சகோதரி அம்பிகா பெயர் பதிவை யாராவது தொடருங்கள் என சொன்ன காரணத்தால் அந்த யார் நானே என முடிவு செய்து (ஹி ஹி) இந்த பதிவு.
என் பெயர் ஜோதிகண்ணன். எங்கள் குடும்பத்தில் பெரும்பாலும் கண்ணன் என்றே முடியும்.பிறக்கும் போது நான் நன்கு கருப்பாக இருந்தேனாம் (ஹி ஹி, கண்ணனில்ல அதான்,.).உடம்பு முழுக்க நிறைய மச்சம் இருந்ததாம், அதனால் முதலில் மச்சகண்ணன் வைக்கலாம் என இருந்தார்களாம், நல்ல வேலை கடைசி கட்டமாக கண்கள் கொஞ்சம் பிரகாசமாக (!!!) இருந்ததால் ஜோதிகண்ணன் என பேர் வைத்து விட்டார்கள். (அட அட என்ன ஒரு பெயர் காரணம்).

--------------------------------------------------------------------------------------------
நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போது நான் கடைசிக்கு முந்தின பெஞ்சில் உட்கார்ந்திருப்பேன் . இருந்தாலும் அந்த பாவாடை வாத்தியார் (பேண்ட் பெல்ஸ் பாட்டம் அதான் பாவாடை வாத்தியார்) என்னைதான் கேப்பார். அதுவும் கரும்பலகையை பார்த்து,. சில நேரங்களில் எனக்கு போர்டில் இருப்பது தெளிவாக தெரியாது, அதனால் கண்ணை கொஞ்சம் சுருக்கி பார்ப்பேன், இதை ரெண்டு மூணு முறை பார்த்த அந்த பாவாடை வாத்தி என்னை பாதி கண்ணன், பாதி கண்ணன் என கூப்பிட ஆரம்பித்துவிட்டார். பசங்களும் என்னை பாதிகண்ணன் என கிண்டலடித்து கூப்பிட்டது கிண்டலடித்து என் பெற்றோருக்கு தெரிந்து விட்டது. அப்புறம் என்னை கண் ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்று பெரிய்ய்ய்ய்ய்ய்ய சோடாபுட்டி மூக்கு கண்ணாடியை போட்டுவிட்டார்கள்.
கண்ணாடி போட்டவுடன் என் மூஞ்சி டோட்டல் டேமேஜ். அதுவுமில்லாமல் அந்த நேரத்தில் ஃபிகர்களை சைடில் பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்தேன் (நேர்ல பாத்தா நம்ம பாக்குறது தெரிஞ்சிரும்ல அதான்). மூக்கு கண்ணாடி நேரடியாக பார்க்க மட்டுமே பலனளித்தது, சைடில் பார்க்கும் போது கண்ணாடி தெரியவில்லை, ஃபிகர்கள் தெளிவாக தெரியாமல் அப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன்,.. இதை எப்படியோ தெரிந்த கொண்ட என் கூட படிச்ச ட்யூசன் பொண்ணுங்க பாதிகண்ணன் முழிக்கிறான், பாதிகண்ணன் முழிக்கிறான் (சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாட்டு) என பாடி கடுப்பேத்துவார்கள். அதுக்கு அப்புறம் சைடு கண்ணை கவர் பண்ணிய போட்ட குதிரை மாதிரி போக வேண்டியதாயிற்று
கல்லூரி சேர்ந்த பின் என் பேரை யாராவது கேட்டால் பெரும்பாலும் கண்ணன் எனத்தான் சொல்லுவேன், இருந்தாலும் நண்பர்கள் ஜோதி, ஜோதி என அழைத்தார்கள், பெண் பெயராக இருந்ததால் ரொம்ப கடுப்பாக இருக்கும்.. சில நேரங்களில் குளிர்ச்சியாகவும் இருக்கும். அப்போதுதான் ஜோதி என்ற பெயரில் ஒருத்தி ஆந்திராவில் இருந்து first year சேர்ந்தாள். பசங்க சும்மாவாச்சும் அந்த பெண் போகும் போதெல்லாம் ஜோதி ஜோதி என அவளைக் கூப்பிடுவது போல் என்னைக்கூப்பிட்டு கடுப்பேத்துவார்கள். ஒரு நேரத்தில் ஜோதி எனக்கூப்பிட்டால் திரும்பாமல் இருக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த ஆந்திர ஜோதியே ஜோதி எனக்கூப்பிட்டதுதான் கொடுமை. (தமிழ் நாட்டை தாண்டினால் ஜோதி என்பது பெண் பெயர்தான்,.. இப்போதும் எனக்கு நிறைய லெட்டர் Mrs.ஜோதிகண்ணன் என வருகிறது
சமீபத்தில் என் பையனுடன் விளையாடும் போது என் மகன் கேட்டான்,.
