
வெளி நாடு செல்பவர்களை உள்ளூர்காரர்கள் என்ன என்னமோ எழுதி கொட்டி விட்டார்கள். வெளிநாடு சென்றவர்களும் கூலித்தொழிலாளர் என்றால் வராதீர்கள், நல்ல பதவி இருந்தால் மட்டும் வாங்க என எழுதி தீர்த்துவிட்டார்கள். ஆதலால் அதை பற்றி எழுதப்போகவில்லை,..
"கலக்கிட்டடா மச்சி" என நம்மிடம் நன்றாய் பேசும் நம் உற்ற நண்பர்கள் கூட "உள்ளூர்ல போகாத மாடா வெளியூர்ல விலை போகப்போகுது" "அப்படி என்ன பணம் வேண்டிக்கிடக்கு" என சக நண்பர்களிடம் கிசுகிசுப்பார்கள். கிண்டல்களும் கேலிகளும் எல்லா மனங்களுக்கும் பொதுவானது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு சாதித்துக்காட்டுவதில் ஒருவரின் வெற்றி இருக்கிறது.

இந்த கதை உண்மையில்லை என்றாலும், இங்கே வருகின்ற பல தொழிலாளரின் கதைகள் மௌனமாகவே இருந்துவிட்டு போகின்றன,..

எதேச்சையாக அன்று நண்பரின் சகோதரர் மணி என்னை பார்க்க வந்திருந்தார். இவர் கொஞ்சம் வித்தியாசமான ஆள். ஒரு அக்கா ஒரு தங்கை,..இருவருக்கும் கல்யாணம் பண்ணிக்கொடுத்து விட்டார். அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள். வெளினாட்டில் ஓவர்டைம் ஓவர்டைம் என சம்பாதித்து அக்கா, தங்கை கல்யாணத்தை தடால்புடாலாக பண்ணியவர் தன் கல்யாணத்தை திருப்பதியில் பத்தோடு பதினொன்றாக பண்ணினார். அக்கா தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணி முடிப்பதற்குள் இவருக்கு முப்பது வயதாகிவிட்டது. பையனுக்கு கல்யாணம் பண்ண வேண்டுமே (!!!) என அவசர அவசரமாக கிடைத்த பெண்ணை வைத்து கல்யாணம் பண்ணிவிட்டார்கள். பாவம், அவருக்கு கல்யாணம் பண்ணும் போது அவர் கையில் காசில்லை,.. கல்யாணம் முடிந்து மூன்று வருடம் இந்தியாவில் இருந்தவர் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்துவிட்டார்.
நண்பரின் சகோதரர் மணி நன்கு தூங்கிக்கொண்டு இருந்தார். திடீரென "அம்ம்ம்ம்ம்ம்மா" என கத்தினார். அவர் கத்திய கத்தலில் நானே பயந்துவிட்டேன். ஏதோ கெட்ட கனவு கண்டிருப்பர்னு நினைக்கிறேன், சுத்தமாய் தூக்கமே போச்சு,.. அவருக்கும் போச்சுதான் நினைக்கிறேன். புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். எனக்கு நடுவில் எப்படியோ தூக்கம் வந்ததால் தூங்கிவிட்டேன்,.. திரும்பவும் அவர் புரண்டு படுத்தார், தண்ணீர் குடிக்கப்போனார்,.. திரும்ப வந்தார். அவரின் இந்த செயல்களால் எனக்கும் தூக்கம் சுத்தமாக போய்விட்டது. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்,..
திடீரென நண்பர் "ஜோதி, ஜோதி" என எழுப்பினார்
"என்ன மணியண்ணா?"
"ஒரு போன் பண்ணிக்கவா?"
"அட பண்ணுங்கண்ணா"
டிரிங் ட்ரிங்,..
"செல்வி,.. என்ன பண்ற,..எழுந்திட்டியா? இன்னும் சமைக்கலைல,.. கேஸ் ஸ்டவ் டியூப் லூசா இருக்காணுன்னு பாரு"
"அட என்னங்க, காலைல இதுங்க டீ டீன்னு உயிர எடுக்குதுங்க, நீங்க டியூப் லூசா இருக்கா, நட்டு லூசா இருக்கான்னு உயிரை வாங்கிட்டு இருக்கீங்க, டியூபெல்லாம் டைட்டாதான் இருக்கு"
இரவு நிசப்தமானதால் போன் "டொக்"கென வைக்கப்படும் சத்தம் நன்றாகவே கேட்டது. யார் சொன்னது ஊமையின் அழுகை கேட்காதென்று,..
.

