சனி, 26 மார்ச், 2011

ச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்?

  ச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் ஏன் ஏன் ஏன்? இத‌ற்கான‌ விள‌க்க‌ம் இந்த‌ டிப்ஸ்க‌ளை ப‌டித்த‌பின்,.
  • லைட் சுவிட்சுகள் மிக‌ சிற‌ந்த‌ மின்சார‌ சேமிப்புக‌ள். விள‌க்கு எப்போதெல்லாம் தேவையில்லையோ அப்போதெல்லாம் அணைத்திடுங்க‌ள். தேவைப்ப‌டும் விள‌க்குக‌ளை ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள். உதார‌ண‌மாக‌ பூஜைய‌றைக்கு அத‌ற்கான‌ குறைந்த‌ செய‌ல்திற‌ன் ப‌ல்பை ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள். முழு அறையையும் ஒளியூட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. தேவைப்ப‌ட்டால் ஒழிய‌.
  • தூசுக‌ள் உங்க‌ள் விள‌க்கின் ஒளியில் 50% விழுங்கிவிடும். என‌வே ப‌ல்புக‌ளின் வெளிப்புற‌ம் உள்ள‌ தூசிக‌ளை அடிக்க‌டி சுத்த‌ப்ப‌டுத்துங்க‌ள்.
  • வீட்டில் உருண்டை விள‌க்கு (அதாங்க‌ குண்டுப‌ல்ப்) இருந்தால் முத‌லில் அத‌னை மாற்றிவிட்டு ப்ள‌ர‌சென்ட் லைட்டோ, குழ‌ல் விள‌க்கோ (டியூப் லைட்) மாற்றுங்க‌ள். இத‌னால் வெளிச்ச‌த்திற்காக‌ நாம் வ‌ழ‌க்க‌மாக‌ செல‌விடும் மின்சார‌த்தில் 75% ச‌த‌வீத‌ம் வ‌ரை மிச்ச‌ப்ப‌டுத்த‌ முடியும். உதார‌ண‌மாக‌ உருண்டை 60watt த‌ரும் வெளிச்ச‌த்தை 15wattப்ளூர‌செண்ட் விள‌க்கு த‌ந்துவிடும். உருண்டை விள‌க்கினால் அறைக்கு அதிக‌ம் வெப்ப‌ம் என்ப‌தையும் நினைவில் கொள்ளுங்க‌ள்
  • கோடை கால‌ வெயிலுக்கு எதிராக‌ முத‌லில் காற்றாடி (பேன்) ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள். வேறு வ‌ழியில்லை எனும் போது AC ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பியுங்க‌ள். கார‌ண‌ம் அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே. பேன் ஓடும் போது ஒரு ம‌ணி நேர‌த்திற்கு 30 பைசா செல‌வாகும்போது ஏ.சிக்கு 7 ரூபாய் வ‌ரை செல்வாகிற‌து.
  • வீட்டிற்குள் வெயில் வ‌ருவத‌ற்கான‌ வ‌ழிக‌ளை (ஜ‌ன்ன‌ல் போன்ற‌வை) ம‌ர‌ங்க‌ளையோ இல்லை ம‌றைப்பான்க‌ளையோ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் 40% வ‌ரை ACக்கான‌ மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்.
  • ஏசி வெப்ப‌னிலையை மிக‌ குறைந்த‌ நிலையில் (set@ 21 செல்சிய‌ஸ்) வைப்ப‌த‌ற்கு ப‌தில் கொஞ்ச‌ம் மித‌மான‌ நிலையில் (set@ 25 செல்சிய‌ஸ்) வையுங்க‌ள். இத‌னால் க‌ணிச‌மான‌ அள‌வில் (10-15%) மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ முடியும்.
  • ந‌ல்ல‌ ஏசி 30 நிமிட‌த்திற்கு ஒரு முறை சுழ‌ற்சி முறையில் குளிரூட்டிக்கொண்டு இருக்கும். இதனால் டைம‌ரில் வைத்து குறிப்பிட்ட‌கால‌ இடைவெளியில் அணைத்து வையுங்க‌ள். ஏசி போட்டிருக்கும் போது க‌த‌வுக‌ளை மூடியே வைத்திருக்க‌ குழ‌ந்தைக‌ளையும் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்துங்க‌ள். ஏசி பிள்ட‌ர்க‌ளை மாத‌ம் ஒரு முறை சுத்த‌ப்ப‌டுத்துங்க‌ள். செப்ப‌னிட‌ப்ப‌டாத‌ ஏசி பிள்ட‌ர்க‌ள் ஏசியின் ஆயூட்கால‌த்தை குறைப்ப‌துட‌ன் அதிக‌ மின்சார‌த்தையும் இழுக்கிற‌து.
  • குளிர்சாத‌ன‌ப்பெட்டியை வெப்ப‌மான‌ இட‌ங்க‌ளில் வைப்ப‌தை த‌விருங்க‌ள். உதார‌ணமாக‌ நேர‌டியாக‌ சூரிய‌ வெளிச்ச‌ம் ப‌டுத‌ல், ஓவ‌ன் அருகில் வைத்த‌ல் போன்ற‌வை. ப்ரிட்ஜின் உட்புற‌ லைட் க‌த‌வு மூடி இருந்தாலும் வெளியே வெளிச்ச‌ம் தெரிந்தால் க‌த‌வின் ர‌ப்ப‌ரை மாற்றுங்க‌ள்.
  • ப்ரிட்ஜில் உள்ள‌ மோட்ட‌ர்/க‌ம்ப்ர‌ஸ்ஸ‌ர் தொட‌ர்ந்து வெப்ப‌த்தை வெளியே விடுவ‌தால், ப்ரிட்ஜின் பின் புற‌த்தை சுவ‌ற்றை ஒட்டி வைக்க‌தீர்க‌ள். கொஞ்ச‌ம் இடைவெளி விட்டு வைப்ப‌தால் காற்று சுழ‌ற்சியினால் ப்ரிட்ஜ் அதிக‌ம் வேலை செய்ய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இருக்காது.
  • சூடான பொருட்க‌ள் ஆறின‌ பின் உள்ளே வைக்க‌வும். அதே போல் ப்ரிஜில் வைத்த‌ மாவை எடுத்து தோசை சுடும் போது ஒரு அரை ம‌ணி நேர‌ம் முன்ன‌தாக‌ வெளியே எடுத்து வைத்துவிடுங்க‌ள். இது மின்சார‌த்தை சேமிக்க‌ உத‌வாது. மாறாக‌ கேசினை ப‌ய‌ன்ப‌டுத்தும் அள‌வை குறைக்கும்.
  • ப்ரிட்ஜ் பின்னால் உள்ள‌ காயில்க‌ளில் தூசி ப‌டிந்தால் துடைத்து விட‌வும்,. அதிக‌மான‌ தூசி மின்சார‌த்தை அதிக‌ப்ப‌டுத்தும்.
  • ஹீட்ட‌ர்க‌ளை தேவையில்லாம‌ல் அதிக‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தாதீர்க‌ள். ஹீட்ட‌ர்க‌ளின் உள்ளே உள்ள‌ coilக‌ளை முறையாக‌ சுத்த‌ம் செய்ய‌வும். சுத்த‌ப்ப‌டுத்த‌ப‌டாத‌ coilக‌ளினால் அதிக‌ம் மின்சார‌ம் செல‌வாகிற‌து
  • க‌ம்ப்யூட்ட‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல் இருக்கையில் அணைத்துவிடுங்க‌ள். அப்ப‌டியே CPU மட்டும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டுமென்றால் மானிட்ட‌ரை ஆப் செய்துவிடுங்க‌ள்.
  • பேட்ட‌ரி சார்ஜ‌ர், லேப்டாப் ப‌வ‌ர் க‌னெக்ட‌ர் போன்ற‌வை மாட்டி இருந்தாலே மின்சார‌த்தை இழுக்கும். என‌வே அவ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை என்றால் அணைத்துவிடுவ‌து ந‌ல்ல‌து.
  • கம்பியூட்ட‌ர்க‌ளை ஸ்லீப் மோடில் வைப்ப‌தால் 40% வ‌ரை மின்சார‌ம் மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்

  மின்சார‌ம் தொட்டால்தான் ஷாக் அடிக்கும்,. ச‌ம்சார‌ம் ந‌ம்மை பார்த்தாலே ஷாக் அடிக்கும். அதனால்தான் ச‌ம்சார‌ம் அது மின்சார‌ம்,.. ஹி ஹி இது சும்மா,.. வீட்டிற்கு எஜ‌மானி ச‌ம்சார‌ம்தானே,. என‌வே நாம் மிச்ச‌ப்ப‌டுத்தும் ஒவ்வொரு கிலோ வாட்டு(kW)க்கும் ந‌ம் ம‌னைவியின் ப‌ங்கு மிக‌ முக்கிய‌ம்.அத‌ற்காக‌ ஆண்க‌ளுக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லை என‌ அர்த்த‌மாகாது.