"அப்பா, ஏன் உங்க உங்களுக்கு ஜோதிகண்ணன்னு பேரு வெச்சாங்க?"
"ம்ம்ம்,.உங்க அப்பா கண்ணுல பிரகாசமா ஜோதி வந்துச்சா அதுனாலதான் அந்த பேரு" இது என் மனைவி.
"பிரகாசமான கண்ணுனா ஏன் கண்ணாடி போடுறீங்க??"
"ம்ம்ம்,. பிரகாசமான ஜோதி வந்துச்சுன்னா நம் கண்ணைத்தாக்குமில்ல, அதை தடுக்கத்தான் கண்ணாடி"(ஹி ஹி இதுவும் என் மனைவிதான்).
யார் சொன்னது மனைவிகளுக்கு ஞாபக மறதி என்று??
------------------------------------------------------------------------------------------
வேலைக்கு வந்த 12 ஆண்டுகளில் இது வரை 6 கம்பேனி மாறியாச்சு ,.. ஆனாலும் இப்போது திரும்ப போனாலும் கண்டிப்பா என்னை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். காரணம் எல்லா நிறுவனங்களிலும் என் பேரை நல்ல படியாக வைத்துவிட்டுதான் கிளம்பி இருக்கிறேன்.
ஆசையாய் வைத்த என் பெற்றோருக்கு என் பேரால் இது வரை பெரிய பெருமை ஒன்றையும் கொடுக்கவில்லை. ஆனால் வைச்ச் பேரை கெடுக்காமல் வைத்திருக்கேனே அந்த வகையில் சந்தோசம்.
ஆசையாய் வைத்த என் பெற்றோருக்கு என் பேரால் இது வரை பெரிய பெருமை ஒன்றையும் கொடுக்கவில்லை. ஆனால் வைச்ச் பேரை கெடுக்காமல் வைத்திருக்கேனே அந்த வகையில் சந்தோசம்.
----------------------------------------------------------------------------------------
.
.
17 கருத்துகள்:
மிக அருமை
படம் பார்த்து மிகச் சரியாகக் கதை சொன்னால்
எப்படி இருக்குமோ
அப்படி மிகச் சரியாக பொருந்தி இருந்தது
படங்களும் அதற்கான விளக்கங்களும்
மிக அழகாக ஆதி தொட்டு இன்று வரை
பெயருக்கான விளக்கங்கள் சொல்லிப் போனது அருமை
அதிலும் உங்கள் மனைவியின் விளக்கம் சூப்பரோ சூப்பர்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
உங்க மனைவிதான் உங்க ஜோதியைச் சரியாக் கவனிச்சிருக்காங்க !
//வேலைக்கு வந்த 12 ஆண்டுகளில் இது வரை 6 கம்பேனி மாறியாச்சு ,.. ஆனாலும் இப்போது திரும்ப போனாலும் கண்டிப்பா என்னை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.// வெரி குட்..இப்படித் தான் இருக்கணும். ஜோதி-ங்கவும் நானும் பெண் பதிவரோன்னு பயந்துக்கிட்டேதான் முதல்ல இங்க வந்தேன்..அப்புறம் நாம சினேகாவால மிங்கிள் ஆனது வரலாறு!!!
ஜோதி என்ற பெயரை பார்த்து பெண் என்று தான் வந்தேன். வந்தால் கண்ணன்.ஜோதி கண்ணன் கண்ணாடி கண்ணன் என மாறி விட்டதா? பாக்யராஜ் ஃபோட்டோ கரெக்டா பொருந்துகிறது.
