாடாக தென்பட்டதால் இந்த பதிவு.

இது போகிற போக்கில் அரசு ஊழியர்களின் மீது குப்பையை தூவிவிட்டு போகும் செயல். ஆனால் உண்மையிலேயே இது நல்ல பதிவு. காரணம் இது பெரும்பாலானோரின் மனங்களை பிரதிபலித்திருக்கிறது. ஆனால் உண்மை என்ன??

நண்பர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அரசு அலுவலகங்களுக்கு போனால் நம் வேலை உடனே முடிந்துவிட வேண்டும். காலையில் குடுத்தால் மாலை கிடைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாளே கிடைத்துவிட வேண்டும். ஏனென்றால் நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் அவர்களுக்கு பாவம் இது மட்டுமே வேலை. ஆனால் தனியாரில் பணி புரியும் நாம் பேங்க் போக வேண்டுமென்றால் பாஸ்ட்ட சொல்லிட்டு கிளம்பிறலாம். ஆனால் நம்மை போலவே மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் அரசு ஊழியர் இது போல் செல்ல முடியாது. காரணம் அவர் கையொப்பத்திற்காக நம் நண்பர் போல் காத்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சம் தாமதமானாலும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். காரணம் அவர்களுக்கு நேரம் ரொம்ப முக்கியம். (போய் தினமலர் பார்க்கணும்ல,..). ஏனா அவுங்க அரசு ஊழியர்களின் client. ஆனா நம்ம எப்படி? சொன்னா சொன்ன காலத்திற்கு நம் வேலைகளை முடித்து தருகிறோமா?? நான் பார்த்த பெரும்பாலான தனியார் அலுவலகங்களிலும் கண்டிப்பாக சம்பந்தமில்லாத ஒரு explorer file திறந்தும் திறக்காமலும் மூடியும் மூடாமலும் இருக்கும்,..எப்படியோ உங்களை நம்பிய நிறுவனத்தை நீங்களும்தானே ஏமாற்றுகிறீர்கள்?? இதற்கு பெயர் என்னவாம்?? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பேர் 8 மணி உண்மையாக கம்பேனிக்காக உழைக்கிறீர்கள்?? கண்டிப்பாக அலுவலகங்களில் வேலை செய்யும் ஒருவருக்கு 5 மணி நேரம் மட்டுமே முழுத்திரானியிடம் உழைக்க முடியும். அது நமக்கும் பொருந்தும் அரசு ஊழியருக்கும் பொருந்தும். துரதிர்ஷ்டமாக அந்த மூன்று மணி நேரத்தில் நாம் மாட்டிக்கொள்கிறோம். அந்த அரசு அலுவலர் நிலையில் உங்களை நிறுத்தி யோசித்து பாருங்கள். நீங்கள் எட்டுமணி நேரம் இப்படி அப்படி அசையாமல் வேலை செய்வீர்களா??

அடுத்ததாக சம்பளம். இன்றைக்கு சமநிலையில் படித்து தனியாரில் வேலை செய்பவருக்கும், அரசு அலுவலரையும் நான் ஒப்பிட போவதில்லை. பொறியாளர் முடித்து அரசு அலுவலகங்களில் என்ன சம்பளம், தனியாரில் என்ன சம்பளம் என உங்களுக்கே தெரியும். ஆழ்ந்தும்,கடினமாகவும், நிறையவும் படிக்க கூடிய தலைசிறந்த professional தொழிலான மருத்துவ தொழிலையும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் மருத்துவ படிப்பை எடுக்கவும்,முடிக்கவும் 10 வருடம் தொடர்ந்து கடின உழைப்புடன் விடாமல் படித்து கொண்டே இருக்கவேண்டும். முடித்து வந்தவுடன் அரசில் வேலை கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அரசு அவர்களுக்கு வழங்கும் மாத CTC அதிகபட்சம் எவ்வளவு தெரியுமா? 25,000 ரூபாய். இது சென்னையில் சொந்த ஆட்டோகாரன் மாத வருமானத்தைவிட 5000 ஆவது குறைவு என்பதுதான் உண்மை. படிப்பிற்கு எங்கே மரியாதை?? ஏன் அவன் 10 வருடம் ராப்பகலாக கஷ்டப்பட வேண்டும்? அவன் எப்படி முழு மனதோடு வேலை செய்வான். ஆனால் செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குற்றமே பார்த்து பழகிவிட்ட நம் கண்களுக்கு இது போன்ற நல்ல செய்திகள் எங்கே தெரிய போகிறது?? காலையில் 7 மணிக்கு பணிக்கு செல்லும் டாக்டர்கள் மதியம் 3 மணிக்கு சாப்பிட செல்வார்கள். இதை நீங்கள் இன்றும் சென்ரல் மருத்துவமனையிலும், கீழ்ப்பாக்கம் ப்ருத்துவமனையிலும், ஸ்டான்லியிலும் பார்க்கலாம். வாரத்தில் ஒரு நாள் டியூட்டி உண்டு. அப்போது 24 மணி நேரம் கூட வேலை செய்ய வேண்டி இருக்கும். மாதத்தில் இப்படி ஒரு நாள் டியூட்டி மாட்டும். இது போல நம்மில் எத்தனை பேருக்கு மாதத்தில் 24 மணி நேரம், லேட்டானாலும் பரவாயில்ல வேலையை முடித்து கொடுக்கணும்னு உட்கார்ந்து இருக்கோம்?? டாக்டருக்கு நாம் எப்படி கிளைண்டோ, அதே போல்தானே நம்ம கிளைண்டும் எதிர்பார்ப்பான்?? இதுதானே எதார்த்தம்.?