  -----------------------------------------------------------------------------------------

  இன்று ஏன் இந்த‌ ப‌திவு என‌ நினைக்கிறார்க‌ளா?

  நீங்க‌ள் TV போட்டுக்கொண்டு பேப்ப‌ர் ப‌டிக்கிறீர்க‌ள். உண்மையில் பார்த்தால் உங்க‌ளுக்கு தேவைப்ப‌டாத‌ மின்சார‌த்திற்கு எங்கோ ஒருவ‌ர் நில‌க்க‌ரியை எரித்து மின்சார‌த்தை அனுப்பி வைக்கிறார். ஆனால் அதை நாம் ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை. இதனால் சூழ்னிலை சூடாகிற‌து, ப‌னிக்க‌ட்டி உருகிற‌து, ஓசோன் ஓட்டை ஆகிற‌து, ம‌ழை பொய்கிற‌து. இப்ப‌டி நிறைய‌.இத‌ன் விளைவுக‌ளை இன்று முழுமையாக‌ அனுப‌விக்காவிட்டாலும் ந‌ம் ச‌ந்த‌திக‌ள் க‌ண்டிப்பாக‌ அனுப‌விக்க‌ நேரும். ஆத‌லால் மின்சார‌த்தை சேமிப்பு எந்த‌ள‌விற்கு முக்கிய‌மோ அதைவிட‌ மிக‌ முக்கிய‌ம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டாம‌ல் செல‌வாகும் மின்சார‌ம்.


  இதையெல்லாம் க‌ருத்தில் கொண்டுதான் முத‌ன்முத‌லில் பூமி நாள் 2007ல் ஆல் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. அது இன்று க‌டைபிடிக்க‌ப்ப‌டுகிற‌து. இன்று இர‌வு 8:30 ம‌ணிக்கு மேல் ஒரு ம‌ணி நேர‌ம் விள‌க்குக‌ளை அணைப்ப‌தால் மிக‌ அதிக‌மான‌ அள‌வு கொண்ட‌ மின்சார‌ம் சேமிக்க‌ப்ப‌டுகிற‌து. 2009 ஆம் ஆண்டு 100 மில்லிய‌ன் ம‌க்க‌ள் ப‌ங்கெடுத்தார்க‌ள். நாமும் இதை க‌ண்டிப்பாக‌ அம‌ல் ப‌டுத்த‌ முயற்சி செய்வோம். (த‌மிழ் நாட்டில் ஏற்க‌ன‌வே ரொம்ப‌ ப‌வ‌ர்க‌ட் என‌க்கேள்விப்ப‌ட்டேன்)

  நாம் மிச்ச‌ப்ப‌டுத்தும் ஒரு குண்டுப‌ல்பின் மின்சார‌த்தால் வ‌ரும் ப‌ல‌ன்க‌ள் நிறைய‌, அத‌னால் இந்த‌ ப‌திவை க‌ண்டிப்பாக‌ தொட‌ர்கிறேன் (பின்னூட்ட‌மோ, ஓட்டோ வ‌ர‌வில்லை ஒன்று கூட‌ வ‌ர‌வில்லை என்றாலும்),.

  .

  சனி, 19 மார்ச், 2011

  2030 - ‍ ம‌ண‌ம‌க‌ளுக்கு என்ன‌ செய்ய‌ப் போறோம்?


  அதிர்ச்சியாக‌த்தான் இருந்த‌து அந்த‌ செய்தியை ப‌டித்த‌வுட‌ன்.

  இன்னும் 20 ஆண்டுக‌ளில் ஆண்க‌ளின் எண்ணிக்கை பெண்க‌ளை விட‌ 20% அதிக‌மாக‌ இருக்கும். அதாவ‌து 120ஆண்க‌ளுக்கு 100 பெண்க‌ள் என்ப‌து க‌ண‌க்கு. இது மிக‌ ஆப‌த்தான‌ ஆண்/பெண் விகிதாச்சார‌ ச‌ம‌னிலை பிற‌ழ்ச்சி.

  இன்னும் ப‌ல‌ மாநில‌ங்க‌ளில் ஆண் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஈர்ப்பு இன்னும் அதிக‌மாக‌ இருக்கிற‌தாம்.ப‌ஞ்சாப்,டெல்லி, குஜ‌ராத், போன்ற‌ மாநில‌ங்க‌ளில் 100:125 என இருக்கிற‌து.ஆந்திர‌ பிர‌தேஷ், கேர‌ளா மாநில‌ங்க‌ளில் ம‌ட்டுமே ஓர‌ள‌வு எண்ணிக்கை ஆறுத‌லாக‌ உள்ள‌து (100:105).


  தெற்கு கொரியா ம‌ட்டுமே க‌ருவிலிருக்கு குழ‌ந்தையை ஆணா பெண்ணா என‌ பார்ப்ப‌த‌ற்கு த‌டை செய்து க‌ண்டிப்பாக‌ க‌வ‌னித்து வ‌ருகிற‌து. இந்தியாவில் க‌ருவிலிருக்கும் குழ‌ந்தை ஆணா பெண்ணா என‌ பார்ப்ப‌து இன்னும் ச‌க‌ஜ‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டு இருக்கிற‌து.


  இன்று கொடுமை என்ன‌வென்றால் முத‌ல் குழ‌ந்தை பெண் என்றால் அடுத்த‌ குழ‌ந்தை பெண்ணாக‌ இருப்ப‌த‌ற்கு 54% வாய்ப்புக‌ள் இருக்கின்ற‌ன. முத‌ல் இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் பெண் என்றால் அடுத்த‌ குழ‌ந்தை 20% ச‌த‌வீத‌ம்தான் பெண்ணாக‌ வாய்ப்புக‌ள் இருக்கின்ற‌ன‌. கார‌ண‌ம் க‌ருவிலிருக்கும் குழ‌ந்தையை ஸ்கேனில் பார்த்து ஆண் என்றால் ம‌ட்டும் வ‌ள‌ர‌விடுவ‌து, இல்லை என்றால் கொன்றுவிடுவ‌து. அதுதான் இன்று ந‌ட‌ந்து கொண்டு இருக்கிறது.

  துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ முத‌ல் குழ‌ந்தை ஆண் என்றால் அப்ப‌டியே இன்னும் நிறுத்தி விடுவ‌தும் உண்டு. இப்ப‌டி செய்தால் எப்ப‌டி பெண் குழ‌ந்தைக‌ள் பிற‌க்கும்?.  120 ஆண்க‌ளுக்கு 100 பெண்க‌ள் எனும் போது என்ன‌தான் செய்ய‌முடியும்?? அப்போது என்ன‌வெல்லாம் நட‌க்க‌ வாய்ப்பிருக்கிற‌து??? நிறைய‌ ச‌மூக‌ ரீதியான‌ பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ர‌ வாய்ப்பிருக்கிற‌து. பின் வ‌ருப‌வை காமெடி போல‌த் தோன்றினாலும் துர‌திர்ஷ்ட‌மாக‌ ந‌ட‌ந்தால் ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை.

  1. நீங்க‌ள் பெண்ணின் பெற்றோருக்கு வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுக்க‌ வேண்டி இருக்க‌லாம். ஆண்க‌ள் பெண்ணிற்கு வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுக்க‌ வேண்டும் என‌ அர‌சாங்க‌மே அனும‌தி அளிக்க‌லாம்.

