செவ்வாய், 15 மார்ச், 2011

பின்னூட்ட‌ங்க‌ள் - ப‌ல‌ வித‌ம்


பின்னூட்ட‌ங்க‌ள் க‌ல் மாதிரி. ஒரு ப‌திவ‌ரை சிலையாக‌வும் வைக்கும், இல்லையென்றால் அவ‌ரை வெறுப்பேற்ற‌ அவ‌ர்மீது வீசி எறிய‌ப்ப‌டும் சிறுக‌ல்லாக‌வும் ப‌ய‌ன்ப‌டும். ஆரோக்கிய‌மான‌ விவாத‌த்தில் ப‌ங்கு பெறுகிற‌ பின்னூட்ட‌ங்க‌ள் ப‌ல‌ நேர‌ங்க‌ளில் ப‌திவை தூக்கி சாப்பிடுகின்றன‌. ஒரு வ‌ண்டிக்கு எப்ப‌டி பெட்ரோலோ அது மாதிரி பின்னூட்ட‌ங்க‌ள் ஒரு ப‌திவிற்கு. இன்னும் ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் ஹிட்டை பற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் வார‌ம் 3 ப‌திவெழுதும் ர‌க‌சிய‌ம், யாரோ ஒரு புண்ணிய‌வான் அவ‌ன்(ர்) பொன்னான‌ நேர‌த்தை அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ளில் செல‌விட்டு அவ‌ர்க‌ளின் பார்வையை பின்னூட்ட‌மாய் விட்டு செல்வ‌தால்தான்.

நான் ப‌திவுல‌க‌த்திற்கு வ‌ந்த‌ புதிதில் டாக்ட‌ர் புருனோவுட‌ன் பின்னூட்ட‌ங்க‌ளில் அதிக‌மாக‌ ச‌ண்டை போட்டேன். பிர‌ச்ச‌னை தெரிந்த‌தே. ர‌குமானா இளையாராஜாவென்கிற‌ ச‌ண்டைதான். பின் நாட்க‌ளில் அத‌ற்காக‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டு இருக்கிறேன். அதே நான் பின்னோரு நாளில் புருனோவுட‌ன் இணைந்து கார‌சார‌மாய் அர‌சு ஊழிய‌ரைப்ப‌ற்றி ஆரோக்கிய‌மான‌ விவாத‌ம் செய்திருக்கிறேன். போன‌ வ‌ருட‌ம் கூட‌ ஒரு பெண் ப‌திவ‌ரிட‌ம் விவாத‌ம் ந‌ட‌த்துகையில் ப‌திவை வெளியேற‌ வேண்டிய‌தாயிற்று, (கொடுமை அது ரொம்ப‌ சின்ன‌ விஷ‌ய‌ம்,. அத‌ற்காக‌ க‌ண்டிப்பாக‌ துளியும் வ‌ருத்த‌மில்லை). ஆரோக்கிய‌மான‌ பின்னூட்ட‌ங்க‌ள் ஒரு ப‌திவருக்கு ந‌ல்ல‌ முதிர்ச்சியையும், எழுத்து ஆர்வ‌த்தையும் த‌ரும்.

ஆனால் ஆரோக்கிய‌ம‌ற்ற‌ பின்னூட்ட‌ங்க‌ள்?? இங்கேதான் பிர‌ச்ச‌னை ஆர‌ம்பிக்கிற‌து. பெரும்பாலும் ச‌ண்டைக‌ள் வ‌ருவ‌தற்கு கார‌ண‌ம் ஒன்று தேவையில்லாத‌ பின்னூட்ட‌மாக‌ இருக்கிற‌து, இல்லை ப‌திவ‌ரின் ஈகோவாக‌ இருக்கிற‌து. த‌வ‌றென‌த் தெரிந்தும் "ஆம் நான் சொன்ன‌து த‌ப்புதான், நான் எழுதிய‌து த‌ப்புதான்" என‌ ஒப்புக்கொள்ப‌வர்கள் க‌ம்மிதான். சில‌ பின்னூட்ட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளை ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாக்குகிற‌து. இதுவே பெண்க‌ள் எனும்போது அந்த‌ கோப‌ம் அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ளையும் தாக்கும் வாய்ப்பிருக்கிற‌து. சில‌ ப‌திவ‌ர்க‌ள் வேலை செய்ய‌முடியாம‌ல் வீட்டிற்கு வ‌ந்து பின்னூட்ட‌த்திற்கு ப‌தில் சொன்ன‌ கொடுமையெல்லாம் ந‌ட‌ந்திருக்கிற‌து. முன்பு போல் அன்னானிக‌ள் இப்போது ப‌ங்கெடுப்ப‌தில்லை. ஆனால் வித்தியாச‌மான‌ பெய‌ரில் முக‌வ‌ரியில்லாம‌ல் இப்போது அவர்க‌ள் ஆக்கிர‌மித்திருக்கிறார்க‌ள். எத‌ற்காக‌ முக‌ம் காட்ட‌ ப‌ய‌ப்ப‌டுகிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை. பின்னூட்ட‌ ச‌ண்டைகளால் துர‌திர்ஷ‌ட‌வ‌ச‌மாக‌ ந‌ல்ல‌ ப‌திவ‌ர்க‌ள் ப‌திவுல‌‌த்தை விட்டே சென்று இருக்கிறார்க‌ள்.


