வியாழன், 23 செப்டம்பர், 2010

என்ன ஒரு ஒற்றுமை???

சிவகாசியில் ஆதி காலத்தில் போக்கிரியாய் ஒரு அழகிய தமிழ் மகன் சுத்திக் கொண்டிருந்தார். குருவி பிடிக்க வில்லு எடுத்துக்கொண்டு ஒரு நாள் வேட்டைகாரனாய் சதுப்புநில காட்டிற்கு சென்றார். காட்டில் இருந்த அனைத்தும் வில்லையும், வேட்டைக்காரனையும் பார்த்து பயந்து ஓடிவிட்டன.

இந்த முறை உஷாரான அவர் காட்டைவிட்டு கடலுக்கு படகில் சுறா பிடிக்க சென்றார். முடியுமா அவரிடம்? சிக்கியது ஒரு சுறா. நண்பகலில் "சன்" வெளிச்சத்தின் உதவியோடு இந்த சுறாவாவையாவது பிடித்துவிடலாம் என நப்பாசையோடு இழுத்துப்பார்த்தார் முடியவில்லை. கிழிந்ததுதான் மிச்சம் நைலான் வலை,.. ஒரு கட்டத்தில் உதவி தந்த தந்த சன்னும் ஓடிப்போக இருட்டில் தனியே படகுடன் நின்றார். இருக்கிற ஒரே ஒரு படகையும் விட்டுவிடக்கூடாதென அதற்கே இப்போது காவலனாய் இருக்கிறார் ஒரே ஒரு வேலாயுதத்தை வைத்துக்கொண்டு கடும் கோபமாய்,... "ஆடுங்கடா என்னை சுத்தி,.. நான் அய்யனாரு வெட்டுக்கத்தி",...

எப்போது விடியும்????,. (அவருக்கல்ல நமக்கு,..)

மேலேயுள்ள கதைக்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தமில்லை. படத்தில் உள்ளது சுறாவையல்ல,.. திமிங்கலத்தையே பிடித்த ரியல் ஹீரோஸ்,..






ஆக மொத்தம் சிவகாசியில தோட்டா வாங்கி, குருவிக்காரண்ட்ட துப்பாக்கியை புடுங்கி, காவலன் மூலமா நம்மை மறுபடியும் சுட்டுடாங்கப்பா,..

செத்து செத்து விளையாடுறதே நம்ம பொழப்பா போச்சு,..

.

13 கருத்துகள்:

Prathap Kumar S. சொன்னது…

ஹஹஹஹ..கலக்கல்... அடுத்த என்கவுன்டர் தீபாவளிக்கு வருதாம்ல...

ஓடுங்க ஓடுங்க அது வந்துட்டு இருக்கு... அது ரொம்ப கோபமா இருக்கு...:)))

thiyaa சொன்னது…

நல்ல பதிவு அருமையான படங்கள்

Unknown சொன்னது…

கதை சொன்ன விதமும், படங்களும் அருமை.. அந்த பிரமாண்ட சுறாவை ( திமிங்கிலம் இல்லியே?) வேட்டையாடும் விதம் ஆச்சர்யம்தான்

jothi சொன்னது…

வாங்க நாஞ்சில்,..

இல்லையாமே,.. ஏதோ டிசம்பர்க்கு தள்ளி போய்ருச்சாமே,... தப்பிச்சோம்

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி

jothi சொன்னது…

வாங்க தியா,..

வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி

jothi சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
jothi சொன்னது…

வாங்க செந்தில்,.. மிக்க நன்றி. அதென்னவோ சிவகாசியில் ஆரம்பித்து வேலாயுதம் வரை அனைத்தும் அதே வரிசையில் வந்ததென்னவோ ஆச்சர்யம்தான்,..

விஜயை வைத்து படம் எடுத்தால்தான் ஓடாது எனப் பார்த்தால் விஜயை வைத்து பதிவு போட்டாலும் ஓட மாட்டிங்கிது

உங்கள் பதிவுகள் மிக அருமை senthil,

ஆனந்தி.. சொன்னது…

"விஜயை வைத்து படம் எடுத்தால்தான் ஓடாது எனப் பார்த்தால் விஜயை வைத்து பதிவு போட்டாலும் ஓட மாட்டிங்கிது"

ஓய்..ஜோதி..இதை படிச்சு செமையா சிரிச்சுட்டேன்..CID ஜாப் பார்ட் டைம் பார்கிரிங்க போலே (regarding vote)..ஒழுங்கா வோட்டு போடுறேன் பாஸ் இனி...ஓகே வா..

