வியாழன், 31 டிசம்பர், 2009

த்த்த்த்த்த்தூ,...

  1. உங்களில் எத்தனை பேர் குரானையும், பகவத்கீதையும் முழுமையாக படித்திருக்கீர்கள்? முழுமையாக படிக்காத, அறியாத ஒன்றைப்பற்றி பேச,எழுத நமக்கு என்ன யோக்யதை இருக்கிறது?
  2. நமக்கு நம் அப்பாவை தெரியும்,தாத்தாவை தெரியும், கொள்ளுத்தாத்தவை தெரியும் இல்லை அதிகபட்சம் கொள்ளுத்தாத்தவின் கொள்ளுத்தாத்தாவை தெரியும். ஒரு நூற்றாண்டு கால மூதையாரின் சரித்திரம் மட்டுமே தெரியும். அதற்கு முன்? நம் மூதையாரின் சரித்திரமே நமக்கு சரியாக தெரியாது. எப்போதோ தோன்றிய பகவத்கீதையையும், எங்கேயோ தோன்றிய குரானையும் என்ன முழுசாக தெரியும்? இல்லை தெரிந்தால்தான் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கப்போகிறது? இங்கே பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கே ரெண்டு பெண்டாட்டிகாரர். நாம் தினமும் வணங்கும் சாமியிலியே இத்தனை முரண்பாடுகள். எங்கோ யாரால் எப்போதோ எழுதப்பட்ட பகவத்கீதையிலும், குரானிலும் எந்த அளவிற்கு உண்மை தொடர்ந்து வந்து இருக்கப்போகிறது?
  3. இந்து, இந்து என கூச்சலிடும் கூட்டம் திருச்சி லால்குடியில் இரு தலித்கள் தங்கள் மலத்தை மாற்றி மாற்றி தின்ன வேண்டும் என பஞ்சாயத்து சொன்ன போது எங்கே போயின? (ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா). சரி விடுங்கள், தாங்கள் ஒதுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்கள், சிறுபான்மையினரின் சொந்தக்காரர்கள் இங்கே உருகி கொண்டிருக்கிற கம்னியூஷ்டகள் எங்கே போயின?
  4. 1925 ஆண்டு வரை கல்கத்தா டெல்லிக்கு அடுத்த மிகமுக்கிய நகரம். ஆனால் இன்றைக்கு?? எந்த கம்பேனி அங்கே வருகிறது? என்ன தொழில் வளர்ச்சி அங்கே இருக்கிறது? சிங்கூர் கலவரத்தில் எத்தனை விவசாயிகள் கொல்லப்பட்டனர்? 40 ஆண்டுகாலம், முழுக்க முழுக்க தங்கள் ஆட்சியில் ஒரு மண்ணங்கட்டியையும் வைக்காத, ஒரு மானிலத்திற்கு எந்த முன்னேற்றத்தையும் தராத இந்த கம்னியூஷ்டகள் நாட்டின் வளர்ச்சி பற்றி, பாதுகாப்பு பற்றி, மக்களின் வாழ்க்கைதரம் பற்றி பேச என்ன துப்பு இருக்கிறது?
  5. இங்கே மற்ற மதத்தினற்கு அளிக்கும் சுதந்திரம், பேச்சுரிமை மற்ற நாடுகளில் இருக்கிறதா? இல்லை, முஸ்லீம் நாடுகளில் வேலை பார்க்கும் நம் முஸ்லீம் சகோதரர்களை சமமாக, அவரும் நம்ம இனம் என்ற பாவிக்கிற எண்ணமாவது வெளினாட்டு இஸ்லாமிர்களுக்கு இருக்கிறதா? இல்லவே இல்லை. அவர்களை பொறுத்தவரை, இவன் இந்தியன், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்றுதான் பிரிக்கிறார்கள். இது ஏன் நம்மவர்களுக்கு புரியவில்லை?
  6. ஏர்வாடியில் மனம் குன்றியவர்கள் தீயுடன் எரிக்கப்பட்டபோது வராத போபம், பச்சிளங்குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் எரிக்கப்பட்ட போது வராத கோபம், மகாமகத்தில் குவியல் குவியலாக செத்தபோது வராத போபம், அமைச்சர் 50000ஆயிரம் கோடி அமுக்கியபோது வராத கோபம், பக்கத்து தேசத்தில் மக்கள் செத்து குவியல் குவியலாக புதைக்கப்பட்டபோது வராத போபம், ஒத்த ஜீன் கள் கம்பிகளுக்குள் கற்பழிக்கப்பட்டபோது வராத போபம், சோறில்லாத ஜன நாயக நாட்டின் மானில ஆளுனர் 87 வயது சல்லாபத்தில் வராத கோபம்,தண்டமாய்ப் போன வேட்டைகாரனுக்கும், பாலாய்போன நற்குடிக்கும், ஒண்ணுமில்லா திருனீருக்கும் வந்து தொலைக்கிறது,...