அரசு அலுவலகத்தையும் லஞ்சத்தையும் பிரிக்க முடியாது. அதனால் நாம் பேசியே ஆக வேண்டும். லஞ்சத்தை ஊக்குவிப்பது நாமே. உதாரணமாக ஒரு டெண்டரை எடுத்து கொள்ளுங்கள். ஒரு 5 பேர் போட்டி போடுகிறார்கள். அதில் 4 பேர் நம்மை போல் மிக கண்டிப்பானவர்கள். ஆனால் ஒருவர் மட்டும் புத்திசாலி. அவர் தனியாக காசு கொடுத்து டெண்டரை அள்ளுகிறார். அந்த 5வது நபர் யார்? நம்மில் போல் ஒருவர், a non government servent. தப்பு எங்கே ஆரம்பிக்கிறது? நம்மில் ஒருவர் ஆரம்பிக்கும் லஞ்சத்தால். தூண்டியது யார்? நம்மை போல ஒருவர்,.. பாதிக்கப்பட்டது யார்,?? நம்மை போல ஒருவர். இந்த நம்மைப்போல ஒருவர்தான் 4 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு பணியில் சேர்கிறார். போட்டமுதலை அந்த நம்மை போல உள்ள அவர் எப்படி எடுப்பார்?? இங்குதான் ஆரம்பிக்கிறது,..

அரசு அலுவலர் என்பது RTO ஆபீஸிலும், போலீஸ் ஸ்டேஷனிலும், வருமான வரி துறை, வங்கியிலும் மட்டும் முடிவதில்லை. பன்னாட்டு தனியார் நிறுவனங்க்களுக்கு இணையாக அரசு நிறுவனங்களும் உள்ளன. உதாரணமாக நவரத்னா என வர்ணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்டுகின்றன. அங்கு கூட ஒளிவட்ட அரசு ஊழியன் தான் வேலை செய்கிறான். வெளி நாட்டில் கோடி கணக்கில் சம்பளம் கொட்டிதர நினைக்கையில் அண்ணாதுறை, அப்துல் கலாம் போன்றோர் முழுக்க முழுக்க அரசிற்காக வேலை பார்த்தார்கள். தன் சுய நலத்தை தூக்கி எறிந்துவிட்டு தன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சிறப்பிற்காக வேலை பார்த்த ஊழியர்கள் என அண்ணாதுறை, அப்துல் கலாம், கிரண்பேடி என வரிசையாக நிறைய சொல்லலாம். அது போல் தனியார் துறை ஊழியர் ஒருவரை இந்த நாட்டில் சொல்லுங்கள்.

இன்றைக்கு எந்த தொழில் சுத்தமாக இருக்கிறது?

வீடு கட்டுவது தொழில். உங்கள் பிள்டர் உங்களை ஏமாற்றவில்லை? பிள்டர் நம்மில் ஒருவர்.

