சனி, 19 மார்ச், 2011

2030 - ‍ ம‌ண‌ம‌க‌ளுக்கு என்ன‌ செய்ய‌ப் போறோம்?


அதிர்ச்சியாக‌த்தான் இருந்த‌து அந்த‌ செய்தியை ப‌டித்த‌வுட‌ன்.

இன்னும் 20 ஆண்டுக‌ளில் ஆண்க‌ளின் எண்ணிக்கை பெண்க‌ளை விட‌ 20% அதிக‌மாக‌ இருக்கும். அதாவ‌து 120ஆண்க‌ளுக்கு 100 பெண்க‌ள் என்ப‌து க‌ண‌க்கு. இது மிக‌ ஆப‌த்தான‌ ஆண்/பெண் விகிதாச்சார‌ ச‌ம‌னிலை பிற‌ழ்ச்சி.

இன்னும் ப‌ல‌ மாநில‌ங்க‌ளில் ஆண் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஈர்ப்பு இன்னும் அதிக‌மாக‌ இருக்கிற‌தாம்.ப‌ஞ்சாப்,டெல்லி, குஜ‌ராத், போன்ற‌ மாநில‌ங்க‌ளில் 100:125 என இருக்கிற‌து.ஆந்திர‌ பிர‌தேஷ், கேர‌ளா மாநில‌ங்க‌ளில் ம‌ட்டுமே ஓர‌ள‌வு எண்ணிக்கை ஆறுத‌லாக‌ உள்ள‌து (100:105).


தெற்கு கொரியா ம‌ட்டுமே க‌ருவிலிருக்கு குழ‌ந்தையை ஆணா பெண்ணா என‌ பார்ப்ப‌த‌ற்கு த‌டை செய்து க‌ண்டிப்பாக‌ க‌வ‌னித்து வ‌ருகிற‌து. இந்தியாவில் க‌ருவிலிருக்கும் குழ‌ந்தை ஆணா பெண்ணா என‌ பார்ப்ப‌து இன்னும் ச‌க‌ஜ‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டு இருக்கிற‌து.


இன்று கொடுமை என்ன‌வென்றால் முத‌ல் குழ‌ந்தை பெண் என்றால் அடுத்த‌ குழ‌ந்தை பெண்ணாக‌ இருப்ப‌த‌ற்கு 54% வாய்ப்புக‌ள் இருக்கின்ற‌ன. முத‌ல் இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் பெண் என்றால் அடுத்த‌ குழ‌ந்தை 20% ச‌த‌வீத‌ம்தான் பெண்ணாக‌ வாய்ப்புக‌ள் இருக்கின்ற‌ன‌. கார‌ண‌ம் க‌ருவிலிருக்கும் குழ‌ந்தையை ஸ்கேனில் பார்த்து ஆண் என்றால் ம‌ட்டும் வ‌ள‌ர‌விடுவ‌து, இல்லை என்றால் கொன்றுவிடுவ‌து. அதுதான் இன்று ந‌ட‌ந்து கொண்டு இருக்கிறது.

துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ முத‌ல் குழ‌ந்தை ஆண் என்றால் அப்ப‌டியே இன்னும் நிறுத்தி விடுவ‌தும் உண்டு. இப்ப‌டி செய்தால் எப்ப‌டி பெண் குழ‌ந்தைக‌ள் பிற‌க்கும்?.120 ஆண்க‌ளுக்கு 100 பெண்க‌ள் எனும் போது என்ன‌தான் செய்ய‌முடியும்?? அப்போது என்ன‌வெல்லாம் நட‌க்க‌ வாய்ப்பிருக்கிற‌து??? நிறைய‌ ச‌மூக‌ ரீதியான‌ பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ர‌ வாய்ப்பிருக்கிற‌து. பின் வ‌ருப‌வை காமெடி போல‌த் தோன்றினாலும் துர‌திர்ஷ்ட‌மாக‌ ந‌ட‌ந்தால் ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை.

1. நீங்க‌ள் பெண்ணின் பெற்றோருக்கு வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுக்க‌ வேண்டி இருக்க‌லாம். ஆண்க‌ள் பெண்ணிற்கு வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுக்க‌ வேண்டும் என‌ அர‌சாங்க‌மே அனும‌தி அளிக்க‌லாம்.

2. இப்போது ப‌ள்ளியில் காலையில் நாலு ம‌ணிக்கே போய் நிற்ப‌து போல், பெண் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌வுட‌ன் அட்வான்ஸ் புக்கிங் ப‌ண்ண‌ வேண்டி இருக்க‌லாம். அதை நீட்டிக்க‌ மாத‌ம் மாத‌ம் நீங்க‌ள் சேவை வ‌ரி க‌ட்ட‌ வேண்டி வ‌ர‌லாம்.