கலகலப்ரியா சொன்னது…

கடைசிப் படம் பயமுறுத்துது... சுறாவுக்கு இப்டி ஒரு விமர்சனமா... க்ரேட்டு..

jothi சொன்னது…

வாங்க ஆனந்தி,.. வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி.

ஓட்டிற்காக CID வேலை பண்ணத் தேவையில்லை. தமிழிஷில் உங்கள் பதிவின் மேல் கிளிக் பண்ணும் போது உங்கள் இடுகைகள் எண்ணிக்கை, அதில் ஹிட் ஆனவை, நீங்கள் ஓட்டுப் போட்டவை,. எல்லாம் வரும். நீங்கள் நல்லா எழுதிரீங்களே, எதேச்சையாக உங்கள் பதிவுகள் எப்படி என பார்க்கும் போது உங்கள் பதிவு செய்த ஓட்டுக்கள் வரும். இதற்காக மெனக்கெட தேவை இல்லை.

இருந்தாலும் அந்த கமெண்ட்டை நீங்க அனுமதிக்கவில்லை இல்ல,..அதில் என்ன இருக்கு,.. உங்கள் பதிவுகளின் தரம் முன்னேறும் போது என்ன கவலை,..

என்னைப்பத்தி இப்படி நினைச்சிட்டீங்களே ஆனந்தி,.. ச்சய்,.. என்ன ஒரு அவமானம்,..

jothi சொன்னது…

வாங்க ப்ரியா,..என் பதிவிற்கு வருகிற பிரபல பதிவர் நீங்கள்தான்,.. வலைப்பதிவின் வருகைக்கும், பகிர்விற்கிறகும் நன்றி,..

எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு,. சுறாவா, திமிங்கலமா என்று,.. சாப்பிட்டவங்கட்டதான் கேட்க வேண்டும்,..

என்னோட அனுமானம் அது திமிங்கலம் என்பது,..

எனக்கு கூட கடைசிப்படத்தைப் பார்த்தவுடன் ஒரு மாதிரிதான் இருந்தது,. (எல்லாம் கண்ணை மூடிட்டு பொறிச்சு சாப்பிட்டா ஒண்ணும் தெரியாது,..)

வலைப்பதிவின் வருகைக்கும், பகிர்விற்கிறகும் நன்றி,..

ஆனந்தி.. சொன்னது…

ஐயோ..ஜோதி..நான் வலைப்பூ க்கு ரொம்ப புதியவள்..நிஜமாய் சரியா எதுவும் தெரியாது..நான் நேத்து விளையாட்டுக்கு தான் அப்படி உங்களுக்கு பின்னூட்டம் கொடுத்தேன்..அதுவும் நீங்க சொன்ன கருத்தை உடனே சரின்னு பட்டு தான் உங்க வலைப்பூவே வந்து கருத்து போட்டேன்..உங்க கருத்துக்கள் நிஜமாய் மதிக்கிற மாதிரி இருந்தது..நீங்க தப்பா புரிஞ்சுகிறது மாதிரி என் பின்னூட்டம் இருந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க..i am sorry jothi..அந்த ஓய் கூட சகோதரனை கூப்பிட்ட மாதிரி கூப்பிட்டேன்..மன்னிக்கவும்..

jothi சொன்னது…

அய்யயோ ஆனந்தி,..

நான் ஒண்ணும் தப்பால்லம் நினைக்கலை,..நீங்க ஒரு தப்பும் பண்ணல்ல, அப்புறம் எதுக்கு சாரில்லாம்,.. அப்படியே ரிலாக்ஸா இதை விட்டிடுங்க,..

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ஆனந்தி,.. கடைசியா போட்டது மாதிரி இன்னோரு தொழில் நுட்ப பதிவு ஒண்ணு போடுங்க,..

கருத்துரையிடுக