பிள்டர் சிமெண்ட் வாங்குகிறார். சிமெண்ட் கடைக்கார் சிமிண்டில் மணலைக் கலந்து பிள்டரை ஏமாற்றுகிறார். கடைகாரர் நம்மில் ஒருவர்.

விற்ற காசில் கடைக்காரர் லாரி வாங்குகிறார், லாரி விற்பவன் விலையை கூட்டி வைத்து கடைகாரரை ஏமாற்றுகிறார். லாரி விற்பவன் நம்மில் ஒருவன்.
லாரி விற்பவன் வருமான வரி கட்டுகிறான். வருமான வரியை குறைத்து காட்டி அரசை ஏமாற்றுகிறான்.

அரசு ஊழியன் வருமானவரியை குறைத்து காட்ட லாரி விற்பவனிடம் காசு வாங்குகிறான்.அரசில் இருப்பவன் நம்மில் ஒருவன்.

அரசு, தன் வேலைக்கு ஆள் எடுக்கிறது. 100 ரூபாய் கொடுக்க வேண்டிய வேலைக்கு 60 ரூபாய் கொடுத்து தன் ஊழியனை ஏமாற்றுகிறது. அரசில் இருப்பவன் நம்மில் ஒருவன்.

ஏமாற்றிய ஊழியன் முதலில் சொன்ன பிள்டரிடம் வீடு வாங்குகிறான். ஏமாறுகிறான்.

அரசு ஊழியன் நம்மை போல ஒருவன். பிள்டரும் நம்மை போல ஒருவன்.

எல்லா துறையிலும் தன் தொழிலில் சுத்தமானவர்கள் இருக்கிறார்கள். அசுத்தமானவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் நம்மில் ஒருவர். அரசு அலுவலர் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் எல்லோருக்கும் தெரிகிறது.

ICICI வங்கியில் சத்தமில்லாமல் கவரில் காசைப்போட்டு அடுத்த நாள் அக்கவ்ண்டில் விழுந்தால் பரவாயில்லை என அமைதியாக செல்லும் நமக்கு வரிசையில் நின்று உடனே கணக்கில் பணம் விழும் வசதியை பெறும் அளவிற்கு கூட பொறுமை இல்லை.

இந்த பொறுமையிழந்தவன் யார்? நம்மில் ஒருவன்.
 
 

செவ்வாய், 7 ஜூலை, 2009

அடப்பாவி,.. ஆம்ஸ்டிராங் நிலவில் இறங்கியது ஏமாற்று வேலையா?

நாம் ரொம்ப வருஷத்திற்கு முன் வரலாறு (வரலாறுன்னுதான் நினைக்கிறேன்,.. இப்ப அது சமூக அறிவியல்) படிக்கும் போது நிலவில் முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸ்ராங்க், மற்றும் ஆல்டரின் என படித்து இருந்தேன். ஆனால் அது டுபாக்கூர் என்பதும் அதில் நிறைய தகிடுதத்தங்கள் இருக்கின்றன என்பது நேற்று கார்டியன் இதழை பார்க்கும் போதுதான் தெரிந்தது. அவர்கள் விமர்சித்தது சரியா, தவறா என தீர்மானிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது. ஆனால் அவர்கள் கேட்ட கேள்விகள் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்ததால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என இந்த பதிவு.

நிலவில் நிலை நாட்டப்பட்ட கொடி எந்தவொரு வளி நிலையும் (atmosphere) இல்லாமல் எப்படி படபடக்கிறது?

படங்களில் உள்ள பொருட்களின் நிழல்கள் வெவ்வேறு கோணங்களில் உள்ளன, TV studioவில் வரும் பிம்பங்களை போல இங்கும் அங்கும் இருக்கிறது.
வானவெளி முழுக்க விண்மீன்களால் ஆனது. ஆனால் எந்த புகைபடத்திலும் ஏன் அது விழவில்லை?

நிலவில் விழுந்த ஷூ காலடிதடங்கள், போலியானவை. காரணம் காலடித்தடங்களை நிலைத்து வைக்க ஈரப்பதம் தேவைப்படும். இல்லையென்றால் வறண்ட மணலில் மூடிக்கொள்வது போல் மூடிக்கொள்ளும்.

அப்போலா நிலவில் இறங்கியதாக குறைப்படும் படத்தில் உள்ள கல்லில் C என்ற எழுத்து உள்ளது.அது அடையாளத்திற்காக வைக்கப்பட்ட கல். இது முழுக்க முழுக்க நாடகம்.