3. அந்த‌ பெண் எந்த‌ ஆணையும் பார்த்துவிடாம‌ல் இருக்க அத‌ற்கு ஒரு த‌னியாக‌ சிற‌ப்பு பாதுகாப்பு ப‌டை வ‌ழ‌ங்கி பாதுகாக்க‌லாம்,. (அப்போது காவ‌ல‌ன் ப‌ட‌த்தை ரீமேக் செய்ய‌லாம்,. யாருக்குத் தெரியும் அது உண்மை க‌தை என‌க்கூட‌ விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ப்ப‌ட‌லாம்).

4. எத்தியோப்பியா, நைஜீரியா, சோமாலியா, இல‌ங்கை போன்ற‌ நாடுக‌ளில் இருந்து இந்திய‌ ஆண்க‌ளுக்கு பெண் எடுக்க‌லாம்.

4. பெண்க‌ள் த‌ன் பேச்சை கேட்காத‌ ஆண் க‌ண‌வ‌ர்க‌ளை யோசிக்காம‌ல் விவகார‌த்து செய்ய‌லாம்.

5. பெண்ணுக்கெதிரான‌ பாலிய‌ல் குற்ற‌ங்க‌ள் அதிக‌மாக‌லாம், உதார‌ண‌மாக‌ பெண் கிடைக்காம‌ல் காய்ந்து போன‌ ந‌ப‌ர்க‌ள் அப்பாவி பெண்க‌ளை க‌ட‌த்தி க‌ற்ப‌ழிக்க‌லாம்.

6. விப‌ச்சார‌ம் ஒரு ப‌ண‌ம் கொழிக்கும், அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ தொழிலாக‌ இருக்கலாம். அத‌னால் பால்வினை நோய்க‌ள் அதிக‌மாகலாம்.

மாத‌ராய் பிற‌ந்திட‌ மாத‌வம் செய்திட‌ வேண்டும் என‌ பார‌தி சொன்ன‌து இன்னும் இருப‌து வ‌ருட‌ம் க‌ழித்துதான் உண்மையாகும் போலிருக்கிற‌து.

ச‌ந்த‌தி த‌ரும் பெண்க‌ளுக்கு துணையிருப்போம் க‌ருவிலிருந்து,..

..

23 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஓ..இப்படி ஒரு பிரச்சனை இருக்கா

பெயரில்லா சொன்னது…

இப்போது ப‌ள்ளியில் காலையில் நாலு ம‌ணிக்கே போய் நிற்ப‌து போல், பெண் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌வுட‌ன் அட்வான்ஸ் புக்கிங் ப‌ண்ண‌ வேண்டி இருக்க‌லாம்//
இப்பவே கொத்திகிட்டு போயிடுறானுக

jothi சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ஓ..இப்படி ஒரு பிரச்சனை இருக்கா//

ஆமாம் ச‌தீஷ்,.. இது உண்மையிலேயே மிக‌ அபாய‌க‌ர‌மான‌ ச‌மூக‌ பிர‌ச்ச‌னை

jothi சொன்னது…

//இப்போது ப‌ள்ளியில் காலையில் நாலு ம‌ணிக்கே போய் நிற்ப‌து போல், பெண் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌வுட‌ன் அட்வான்ஸ் புக்கிங் ப‌ண்ண‌ வேண்டி இருக்க‌லாம்//
இப்பவே கொத்திகிட்டு போயிடுறானுக//

உண்மைதான் த‌ண்ட‌னைக‌ளை உறுதியாக‌ ந‌டைமுறைப்ப‌டுத்த‌ ப‌ட‌வில்லை என்றால் இன்னும் குற்ற‌ங்க‌ள் அதிக‌மாக்க‌ப்ப‌டும்

ரேவா சொன்னது…

120 ஆண்க‌ளுக்கு 100 பெண்க‌ள் எனும் போது என்ன‌தான் செய்ய‌முடியும்?? அப்போது என்ன‌வெல்லாம் நட‌க்க‌ வாய்ப்பிருக்கிற‌து??? நிறைய‌ ச‌மூக‌ ரீதியான‌ பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ர‌ வாய்ப்பிருக்கிற‌து. பின் வ‌ருப‌வை காமெடி போல‌த் தோன்றினாலும் துர‌திர்ஷ்ட‌மாக‌ ந‌ட‌ந்தால் ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை...

..உங்கள் புள்ளி விவர கணக்கெடுப்பு அருமை... உங்கள் பதிவு படி நீங்க சொல்லி இருக்குற விஷயங்கள் நடந்தால் துரதிஷ்டவசம் தான் நண்பரே.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

இந்தப் பட்டியலில் சிலநுணுக்கமான விஷயங்களை கவனிக்க வேண்டும். அதாவது உயிரோடு உள்ள 100 ஆண்களுக்கு உயிரோடு 933 பெண்கள் என்ற விகிதம்.