த்த்த்த்த்த்தூ,... வானத்தை நோக்கிதான் உமிழ வேண்டி இருக்கிறது.


.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

எனக்கு 18 உனக்கு 20

அப்பாடா, ஊருக்கு கிளம்பியாச்சு. ரயிலை சரியா எடுத்திருவான், ஒரு வழியா கிண்டியில் மின்சார ரயிலை புடிச்சு உட்கார்ந்தாச்சு. 6 மாசத்துக்கு அப்புறம் முதல் வருட எக்ஸாம் முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறேன். எல்லா எக்ஸாமும் ரொம்பவே கஷ்டம். இத்தனைக்கும் அந்த கெமிஸ்ட்ரி இருக்கே (படிச்சாதானே),.. ராத்திரி முழுக்க கண் முழிச்சு 5-6 புக் புரட்டி பார்த்து நோட்ஸ் எடுத்து, காலைல ஹால்ல போய் உட்கார்ந்தா 20 பிட்டுல ரெண்டுதான் வருது. அந்த பிட்டு எங்கே இருக்குன்னு index பிட்டுல பார்த்து, அதை தேடி எடுத்து, அதை பேப்பர்க்கடியில மறைச்சு வச்சு, பயந்து பயந்து காப்பியடிச்சு ஸ்ஸ்ஸ்ஸ்,.. போதுமடா சாமி கடைசி டைம்ல கஷ்டப்பட்டது. அடுத்த எஃஸாமுக்காவது ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரெடி பண்ணிரணும்,.. பேப்பர் சேஸ் பண்ண ஒரு சரியான ஆளை,.எக்மோர் வந்துவிட்டிருந்தது.



ம்ம்ம்ம்,.. பார்க்கலாம்,.ஃபிகர் ஏதாச்சும் நம்ம பக்கத்துல உட்காருதான்னு. அந்த "எனக்கு 20 உனக்கு 18" படம் பார்த்ததிலிருந்து மனசுல ஒரு ஆசை, ஒரு ஏக்கம் ரயில்ல நம்ம பக்கத்துல த்ரிஷா மாதிரி யாராச்சும் உட்கார்லேனாலும் பரவாயில்லை. அந்த பட செகண்ட் ஹீரோயின் ஷ்ரேயா மாதிரியாச்சும் ஒரு ஆள் பக்கத்துல உட்காரணும். த்ரிலிங்காக passangers chart பாத்தேன். ஆஆஆஆஆஆஆ,.. ஒண்ணுமே இல்ல,.. என்ன பண்றது,. பக்கத்துல பாத்தா எல்லாம் 35 வயசுல இருக்குற பொம்பளைங்களா இருக்காங்க, ம்ம்ம்ம். முழுசாக பார்த்தேன். 23 வது சீட்டில் வைசாலி, வயது 20, திருச்சி என போட்டிருந்தது,.ம்ம்ம்க்கும் அதுவும் அக்காவா?? சரி,.. நொந்து போய் சீட்டிற்கு போனேன்.