.
18 கருத்துகள்:
இதிலிருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா.. புதரகத்துக்கும் அமீரகத்துக்கு நிறைய வித்தியாசம் இருக்கு, நடுராத்திரி அலைபேசி பயங்களைத்தவிர
என்ன சொல்றதுன்னு தெரியலைங்க...
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை தான்...ஆனால் அந்த பணம் இருந்தால் தான் என்னைப் போன்ற அண்ணன்களின் தங்கைகளும்,அக்காள்களும் திருமணம் செய்ய முடின்கின்ற ஈனமான நிலை.
இவண்,
கனவுகளை கூட தொலைத்து நெஞ்சம் மறுத்த வெளிநாடு வாழ் தமிழன்.
..இங்கே வருகின்ற பல தொழிலாளரின் கதைகள் மௌனமாகவே இருந்துவிட்டு போகின்றன,.. ..
சரியாச்சொன்னீங்க...
///இதிலிருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா.. புதரகத்துக்கும் அமீரகத்துக்கு நிறைய வித்தியாசம் இருக்கு, நடுராத்திரி அலைபேசி பயங்களைத்தவிர//
வாங்க இளா,..
அமீரகம் தெரியும்,.. அதென்ன புதிரகம்??
//கனவுகளை கூட தொலைத்து நெஞ்சம் மறுத்த வெளிநாடு வாழ் தமிழன்.//
வாங்க டகால்டி,, கனவுகள் வராத நீங்கள் அதிர்ஷ்டசாலி
வாங்க சங்கவி. நன்றி
பிரிந்திருக்கும்போது மனம் அல்லாடுவதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
//பிரிந்திருக்கும்போது மனம் அல்லாடுவதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//
வாங்க sriakila , வருகைக்கும் பகிர்விர்கும் நன்றி,..
தன் உறவுகளை விட்டு தொலைவில் இருக்கும்போது உள்ள வலிகள் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். நல்ல பதிவு.
வாங்க விஜயன்,.. உண்மைதான் உறவுகள் இல்லா இல்லங்கள் வாழத்தகுதியில்லாதவை
unmaithaan nanba... ingu kastangalthaan vazhkkaiyai vazhnthukondirukkinrana... namallaa...
Naan ABudhabi... Neenga...
வாங்க குமார், நீங்க சொல்வது உண்மைதான்,.. நானும் அபுதாபியில் இப்போது வசித்து வருகிறேன்
//நானும் அபுதாபியில் இப்போது வசித்து வருகிறேன்// ரெண்டு பேரும் பக்கத்து வீடாய்யா..நல்ல ஆளுங்க போங்க!..சும்மா எப்படி இருக்கீங்கன்னு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தா...
//சும்மா எப்படி இருக்கீங்கன்னு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தா...//
வாங்க வாங்க செங்கோவி,..ஆக மொத்தம் பதிவைப்படிக்க வரவில்லை??? என்ன ஒரு அவமானம் ச்ச்சை,..
மிக்க நன்றி பாரி,.. மற்ற அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
ஜோ...இடையில் ஊருக்கு போயிட்டேன்...இந்த போஸ்ட் மிஸ் பண்ணிட்டேன்...ரொம்ப emotion ஆகிட்டேன் இதை படிச்சு...நீங்க சென்னையில் இருந்து இப்போ அபுதாபி போயிட்டிங்களா?? இந்த பதிவு ரொம்பவே உருக்கமா இருந்தது ஜோ..அதுவும் டக்கால்டி கம்மென்ட் ரொம்பவே உருக்கம்..
வாங்க ஆனந்தி,.. ஊரில் அனைவரும் நலமா?
ஆம்,. இப்போ அபுதாபியில் வனவாசம்,..
உள்ளூர்காரர்களுக்கு எங்கள் தவிப்பு தெரிவதற்கு நியாயம் இல்லை,..
என்ன இங்கேயேவா இருக்கப்போகிறோம்,..என் ஈர மண்ணில் வெறுங்காலுடன் தண்ணீர் தெரிக்க நடக்கும் நாட்கள் வராமலேயேவா இருந்துவிடப்போகிறது???
இந்த வாழ்க்கையை நினைத்தாலே வழிக்கிறது..
கருத்துரையிடுக