நிலவை ஆராய சென்றவர்கள் இறங்கும் போது, மீண்டும் கிளம்பும் போதும் ஏற்கனவே ஒருவர் நிலவில் நின்று அவர்களை புகைப்படம் எடுப்பதாக தெரிகிறது. நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங் என சொல்லும் போது ஏற்கனவே ஒருவர் அங்கு இருப்பது எப்படி???இப்படி வாழைமரத்தில் அடித்த ஆணியாக எளிதாக வெளி நாட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் கேள்விகளை இறக்க, அதற்கு அமெரிக்காவின் நாஸா அளிக்கும் விளக்கங்கள் கீழே.


நிலவில் நிலை நாட்டப்பட்ட கொடி எந்தவொரு வளி நிலையும் (atmosphere) இல்லாமல் படபடக்கிறது?

நிலவில் கொடியானது படபடப்பதாக எந்த வீடியோவும் இல்லை, ஆம்ஸ்ராங்க் கையில் தொட்டபோது சிறிது ஆடியதை தவிர. அப்படியே ஆடியிருந்தால் அது இன்றும் தொடர்ந்து ஆடி கொண்டே இருக்கவேண்டும். காரணம் எந்த வளி நிலையும் (atmosphere) , உராய்வும் (friction) இல்லாததால் இன்றும் படபடத்துக்கொண்டே இருக்க வேண்டும்

படங்களில் உள்ள பொருட்களின் நிழல்கள் வெவ்வேறு கோணங்களில் உள்ளன, TV studioவில் வரும் பிம்பங்களை போல இங்கும் அங்கும் இருக்கிறது.

மேலே சொன்னது உண்மையானால் ஒரே ஒரு பிம்பம் மட்டும் எப்படி வருகிறது. நிறைய ஒளி மூலங்கள் இருப்பது உண்மையானால் நிறைய நிழல்கள் வரவேண்டும் இல்லையா? கூற்று தவறே.

வான்வெளி முழுக்க விண்மீன் களால் ஆனது. ஆனால் எந்த புகைபடத்திலும் ஏன் அது விழவில்லை?

புகைப்படக்காரர்கள் எடுத்தது அதிக வெளிச்சம் கொண்ட பளபளக்கும் பொருட்களை. இதனால் அதிவிசை மூடு திறன் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் மங்கலான பின் பகுதிகள் இருட்டாகவே தெரியும்.

நிலவில் விழுந்த ஷூ காலடிதடங்கள், போலியானவை. காரணம் காலடித்தடங்களை நிலைத்து வைக்க ஈரப்பதம் தேவைப்படும். இல்லையென்றால் வறண்ட மணலில் மூடிக்கொள்வது போல் மூடிக்கொள்ளும்.

நிலவில் உள்ள மணல் வெவ்வேறு அளவும், வெவ்வேறு வடிவமும் கொண்டவை. இவற்றை அச்சாக நிலை நிறுத்த ஈரப்பதமோ, உள்ளழுத்த விசைகளோ (compressible forces) தேவையில்லை. பூமியில் கூட இதே மாதிரி துகள்கள் இருக்கின்றன. தரையில் முகத்திற்கு பூசும் தூளை தூவிவிட்டு அதன் மேல் நடந்து பாருங்கள். தெரியும்.

அப்போலா நிலவில் இறங்கியதாக கூறப்படும் கல்லில் C என்ற அடையாள எழுத்து உள்ளது. அது அடையாளத்திற்காக வைக்கப்பட்ட கல். இது முழுக்க முழுக்க நாடகம்.

நாஸாவின் நெகடிவிலும், முதன் முதலில் வெளிவிட்ட புகைப்படங்களிலும் இது இல்லை. பின்னால் மீண்டும் எடுக்கையில் முடி இல்லையென்றால் நார் சிதைந்து வந்து இருக்கலாம்.


நிலவை ஆராய சென்றவர்கள் இறங்கும் போது, மீண்டும் கிளம்பும் போதும் ஏற்கனவே ஒருவர் நிலவில் நின்று அவர்களை புகைப்படம் எடுப்பதாக தெரிகிறது. நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங் என சொல்லும் போது ஏற்கனவே ஒருவர் அங்கு இருப்பது எப்படி???