பெரும் அதிர்ச்சி. சும்மா தேவதை மாதிரி தகதகன்னு,. அப்படியே ஷாக்காய்ட்டேன்,. அவள் அழகில் மட்டுமல்ல, என் சீட்டில் வேறு உட்கார்ந்து இருந்தாள். கடவுளே, எனக்கு ஏற்கனவே பொண்ணுங்கள்ட்ட பேச வராது,..(அட நம்புக்கப்பா,...),.. இவள்ட்ட இங்கிலீஸ்ல வேற பேசணும் போல இருக்கே,..ம்ம்ம்ம் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே
"நீங்க இங்க உட்கார்ந்துக்கிறீங்களா?,. நான் முன்னாடியே இறங்கணும்"
"வேர்,. (அதாம்பா where?)
"jdjsc ncnnclnci ncojcnpjc nicbincn nicnicn oijdnbdvbbzzjcbb znxbcubdc"
"பர்டன்" (burden இல்ல pardon )
"ஸ்ரீ ரங்கம்"
டேய் உனக்கு தேவையா? மனசிற்குள் கோபம் வந்தாலும் அவள் அழகில் அமைதியா போய்ட்டேன்.



ட்ரெய்ன் செங்கல்பட்டை ஒட்டி வந்து கொண்டி இருந்தது. செங்கல்பட்டு ஏரியின் நீர் வாசனையை தூக்கி சாப்பிடுவதுபோல் ஒரு வாசனை. ஆஆஆ,.. ஒரு வெண்ணெய் தயிர் சாதம் சாப்பிடுகிறது! (கவனிக்க ஆச்சர்யகுறி). கூட மசால்வடை வேறு, எனக்கு நல்லா பசியை கிளப்பிவிட்டுறுச்சு. பசியினால் என் கவனம் வெண்ணெயிலிருந்து தயிர்சாதத்திற்கு மாறியதை கவனித்துவிட்டாள் போல,..

"சாப்பிடுறீங்களா???" (கவனிக்க சாப்பிடுங்க இல்ல, சாப்பிடுறீங்களா???)
"இல்ல செங்கல்பட்டில்தான் எப்பவும் சாப்பிடுவேன்,.."( எப்பூடி???)
எழுந்தேன்,.
"எக்ஸ்கிஸ்மீ"
",...."
"இந்த வாட்டர்கேன்ல தண்ணீ புடிச்சு தர்ரீங்களா"
இறங்கி எனக்கு ஒரு புளி சாதம் வாங்கிவிட்டு, அவளிற்கு தண்ணீர் பிடித்துவிட்டு மேலே ஏற வண்டி நகர ஆரம்பித்திருந்தது.
"தாங்க்ஸ்"
இடத்தில் அமர்ந்தேன். பொட்டலத்தை பிரித்தேன். பக்கத்தில் இருந்த மசால் வடையின் வாசத்தில் புளி சாதம் சாப்பிட ஆரம்பித்தேன்.
"என்ன இது, எலுமிச்சை சாதமா?" (அடிப்பாவி, மஞ்சளாயிருக்கிற எல்லாமே எழுமிச்சை சாதமா?)
"இல்ல, புளி சாதம்"
"எவ்ளோ"
"5 ரூபாய்"
"5 ரூபாய்க்கு சாதமெல்லாம் கிடைக்கிதா?" (நற,. நற)
"வடை சாப்பிடுங்க"
"இல்ல இருக்கட்டும்"
"பரவாயில்ல, எப்டி தனியா சாதம் மட்டும் சாப்பிடுவீங்க"
"இல்ல்ல,. இருக்கட்டும்"
"அட சாப்பிடுங்க"
வடையில் பாதி வாயில் போய்விட்டிருந்தது,..


கொஞ்சம் கொஞ்சமாக சம்பாஷணைகள் ஆரம்பித்து விட்டுருந்தன. நிறைய பேசினாள். உண்மையில் அவளிடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. விழுப்புரம் வந்துவிட்டது.

"ஏதும் வேணுமா?"
"எனக்கு ஒரு காபி"
"வேற?
"இல்ல, போதும்"
நான் போய் காபியும், சூடாய் போட்ட மசால்வடையும் வாங்கிவந்தேன்.