  2. இப்போது ப‌ள்ளியில் காலையில் நாலு ம‌ணிக்கே போய் நிற்ப‌து போல், பெண் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌வுட‌ன் அட்வான்ஸ் புக்கிங் ப‌ண்ண‌ வேண்டி இருக்க‌லாம். அதை நீட்டிக்க‌ மாத‌ம் மாத‌ம் நீங்க‌ள் சேவை வ‌ரி க‌ட்ட‌ வேண்டி வ‌ர‌லாம்.

  3. அந்த‌ பெண் எந்த‌ ஆணையும் பார்த்துவிடாம‌ல் இருக்க அத‌ற்கு ஒரு த‌னியாக‌ சிற‌ப்பு பாதுகாப்பு ப‌டை வ‌ழ‌ங்கி பாதுகாக்க‌லாம்,. (அப்போது காவ‌ல‌ன் ப‌ட‌த்தை ரீமேக் செய்ய‌லாம்,. யாருக்குத் தெரியும் அது உண்மை க‌தை என‌க்கூட‌ விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ப்ப‌ட‌லாம்).

  4. எத்தியோப்பியா, நைஜீரியா, சோமாலியா, இல‌ங்கை போன்ற‌ நாடுக‌ளில் இருந்து இந்திய‌ ஆண்க‌ளுக்கு பெண் எடுக்க‌லாம்.

  4. பெண்க‌ள் த‌ன் பேச்சை கேட்காத‌ ஆண் க‌ண‌வ‌ர்க‌ளை யோசிக்காம‌ல் விவகார‌த்து செய்ய‌லாம்.

  5. பெண்ணுக்கெதிரான‌ பாலிய‌ல் குற்ற‌ங்க‌ள் அதிக‌மாக‌லாம், உதார‌ண‌மாக‌ பெண் கிடைக்காம‌ல் காய்ந்து போன‌ ந‌ப‌ர்க‌ள் அப்பாவி பெண்க‌ளை க‌ட‌த்தி க‌ற்ப‌ழிக்க‌லாம்.

  6. விப‌ச்சார‌ம் ஒரு ப‌ண‌ம் கொழிக்கும், அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ தொழிலாக‌ இருக்கலாம். அத‌னால் பால்வினை நோய்க‌ள் அதிக‌மாகலாம்.

  மாத‌ராய் பிற‌ந்திட‌ மாத‌வம் செய்திட‌ வேண்டும் என‌ பார‌தி சொன்ன‌து இன்னும் இருப‌து வ‌ருட‌ம் க‌ழித்துதான் உண்மையாகும் போலிருக்கிற‌து.

  ச‌ந்த‌தி த‌ரும் பெண்க‌ளுக்கு துணையிருப்போம் க‌ருவிலிருந்து,..

  ..

  வியாழன், 17 மார்ச், 2011

  பெய‌ர் காவிய‌ம் - என் பெய‌ர் பாதி க‌ண்'ண‌ன்


  ச‌கோத‌ரி அம்பிகா பெய‌ர் ப‌திவை யாராவ‌து தொட‌ருங்க‌ள் என‌ சொன்ன‌ கார‌ண‌த்தால் அந்த‌ யார் நானே என‌ முடிவு செய்து (ஹி ஹி) இந்த‌ ப‌திவு.

  என் பெய‌ர் ஜோதிக‌ண்ண‌ன். எங்க‌ள் குடும்ப‌த்தில் பெரும்பாலும் க‌ண்ண‌ன் என்றே முடியும்.பிற‌க்கும் போது நான் ந‌ன்கு க‌ருப்பாக‌ இருந்தேனாம் (ஹி ஹி, க‌ண்ண‌னில்ல அதான்,.).உட‌ம்பு முழுக்க‌ நிறைய‌ ம‌ச்ச‌ம் இருந்த‌தாம், அதனால் முத‌லில் ம‌ச்ச‌க‌ண்ண‌ன் வைக்க‌லாம் என‌ இருந்தார்க‌ளாம், நல்ல‌ வேலை க‌டைசி க‌ட்ட‌மாக‌ க‌ண்க‌ள் கொஞ்ச‌ம் பிர‌காச‌மாக‌ (!!!) இருந்த‌தால் ஜோதிக‌ண்ண‌ன் என‌ பேர் வைத்து விட்டார்க‌ள். (அட‌ அட‌ என்ன‌ ஒரு பெய‌ர் கார‌ண‌ம்).


  --------------------------------------------------------------------------------------------
  நான் ப‌ள்ளியில் ப‌டித்துக்கொண்டு இருக்கும் போது நான் க‌டைசிக்கு முந்தின‌ பெஞ்சில் உட்கார்ந்திருப்பேன் . இருந்தாலும் அந்த‌ பாவாடை வாத்தியார் (பேண்ட் பெல்ஸ் பாட்ட‌ம் அதான் பாவாடை வாத்தியார்) என்னைதான் கேப்பார். அதுவும் க‌ரும்ப‌ல‌கையை பார்த்து,. சில‌ நேர‌ங்க‌ளில் என‌க்கு போர்டில் இருப்ப‌து தெளிவாக‌ தெரியாது, அதனால் க‌ண்ணை கொஞ்ச‌ம் சுருக்கி பார்ப்பேன், இதை ரெண்டு மூணு முறை பார்த்த‌ அந்த‌ பாவாடை வாத்தி என்னை பாதி க‌ண்ண‌ன், பாதி க‌ண்ண‌ன் என‌ கூப்பிட‌ ஆர‌ம்பித்துவிட்டார். ப‌ச‌ங்க‌ளும் என்னை பாதிக‌ண்ண‌ன் என‌ கிண்ட‌ல‌டித்து கூப்பிட்ட‌து கிண்ட‌ல‌டித்து என் பெற்றோருக்கு தெரிந்து விட்ட‌து. அப்புற‌ம் என்னை க‌ண் ஆஸ்ப‌த்திரிக்கு கூட்டி சென்று பெரிய்ய்ய்ய்ய்ய்ய‌ சோடாபுட்டி மூக்கு க‌ண்ணாடியை போட்டுவிட்டார்க‌ள்.
  க‌ண்ணாடி போட்ட‌வுட‌ன் என் மூஞ்சி டோட்ட‌ல் டேமேஜ். அதுவுமில்லாம‌ல் அந்த‌ நேர‌த்தில் ஃபிக‌ர்க‌ளை சைடில் பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்தேன் (நேர்ல‌ பாத்தா ந‌ம்ம‌ பாக்குற‌து தெரிஞ்சிரும்ல‌ அதான்). மூக்கு க‌ண்ணாடி நேர‌டியாக‌ பார்க்க‌ ம‌ட்டுமே ப‌ல‌ன‌ளித்த‌து, சைடில் பார்க்கும் போது க‌ண்ணாடி தெரிய‌வில்லை, ஃபிக‌ர்க‌ள் தெளிவாக‌ தெரியாம‌ல்‌ அப்போ ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டேன்,.. இதை எப்ப‌டியோ தெரிந்த‌ கொண்ட‌ என் கூட‌ ப‌டிச்ச‌ ட்யூச‌ன் பொண்ணுங்க‌ பாதிக‌ண்ண‌ன் முழிக்கிறான், பாதிக‌ண்ண‌ன் முழிக்கிறான் (சின்ன‌க்க‌ண்ண‌ன் அழைக்கிறான் பாட்டு) என‌ பாடி க‌டுப்பேத்துவார்க‌ள். அதுக்கு அப்புற‌ம் சைடு க‌ண்ணை க‌வ‌ர் ப‌ண்ணிய‌ போட்ட‌ குதிரை மாதிரி போக‌ வேண்டிய‌தாயிற்று