ஆம்ஸ்டிராங்க்கின் சின்ன நடை (வீடியோ) ஈகில் லாண்டரின் (பயணித்த ஊர்தி) வெளியில் வைத்து இருந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது. ஆம்ஸ்டிராங்கின் மற்ற ஸ்டில் புகைப்படங்கள் மற்றொரு பகுதியிலிருந்து ஆல்டரினால் எடுக்கப்பட்டது.

எப்படி.??? எல்லாம் குழப்பமா இருக்கா??? எனக்கும் அப்படிதான் இருக்கு. இந்த குழப்பத்தில ஓட்டு போடவும், பின்னூட்டம் இடவும் மறந்திடாதிங்க,..

அப்பதான் பூமியின் எடையை, நிலவின் எடையை எப்படி கண்டுபிடிக்கிறாங்கன்னு பின்னால் வரும் பதிவுகள்ள .சொல்லுவேன்


சனி, 4 ஜூலை, 2009

நடிகையின் படம் வரைந்து பாகங்களை குறி


எல்லோரும் பெண்களை தெய்வமாக வணங்கி கொண்டிருக்க இந்த பாலாபோன சினிமா ("நான் கடவுளை" சொல்லவில்லை) மட்டும் பெண்களை எப்படி எல்லாம் கொடுமை படுத்துகிறது என பாருங்கள்.

நம் பதிவர்கள் நிறைய பேர் சின்னஞ்சிறுவர்கள் என்பதால் பொது அறிவிற்காக (வழக்கம் போல் அறிவிற்கு மரியாதை) ஒவ்வொரு பகுதியின் பலனையும் கொடுத்து உள்ளேன்.
(வண்ணங்களின் எண்ணம் : ஊதா பொது பலன். கறுப்பு சினிமா பலன்)
பின் குறிப்பு : இடப்பற்றாக்குறையால் (???) நிறைய பாகங்களை விட வேண்டியதாகிவிட்டது. எனதருமை ரசிகப் பெருமக்கள் (4 பாலோரை
வச்சிக்கிட்டு ரசிகப்பெரு மக்களாம்) மன்னித்தருவாள்வராக,..

ஆண்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம். பின்னலேயே இது போலவே நடிகர்களுக்கும் வருகிறது. அது மொளகாயில் வருத்தெடுத்த பெப்பர் சிக்கன்.

(ம்ம்ம்ம்ம்ம் பாவாடை தாவணியெல்லாம் படத்தில்தான் பார்க்க முடிகிறது. மேலேயுள்ள பூமிகா படம் சூப்பர்ல,..)

வியாழன், 2 ஜூலை, 2009

மெழுகுகள் கரைந்துவிட்டன, ஆனால் வெளிச்சம் மட்டும் அப்படியே இருக்கிறது.

நான் ஒரு வெறித்தனமான இசை ரசிகன். இசையை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் நான் கொஞ்சம் அதிகம். எனக்கு சங்கீதம் சுத்தமாய் தெரியாது. வெறும் கேள்வி ஞானம் மட்டுமே. கேள்வி அறிவு என்றால், சினிமாவில் வரும் ஸ ரி க ம ப த நி களை அப்படியே பாட தெரியும் அவ்வளவுதான்,. (இதுக்கு பேர் கேள்வி அறிவா? அறிவுக்கு மரியாதையே இல்லாமல் போச்சுன்னு நீங்க சொல்றது கேக்குது, IAS அதிகாரியை மாடு மேய்க்க போன்னு சொன்ன அரசியல்வாதி இருக்குற ஊருதான இது,..இதையும் கண்டுக்காதிங்க,..)