"என்ன ஜோதி, நான் சாப்பிடும்போது தந்த வடைக்கு கணக்கு தீர்க்குறீயா?"
"ச்சீ,.. சூடா இருந்துச்சு, அதான் வாங்கிட்டு வந்தேன், வேணாம்னா, பரவாயில்ல, நானே சாப்பிட்டுறேன்"
"அடப்பாவி, ஒரு பேச்சுக்கு சொன்னா நீயே அமுக்குறீயா, கொண்டா"

எங்கள் பேச்சுக்களை, செயல்களை பக்கத்தில் இருப்பவர்கள் கவனிப்பது நன்றாக தெரிந்தது. இருந்தாலும் அது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தொணதொணவென் அவள் பேசும் அழகு, அவளின் அழகை விட எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
ஆனால் அவள் அப்படி, இப்படி நகரவேயில்லை. நகை ஏதாச்சும் வெச்சுருப்பாளோ??
பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன,..

"நீ யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கியா"
"ச்சீ,இல்ல"
"என்னை ராக்கிங்க்ல, இந்த கேள்விதான் கேட்டாங்க"
"ம்ம்"
"ஆனா, பக்கத்துல இருக்கிறவன் இவளயெல்லாம் எவன் லவ் பண்ணுவான்னு வெறுப்பேத்தி அனுப்பி விட்டுட்டான்,.. வெறுப்பாகி அதிலிருந்து எனக்கு அந்த எண்ணமே வர்ரதில்ல"
"ஏன்"
"உனக்கு புரியாது, வேணாம், வேற ஏதாச்சும் பேசு"
பேச்சுக்கள் போய்க்கொண்டே இருந்தன. .

பக்கத்தின் இருப்பவர்களின் காதுகள் எங்களையே கவனிப்பது நன் கு தெரிந்தது. அவள் கண் மூட ஆரம்பித்தாள். நான் அவள் அழகை ரசிக்க ஆரம்பித்தேன். காற்றின் விசையில் அவள் கூந்தல் என் மீது வீசிக்கொண்டு இருந்தது. நான் அவளிடம் சரணடைந்து கொண்டிருந்தேன் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது.



"ஸ்ரீ ரங்கம் வந்திருச்சு"
"ம்ம்ம்ம்"
"வண்டி நிக்கட்டும்"
"என் பேக்கை எடுத்து பிளாட்பாரத்துல தர்ரியா"
"ம்ம்ம்ம். சரி"
எழுந்தாள். ஒரு மாதிரி சாய்ந்தாள்,.முட்டியில் கைவைத்தாள்,..
ஒண்ணும் புரியவில்லை,. சில நொடிகளில்,..
"கடவுளே, இவள் ஊனமா?" எனக்கு நெஞ்சடைத்துவிட்டது. சுதாரித்து விட்டு ப்ளாட்பாரத்தில் பேகை கொடுத்தேன்.அவளிடம் சின்ன புன்முறுவல் கூட இல்லை.

"bye"

மெலே ஏறி ஜன்னலோரம் உட்கார்ந்தேன்.

சூரியன் சாய ஆரம்பித்துவிட்டான். காவிரி ஆறு வற்றிவிட்டிருந்தது.


வெள்ளி, 25 டிசம்பர், 2009

எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது - II

சில நேரங்களில் இயற்கை சுவாரஸ்யமான பல தகவல்களை நமக்கு விட்டு செல்கிறது. இதே போல ஒரு பதிவை நாம் ஏற்கனவே பார்த்தாச்சு. இது இரண்டாம் பகுதி


டால்பின்கள் ஒரு கண்ணை திறந்து கொண்டே தூங்கும்.(நான் ஒரு வாயை திறந்துகொண்டே தூங்குவது வழக்கம்)

நிலத்தில் மைல் என்பது 6080 அடி. கடல் நீரில் (நாட்டிகள் மைல்) 6280 அடி. (மைலும்,அடியுமே குழப்பம், இதில் இன்னும் வேற,..)


ஜெல்லி மீன்களில் 95% தண்ணீர். தோராயமாக ஒரு மனிதனின் உடலில் 66% பங்கு நீர். (நமக்கு தெரிந்த ஒரே தண்ணி,..வுவாக்க்க்க்க் தண்ணி,..)

போலார் கரடிகள் இடதுகை பழக்கமானவை.(இடது கைகள் ஆட்களை பார்த்திருக்கேன் ஆனால் போலார் கரடிகளை பார்த்தது இல்லை,நீங்க யாராவது??)