சில‌ர் க‌ண்டிப்பாக‌ எல்லா பின்னூட்ட‌ங்க‌ளுக்கும் (அவை 100 இருந்தாலும்) ப‌தில் சொல்வர். ஸ்மைலிக்கு கூட‌ " ந‌ன்றி பாஸ்க‌ர்" என‌
ப‌தில் சொல்வ‌து ஆச்ச‌ர்ய‌ம்தான். ஆனால் ந‌ன்றி வேண்டி யாரும் பின்னூட்ட‌ம் இடுவ‌தில்லை. என்னைப் பொறுத்த‌வ‌ரை ப‌தில் சொல்ல‌ப்ப‌டா பொறுப்பான‌ பின்னூட்ட‌ங்க‌ள் அவ‌மான‌மே. இன்றைக்கு ப‌திவுல‌க‌ம் இருக்கும் ஸ்டைலிற்கு இது வேலைக்கு ஆகாது என‌த்தெரியும். இருந்தாலும் ம‌ன‌ம் ஒப்புக்கொள்ள‌வில்லை.

பின்னூட்ட‌ம் க‌ண்டிப்பாக‌ இட்டு செல்ல‌ வேண்டும் என‌ பெரும்பாலான‌ ப‌திவ‌ர்க‌ள் நேரிடையாக‌ கேட்ப‌துண்டு. என் ச‌க‌ தோழ‌ர் ப‌திவில் மிர‌ட்டியே வைத்திருப்பார்.

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!

உங்கள் மனதில்பட்ட கருத்துக்களை யார்மனமும் புண்படாமல் சொல்லி ஊக்கப்படுத்தும் அன்புநெஞ்சங்களுக்கு நன்றி!

"வ‌ந்தீங்க‌, ப‌டிச்சீங்க‌

சும்மா பாத்துட்டு போகாதீங்க‌

புடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க‌

புடிக்க‌லைனாலும் எழுதுங்க‌ "

இப்ப‌டி அழ‌கு அழ‌காய் நிறைய‌,..

சில‌ நேர‌ங்களில் தான் வ‌ந்த‌தை வ‌ந்துவிட்ட‌தை (??) உறுதி செய்யும் வித‌மாக‌ பின்னூட்ட‌ங்க‌ள் போட‌ப்ப‌டுவ‌துண்டு. அவை பெரும்பாலும் ப‌திவிற்கும் பின்னூட்ட‌த்திற்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இருக்காது. இவை பெரும்பாலும் டெம்ப்ளெட்டில் ஏற்க‌ன‌வே டைப் செய்ய‌ப்ப‌ட்டு இட‌த்திற்கு ஏற்றார் போல் காப்பி பேஸ்ட் செய்ய‌ப்ப‌டுப‌வை.

யாரிட‌மாவ‌து இல்லையென்றால் கீழே டெம்ப்ளெட்டை உள்ள‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ளுங்க‌ள் (ஹி ஹி ச‌மூக‌ சேவை)

வ‌டை என‌க்கு

க‌ல‌க்கிட்டீங்க‌ த‌ல‌

அருமையான‌ ப‌திவு

நச் ப‌திவு

உள்ளேன் ஐயா

ந‌ல்லாயிருக்கு

வாங்க‌ த‌ல‌

ப‌ட்டைய‌ கிள‌ப்பிட்டீங்க‌

ப‌டிச்சுட்டு பின்னூட்ட‌ம் போடுறேன்

இல்லையென்றால் வார‌ இறுதி நாட்க‌ளிலோ (??) இல்லை அலுவ‌ல‌க‌த்தில் நீங்க‌ள் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ டைப் அடிக்கும்போதோ கீழே க‌ண்ட‌வாறு கீபோர்டு சொத‌ப்பி விட்டு விடும்,. சாக்கிர‌தை