நான் இளமையில் (அப்ப இப்ப??) ஒரு நாளுக்கு பத்து முறை ரசித்த பாடல்களை இப்போது இரவு பதினோறு மணிக்கு மேல்தான் FMல் கேட்க முடிகிறது. இன்னும் ஒரு ஐந்து வருடங்களில் அது மூன்று மணியாகிவிடும். சினிமா பாடல்களை வைத்து பிழைப்பு நடத்தும் வானொலியே இப்படி சிறந்த கலைஞர்களை தூக்கி ஓரத்தில் போடும் போது, பொழுதுபோக்கிற்காக பாடல் கேட்கும் சாதாரண மக்களைப்பற்றி என்ன சொல்லமுடியும். நிறைய சிறந்த பாடகர்களை மறந்துவிட்டார்கள். ஆனால் பாட்டு பேருந்தில் (அதாங்க பாட்டு பஸ்,.. புரியாதவங்க இந்த பதிவை பாருங்கள்) செல்லும் போது "தம்பி கொஞ்சம் சவுண்ட் வைப்பா" என்று வேண்டி கேட்கும் குரலிற்கு சொந்தகாரர்கள் இவர்கள். பாடகர்களின் பெயர்களை நிறைய பேர் மறந்து போயிருப்பார்கள், ஆனால் அந்த குரல் என்றோ ஒரு நாள் அவர்களை லயிக்க வைத்திருக்கும். அப்படிபட்ட பாடகர்களை இங்கே சொல்லி இருக்கேன். படித்து பின்னூட்டமிடுங்கள்.

பின்குறிப்பு:
நிறைய பேர் இது பெயர் மறக்ககூடிய இவர் குரல் இல்லை. இவர் இன்னும் பெயர் மக்களின் மனதில் உள்ளது என சண்டைக்கு வரலாம். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான் கை ஒன்றாலும் விரல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. நீங்கள் கட்டைவிரலையும், ஆட்காட்டி விரலையும் சொல்லுகிறீர்கள். நான் கடவுள் வணங்கும் போது முன்னால் வரும் சுண்டு விரலை சொல்லுகிறேன். பார்வைகள் வேறுபடுகின்றன. அவ்வளவுதான்.

வாங்க பதிவுக்கு போலாம்,.. ஸ்டார்ட் மியூசிக்,.

P B சீனிவாஸ்
ஒரு ஆண் பாடகரின் குரல் இப்படிதான் இருக்க வேண்டும் என நான் நினைத்த கனவு குரலிற்கு சொந்தகாரர். எட்டு மொழிகளை சரளமாக பேச தெரிந்த இவர் பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் பாடிய அற்புதமான பாடகர். எம்ஜியார், சிவாஜி என முன்னனி நடிகர்கள் இருவருக்கும் பாடல்களை பாடிய TMS க்கு போட்டியாக தன் குரலை மட்டுமே பலமாய் வைத்து தனித்து நின்றவர். அவர் பாடிய பாடல்களில் பேர் போனவை இவை,.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,.. (போலீஸ்காரன் மகள்)
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
ரோஜா மலரே ராஜ குமாரி
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
வளர்ந்த கலை மறந்துவிட்டால் கேளடா கண்ணா
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே
பூஜைக்கு வந்த மலரே வா
நிலவே என்னிடம் நெருங்காதே
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

AM ராஜா

சிறந்த பாடகர் மற்றும் இசை அமைப்பாளர். இவர் பாடிய பல பாடல்கள் சிறந்த வெற்றி பெற்றவை. மெல்லிசை பாடல்களுக்கு சீனிவாஸிற்கு சிறந்த போட்டியாக இருந்தவர். 1989 ஆம் ஆண்டு திருனெல்வேலி அருகே ரயில் விபத்தில் மரணமடைந்ததாக வலைப்பக்கங்களில் படித்தேன். பாடல்கள் பின்வருமாறு.

தனிமையிலே இனிமை காண முடியுமா?
மாசிலா உண்மை காதலி
பாட்டு பாடவா
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
வாடிக்கை மறந்தது ஏனோ
வாராயோ வெண்ணிலாவே
ஆடாத மனமும் ஆடுதே

ஜெயசந்திரன்

மெல்லிய குரல் வளத்துடன் இன்னும் சிறப்பாக பாடி கொண்டிருக்கும் சிறந்த பாடகர். இளைய ராஜாவின் இசையின் இவரின் பல பாடல்கள் தேன். மலையாளத்திலும், தமிழிலும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.

ராசத்தி உன்ன காணாத நெஞ்சு
காத்திருந்து காத்திருந்து
தாலாட்டுதே வானம்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே வானம்
கன்னத்தில் முத்தமிட்டால்
கத்தாழங்காத்து வழி
என் மேல் விழுந்த மழைத்துளியே

தீபன் சக்கரவர்த்தி

புகழ் பெற்ற திருச்சி லோகனாதனின் மகன். இருந்தாலும் தன் குரலினை மட்டும் வளமாக கொண்டு கடினமான பாடல்களையும் எளிதாக பாடவல்லவர். உதாரணம் காதல் ஓவியத்தில் வரும் பூஜைக்காக சூடும் பூவை சூறையாடல் முறையோ.