நத்தைகள் தொடர்ந்து முன்று வருடம் தூங்ககூடும். எறும்புகள் சுத்தமாக தூங்குவதில்லை. (எங்க ஆபீஸ்ல எறும்பு மாதிரி வேல பாக்க சொல்றாய்ங்க, ஆனா எனக்கு நத்தை மாதிரி இருக்க ஆசை,..)

ஹம்மிங்க் பறவைகள் என்ற ஒரே பறவையினம் மட்டுமே பின்னோக்கி பறக்கும். கங்காரு மட்டும் பின்னோக்கி நடக்க முடியாது.(காரணம் எனக்கு தெரியும் கங்காருக்கு முன்னோக்கி வைத்த காலை பின்னோக்கி வைக்க பிடிக்காது)

கையின் முட்டிகளை நாக்கால் தொடுவது நடக்காது ஆனால் ஒரு சிலர் இதிலும் வெற்றி பெற்று உள்ளனர்.(என் பையன் நாக்கால் மூக்கை தொடுவான்)



கண்களை திறந்துகொண்டே தும்முவது என்பது நடக்காத காரியம். (தும்மிக்கொண்டே கண்களை திறக்க முடியுமா??? ம்ம்ம்,.இப்படியெல்லாம் யோசிக்க கூடாது, மூளை வேஸ்டாகுதுல்ல??)

லட்சக்கணக்கான மரங்கள் அணிலால் நடப்படுகின்றன. பழங்களை, விதைகளை அவசரத்தில் புதைத்துவிட்டு பின் மறந்துவிடுவது அவைகளின் வழக்கம். (லட்சக்கணக்கான மரங்கள் அரசாங்கத்தால் வெட்டப்படுகின்றன. மரங்களை அவசரத்தில் வெட்டிவிட்டு பின் வெட்டப்பட்ட மரங்களை மறந்துவிடுவது அவர்களின் வழக்கம்)

போரில் இறந்த ராணுவ அதிகரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது ஜப்பானின் வழக்கம்.(1956ல செத்தஅம்பேத்காருக்கு 1990ல நாம் கொடுக்குற பாரத ரத்னா மாதிரி இல்லாம இருக்கணும் ,..)

டெலிபோனை கண்டுபிடித்த கிரகாம்பெல் மனைவிக்கோ, மாமியாருக்கோ போன் பண்ணியதில்லை. காரணம் அவர்கள் காதுகேளாதவர்கள்.(ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம்)

பூமியின் சுழலும் வேகம் குறைவதால் இன்னும் மில்லியன் ஆண்டுகளில் லீப் வருடம் இருக்காது. (எல்லாம் சரி. பூமி இருக்குமா??? நல்லா பண்றாய்ங்க ஆராய்ச்சி,..)

நன்றி: http://didyouknow.org/fastfacts/

சுவாரஸ்யங்கள் தொடரும்,..

ok,.. இவ்ளோதூரம் வந்து படிச்சாச்சு, அப்டியே தமிழீஸ்ல ஒரு ஓட்டை போட்டு போங்க,..




.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ரஜினி vs விஜய்



விஜய் மற்றும் ரஜினியை ஒப்பிடலாமா? இது முறையான அளவு கோலாகுமா? என எனக்கு ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது. ஆனால் ஏழு முக்கியமான அளவுகோலில் ஒப்பிட்டு பார்க்கலாம்.



ஒற்றுமைகள்

1.இருவருக்குமே பெரிய பெர்சானாலிட்டி கிடையாது.
2.ரஜினி சினிமாவில் நுழைந்து ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கையில் அவருக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையில் குழந்தைகள் என சில குறிப்பிடும் அளவு பங்கு உண்டு. விஜய்க்கும் அப்படியே.
3.இருவருக்கும் சில தனித்திறமைகள் உண்டு. ரஜினிக்கு ஸ்டைல். விஜய்க்கு டான்ஸ்.
4. இருவருமே ரிமேக் படங்களில் ஆர்வம் காட்டினார்கள். ரஜினி ஹிந்தி. விஜய் தெலுங்கு.
5.இருவருமே காதல் திருமணம்.
6.இருவருமே அழுகைகாட்சிகளில் ரசிகர்களை அழ வைப்பவர்கள் (இவர்கள் அழும் கொடுமையை பார்க்க முடியாமல்தான். இருவருமே கண்ணை மூடிக்கொண்டு விரலால் கசக்குவார்கள்).
7. நகைச்சுவை இருவருக்குமே நன்றாக வரும். ரஜினி அதில் பல மடங்கு மேல்.

