சனி, 12 மார்ச், 2011

இன்னோரு கைக‌ளிலே, நான் யார் யார் நானா,..?

ம‌ன‌து வ‌லிக்கும் சில‌ நேர‌ங்க‌ளில் ந‌ல்ல‌ பாட‌ல்க‌ள் ம‌ருந்தாகி விட்டு போகும். பாட‌ல்க‌ள் ப‌ல‌ வித‌ம்,. ந‌ல்ல‌ வ‌ரிக‌ளாக‌ இருக்கும்,.. இசை இருக்காது,. இசை இருக்கும் ஆனால் வ‌ரிக‌ள் சுமாராக‌ இருக்கும்,.. இவை எல்லாம் சேர்ந்து இருக்கும் போது பாட‌ல் மிக‌ மோச‌மாக‌ ப‌ட‌மாகி இருக்கும் ( ந‌ல்ல‌ உதார‌ண‌ம் : பூங்காற்றிலே உன் சுவாச‌த்தை (உயிரே), ப‌ற‌வையே எங்கு இருக்கிறாய் (த‌மிழ் MA). ஒரு சில‌ பாட‌ல்க‌ளில் மிக‌ அழ‌காக‌ அனைத்தும் சேர்ந்து இருக்கும். அது போன்ற‌ பாட‌ல்க‌ள் எத்த‌னை ஆண்டுக‌ள் க‌ழித்தாலும் நிலைத்து நிற்கும். பாட்டிற்கு மிக‌ முக்கிய‌ம் அத‌ன் வ‌ரிக‌ள். என்ன‌தான் இளைய‌ராஜா பாட‌ல்க‌ள் சூப்ப‌ர் என்றாலும் இன்னும் கேட்க‌ மிக‌ இனிமையாக‌ இருப்ப‌வை அவ‌ர் வைர‌முத்துவுட‌ன் இணைந்து ந‌ம‌க்கு த‌ந்த‌வையே. இளைய‌ராஜாவிற்கே பாட‌ல் வ‌ரிக‌ள் தேவைப்ப‌டும் போது இப்போது இருக்கிற‌ இசை அமைப்பாள‌ர்களுக்கு?? சொல்ல‌ தேவையில்லை.

பாட‌லாசிரிய‌ர் : க‌ண்ண‌தாச‌ன்
பாட‌ல்:சொன்ன‌து நீதானா?
ப‌ட‌ம் : நெஞ்சில் ஒரு ஆல‌ய‌ம்
பாடிய‌வ‌ர் : சுசீலா
இசை : விஸ்வ‌ நாத‌ன்.
பாட‌லின் க‌ரு : காத‌ல் தோல்வி (ரொம்ப‌ சிம்பிள்ளாக‌ எழுதிவிட்டேன்,.. காத‌ல் தோல்வி என்ப‌து எழுத்தில் கொண்டு வ‌ர‌முடியாத‌து,.. இல்லை என‌க்கு எழுத‌ தெரிய‌வில்லை என‌வும் சொல்ல‌லாம்)

இந்த‌ பாட‌ல் மிக‌ ப‌ழைய‌ பாட‌ல் என்றாலும் என‌க்கு மிக‌ பிடித்த‌ பாட‌ல், சுசீலாஅருமையாக‌ ர‌சித்துப்பாடிய‌ குர‌லில் க‌ண்ண‌தாச‌னின் மிக‌ அட்ட‌காச‌மான‌‌ பாட‌ல் வ‌ரிக‌ள். பாட‌லில் கேம‌ரா மிக‌ அருமை. தொழில் நுட்ப‌ இல்லாத‌ நாட்க‌ளில் முத்துராம‌ன் த‌லையில் ஆர‌ம்பிக்கிற‌ கேம‌ரா க‌ட்டிலின் கீழே ப‌ய‌ணித்து வீணைக்கு மேலே சென்று முடியும்

*இன்னோரு கைக‌ளிலே, நான் யார் யார் நானா?? எனை ம‌ற‌ந்தாயா? ஏன் ஏன் என்னுயிரே*

*தெய்வ‌த்தில் சூடிய‌ மாலை தெருவினிலே விழ‌லாமா? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொட‌லாமா?