ஆண்களின் சராசரி வய்து பெண்களின் சராசரி வயதைவிட குறைவு என்பதை அந்த பட்டியலை பெற்ற அதே தளத்திலிருந்தே உறுதி செய்து கொள்ளலாம்.அதனால் பிறக்கும் குழந்தைகளுக்கிடையேயான விகிதம். அந்தக் குழந்தைகள் ஐந்து வயதாகும்போது உயிர்ரொடு இருப்பவைகளிடையேயான விகிதமே கணக்கில் கொள்ள வேண்டியது.


அடுத்ததாக 1971, 1991 ஐ விட இடைவெளி இப்போது குறைந்திருப்பதைக் காணலாம்.


============================


விதண்டாவாதம் செய்தால் பெண்கள் எண்ணிக்கை குறைந்தால் பெண் வீட்டாருக்கு தட்சினை கொடுத்து திருமணம் செய்யும் சூழல் வரலாம்.

=================================

வலிமையான ஆண்களுக்குத்தான் பெண் கிடைக்கும். பொருளாதார ரீதியில் மட்டும் வலிமையாக இருந்தால் போதாத சூழல் உருவாகும்.


பெண்ணுரிமை பெருகும். அதே போல் வலிமையான ஆண்களால் அது நசுக்கப் படும்.

============================

அதெல்லாம் சரி, அட்டவணையை மீண்டும் பாருங்கள். 20% இடைவெளியா இருக்கிறது?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நான் உங்கள் எழுபதாவது பாலோவர் ஹே ஹே ஹே ஹே.....

ஹேமா சொன்னது…

பெண்களைப் போற்றுகிறோம்ன்னு சொல்லிச் சொல்லியே நசுக்கி வச்சிருக்கிற
ஆண்(உங்)களுக்கெல்லாம் வேணும் !

இதெல்லாம் பொய்.நம்பாதீங்க !

jothi சொன்னது…

வாங்க‌ ரேவா,. முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றி,.. ந‌ட‌க்காது என‌ ந‌ம்புவோமாக‌,..

jothi சொன்னது…

வாங்க‌ வீராங்க‌ன்,.. (அதென்ன‌வோ ப‌ழ‌னியிலிருந்து சுரேஷ் ந‌ல்லா நியாப‌மாய் இருந்த‌து,..)

jothi சொன்னது…

//இந்தப் பட்டியலில் சிலநுணுக்கமான விஷயங்களை கவனிக்க வேண்டும். அதாவது உயிரோடு உள்ள 100 ஆண்களுக்கு உயிரோடு 933 பெண்கள் என்ற விகிதம்.

ஆண்களின் சராசரி வய்து பெண்களின் சராசரி வயதைவிட குறைவு என்பதை அந்த பட்டியலை பெற்ற அதே தளத்திலிருந்தே உறுதி செய்து கொள்ளலாம்.

அதனால் பிறக்கும் குழந்தைகளுக்கிடையேயான விகிதம். அந்தக் குழந்தைகள் ஐந்து வயதாகும்போது உயிர்ரொடு இருப்பவைகளிடையேயான விகிதமே கணக்கில் கொள்ள வேண்டியது.

அடுத்ததாக 1971, 1991 ஐ விட இடைவெளி இப்போது குறைந்திருப்பதைக் காணலாம்.//

உங்க‌ள் விள‌க்க‌த்திற்கு ந‌ன்றி வீராங்க‌ன். நானும் இதை தெளிவாக‌ போட‌லாம் என‌த்தான் இருந்தேன்,. ஆனால் அது ப‌திவை பெருசாக்கி விடும் என்ப‌தால் விள‌க்கி எழுத‌வில்லை.

jothi சொன்னது…

வீராங்கன் சொன்னது
//வலிமையான ஆண்களுக்குத்தான் பெண் கிடைக்கும். பொருளாதார ரீதியில் மட்டும் வலிமையாக இருந்தால் போதாத சூழல் உருவாகும்.//

உண்மைதான் ம‌றுப்ப‌த‌ற்கில்லை,.. ஆனால் ஒரு ச‌மூக‌த்தில் பெண் கிடைக்காத‌ ஆண்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்?? வேறு ச‌மூக‌த்தில் உள்ள‌ பெண்ணை தேடுவ‌தற்கு வாய்ப்புள்ள‌து. இத‌னால் க‌ல‌ப்பு திரும‌ணங்க‌ள் அதிக‌மாக‌லாம்

jothi சொன்னது…

//பெண்ணுரிமை பெருகும். அதே போல் வலிமையான ஆண்களால் அது நசுக்கப் படும்.//

என்ன‌ சொல்வ‌தென்று தெரிய‌வில்லை. ஒரு ச‌மூக‌த்தில் ஆண் முத‌ல் நிலைப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டுமா? இல்லை பெண்ணும், ஆணும் ச‌ம‌மான‌ உய‌ர‌த்தில் அம‌ர்ந்து வ‌ழி ந‌ட‌த்த‌ வேண்டுமா??