வேற்றுமைகள்

1.ரஜினிக்கு அன்மீகம் பிடிக்கும். விஜய்க்கு அரசியல்.
2.ரஜினி தன் உழைப்பில் மேலே வந்தவர். விஜய் தந்தை உழைப்பில்.
3.விஜய் நல்ல பாடகர், உதாரணம் காதலுக்கு மரியாதையில் வரும் "எனது விழி" . ரஜினியின் குற்ற்ல் அனுபவம் மன்னனின் வழியாக எல்லாருக்கும் கிடைத்திருக்கும்.
4.ரஜினிக்கு ரசிகர் கூட்டம் உருவானது. விஜய்க்கு உருவாக்கப்பட்டது.
5.ரஜினி இயக்குனரின் சொல்பிள்ளை. ஆனால் இயக்குனர்கள் விஜயின் சொல்பிள்ளை.
6.ரஜினி தமிழின் சிறந்த இயக்குனர்கள் அனைவரின் படத்திலும் நடித்துவிட்டார். விஜய் சிறந்த இயக்குனர்கள் அனைவரின் படத்தையும் பார்த்துவிட்டார்.
7.விஜய்க்கு சினிமாத்துறை மிக பிடிக்கும். சினிமாத்துறைக்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும் (அப்படிதான் நினைக்கிறேன்).
8.ரஜினி பேச்சில் அனல் பறக்கும், நிஜத்தில் குழப்புவார் (அரசியல் வருவாரா மாட்டாரா). விஜய் பேச்சில் தூசு மட்டுமே பறக்கும் (அசினும், விஜயும் தந்த அந்த பேட்டியை பாத்தீங்களா??). நிஜத்தில் தெளிவாக இருப்பார் (அரசியல் கண்டிப்பாக உண்டு, அடுத்த முதல்வருக்கு உதய நிதிக்கு இவர்தான் போட்டி),..

(அய்யோ இந்த டைம் பாத்து போட்டுட்டேன். எத்தனை ஆட்டோ ப்ளேன்ல வருதுன்னு தெர்லயே,..)

வெள்ளி, 11 டிசம்பர், 2009

என் கேள்விக்கு என்ன பதில்?