*ஒரு கொடியில் ஒரு முறைதான் ம‌ல‌ரும் ம‌ல‌ர‌ல்ல‌வா, ஒரு ம‌ன‌தில் ஒரு முறைதான் வ‌ள‌ரும் உற‌வ‌ல்ல‌வா,*

பாட‌லாசிரிய‌ர் : நா. முத்துக்குமார்

பாட‌ல் : அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை

ப‌ட‌ம் : அங்காடித்தெரு

பாடிய‌வ‌ர் : Vineeth Sreenivasan, Ranjith

இசை : G. V. Prakash Kumar

பாட‌லின் க‌ரு : காத‌லை அனுப‌விக்க‌ ஆர‌ம்பித்த‌ல்,..(ம‌ன‌சு பட்டாம் பூச்சி போல‌ ப‌ற‌க்கும் என‌ சொல்லுவார்க‌ள்,. இது காத‌லிப்ப‌வ‌ருக்குதான் பொருந்தும் என்றில்லை,..பெற்றோர் பார்த்து வைக்கும் திரும‌ண‌ம் என்றாலும் பொண்ணு பார்த்த‌வுட‌ன் ஆர‌ம்பித்துவிடும் ‍ உங்க‌ளுக்கு பொண்ணு உண்மையிலேயே பிடித்து இருந்தால்)

க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌மாக‌ முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாட‌ல் (என்ன‌வோ இந்த‌ பாட‌ல் என் ம‌க‌னிற்கும் பிடிக்கிற‌து). பாட‌லில் ப‌ல‌ பாஸிட்டிவான‌ விஷ‌ய‌ங்க‌ள்,. எளிமையான‌ அஞ்ச‌லியிட‌ம் கொட்டிக்கிட‌க்கும் அழ‌கும் ந‌டிப்பும்,. எளிமையான‌ ஆனால் உறுதியான‌ பாட‌ல் வ‌ரிக‌ள், செட்டிங் என்றாலும் அழ‌காக‌ பாட‌லை கொண்டு செல்லும் கேம‌ரா, சின்ன‌ சின்ன‌ ர‌ச‌னையான‌ காட்சிய‌மைப்புக‌ள் (சாப்பிடும் போது முதுகு உர‌சிக் கொள்ளுவ‌து, சாப்பிடும் போது பெரிய்ய்ய்ய‌ தொப்பையுட‌ன் ந‌ட‌ந்து வ‌ரும் ச‌மைய‌ல்கார‌ர், ம‌ர‌ ஸ்கேலில் காத‌லை சொல்லுவ‌து,..)

*அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை, அவ‌ளுக்கு இணை யாருமில்லை"

"அவ‌ள் உடுத்தும் உடைக‌ள் பிடிக்க‌வில்லை, இருந்தும் க‌வ‌னிக்க‌ ம‌ற‌க்க‌வில்லை*

*அவ‌ள் கூந்த‌ல் ஒண்ணும் நீள‌மில்லை, அந்த‌ காட்டில் தொலைந்தேன் மீள‌வில்லை"

*அவ‌ள் கைக‌ள் மோதிர‌ம் த‌ங்க‌மில்லை,. கை பிடித்திடும் ஆசை தூங்க‌வில்லை,. அவ‌ள் சொந்த‌மின்றி ஏதுமில்லை, என‌க்கு எதுவுமில்லை"‌

*அவ‌ள் வாச‌ம், ரோஜா வாச‌மில்லை, அவ‌ளில்லாம‌ல் சுவாச‌மில்லை,. அவ‌ள் சொந்த‌மின்றி ஏதுமில்லை, என‌க்கு எதுவுமில்லை"‌அடுத்த‌வார‌ம் வைர‌முத்து, ம‌ற்றும் க‌ர‌டிகுட்டி என‌ கேலி செய்ய‌ப்ப‌டும் ராஜேந்த‌ரின் பாட‌ல் வ‌ரிக‌ள்,..


.

17 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நெஞ்சில் ஓர் ஆலயம் ஒரு அருமையான படம். அதில் அத்தனை பாடல்களும் முத்துக்கள். குறிப்பாக எனக்கு மிகவும் மனதுக்கு பிடித்த பாடல் - 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' - கேட்டுப்பாருங்கள்.
வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான இரண்டு பாடல்களைத்
தேர்ந்த்தெடுத்து அதற்கு சிறப்பான
விளக்கமும் கொடுத்துள்ளீர்கள்
இரண்டயும் வெகு நேரம் ரசித்தேன்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Prathap Kumar S. சொன்னது…

சூப்பர் பாடல்கள் தலீவா... வசந்த மாளிகையில் ஒரு பாட்டு வருமே...சுசீலா பாடியது...கலைமகள் கைப்பொருளே....கலக்கல் பாட்டு அது