  -----------------------------------------------------------------------------------------
  க‌ல்லூரி சேர்ந்த‌ பின் என் பேரை யாராவ‌து கேட்டால் பெரும்பாலும் க‌ண்ண‌ன் என‌த்தான் சொல்லுவேன், இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ள் ஜோதி, ஜோதி என‌ அழைத்தார்க‌ள், பெண் பெய‌ராக‌ இருந்த‌தால் ரொம்ப‌ க‌டுப்பாக‌ இருக்கும்.. சில‌ நேர‌ங்க‌ளில் குளிர்ச்சியாக‌வும் இருக்கும். அப்போதுதான் ஜோதி என்ற‌ பெய‌ரில் ஒருத்தி ஆந்திராவில் இருந்து first year சேர்ந்தாள். ப‌ச‌ங்க‌ சும்மாவாச்சும் அந்த‌ பெண் போகும் போதெல்லாம் ஜோதி ஜோதி என‌ அவ‌ளைக் கூப்பிடுவ‌து போல் என்னை‌க்கூப்பிட்டு க‌டுப்பேத்துவார்க‌ள். ஒரு நேர‌த்தில் ஜோதி என‌க்கூப்பிட்டால் திரும்பாம‌ல் இருக்க‌ முய‌ற்சி செய்தேன், முடிய‌வில்லை. ஒரு க‌ட்ட‌த்தில் அந்த‌ ஆந்திர‌ ஜோதியே ஜோதி என‌க்கூப்பிட்ட‌துதான் கொடுமை. (த‌மிழ் நாட்டை தாண்டினால் ஜோதி என்ப‌து பெண் பெய‌ர்தான்,.. இப்போதும் என‌க்கு நிறைய‌ லெட்ட‌ர் Mrs.ஜோதிக‌ண்ண‌ன் என‌ வ‌ருகிற‌து
  ------------------------------------------------------------------------------------------------


  ச‌மீப‌த்தில் என் பைய‌னுட‌ன் விளையாடும் போது என் ம‌க‌ன் கேட்டான்,.

  "அப்பா, ஏன் உங்க‌ உங்க‌ளுக்கு ஜோதிகண்ண‌ன்னு பேரு வெச்சாங்க‌?"
  "ம்ம்ம்,.உங்க‌ அப்பா க‌ண்ணுல‌ பிர‌காச‌மா ஜோதி வ‌ந்துச்சா அதுனால‌தான் அந்த‌ பேரு" இது என் ம‌னைவி.
  "பிர‌காச‌மான‌ க‌ண்ணுனா ஏன் க‌ண்ணாடி போடுறீங்க‌??"
  "ம்ம்ம்,. பிர‌காச‌மான‌ ஜோதி வ‌ந்துச்சுன்னா ந‌ம் க‌ண்ணைத்தாக்குமில்ல‌, அதை த‌டுக்க‌த்தான் க‌ண்ணாடி"(ஹி ஹி இதுவும் என் ம‌னைவிதான்).

  யார் சொன்ன‌து ம‌னைவிக‌ளுக்கு ஞாப‌க‌ ம‌ற‌தி என்று??

  ------------------------------------------------------------------------------------------

  வேலைக்கு வ‌ந்த‌ 12 ஆண்டுக‌ளில் இது வ‌ரை 6 க‌ம்பேனி மாறியாச்சு ,.. ஆனாலும் இப்போது திரும்ப‌ போனாலும் க‌ண்டிப்பா என்னை வேலைக்கு எடுத்துக் கொள்வார்க‌ள். கார‌ண‌ம் எல்லா நிறுவ‌ன‌ங்க‌ளிலும் என் பேரை ந‌ல்ல‌ ப‌டியாக‌ வைத்துவிட்டுதான் கிள‌ம்பி இருக்கிறேன்.

  ஆசையாய் வைத்த‌ என் பெற்றோருக்கு என் பேரால் இது வ‌ரை பெரிய‌ பெருமை ஒன்றையும் கொடுக்க‌வில்லை. ஆனால் வைச்ச் பேரை கெடுக்காம‌ல் வைத்திருக்கேனே அந்த‌ வ‌கையில் ச‌ந்தோச‌ம்.

  ----------------------------------------------------------------------------------------

  .
  .

  செவ்வாய், 15 மார்ச், 2011

  பின்னூட்ட‌ங்க‌ள் - ப‌ல‌ வித‌ம்


  பின்னூட்ட‌ங்க‌ள் க‌ல் மாதிரி. ஒரு ப‌திவ‌ரை சிலையாக‌வும் வைக்கும், இல்லையென்றால் அவ‌ரை வெறுப்பேற்ற‌ அவ‌ர்மீது வீசி எறிய‌ப்ப‌டும் சிறுக‌ல்லாக‌வும் ப‌ய‌ன்ப‌டும். ஆரோக்கிய‌மான‌ விவாத‌த்தில் ப‌ங்கு பெறுகிற‌ பின்னூட்ட‌ங்க‌ள் ப‌ல‌ நேர‌ங்க‌ளில் ப‌திவை தூக்கி சாப்பிடுகின்றன‌. ஒரு வ‌ண்டிக்கு எப்ப‌டி பெட்ரோலோ அது மாதிரி பின்னூட்ட‌ங்க‌ள் ஒரு ப‌திவிற்கு. இன்னும் ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் ஹிட்டை பற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் வார‌ம் 3 ப‌திவெழுதும் ர‌க‌சிய‌ம், யாரோ ஒரு புண்ணிய‌வான் அவ‌ன்(ர்) பொன்னான‌ நேர‌த்தை அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ளில் செல‌விட்டு அவ‌ர்க‌ளின் பார்வையை பின்னூட்ட‌மாய் விட்டு செல்வ‌தால்தான்.

  நான் ப‌திவுல‌க‌த்திற்கு வ‌ந்த‌ புதிதில் டாக்ட‌ர் புருனோவுட‌ன் பின்னூட்ட‌ங்க‌ளில் அதிக‌மாக‌ ச‌ண்டை போட்டேன். பிர‌ச்ச‌னை தெரிந்த‌தே. ர‌குமானா இளையாராஜாவென்கிற‌ ச‌ண்டைதான். பின் நாட்க‌ளில் அத‌ற்காக‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டு இருக்கிறேன். அதே நான் பின்னோரு நாளில் புருனோவுட‌ன் இணைந்து கார‌சார‌மாய் அர‌சு ஊழிய‌ரைப்ப‌ற்றி ஆரோக்கிய‌மான‌ விவாத‌ம் செய்திருக்கிறேன். போன‌ வ‌ருட‌ம் கூட‌ ஒரு பெண் ப‌திவ‌ரிட‌ம் விவாத‌ம் ந‌ட‌த்துகையில் ப‌திவை வெளியேற‌ வேண்டிய‌தாயிற்று, (கொடுமை அது ரொம்ப‌ சின்ன‌ விஷ‌ய‌ம்,. அத‌ற்காக‌ க‌ண்டிப்பாக‌ துளியும் வ‌ருத்த‌மில்லை). ஆரோக்கிய‌மான‌ பின்னூட்ட‌ங்க‌ள் ஒரு ப‌திவருக்கு ந‌ல்ல‌ முதிர்ச்சியையும், எழுத்து ஆர்வ‌த்தையும் த‌ரும்.

  ஆனால் ஆரோக்கிய‌ம‌ற்ற‌ பின்னூட்ட‌ங்க‌ள்?? இங்கேதான் பிர‌ச்ச‌னை ஆர‌ம்பிக்கிற‌து. பெரும்பாலும் ச‌ண்டைக‌ள் வ‌ருவ‌தற்கு கார‌ண‌ம் ஒன்று தேவையில்லாத‌ பின்னூட்ட‌மாக‌ இருக்கிற‌து, இல்லை ப‌திவ‌ரின் ஈகோவாக‌ இருக்கிற‌து. த‌வ‌றென‌த் தெரிந்தும் "ஆம் நான் சொன்ன‌து த‌ப்புதான், நான் எழுதிய‌து த‌ப்புதான்" என‌ ஒப்புக்கொள்ப‌வர்கள் க‌ம்மிதான். சில‌ பின்னூட்ட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளை ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாக்குகிற‌து. இதுவே பெண்க‌ள் எனும்போது அந்த‌ கோப‌ம் அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ளையும் தாக்கும் வாய்ப்பிருக்கிற‌து. சில‌ ப‌திவ‌ர்க‌ள் வேலை செய்ய‌முடியாம‌ல் வீட்டிற்கு வ‌ந்து பின்னூட்ட‌த்திற்கு ப‌தில் சொன்ன‌ கொடுமையெல்லாம் ந‌ட‌ந்திருக்கிற‌து. முன்பு போல் அன்னானிக‌ள் இப்போது ப‌ங்கெடுப்ப‌தில்லை. ஆனால் வித்தியாச‌மான‌ பெய‌ரில் முக‌வ‌ரியில்லாம‌ல் இப்போது அவர்க‌ள் ஆக்கிர‌மித்திருக்கிறார்க‌ள். எத‌ற்காக‌ முக‌ம் காட்ட‌ ப‌ய‌ப்ப‌டுகிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை. பின்னூட்ட‌ ச‌ண்டைகளால் துர‌திர்ஷ‌ட‌வ‌ச‌மாக‌ ந‌ல்ல‌ ப‌திவ‌ர்க‌ள் ப‌திவுல‌‌த்தை விட்டே சென்று இருக்கிறார்க‌ள்.