  1. எனக்கு மட்டும் அல்ல, இங்கு தமிழ் படிக்கும் அனைவருக்கும் திருக்குறளைப் பிடிக்கும். ஆனால் திருவள்ளுவர் எழுதிய அந்த திருக்குறள் எங்கு இருக்கிறது? யாரிடம் இருக்கிறது. எவருக்காவது தெரியுமா? சொல்லுங்களேன்.
  2. தமிழ் நாட்டில் சில ஆறுகள் ஓடுகின்றன. அதில் பலவற்றில் தண்ணீர் இல்லை. (இதில் கூவத்தை கணக்கில் சேர்க்காதீர்கள்). அதில் வைகையும் உண்டு. எனக்கு தெரிந்து மதுரையில் வெள்ளம் என ஒரே ஒரு முறை கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த வைகை கடலில் கலக்காது என எல்லோருக்கும் தெரிந்த தகவல்.வைகை ஆறு என்பது இருப்பது உண்மை. ஆனால் எங்கே அது காலி ஆகிறது? அதாவது முற்று பெறுகிறது?
  3. எனக்கு தெரிந்து பழந்தமிழர்கள் இயற்கை மட்டுமே வணங்கி வந்து இருக்கிறார்கள். இப்போதும் எங்கள் கிராமத்தில் பொங்கலின்போது காட்டையும், மாட்டையும் சுத்தப்படுத்தி மண்ணை வைத்து கும்பிடுவதுதான் வழக்கம். எனக்கு தெரிந்தவரை என் பல கிராமத்து நண்பர்களின் வீடுகளிலும் இதுதான் நடக்கிறது. ஆனால்,.. (ம்ம்ம் கேள்வி வந்துவிட்டது?) எப்போது நம் இயற்கை பஞ்சபூதங்கள் பஞ்சரானது?? நாம் மண்ணாய் வணங்கும் பூமி திருமாலிற்கு ரெண்டாம்தாரமானாள். ஆற்றையும் சிவனிற்கு ரெண்டாம்தாராமாக்கி கொண்டையில் உட்காரவைத்தார்கள். வாயு, ஆகாயம் எல்லோரையும் மூன்றாம்தர கடவுள் ஆக்கினர். நம் மூதையாரை அசுரர் ஆக்கினார்கள். இதை செய்தது யார்?? எப்போது நம் இயற்கை பஞ்சபூதங்கள் பஞ்சரானது?? எப்படி?
  4. பொதுவாக எல்லா உயிரினங்களும் நீந்தும் தன்மை கொண்டவை. வண்டு, எலி, பூனை, மாடு, யானை என எல்லா அளவில் உள்ள உயிரினங்களும் நீந்தகூடியவை. ஒரு முறை NGCயில் யானை அடித்த நீச்சலைப் பார்த்து அசந்துவிட்டேன். சின்ன வயதிலேயே எனக்கு இந்த சந்தேகம் இருந்ததால் ஒரு முறை எங்கள் குட்டையில் எங்கள் வீட்டு பூனையை தூக்கிப் போட்டு அது அழகாக நீந்திவரும் காட்சியை கண்டு ரசித்து(????) இருக்கிறேன். ஏன் பாலாய் போன ஆறறிவு ஜீவன் மட்டும் ஆற்றில் தவறி விழுந்து சாகிறது. மனித உயிரினம் நீச்சலை தொலைத்தது எப்போது?




  5. ஆற்றலை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஒரு வகையில் இருக்கிற ஆற்றல் இன்னொரு வகையில் மாறுகிறது. ரொம்ப சரி. ஆனால் காலங்காலமாக பூமிக்கு வரும் சூரியனிடம் இருந்து வரும் ஆற்றல் என்னவாகிறது?? அது எங்கே தொலைகிறது.?
இப்போதைக்கு இது போதும். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டம் போடுங்கள். பதில் தெரியாதவர்கள் ஓட்டையாவது போடுங்கள் (என்னாத்துக்குன்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க கூடாது)

வெள்ளி, 4 டிசம்பர், 2009

25 ஆண்டுகள் (டிசம்பர் 03, 1984) - போபால்

நேற்றுடன் 25 ஆண்டுகள் ஓடிவிட்டன...

நம் அரசாங்கத்திற்கு 3.3 பில்லியன் டாலர் நோக்கம்

அந்த நிறுவனத்திற்கு 457 மில்லியன் டாலர் கொடுக்கவேண்டிய கவலை,..

பத்திரிக்கைகளுக்கு மென்ன தீனி

தொழிற்சாலைகளுக்கு நல்ல பாடம் (lessons learned என வர்ணிப்பார்கள்)

ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நடந்தது என்ன?? (root cause)

நமக்கு??,.. போனது உயிர்,.. இந்த இந்தியாவே இப்படிதான்,..

போன உயிர்களுக்கும் அங்கே பிறந்த தினம் முதல் நோயால் சாகாமல்
செத்துக்கொண்டிருக்கும் அந்த போபால் மக்களுக்கு??







ஆம், கேட்பதற்கு நாதியில்லை.