பூஜைகாக சூடும் பூவை - காதல் ஓவியம்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
பூங்கதவே தாழ் திறவாய்
நதியில் ஆடும் பூவனம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்- பன்னீர் புஷ்பங்கள்

வாணி ஜெயராம்

மூன்று முறை தேசிய விருதுகளை வாங்கிய அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகர். 18 மொழிகளில் பாடிய ஒரே பெண் பாடகர். இவர் பாடிய சிறந்த பாடல்கள் நிறைய இருந்தாலும் குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டும் உஙகளுக்காக,..

என்னுள்ளே ஏனோ – (ரோசாப்பூ ரவிக்கைகாரி)
இலக்கணம் மாறுதோ
வா வா என் வீணையே ல ல
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது - இளமை ஊஞ்சலாடுகிறது
வசந்த கால நதிகளிலே தெய்வமங்கை நீரலைகள் - மூன்று முடிச்சு
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், - அபூர்வ ராகங்கள்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - புன்னகை மன்னன்
மேகமே மேகமே - பாலைவன சோலை

உமா ரமணன்

உமா ரமணன், துரஷ்டமான பாடகர்களில் ஒருவர். இவர் பாடிய பல பாடல்கள் அட்டகாசமானவை. குறிப்பாக பன்னீர் புஷ்பங்களில் வரும் ஆனந்தராகம் கேட்கும் காலம்,.. எனக்கு பிடித்த பாடல்களில் முதலிடத்தில் வகிக்க கூடியது. அந்த காலகட்டத்தில் இப்போது உள்ளது போல் சிறந்த ஒலி நிபுணத்துவம் இல்லை. இல்லையென்றால் இந்த பாடல்களை கேட்பதற்கே ஆயிரம் காதுகள் வேண்டும். (அவ்வளவு செவுடான்னு கேக்க கூடாது,..காண கோடி கண்கள் வேண்டும் சொல்லுமோது கம்முனு இருக்கிங்கள,.. அது மாதிரிதான் இதுவும்)

ஆனந்தராகம் கேட்கும் காலம் - பன்னீர் புஷ்பங்கள்
பூவண்ணம் போல நெஞ்சம்
பொன் மானே கோபம் ஏனோ
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
பூங்கதவே தாழ் திறவாய்
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
ஆறும் அது ஆழமில்ல

SP சைலஜா

SPB யின் தங்கை. இவருக்கு நடிகை,பாடகர்,பின்னணி குரல் பல பரிணாமங்கள் உண்டு. அனைத்தையுமே சிறப்பாக செய்தவர் (உதாரணம் சலங்கை ஒலி). தமிழ், தெலுங்கு இரண்டிலுமே நிறைய பாடல்கள் பாடி உள்ளார். உங்களுக்காக சில பாடல்கள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
சிறு பொன்மணி இசைக்கும் சிறு இசையும்
சின்னஞ்சிறு வயதில் (மீண்டும் கோகிலா)
மாமே மச்சான் நீதானா (முரட்டுக்காளை)
உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி
நாத வினோதங்கள் பரம சுகங்கள்
ராசாவே உன்னைத்தான் எண்ணிதான்

ஜென்ஸி

நான் பிரமித்த பெண் பாடகர்களில் முதல் நிலையானவர். இவர் பாடிய பாடல்கள் மிக குறைவே, இருந்தாலும் பாடிய பாடல்கள் பெரும்பான்பவை அட்டகாசமான் ஹிட். குறுகிய காலத்தில் அற்புதமான மெலோடிகளை வழங்கிவிட்டு திருமணத்திற்கு பின் தமிழிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

காதல் ஓவியம் பாடும் காவியம்
என் வானிலே,- ஜானி
ஒரு இனிய மனது- ஜானி
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ஆயிரம் மலர்களே, மலருங்கள்
இதயம் போகுதே . எனையே மறந்து
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் (உல்லாச பறவைகள்)

இது பலர் மறந்துவிட்ட பின்னணி பாடகர்களுக்காக,..

மெழுகுகள் கரைந்துவிட்டன, ஆனால் வெளிச்சம் மட்டும் அப்படியே இருக்கிறது.