  சில‌ர் க‌ண்டிப்பாக‌ எல்லா பின்னூட்ட‌ங்க‌ளுக்கும் (அவை 100 இருந்தாலும்) ப‌தில் சொல்வர். ஸ்மைலிக்கு கூட‌ " ந‌ன்றி பாஸ்க‌ர்" என‌
  ப‌தில் சொல்வ‌து ஆச்ச‌ர்ய‌ம்தான். ஆனால் ந‌ன்றி வேண்டி யாரும் பின்னூட்ட‌ம் இடுவ‌தில்லை. என்னைப் பொறுத்த‌வ‌ரை ப‌தில் சொல்ல‌ப்ப‌டா பொறுப்பான‌ பின்னூட்ட‌ங்க‌ள் அவ‌மான‌மே. இன்றைக்கு ப‌திவுல‌க‌ம் இருக்கும் ஸ்டைலிற்கு இது வேலைக்கு ஆகாது என‌த்தெரியும். இருந்தாலும் ம‌ன‌ம் ஒப்புக்கொள்ள‌வில்லை.

  பின்னூட்ட‌ம் க‌ண்டிப்பாக‌ இட்டு செல்ல‌ வேண்டும் என‌ பெரும்பாலான‌ ப‌திவ‌ர்க‌ள் நேரிடையாக‌ கேட்ப‌துண்டு. என் ச‌க‌ தோழ‌ர் ப‌திவில் மிர‌ட்டியே வைத்திருப்பார்.

  ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!

  உங்கள் மனதில்பட்ட கருத்துக்களை யார்மனமும் புண்படாமல் சொல்லி ஊக்கப்படுத்தும் அன்புநெஞ்சங்களுக்கு நன்றி!

  "வ‌ந்தீங்க‌, ப‌டிச்சீங்க‌

  சும்மா பாத்துட்டு போகாதீங்க‌

  புடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க‌

  புடிக்க‌லைனாலும் எழுதுங்க‌ "

  இப்ப‌டி அழ‌கு அழ‌காய் நிறைய‌,..

  சில‌ நேர‌ங்களில் தான் வ‌ந்த‌தை வ‌ந்துவிட்ட‌தை (??) உறுதி செய்யும் வித‌மாக‌ பின்னூட்ட‌ங்க‌ள் போட‌ப்ப‌டுவ‌துண்டு. அவை பெரும்பாலும் ப‌திவிற்கும் பின்னூட்ட‌த்திற்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இருக்காது. இவை பெரும்பாலும் டெம்ப்ளெட்டில் ஏற்க‌ன‌வே டைப் செய்ய‌ப்ப‌ட்டு இட‌த்திற்கு ஏற்றார் போல் காப்பி பேஸ்ட் செய்ய‌ப்ப‌டுப‌வை.

  யாரிட‌மாவ‌து இல்லையென்றால் கீழே டெம்ப்ளெட்டை உள்ள‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ளுங்க‌ள் (ஹி ஹி ச‌மூக‌ சேவை)

  வ‌டை என‌க்கு

  க‌ல‌க்கிட்டீங்க‌ த‌ல‌

  அருமையான‌ ப‌திவு

  நச் ப‌திவு

  உள்ளேன் ஐயா

  ந‌ல்லாயிருக்கு

  வாங்க‌ த‌ல‌

  ப‌ட்டைய‌ கிள‌ப்பிட்டீங்க‌

  ப‌டிச்சுட்டு பின்னூட்ட‌ம் போடுறேன்

  இல்லையென்றால் வார‌ இறுதி நாட்க‌ளிலோ (??) இல்லை அலுவ‌ல‌க‌த்தில் நீங்க‌ள் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ டைப் அடிக்கும்போதோ கீழே க‌ண்ட‌வாறு கீபோர்டு சொத‌ப்பி விட்டு விடும்,. சாக்கிர‌தை

  ப‌டை என‌க்கு

  க‌ல‌ங்கிட்டீங்க‌ த‌ல‌

  அறுவையான‌ ப‌திவு

  நொச் ப‌திவு

  உள்ளேன் ஆயா

  நாலாயிருக்கு

  வீங்க‌ த‌ல‌

  பாடைல‌ கிள‌ம்பிட்டீங்க‌

  குடிச்சுட்டு பின்னூட்ட‌ம் போடுறேன்

  இந்த‌ மாதிரி மாத்தி எழுதினா என்ன‌வாகிற‌து?? க‌தையே க‌ந்த‌லாகிவிடும் இல்ல‌? அப்புற‌ம் என்ன‌? ப‌திவுல‌க‌ ச‌ண்டைதான்.


  உல‌க‌ அணுக்கொள்கைக‌ளை திருப்பிபோடும் ஜ‌ப்பான் அணு உலை விப‌த்துக்க‌ள்

  சுவிட்ஸ‌ர்லாந்து த‌ன் அணு உலை பணிக‌ளுக்கு த‌டா போட்டுள்ள‌து. ஜெர்ம‌னியும் நியூக்ளிய‌ர் தொழிற்சாலைக‌ள் எதிர்கால‌ம் ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டுகிற‌து.

  தைவானும் த‌ன் ப‌ங்கிற்கு அணு மின்சார‌த்தை நீக்க வ‌ழி செய்து கொண்டிருக்கிற‌து.

  டோக்கியாவில் நிக‌ழ்ந்து கொண்டிருக்கும் அணு உலை வெடிப்புக‌ள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் புதிய‌ அணு தொழிற்சாலைக‌ளுக்கு பெரிய‌ த‌டைக்க‌ல்லாய் வ‌ந்து நிற்கிற‌து.இன்னிலையில் ஜ‌ப்பானில் உள்ள‌ இன்னும் 5 அணு நிலையங்க‌ள் நெருக்க‌டி ஆப‌த்தில் உள்ள‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌ருகின்ற‌ன‌.

  ஜெர்ம‌னியின் வெளியுற‌வுத்துறை அமைச்ச‌ர் கைடோ "நாட்டின் அணுத் தொழிற்சாலைக‌ளின ஆயுட்கால‌த்தை நீட்டிக்க‌ அர‌சாங்க‌ம் ம‌றுக்க‌ வாய்ப்பிருக்கிற‌து" என்றார்.

  அமெரிக்க‌ சென‌ட் பிர‌தினிதியான‌ ஜோ புதிய‌ அணுத்தொழிற்சாலைக‌ளுக்கான‌ ப‌ணிக‌ள் த‌ற்கால‌மாய் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து என‌ சொல்லி இருக்கிறார். மேலும் அணு தொழிற்சாலை ப‌ணிக‌ள் முறையான‌தா என்று இப்போது யோசிக்க‌ வேண்டி இருக்கிற‌து என‌ ஹாங்காங் நிலைஆராய்ச்சி த‌லைவ‌ர் சீம‌ன் பால் சொல்லி இருக்கிறார்.

  கொரியாவில் உள்ள‌ முத‌ல் நிலை அதிகாரி "அணு மின்சார‌த்தொழில் ஜ‌ப்பான் நிக‌ழ்வுக‌ளால் சுருங்க‌ வாய்ப்பிருக்கிற‌து" என்றார்..


  அணு ஆலைக‌ளுக்கு எதிர்ப்புக‌ள் வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ளை விட வ‌ள‌ரும் நாடுக‌ளில் அதிக‌ம் உண‌ர‌ப்ப‌டுகிற‌து. அணு ஆலைக‌ளின் பாதுகாப்பு கோட்பாடுக‌ளை இன்னும் க‌ண்டிப்புட‌ன் ம‌று ஆய்வு செய்து ந‌டைமுறைப்ப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிற‌து. இத‌னால் காற்று போன்ற ம‌ற்ற‌ மின்சார‌ மூல‌ங்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ ஆர‌ம்பித்துள்ள‌ன‌.