------------------------------------------------------------------------------

1984, Dec 2 :
இரவு மணி 09:00 - குழாய்களை நீரால் சுத்தப்படுத்தும் பணி ஆரம்பிக்கிறது
இரவு மணி 10:00 - வினைகலனில் நீர் உட் புகுந்து அதிவேக வினையாக மாற்றமாகிறது.
இரவு மணி 10:30 - அதிக நச்சு வாயுக்கள் அவசர வெளியேற்றியின் வழி வெளியேறுகிறது
இரவு மணி 10:30- வெளியே மக்களுக்கு இருமல், கண் எரிச்சல், வாந்தி துவக்கம்
Dec 3:
இரவு மணி 00:30 - மிக நீண்ட அபாய சங்கு ஊதி, பின் அணைக்கப்படுகிறது.ஆலைக்குள் மட்டும்
இரவு 1:00 போலீஸ் எச்சரிக்கை ஆனது, மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். யூனியன் கார்பைடு நிறுவனம் நச்சுக்கசிவை மறுக்கிறது.
இரவு 2:00 வெளியே மருத்துவமனையில் மக்களுக்கு பார்வை மந்தமடைவதும், வாந்தியும், முச்சு திணறலும் அதிகரிக்கிறது
இரவு மணி 2:10 - மிக நீண்ட அபாய சங்கு ஊதி, பின் அணைக்கப்படுகிறது. ஆலைக்கு வெளியே,.
இரவு மணி 4:00 - வாயுக்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது
காலை 6:00 - "அனைத்தும் சுமூகமாக உள்ளது" மக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு







டிசம்பர் 3 காலை 6:00 மணியுடன் அனைத்தும் சுமூகமாய் முடிந்துவிட்டதா??



-----------------------------------------------------------------------------------

இன்று போபாலை பற்றி நிறைய ஆராய்ச்சிக்கட்டுரை வந்து விட்டன.

ஏன் நடந்தது

எப்படி தடுத்து இருக்கலாம்??

யார் காரணி?

விபத்திற்கு முன் என்ன என்ன விபத்துக்கள் நடந்தன? எப்படி?

அடுத்தது என்ன நடக்கலாம் (போபால் மக்களுக்கும், யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கும்)??

இப்போது போபால்,.. இப்போது யூனியன் கார்பைடு நிறுவனம்,...

dow நிறுவனம் போபாலை வாங்கியதன் பின்னணி. IIT மாணவர்கள் dow நிறுவனத்தில் வேலையை தூக்கி எறிவது ஏன்?

இப்படி நிறைய,..

ஆனால் போபால் நகர குடும்பங்கள் வாங்கிய அடியில் எலும்புகள் மிச்சமிருக்கிறதா??

எத்தனை முறை பாடம் படித்தாலும், எத்தனை முறை செருப்பால் அடிவாங்கியும் நமக்கு ஏன் புத்திவரவில்லை?? (மகாமகம் 200 பேர், திருச்சியில் கல்யாண மண்டபத்தில் 50 பேர் பலி, கட்டிவைக்கப்பட்ட மன நல நோயாளிகள் அப்படியே எரிந்து இறந்த கொடூரம், கும்பகோணம் பள்ளி குழந்தைகள் வெளியே வரமுடியாமல் எரிந்த கொடுமை, நேற்று கூட ஆசிரியையுடன் குழந்தைகள் கொத்தாக சாவு,. பெத்த மனசு எப்படி துடிதுடித்திருக்கும்?)

எதையுமே சாதாரணமாய் எடுத்துக்கொள்வது சரியா.? தனிமனிதனுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் சமுதாயத்திற்கு?
------------------------------------------------------------------------------

போபால் நமக்கு சொல்லும் பாடம் என்ன??

பாதுகாப்பை பாதுகாப்பதே பாதுகாப்பு.

ஆம்,..

சில நொடிகளுக்கு அவசரப்பட்டு பேருந்துக்கடியில் சக்கரத்திற்கு அடியில் கிடக்கும் மாணவனின் பெற்றோரை நினைக்கையில்,..

வருங்கால கணவருடன் பேசிக்கொண்டு ரயிலில் அடிபடும் பெண்ணிற்காக, வருங்காலகணவனின் உள்ளத்தில் ஓடும் அந்த குற்ற உணர்ச்சிகளை கேட்கையில்,...

எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம்.????

25 ஆண்டுகளாகியும் தன் சந்ததி மனவளர்ச்சி குன்றி சுத்துவதைப் பார்த்தால் எந்த ஆன்மா சாந்தியடையும்??. முடிந்தால் 25 வருடம் அந்த ஊமையாகி போய்விட்ட ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.



----------------------------------------------------------------------------