ஜீவன்சிவம் சொன்னது…

ஏக்க பெருமூச்சு விடத்தான் முடிகிறது இது போன்ற பாடல்களை கேட்க நேரும் பொழுது

அம்பிகா சொன்னது…

எனக்கும் பிடித்த மிக இனிமையான பாடல், சொன்னது நீதானா ? அருமையான பகிர்வு.

jothi சொன்னது…

வாங்க‌ ஐயா,.. நீங்க‌ சொன்ன‌து ச‌ரிதான். " நினைப்ப‌தெல்லாம் ந‌ட‌ந்துவிட்டால்" ந‌ல்ல‌ பாட‌ல்தான். அதைவிட‌ "சொன்ன‌து நீதானா" ந‌ன்றாக ப‌ட‌மாக்கி இருந்த‌தால் அத‌னைப்ப‌ட‌மாக போட்டேன், வ‌ருகைக்கு ந‌ன்றி தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்

jothi சொன்னது…

வாங்க‌ திரு ர‌ம‌ணி,..மிக்க‌ ந‌ன்றி.

jothi சொன்னது…

@ நாஞ்சில் பிரதாப்™ உண்மைதான், க‌லைம‌க‌ள் கைப்பொருளே மிக‌ அருமையான‌ பாட‌ல்,. அதுவும் மிக‌ க‌ல‌க்க‌லாக‌ சரியான‌ இட‌த்தில் வ‌ரும் பாட‌ல்,. இப்போது சுட்சுவேஷ‌ன் பாட‌ல் என்ப‌தே இல்லாம‌ல் போய்விட்ட‌து

jothi சொன்னது…

@ ஜீவ‌ன் சிவ‌ம். வாங்க‌. பெருமூச்சின் விளைவாக‌ ம‌ன‌ம் சாந்தி அடைந்திருக்கும்

jothi சொன்னது…

@அம்பிகா. வ‌ருகைக்கும் ப‌கிர்விற்கும் ந‌ன்றி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>*அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை, அவ‌ளுக்கு இணை யாருமில்லை"

very good melody

ஜெய்லானி சொன்னது…

முதல் பாட்டுக்கு சூப்பரோ சூப்பர் ஆனா இதுக்கு இனை இரண்டாவது பாட்டு இல்லைன்னுதான் சொல்லனும் .. :-))

//க‌ர‌டிகுட்டி என‌ கேலி செய்ய‌ப்ப‌டும் ராஜேந்த‌ரின் பாட‌ல் வ‌ரிக‌ள்,..//

அவரோட பாடல் வரிக்கு நான் எப்போதுமே அடிமைதான் ஆனால் பயபுள்ள நடிப்புதான் சகிக்கல ..அவ்வ்வ்வ்

jothi சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்
உண்மைதான்.அருமையான‌ மெல்லிசை.

ஜீ.வி.பிர‌காஷ் ஹாரிஸ் ஜெய‌ராஜிற்கு ந‌ல்ல‌ மாற்றாய் வ‌ந்துவிட்டார்

jothi சொன்னது…

@ஜெய்லானி

க‌ண்ண‌தாச‌னும் ஸ்ரீத‌ரும் legends. அப்போதிருந்த‌து போன்ற‌ சிற‌ந்த‌ ப‌டைப்பாளிக‌ள் இப்போது இல்லை. ஆனாலும் இர‌ண்டாவ‌து பாட‌ல் சாதார‌ண‌ ர‌க‌ம் இல்லை,.. ஒரு வேளை ந‌ம் குழ‌ந்தைக‌ள் இன்னும் ஒரு 25 ஆண்டுக‌ள் க‌ழித்து ர‌சித்துப்பார்க்க‌லாம்.
.

jothi சொன்னது…

@ஜெய்லானி
//அவரோட பாடல் வரிக்கு நான் எப்போதுமே அடிமைதான் ஆனால் பயபுள்ள நடிப்புதான் சகிக்கல ..அவ்வ்வ்வ்//

100% true.ச‌ந்தேக‌மில்லை

கோவை நேரம் சொன்னது…

இரண்டும் அருமையான எப்போதும் கேட்க தூண்டும் பாடல்கள் ...ரசனையான பதிவு பாடல்களுடன் ...

jothi சொன்னது…

வாங்க‌ கோவை நேர‌ம், மிக்க‌ ந‌ன்றி

கருத்துரையிடுக