  சீனா 13 ஆலைக‌ளை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிற‌து இன்னும் 12 ஆலைக‌ளை க‌ட்டிக்கொண்டு இருக்கிற‌து.ஜ‌ப்பான் நிக‌ழ்வுக‌ளை நாங்க‌ள் உண்ணிப்பாக‌ க‌வ‌னித்துக் கொண்டு இருக்கிறோம். ஜ‌ப்பான் எப்ப‌டி அதிலிருந்து மீண்டு வ‌ருகிற‌து என்ப‌தே எங்க‌ளுக்கு ஒரு பாட‌ம் என்கிற‌து சீனா. 2020ல் 100GW டார்கெட் வைத்திருந்த‌ சீனா இப்போது 70GW க்கு இற‌ங்கி வ‌ரும் என‌ தெரிகிற‌து.

  இந்திய‌ அர‌சாங்க‌மும் இப்போது ம‌ர‌பு சாரா எரிபொருட்க‌ளுக்கான‌ வ‌ழியை தேட‌ ஆர‌ம்பிக்க‌ வேண்டி இருக்கும் என‌ அணு மின்சார‌ க‌ழ‌க‌த் த‌க‌வ‌ல்க‌ள் சொல்கின்ற‌ன‌. ஆலைக‌ளை இன்னும் பாதுகாப்பான‌, ஆப‌த்தில்லாத‌ இட‌த்தில் வைக்க‌வும் , வைத்த‌தை ம‌று ஆய்வு செய்ய‌வும் வேண்டி இருக்கும் என‌ த‌லைமை ப‌த‌வியில் உள்ள‌ ரோபின்த‌ர் ச‌ச்தேவ் சொல்கிறார்.  ஆச்ச‌ர்ய‌மான‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் வேக‌வேக‌மாக‌ அணுத் தொழிற்சாலைக‌ளை க‌ட்டிக்கொண்டு இருக்கும் கொரியாவும், ஜ‌ப்பானின் நிக‌ழ்வுக‌ளை கொண்டு த‌ன் அடுத்த‌ க‌ட்ட‌ நிக‌ழ்வுக‌ளை முடிவு செய்ய‌ இருப்ப‌தாக‌ கூறுவ‌துதான்.

  இத‌ன் தாக்க‌ம் ப‌ங்கு ச‌ந்தையையும் விட‌ வில்லை. முன்ன‌ணி அணுத்தொழிற்சாலை நிறுவ‌ன‌ங்க‌ளின் ப‌ங்குக‌ள் 14.5% வ‌ரை ச‌ராலென‌ குறைந்திருக்கின்ற‌ன‌. ஆனால் ம‌ர‌பு சாரா ஆற்ற‌லை மைய‌மாய் கொண்டு செய‌ல்ப‌டும் நிறுவ‌ன‌ங்க‌ளின் ப‌ங்கு உய‌ந்திருக்கிற‌து.

  ம‌க்க‌ளுக்கு அணுத்தொழிற்சாலைக‌ளின் ஆப‌த்துக்க‌ள் இப்போது புரிய‌ ஆர‌ம்பித்து இருக்கிற‌து. அணுத்தொழிற்சாலையை பார்த்து ப‌ய‌ப்ப‌ட‌க் கார‌ண‌ம் அது புரியாத‌ புதிராக‌ இருப்ப‌தால் இருக்கலாம். அதே நேர‌த்தில் ஒரு காற்ற‌லையையோ இல்லை சூரிய‌ மின்சார‌ம் த‌யாரிக்கும் பெரிய‌ சூரிய‌ த‌க‌டுக‌ளையோ பார்த்தால் இந்த‌ ப‌ய‌ம் வ‌ர‌ வாய்ப்பில்லை,.. கார‌ண‌ம் இங்கே மின்சார‌ம் தயாரிப்பு க‌ண் முன்னே ந‌ட‌க்கிற‌து.


  க‌டைசியாக‌ என‌க்கு இதுதான் தோன்றுகிற‌து. எங்கோ கொண்டாட‌ப்ப‌டும் தீபாவ‌ளியின் ம‌த்தாப்பிற்கு சிவ‌காசியில் தீப்பிடித்து எரிந்து குழ‌ந்தைக‌ள் சாகும். ஒரு ரெண்டு நாளைக்கு அதை பேசுவார்க‌ள் அப்புற‌ம் ம‌ற‌ந்து விடுவார்க‌ள். ஜ‌ப்பான் க‌தையும் அப்ப‌டிதான் நினைக்கிறேன். துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ சிவ‌காசியையும் குட்டி ஜ‌ப்பான் என‌ சொல்லுகிறார்க‌ள்.

  மூல‌ம் khaleejtimes


  ஞாயிறு, 13 மார்ச், 2011

  விள‌ம்ப‌ர‌ங்க‌ள் - வாய் விட்டு சிரியுங்க‌ள்


  சிரிப்பை த‌ரும் பொறுப்பான‌ எச்ச‌ரிக்கை விள‌ம்ப‌ர‌ம்
  எச்ச‌ரிக்கை சாமியார்க‌ளை ந‌ம்பாதீர்க‌ள் (பெய‌ர் புராண‌ம் சூப்ப‌ர்ல‌)
  மிக‌ அதிக‌ செல‌வில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விள‌ம்ப‌ர‌ம் (முடிந்தால் head phoneல் கேளுங்க‌ள்,.. அருமையான‌ இசை சேர்ப்பு)

  எச்ச‌ரிக்கை : பெண்க‌ளை ந‌ம்பாதே க‌ண்க‌ளே பெண்க‌ளை ந‌ம்பாதே

  வாய் விட்டு சிரிச்சாச்சா? ரைட்டு என‌க்கும் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

  .

  சனி, 12 மார்ச், 2011

  ந‌ம் அணு உலைக‌ள் எந்த‌ அள‌விற்கு பாதுகாப்பான‌வை??

  ந‌ம் அணு உலைக‌ள் எந்த‌ அள‌விற்கு பாதுகாப்பான‌வை???

  ந‌ம் அணு உலைக‌ள் பாதுகாப்பாக‌ இருக்கின்ற‌ன‌ என‌ அணு ஆற்ற‌ல் முறைப்ப‌டுத்தும் க‌ழ‌க‌ த‌லைவ‌ர் atomic energy regulatory board (AERB) பார்த்த‌சார‌தி இன்றைக்கு சொல்லி இருக்கிறார்.

  "ந‌ம் அணு உலைக‌ள் 8.9 ரிக்ட‌ர் அள‌விற்கு தாங்கும் என‌ உறுதியாக‌ சொல்ல‌ முடியாது. ந‌ம் அணு உலைக‌ளின் ஸ்திர‌த்த‌ன்மை ப‌ற்றி க‌ழ‌க‌ம் மீண்டும் ஆய்வு செய்யும். 2001ல் 7.7 ரிக்ட‌ர் பூக‌ம்ப‌ அள‌வை குஜ‌ராத் அனுப‌வித்த‌போது ந‌ம் அணு உலைக‌ள் பாதுகாப்பாக‌த்தான் இருந்த‌ன‌. மேலும் இந்தியாவில் உள்ள‌ அணு உலைக‌ளில் 8.9 ரிக்ட‌ர் அள‌விற்கு நில‌ ந‌டுக்க‌ம் வ‌ரும் என‌ எதிர்பார்க்க‌ முடியாது. கார‌ண‌ம் இந்தியாவில் இம‌ய‌ம‌லை ப‌குதிக‌ள் ம‌ட்டுமே அதிநில‌ந‌டுக்க‌ப் ப‌குதிக‌ளில் வ‌ருகிற‌து. ம‌ற்ற‌ப‌டி ந‌ம் அணு உலைக‌ள் இருக்கும் இட‌ங்க‌ள் பூக‌ம்ப‌ம் தாக்குவ‌த‌ற்கு வாய்ப்பு குறைந்த‌ ப‌குதிக‌ள்தான்.