ப‌டை என‌க்கு

க‌ல‌ங்கிட்டீங்க‌ த‌ல‌

அறுவையான‌ ப‌திவு

நொச் ப‌திவு

உள்ளேன் ஆயா

நாலாயிருக்கு

வீங்க‌ த‌ல‌

பாடைல‌ கிள‌ம்பிட்டீங்க‌

குடிச்சுட்டு பின்னூட்ட‌ம் போடுறேன்

இந்த‌ மாதிரி மாத்தி எழுதினா என்ன‌வாகிற‌து?? க‌தையே க‌ந்த‌லாகிவிடும் இல்ல‌? அப்புற‌ம் என்ன‌? ப‌திவுல‌க‌ ச‌ண்டைதான்.


22 கருத்துகள்:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

ஹாஹா..

எழுத்துப்பிழையுடன் வரும் பின்னூட்டங்கள் பற்றிய குறிப்புகள் தான் அட்டகாசம்..

ஆனா.. இந்த வடை தான் என்னன்ன புரிய மாட்டேங்குதுங்க..

கமலேஷ் சொன்னது…

நண்பரே...

- ஒரு நல்ல ப்ளாக்கர் -
- ஒரு நல்ல எழுத்தாளன் -

இந்த ரெண்டு வரிக்கும் இடையில ஒரு மலையை வெட்டி போடலாம்
அவ்வளவு இடைவெளி இருக்கிற மாதிரி
எனக்கு தோணுது.
அப்பிடியா???
ஒரு வேளை உங்களுக்கும் அப்படின்னா
இந்த பதிவு, பின்னூட்டம் எல்லாம் வேற திசையை பார்த்து நகரக் கூடும்.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அப்படிப் போடு அருவாள.... எப்புடி? நம்ம கமெண்ட்டு....


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

செங்கோவி சொன்னது…

//சில‌ர் க‌ண்டிப்பாக‌ எல்லா பின்னூட்ட‌ங்க‌ளுக்கும் (அவை 100 இருந்தாலும்) ப‌தில் சொல்வர். ஸ்மைலிக்கு கூட‌ " ந‌ன்றி பாஸ்க‌ர்" என‌ ப‌தில் சொல்வ‌து ஆச்ச‌ர்ய‌ம்தான்.// நண்பா, தன் நேரத்தைச் செலவழித்து பின்னூட்டம் போடறாங்க..அது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்..அதனால தான் நன்றியோ பதிலோ சொல்லுறோம்! நீங்களும் தானே..

செங்கோவி சொன்னது…

கடைசி படை கமெண்ட் சூப்பர் ஜோதி!

jothi சொன்னது…

வாங்க‌ செந்தில்,.. ந‌ன்றி.

என‌க்கும் அந்த‌ வ‌டை மேட்ட‌ர் தெரிய‌ல‌,. யாராச்சும் விள‌க்க‌ம் அளித்தால் ந‌ன்றாக‌ இருக்கும்

jothi சொன்னது…

//- ஒரு நல்ல ப்ளாக்கர் -
- ஒரு நல்ல எழுத்தாளன் -//

இல்லை க‌ம‌லேஷ்.

என‌க்கொன்றும் வித்தியாச‌ம் இருப்ப‌தாக‌ தோன்ற‌வில்லை.

வேண்டுமென்றால் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர் ம‌ற்றும் பிர‌ப‌ல எழுத்தாள‌ர் ரெண்டுக்கும் நீங்க‌ள் சொன்ன‌ ம‌லைக்கும் ம‌டுவுக்கும் வித்தியாச‌ம் இருக்கிற‌து. கார‌ண‌ம் அனைவ‌ரும் தெரிந்த‌தே,..

இந்த‌ ப‌திவு வேறு திசையை நோக்கி ந‌க‌ர‌ வாய்ப்பில்லை.

வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி க‌ம‌லேஷ்

jothi சொன்னது…

//அப்படிப் போடு அருவாள.... எப்புடி? நம்ம கமெண்ட்டு....//

வாங்க‌ த‌மிழ்வாசி,..

ஆட்டைய‌ போடு அருவாள,..

வ‌ந்து ப‌டிக்கிறேன் க‌ண்டிப்பாக‌

jothi சொன்னது…

//அது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்..அதனால தான் நன்றியோ பதிலோ சொல்லுறோம்! நீங்களும் தானே..//

same blood,..