மில்லிய‌ன் டால‌ர் கேள்வி.

jothi சொன்னது…

//அதெல்லாம் சரி, அட்டவணையை மீண்டும் பாருங்கள். 20% இடைவெளியா இருக்கிறது?//

அட்ட‌வ‌ணை 2001 ஆம் ஆண்டு சென்ச‌ஸ் க‌ண‌க்குப்ப‌டி உள்ள‌து. நான் சொன்ன‌ இருப‌து ச‌த‌வீத‌ம் கி.பி. 2030 ஆம் ஆண்டில் புள்ளியிய‌ல் விதிக‌ளின்ப‌டி க‌ண‌க்கிட‌ப்ப‌ட்ட‌து.

முழு விப‌ர‌ங்க‌ளுக்கு

http://timesofindia.indiatimes.com/india/In-20-years-20-more-men-than-women/articleshow/7714885.cms

http://timesofindia.indiatimes.com/india/Punjab-Haryana-feeling-brunt-of-skewed-sex-ratio-Pratibha-Patil/articleshow/7732927.cms

வ‌ருகைக்கு மீண்டும் மிக்க‌ ந‌ன்றி வீராங்க‌ன்,..

jothi சொன்னது…

வாங்க‌ MANO நாஞ்சில் மனோ,

மிக்க‌ ந‌ன்றி நானும் உங்க‌ள் ப‌திவுக‌ளை வ‌ந்து ப‌டிக்கிறேன்

jothi சொன்னது…

//பெண்களைப் போற்றுகிறோம்ன்னு சொல்லிச் சொல்லியே நசுக்கி வச்சிருக்கிற
ஆண்(உங்)களுக்கெல்லாம் வேணும் !

இதெல்லாம் பொய்.நம்பாதீங்க !//


வாங்க‌ ஹேமா,.

என்ன‌ சொல்ற‌துன்னே தெரிய‌ல‌,

பெண்க‌ள் இல்லாம‌ல் ஆண்க‌ள் இல்லை, இருந்தாலும்,..

பெண்க‌ளின் எண்ணிக்கை குறைவ‌தால் வ‌ரும் ஆப‌த்துக்க‌ள் எந்த‌ அள‌விற்கு இருக்கும் என‌பது பொருளாதார‌ நிபுண‌ர்க‌ள் ச‌ரியாக‌ க‌ணிக்க‌லாம்.

செங்கோவி சொன்னது…

யோவ், உமக்குத் தான் கல்யாணம் ஆயிடுச்சே..அப்புறம் ஏன் இப்படி கவலைப்படுதீரு?..ஓஹோ பையனுக்கு பெண் தேடும்போது வரதட்சணை கொடுக்கணுமோன்னு கவலையா......//அதாவ‌து 100 ஆண்க‌ளுக்கு 120 பெண்க‌ள் என்ப‌து க‌ண‌க்கு.// அண்ணே, இது தப்பா இருக்கு..ஆ-வும் பெ-வும் மாறிக் கிடக்கு!

jothi சொன்னது…

//..ஓஹோ பையனுக்கு பெண் தேடும்போது வரதட்சணை கொடுக்கணுமோன்னு கவலையா......////

ஹி ஹி

//அதாவ‌து 100 ஆண்க‌ளுக்கு 120 பெண்க‌ள் என்ப‌து க‌ண‌க்கு.// அண்ணே, இது தப்பா இருக்கு..ஆ-வும் பெ-வும் மாறிக் கிடக்கு!//

சுட்டிக்காட்டிய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி செங்கோவி, மெய்ன்ல‌யே கோட்டை விட்டுட்டேன்

Unknown சொன்னது…

:)

jothi சொன்னது…

thank u siva

Yaathoramani.blogspot.com சொன்னது…

எச்சரிக்கையூட்டும் காலத்திற்கேற்ற
சமூக உண்ர்வுள்ள நல்ல பதிவு
பதிவுக்கென தங்கள் எடுத்துக்கொண்டுள்ள
சிரமங்கள் பதிவின் விவரங்களைப் பார்க்கப் புரிகிறது
தொடர வாழ்த்துக்கள்

jothi சொன்னது…

வாங்க‌ ர‌ம‌ணி ச‌கோ.

உங்க‌ள் க‌ருத்திற்கு மிக்க‌ ந‌ன்றி

வெற்றிவேல் சொன்னது…

பிரச்சனை ஆண்களுக்கு எப்படில்லாம் வருது!!! கஷ்டம் தான்...

நீண்ட தேடல். வாழ்த்துகள்.

கருத்துரையிடுக