  பூக‌ம்ப‌ அடிப்ப‌டையில் இந்தியாவையும் ஜ‌ப்பானையும் தொட‌ர்புப‌டுத்தி ப‌ய‌ம் கொள்ள‌ அவ‌சிய‌ம் இல்லை. கார‌ண‌ம் ஜ‌ப்பான் அதிநில‌ந‌டுக்க‌ப் ப‌குதியில் இருக்கிற‌து."

  இன்று ஜ‌ப்பானில் ந‌ட‌ந்த‌ அணு உலை வெடிப்பு.  உண்மைதான். இந்தியாவையும் ஜ‌ப்பானையும் நில‌ ந‌டுக்க‌ வாய்ப்புக‌ளில் ஒரே வகையில் சேர்க்க‌ முடியாது. இந்தியாவின் மொத்த‌ மின் தேவையில் 4% ம‌ட்டுமே அணு உலைக‌ளில் இருந்து பெற‌ப்ப‌டுகிற‌து. ஆனால் ஜ‌ப்பானில் அணு உலைக‌ள் அதிக‌ம். ஜ‌ப்பானின் மொத்த‌ மின் தேவையில் 34% அணு உலைக‌ளில் இருந்து பெற‌ப்ப‌டுகிற‌து.

  ந‌ம் நாட்டில் உள்ள‌ பிரச்ச‌னை ம‌க்க‌ள் நெருக்க‌ம். க‌ல்பாக்க‌த்திலியோ இல்லை கூடாங்குள‌த்திலியோ பாதிப்புக‌ள் ஏற்ப‌ட்டால் அத‌ன் பின் விளைவுக‌ள் மிக‌ மோச‌மான‌தாக‌ இருக்கும். கார‌ண‌ம் சுனாமியினால் அந்த‌ த‌லைமுறையின் வாழ்க்கை ம‌ட்டுமே பாதிக்க‌ப்ப‌டும். ஆனால் அணு உலையின் பாதிப்புக‌ள் ப‌ல‌ த‌லைமுறைகளை பாதிக்கும்.அணு உலைக‌ளின் விப‌த்துக‌ள் அணு குண்டுக‌ளைவிட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌வை.

  உதார‌ண‌மாக‌ செர்னோபிலில் 1986ல் ஏப்ர‌ல் 26 நிக‌ழ்ந்த‌ அந்த‌ அணு உலை விப‌த்து மிக‌ மோச‌மான‌து. த‌குதி குறைந்த‌ ஆட்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஆலை வெடித்த போது ஜ‌ப்பான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட‌ போது வ‌ந்த‌ க‌திர்வீச்சைவிட‌ 400 ம‌ட‌ங்கு அதிக‌ம் வெளிப்ப‌ட்ட‌து. இது கிட்ட‌த்த‌ட்ட‌ 20 அணு குண்டுக‌ளை போட்டால் வ‌ரும் பாதிப்பிற்கு ச‌ம‌ம்.

  இந்த‌ க‌ட்டுரையின் நோக்க‌ம் நாம் பாதுகாப்பாக‌ இல்லை முடிவு செய்து அனைவ‌ரையும் ப‌ய‌முறுத்த‌ அல்ல‌. அணு உலைக‌ள் எந்த அள‌விற்கு ஆப‌த்தான‌வை எனச் சொல்ல‌வே இந்த‌ ப‌திவு. ந‌ம் தொழிற்சாலைக‌ளில் பாதுகாப்பிற்கு என்ன‌ விலை என்ன‌வென்று அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே. ம‌ற்ற‌ தொழிற்சாலைக‌ளில் ந‌ட‌க்கும் விப‌த்தைப் போல‌ அணுமின் உற்ப‌த்தி நிலைய‌ங்க‌ளையும் சேர்த்துக்கொள்ள‌ முடியாது.

  ஊழ‌ல் ம‌ழிந்துள்ள‌ அர‌சு நிர்வாக‌ம், க‌வ‌லைப்ப‌டாம‌ல் நிர்வ‌கிக்க‌ப்ப‌டும் ஆப‌த்து & பாதுகாப்பு கோட்பாடுக‌ள் (Hazardous & safety Law) போன்ற‌வை நம் ம‌க்க‌ளின் வாழ்க்கை ஸ்திரத்த‌ன்மையை கேள்விக்குறியாக்குகின்ற‌ன‌. ஏனெனில் ந‌ம் அர‌சாங்க‌மும், ம‌க்க‌ளும் ஒரு இந்திய‌ப்பிர‌ஜையின் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை ஒண்ணுமே (Zero) இல்லைதான் என‌ சொல்ல‌ வேண்டும். என‌வே எல்லாம் ந‌ல்ல‌ப‌டியே ந‌ட‌க்கும் என‌ வாழ்க்கையை பாஸிட்டாவாக‌ எடுத்து போய்க்கொண்டிருப்போம்.


  .

  இன்னோரு கைக‌ளிலே, நான் யார் யார் நானா,..?

  ம‌ன‌து வ‌லிக்கும் சில‌ நேர‌ங்க‌ளில் ந‌ல்ல‌ பாட‌ல்க‌ள் ம‌ருந்தாகி விட்டு போகும். பாட‌ல்க‌ள் ப‌ல‌ வித‌ம்,. ந‌ல்ல‌ வ‌ரிக‌ளாக‌ இருக்கும்,.. இசை இருக்காது,. இசை இருக்கும் ஆனால் வ‌ரிக‌ள் சுமாராக‌ இருக்கும்,.. இவை எல்லாம் சேர்ந்து இருக்கும் போது பாட‌ல் மிக‌ மோச‌மாக‌ ப‌ட‌மாகி இருக்கும் ( ந‌ல்ல‌ உதார‌ண‌ம் : பூங்காற்றிலே உன் சுவாச‌த்தை (உயிரே), ப‌ற‌வையே எங்கு இருக்கிறாய் (த‌மிழ் MA). ஒரு சில‌ பாட‌ல்க‌ளில் மிக‌ அழ‌காக‌ அனைத்தும் சேர்ந்து இருக்கும். அது போன்ற‌ பாட‌ல்க‌ள் எத்த‌னை ஆண்டுக‌ள் க‌ழித்தாலும் நிலைத்து நிற்கும். பாட்டிற்கு மிக‌ முக்கிய‌ம் அத‌ன் வ‌ரிக‌ள். என்ன‌தான் இளைய‌ராஜா பாட‌ல்க‌ள் சூப்ப‌ர் என்றாலும் இன்னும் கேட்க‌ மிக‌ இனிமையாக‌ இருப்ப‌வை அவ‌ர் வைர‌முத்துவுட‌ன் இணைந்து ந‌ம‌க்கு த‌ந்த‌வையே. இளைய‌ராஜாவிற்கே பாட‌ல் வ‌ரிக‌ள் தேவைப்ப‌டும் போது இப்போது இருக்கிற‌ இசை அமைப்பாள‌ர்களுக்கு?? சொல்ல‌ தேவையில்லை.

  பாட‌லாசிரிய‌ர் : க‌ண்ண‌தாச‌ன்
  பாட‌ல்:சொன்ன‌து நீதானா?
  ப‌ட‌ம் : நெஞ்சில் ஒரு ஆல‌ய‌ம்
  பாடிய‌வ‌ர் : சுசீலா
  இசை : விஸ்வ‌ நாத‌ன்.
  பாட‌லின் க‌ரு : காத‌ல் தோல்வி (ரொம்ப‌ சிம்பிள்ளாக‌ எழுதிவிட்டேன்,.. காத‌ல் தோல்வி என்ப‌து எழுத்தில் கொண்டு வ‌ர‌முடியாத‌து,.. இல்லை என‌க்கு எழுத‌ தெரிய‌வில்லை என‌வும் சொல்ல‌லாம்)

  இந்த‌ பாட‌ல் மிக‌ ப‌ழைய‌ பாட‌ல் என்றாலும் என‌க்கு மிக‌ பிடித்த‌ பாட‌ல், சுசீலாஅருமையாக‌ ர‌சித்துப்பாடிய‌ குர‌லில் க‌ண்ண‌தாச‌னின் மிக‌ அட்ட‌காச‌மான‌‌ பாட‌ல் வ‌ரிக‌ள். பாட‌லில் கேம‌ரா மிக‌ அருமை. தொழில் நுட்ப‌ இல்லாத‌ நாட்க‌ளில் முத்துராம‌ன் த‌லையில் ஆர‌ம்பிக்கிற‌ கேம‌ரா க‌ட்டிலின் கீழே ப‌ய‌ணித்து வீணைக்கு மேலே சென்று முடியும்

  *இன்னோரு கைக‌ளிலே, நான் யார் யார் நானா?? எனை ம‌ற‌ந்தாயா? ஏன் ஏன் என்னுயிரே*

  *தெய்வ‌த்தில் சூடிய‌ மாலை தெருவினிலே விழ‌லாமா? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொட‌லாமா?