வாங்க ரமணி சகோ,. மிக்க நன்றி
//உங்க மனைவிதான் உங்க ஜோதியைச் சரியாக் கவனிச்சிருக்காங்க !//
ஹி ஹி
மனைவி வீட்டுக்காரரை கவனித்தால்தான் வீட்டில் ஜோதி (ச்சே,. எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு)
//வெரி குட்..இப்படித் தான் இருக்கணும். ஜோதி-ங்கவும் நானும் பெண் பதிவரோன்னு பயந்துக்கிட்டேதான் முதல்ல இங்க வந்தேன்..அப்புறம் நாம சினேகாவால மிங்கிள் ஆனது வரலாறு!!!//
நன்றி செங்கோவி,.
சும்மா காமெடி பண்ணாதீங்க,.. பெண் பதிவரோன்னு பயந்துகிட்டா வந்தீங்க,..
உங்கள் பதிவுகளில் நல்ல வெரைட்டி இருக்கு செங்கொவி
/ஜோதி என்ற பெயரை பார்த்து பெண் என்று தான் வந்தேன். வந்தால் கண்ணன்.ஜோதி கண்ணன் கண்ணாடி கண்ணன் என மாறி விட்டதா? பாக்யராஜ் ஃபோட்டோ கரெக்டா பொருந்துகிறது.//
வாங்க அமுதா கிருஷ்ணா
அடடா,.. எல்லாரும் இப்படி பெண் பதிவர் பெண்பதிவர்னு வந்தேன் சொன்னா நான் என்னதாங்க பண்றது, ஜோதிங்கிற பேரு இப்ப ரொம்ப பேமசாயிருச்சு (எனக்கே இது முடியல,..), இப்ப வந்து கண்ணன்னு மாத்த முடியாதுன்னு நினைக்கிறேன்,..
பாக்யராஜ் பொருந்துதா??? அவர் படத்தை தேர்வு செய்ததிற்கு காரணம் அவர் படங்களில் அவர் கண்ணாடி போட்டிருப்பதால், ஹீரோயினுக்கும் கண்ணாடி போட்டுவிடுவார்
ஜோதிக்கு பின் இவ்வளவு விசயம் இருக்கா...?
வாங்க சரவணன்,..
ம்ம்,. அப்படிதான் போல இருக்கு
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்....சும்மா பாட்டு..:))
ஜோதிகண்ணண்னு வச்சாங்களேன்னு சந்தோசப்படுங்க... கமலக்கண்ணன்னு வச்சுருந்தா கமலான்னு கூப்பிட்ருப்பானுங்க.... இதுக்கு அது பெட்டரு...:))
வலைச்சரத்தில் பார்த்துவிட்டுவந்தேன், உங்கள் எழுத்துக்கள் நல்லா இருக்கு சார், இனி தொடர்ந்து வர முயற்சிப்பேன்...!
//ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்....சும்மா பாட்டு..:))//
ம்ம்ம்,.. ஜோதிக்கே லைட்டா (ஜோதியா)???
//ஜோதிகண்ணண்னு வச்சாங்களேன்னு சந்தோசப்படுங்க... கமலக்கண்ணன்னு வச்சுருந்தா கமலான்னு கூப்பிட்ருப்பானுங்க.... இதுக்கு அது பெட்டரு...:))//
என்ன இப்படி சொல்லிட்டீங்க, என் பெயரில் சின்ன வயதில்தான் சின்னதாக வருத்தம் இருந்தது. இப்போது துளியும் கிடையாது. நீங்க சொன்னது சரிதான். வகுப்பில் எனக்கு அடுத்த நபர் கமலக்கண்ணன். அவனை எல்லோரும் KK என அழைப்போம்.
//பன்னிக்குட்டி ராம்சாமி,.. வலைச்சரத்தில் பார்த்துவிட்டுவந்தேன், உங்கள் எழுத்துக்கள் நல்லா இருக்கு சார், இனி தொடர்ந்து வர முயற்சிப்பேன்...!//
வாங்க வாங்க பன்னிக்குட்டி ராமசாமி,.
மிக்க நன்றி.
(ஒரு வேண்டுகோள்,. என்னை சார், அய்யான்னு கூப்பிட்டு வயசாக்கி விட்டுறாதீங்க,..நீங்களும் என்னை ஜோதி என்றே அழையுங்கள்,.. மீண்டும் வருகைக்கு நன்றி)
last lines..super..nice name nanba..
உங்கள் பதிவு நல்ல இருக்கு நண்பா
மிக்க நன்றி சிவா
கருத்துரையிடுக