ப‌ழைய ப‌திவ‌ர்க‌ள் ஓர‌ள‌வு க‌மெண்ட் போட்டு விட்டு போய்விடுவார்க‌ள். ஆனால் புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் அவர்க‌ளின் க‌மெண்டுக்கு ந‌ம் ப‌தில் என்ன என‌ க‌ண்டிப்பாக‌ திரும்ப‌ வ‌ந்து பார்ப்பார்க‌ள். பதில் ஏதும் இல்லை எனும் போது எரிச்ச‌ல் அடைய‌ வாய்ப்பிருக்கிற‌து. எல்லோருக்கும் திற‌மை உள்ள‌து.த‌ன‌க்கு தெரிந்த‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் ப‌தில் அளித்து ஏற்ற‌த்தாழ்வு பார்ப்ப‌து த‌வறு.

jothi சொன்னது…

ந‌ன்றி செங்கோவி

தமிழ் உதயம் சொன்னது…

குடிச்சிட்டு, ஸாரி படிச்சிட்டு தான் பின்னூட்டம் போடுறேன். நல்லா எழுதி இருக்கீங்க.

jothi சொன்னது…

வாங்க‌ த‌மிழ் உத‌ய‌ம்,.. ந‌ன்றி

//குடிச்சிட்டு, ஸாரி படிச்சிட்டு தான் பின்னூட்டம் போடுறேன்.//

அட‌டா,.. க‌தைக்க‌ ச்சீ க‌லாய்க்க‌ ஆர‌ம்பிச்சிடுங்க‌ளே,..

Prathap Kumar S. சொன்னது…

கீ போர்ட் சொதப்பி எழுத்துப்பிழையால் வரும் கமண்ட்டுகள் செம காமெடி...:)

இதுல சிலபேரு கமண்ட் போட்டு தன்னோட பதிவுக்கு விளம்பரம் வேற குடுப்பாய்ங்க...
அது அதைவிட கொடுமை...:))

பெயரில்லா சொன்னது…

உள்ளேன் ஐயா

பெயரில்லா சொன்னது…

இதுல சிலபேரு கமண்ட் போட்டு தன்னோட பதிவுக்கு விளம்பரம் வேற குடுப்பாய்ங்க...
அது அதைவிட கொடுமை...://
அவங்க இங்கியே இருக்காங்க ஹிஹி

jothi சொன்னது…

வாங்க‌ நாஞ்சில் பிர‌தாப்,..

மிக்க‌ ந‌ன்றி.

//இதுல சிலபேரு கமண்ட் போட்டு தன்னோட பதிவுக்கு விளம்பரம் வேற குடுப்பாய்ங்க...
அது அதைவிட கொடுமை...:))//

விடுங்க‌ பின்னூட்ட‌த்திற்கு இல‌வ‌ச‌ இணைப்பா வ‌ருது,.. இதையெல்லாம் க‌ண்டுக்க‌ கூடாது. இப்ப‌டிதான் விள‌ம்ப‌ர‌த்துட‌ன் கூடிய‌ ஒரு இடுகையை ப‌டித்தேன், ந‌ன்றாக‌த்தான் இருந்த‌து,. ந‌ன்றாக‌ இருக்கும் ஒன்றுக்கு ஏன் இவ்வ‌ள‌வு விள‌ம்ப‌ர‌ம் கொடுக்கிறார் என‌ தெரிய‌வில்லை

jothi சொன்னது…

//உள்ளேன் ஐயா//

வாங்க‌ ந‌ண்ப‌ரே

//அவங்க இங்கியே இருக்காங்க ஹிஹி//
இதையெல்லாம் டீல்ல‌ விடுங்க‌

எஸ்.கே சொன்னது…

வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html

jothi சொன்னது…

அறிமுக‌த்திற்கும் ஊக்க‌த்திற்கும் மிக்க‌ ந‌ன்றி எஸ்.கே.

என்ன‌டா மாங்கு மாங்குன்ன‌ எழுதி ஒரே ஒரு பின்னூட்ட‌ம்தானே இருக்கிற‌து என‌ அந்த‌ ப‌திவிற்கு வ‌ருத்த‌ப்ப‌ட்டேன்,. உங்க‌ளின் ஊக்க‌ம் அந்த‌ க‌வ‌லையை போக்கி விட்ட‌து. ம‌ற்ற‌ அறிமுக‌ங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்.

மீண்டும் மிக்க‌ ந‌ன்றி

பெசொவி சொன்னது…

:)

nice presentation

jothi சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
jothi சொன்னது…

மிக்க‌ ந‌ன்றி பெய‌ர் சொல்ல‌ விருப்ப‌மில்லை

கருத்துரையிடுக