  *ஒரு கொடியில் ஒரு முறைதான் ம‌ல‌ரும் ம‌ல‌ர‌ல்ல‌வா, ஒரு ம‌ன‌தில் ஒரு முறைதான் வ‌ள‌ரும் உற‌வ‌ல்ல‌வா,*

  பாட‌லாசிரிய‌ர் : நா. முத்துக்குமார்

  பாட‌ல் : அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை

  ப‌ட‌ம் : அங்காடித்தெரு

  பாடிய‌வ‌ர் : Vineeth Sreenivasan, Ranjith

  இசை : G. V. Prakash Kumar

  பாட‌லின் க‌ரு : காத‌லை அனுப‌விக்க‌ ஆர‌ம்பித்த‌ல்,..(ம‌ன‌சு பட்டாம் பூச்சி போல‌ ப‌ற‌க்கும் என‌ சொல்லுவார்க‌ள்,. இது காத‌லிப்ப‌வ‌ருக்குதான் பொருந்தும் என்றில்லை,..பெற்றோர் பார்த்து வைக்கும் திரும‌ண‌ம் என்றாலும் பொண்ணு பார்த்த‌வுட‌ன் ஆர‌ம்பித்துவிடும் ‍ உங்க‌ளுக்கு பொண்ணு உண்மையிலேயே பிடித்து இருந்தால்)

  க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌மாக‌ முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாட‌ல் (என்ன‌வோ இந்த‌ பாட‌ல் என் ம‌க‌னிற்கும் பிடிக்கிற‌து). பாட‌லில் ப‌ல‌ பாஸிட்டிவான‌ விஷ‌ய‌ங்க‌ள்,. எளிமையான‌ அஞ்ச‌லியிட‌ம் கொட்டிக்கிட‌க்கும் அழ‌கும் ந‌டிப்பும்,. எளிமையான‌ ஆனால் உறுதியான‌ பாட‌ல் வ‌ரிக‌ள், செட்டிங் என்றாலும் அழ‌காக‌ பாட‌லை கொண்டு செல்லும் கேம‌ரா, சின்ன‌ சின்ன‌ ர‌ச‌னையான‌ காட்சிய‌மைப்புக‌ள் (சாப்பிடும் போது முதுகு உர‌சிக் கொள்ளுவ‌து, சாப்பிடும் போது பெரிய்ய்ய்ய‌ தொப்பையுட‌ன் ந‌ட‌ந்து வ‌ரும் ச‌மைய‌ல்கார‌ர், ம‌ர‌ ஸ்கேலில் காத‌லை சொல்லுவ‌து,..)

  *அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை, அவ‌ளுக்கு இணை யாருமில்லை"

  "அவ‌ள் உடுத்தும் உடைக‌ள் பிடிக்க‌வில்லை, இருந்தும் க‌வ‌னிக்க‌ ம‌ற‌க்க‌வில்லை*

  *அவ‌ள் கூந்த‌ல் ஒண்ணும் நீள‌மில்லை, அந்த‌ காட்டில் தொலைந்தேன் மீள‌வில்லை"

  *அவ‌ள் கைக‌ள் மோதிர‌ம் த‌ங்க‌மில்லை,. கை பிடித்திடும் ஆசை தூங்க‌வில்லை,. அவ‌ள் சொந்த‌மின்றி ஏதுமில்லை, என‌க்கு எதுவுமில்லை"‌

  *அவ‌ள் வாச‌ம், ரோஜா வாச‌மில்லை, அவ‌ளில்லாம‌ல் சுவாச‌மில்லை,. அவ‌ள் சொந்த‌மின்றி ஏதுமில்லை, என‌க்கு எதுவுமில்லை"‌  அடுத்த‌வார‌ம் வைர‌முத்து, ம‌ற்றும் க‌ர‌டிகுட்டி என‌ கேலி செய்ய‌ப்ப‌டும் ராஜேந்த‌ரின் பாட‌ல் வ‌ரிக‌ள்,..


  .

  வெள்ளி, 4 மார்ச், 2011

  ப‌திவுல‌க‌ம்,.. புன்ன‌கைக்க‌ ம‌ட்டும்,.

  ந‌ம்ம‌ இந்திய‌ ஆண்க‌ள் ஏன் இப்ப‌டி இருக்காங்க‌ ?????


  ஒரே நேர‌த்த‌ல‌ நிறைய‌ ப‌திவுக‌ள் போட்டா இப்ப‌டிதான்  ஹிட்லிஸ்டில் வ‌ர்ர‌துக்கெல்லாம் ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌ட‌ணும்  பின்னூட்ட‌ங்க‌ள் நிறைய‌ இருக்குன்னு ஏமாந்திராதிங்க‌,.. நெக‌டிவ் ஓட்டும் விழ‌ வாய்ப்பிருக்கு  எச்ச‌ரிக்கை,.. நீங்க‌ள் காவ‌ல்துறையால் க‌வ‌னிக்க‌ப்ப‌டுகிறீர்க‌ள்
  புலிக‌ள் எந்த‌ ரூப‌த்தில் இருந்தாலும் கொல்வோம் என‌ இல‌ங்கை ராணுவ‌ம் சொல்வ‌தையெல்லாம் க‌ண்டுக்காதீங்க‌,.. இல‌ங்கை ராணுவ‌த்திற்கு எதிராக‌ உங்க‌ள் குர‌லை உய‌ர்த்திக்கொண்டே இருங்க‌ள்  ப‌திவுல‌க‌ ச‌ண்டைக‌ளில் தேவையில்லாம‌ல் மாட்டீக்காதீங்க‌
  வார‌ இறுதி நாட்க‌ளில் க‌ண்டிப்பாக‌ ப‌திவு போடாதீங்க‌,..ப‌டிக்கிற‌ ஆட்க‌ள் ரொம்ப‌ க‌ம்மியா இருக்காங்க‌,..
  எங்கே போனாலும் ஒரு சில‌ ஆண்ப‌திவ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு இம்சையை கொடுப்பார்க‌ள்  தொழில்னுட்ப‌ ப‌திவுக‌ள் புதுமையாக‌ லேட்ட‌ஸ்டாக‌ இருக்க‌ கூகுலாண்ட‌வ‌ரை அணுக‌வும்  சினிமா ச‌ம்ப‌ந்த‌மாக‌ எழுதுவ‌தால் நிறைய‌ பேர் உங்க‌ ப‌திவை பார்க்கிறார்க‌ள் (உங்க‌ள் க‌ற்ப‌னைக்கு அள‌வே இல்லை தியேட்ட‌ர்கார‌ர்க‌ளே,.. பொங்குக‌ உங்க‌ள் க‌லை சேவை, ம‌ற‌க்காமால் ந‌மீதா போஸை பார்க்க‌வும்)

  மிக‌ முக்கிய‌மாக‌ அலுவ‌ல‌க‌ நேர‌ங்க‌ளில் ப‌திவுல‌க‌த்திலேயே முழுக்க‌ முழுக்க‌

  செல‌வ‌ழிக்காதீர்க‌ள்,. இல்லையென்றால் க‌டைசியில் ந‌ம் க‌தி இதுதான்,.
  தேவையில்லாம‌ல் உங்க‌ள் ப‌திவை ரொம்ப‌ விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்தாங்க‌, அது ஆப‌த்தில் முடியும்
  ப‌திவு பிடித்திருந்தால் த‌மிழீஷிலும், த‌மிழ்ம‌ண‌த்திலும் ஒரு ஓட்டு.

  .