செவ்வாய், 24 நவம்பர், 2009

வேர்களை தேடி


காலில் வேர்களை விதைத்து
நெஞ்சில் விழுதுகளை நிறைத்து
கண்ணில் கிளைகளை பரப்பி
வெகு தூரம் போய்விட்டாள்.
என்னைவிட்டு,.
அதனால் என்ன?
கண்கள் குளமாகவில்லை.
நெஞ்சம் ரணமாகவில்லை
ஆனால் கால்கள் மட்டும்
அந்த தொலைந்துவிட்ட செருப்பில்
சில அறுந்த வார்களை தேடி,...