சனி, 19 மார்ச், 2011

2030 - ‍ ம‌ண‌ம‌க‌ளுக்கு என்ன‌ செய்ய‌ப் போறோம்?


அதிர்ச்சியாக‌த்தான் இருந்த‌து அந்த‌ செய்தியை ப‌டித்த‌வுட‌ன்.

இன்னும் 20 ஆண்டுக‌ளில் ஆண்க‌ளின் எண்ணிக்கை பெண்க‌ளை விட‌ 20% அதிக‌மாக‌ இருக்கும். அதாவ‌து 120ஆண்க‌ளுக்கு 100 பெண்க‌ள் என்ப‌து க‌ண‌க்கு. இது மிக‌ ஆப‌த்தான‌ ஆண்/பெண் விகிதாச்சார‌ ச‌ம‌னிலை பிற‌ழ்ச்சி.

இன்னும் ப‌ல‌ மாநில‌ங்க‌ளில் ஆண் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஈர்ப்பு இன்னும் அதிக‌மாக‌ இருக்கிற‌தாம்.ப‌ஞ்சாப்,டெல்லி, குஜ‌ராத், போன்ற‌ மாநில‌ங்க‌ளில் 100:125 என இருக்கிற‌து.ஆந்திர‌ பிர‌தேஷ், கேர‌ளா மாநில‌ங்க‌ளில் ம‌ட்டுமே ஓர‌ள‌வு எண்ணிக்கை ஆறுத‌லாக‌ உள்ள‌து (100:105).


தெற்கு கொரியா ம‌ட்டுமே க‌ருவிலிருக்கு குழ‌ந்தையை ஆணா பெண்ணா என‌ பார்ப்ப‌த‌ற்கு த‌டை செய்து க‌ண்டிப்பாக‌ க‌வ‌னித்து வ‌ருகிற‌து. இந்தியாவில் க‌ருவிலிருக்கும் குழ‌ந்தை ஆணா பெண்ணா என‌ பார்ப்ப‌து இன்னும் ச‌க‌ஜ‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டு இருக்கிற‌து.


இன்று கொடுமை என்ன‌வென்றால் முத‌ல் குழ‌ந்தை பெண் என்றால் அடுத்த‌ குழ‌ந்தை பெண்ணாக‌ இருப்ப‌த‌ற்கு 54% வாய்ப்புக‌ள் இருக்கின்ற‌ன. முத‌ல் இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் பெண் என்றால் அடுத்த‌ குழ‌ந்தை 20% ச‌த‌வீத‌ம்தான் பெண்ணாக‌ வாய்ப்புக‌ள் இருக்கின்ற‌ன‌. கார‌ண‌ம் க‌ருவிலிருக்கும் குழ‌ந்தையை ஸ்கேனில் பார்த்து ஆண் என்றால் ம‌ட்டும் வ‌ள‌ர‌விடுவ‌து, இல்லை என்றால் கொன்றுவிடுவ‌து. அதுதான் இன்று ந‌ட‌ந்து கொண்டு இருக்கிறது.

துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ முத‌ல் குழ‌ந்தை ஆண் என்றால் அப்ப‌டியே இன்னும் நிறுத்தி விடுவ‌தும் உண்டு. இப்ப‌டி செய்தால் எப்ப‌டி பெண் குழ‌ந்தைக‌ள் பிற‌க்கும்?.



120 ஆண்க‌ளுக்கு 100 பெண்க‌ள் எனும் போது என்ன‌தான் செய்ய‌முடியும்?? அப்போது என்ன‌வெல்லாம் நட‌க்க‌ வாய்ப்பிருக்கிற‌து??? நிறைய‌ ச‌மூக‌ ரீதியான‌ பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ர‌ வாய்ப்பிருக்கிற‌து. பின் வ‌ருப‌வை காமெடி போல‌த் தோன்றினாலும் துர‌திர்ஷ்ட‌மாக‌ ந‌ட‌ந்தால் ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை.

1. நீங்க‌ள் பெண்ணின் பெற்றோருக்கு வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுக்க‌ வேண்டி இருக்க‌லாம். ஆண்க‌ள் பெண்ணிற்கு வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுக்க‌ வேண்டும் என‌ அர‌சாங்க‌மே அனும‌தி அளிக்க‌லாம்.

2. இப்போது ப‌ள்ளியில் காலையில் நாலு ம‌ணிக்கே போய் நிற்ப‌து போல், பெண் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌வுட‌ன் அட்வான்ஸ் புக்கிங் ப‌ண்ண‌ வேண்டி இருக்க‌லாம். அதை நீட்டிக்க‌ மாத‌ம் மாத‌ம் நீங்க‌ள் சேவை வ‌ரி க‌ட்ட‌ வேண்டி வ‌ர‌லாம்.

3. அந்த‌ பெண் எந்த‌ ஆணையும் பார்த்துவிடாம‌ல் இருக்க அத‌ற்கு ஒரு த‌னியாக‌ சிற‌ப்பு பாதுகாப்பு ப‌டை வ‌ழ‌ங்கி பாதுகாக்க‌லாம்,. (அப்போது காவ‌ல‌ன் ப‌ட‌த்தை ரீமேக் செய்ய‌லாம்,. யாருக்குத் தெரியும் அது உண்மை க‌தை என‌க்கூட‌ விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ப்ப‌ட‌லாம்).

4. எத்தியோப்பியா, நைஜீரியா, சோமாலியா, இல‌ங்கை போன்ற‌ நாடுக‌ளில் இருந்து இந்திய‌ ஆண்க‌ளுக்கு பெண் எடுக்க‌லாம்.

4. பெண்க‌ள் த‌ன் பேச்சை கேட்காத‌ ஆண் க‌ண‌வ‌ர்க‌ளை யோசிக்காம‌ல் விவகார‌த்து செய்ய‌லாம்.

5. பெண்ணுக்கெதிரான‌ பாலிய‌ல் குற்ற‌ங்க‌ள் அதிக‌மாக‌லாம், உதார‌ண‌மாக‌ பெண் கிடைக்காம‌ல் காய்ந்து போன‌ ந‌ப‌ர்க‌ள் அப்பாவி பெண்க‌ளை க‌ட‌த்தி க‌ற்ப‌ழிக்க‌லாம்.

6. விப‌ச்சார‌ம் ஒரு ப‌ண‌ம் கொழிக்கும், அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ தொழிலாக‌ இருக்கலாம். அத‌னால் பால்வினை நோய்க‌ள் அதிக‌மாகலாம்.

மாத‌ராய் பிற‌ந்திட‌ மாத‌வம் செய்திட‌ வேண்டும் என‌ பார‌தி சொன்ன‌து இன்னும் இருப‌து வ‌ருட‌ம் க‌ழித்துதான் உண்மையாகும் போலிருக்கிற‌து.

ச‌ந்த‌தி த‌ரும் பெண்க‌ளுக்கு துணையிருப்போம் க‌ருவிலிருந்து,..

..