- லைட் சுவிட்சுகள் மிக சிறந்த மின்சார சேமிப்புகள். விளக்கு எப்போதெல்லாம் தேவையில்லையோ அப்போதெல்லாம் அணைத்திடுங்கள். தேவைப்படும் விளக்குகளை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக பூஜையறைக்கு அதற்கான குறைந்த செயல்திறன் பல்பை மட்டும் பயன்படுத்துங்கள். முழு அறையையும் ஒளியூட்ட வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் ஒழிய.
- தூசுகள் உங்கள் விளக்கின் ஒளியில் 50% விழுங்கிவிடும். எனவே பல்புகளின் வெளிப்புறம் உள்ள தூசிகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள்.
- வீட்டில் உருண்டை விளக்கு (அதாங்க குண்டுபல்ப்) இருந்தால் முதலில் அதனை மாற்றிவிட்டு ப்ளரசென்ட் லைட்டோ, குழல் விளக்கோ (டியூப் லைட்) மாற்றுங்கள். இதனால் வெளிச்சத்திற்காக நாம் வழக்கமாக செலவிடும் மின்சாரத்தில் 75% சதவீதம் வரை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக உருண்டை 60watt தரும் வெளிச்சத்தை 15wattப்ளூரசெண்ட் விளக்கு தந்துவிடும். உருண்டை விளக்கினால் அறைக்கு அதிகம் வெப்பம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்
- கோடை கால வெயிலுக்கு எதிராக முதலில் காற்றாடி (பேன்) பயன்படுத்துங்கள். வேறு வழியில்லை எனும் போது AC பயன்படுத்த ஆரம்பியுங்கள். காரணம் அனைவருக்கும் தெரிந்ததே. பேன் ஓடும் போது ஒரு மணி நேரத்திற்கு 30 பைசா செலவாகும்போது ஏ.சிக்கு 7 ரூபாய் வரை செல்வாகிறது.
- வீட்டிற்குள் வெயில் வருவதற்கான வழிகளை (ஜன்னல் போன்றவை) மரங்களையோ இல்லை மறைப்பான்களையோ பயன்படுத்துவதால் 40% வரை ACக்கான மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
- ஏசி வெப்பனிலையை மிக குறைந்த நிலையில் (set@ 21 செல்சியஸ்) வைப்பதற்கு பதில் கொஞ்சம் மிதமான நிலையில் (set@ 25 செல்சியஸ்) வையுங்கள். இதனால் கணிசமான அளவில் (10-15%) மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.
- நல்ல ஏசி 30 நிமிடத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் குளிரூட்டிக்கொண்டு இருக்கும். இதனால் டைமரில் வைத்து குறிப்பிட்டகால இடைவெளியில் அணைத்து வையுங்கள். ஏசி போட்டிருக்கும் போது கதவுகளை மூடியே வைத்திருக்க குழந்தைகளையும் பழக்கப்படுத்துங்கள். ஏசி பிள்டர்களை மாதம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். செப்பனிடப்படாத ஏசி பிள்டர்கள் ஏசியின் ஆயூட்காலத்தை குறைப்பதுடன் அதிக மின்சாரத்தையும் இழுக்கிறது.
- குளிர்சாதனப்பெட்டியை வெப்பமான இடங்களில் வைப்பதை தவிருங்கள். உதாரணமாக நேரடியாக சூரிய வெளிச்சம் படுதல், ஓவன் அருகில் வைத்தல் போன்றவை. ப்ரிட்ஜின் உட்புற லைட் கதவு மூடி இருந்தாலும் வெளியே வெளிச்சம் தெரிந்தால் கதவின் ரப்பரை மாற்றுங்கள்.
- ப்ரிட்ஜில் உள்ள மோட்டர்/கம்ப்ரஸ்ஸர் தொடர்ந்து வெப்பத்தை வெளியே விடுவதால், ப்ரிட்ஜின் பின் புறத்தை சுவற்றை ஒட்டி வைக்கதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு வைப்பதால் காற்று சுழற்சியினால் ப்ரிட்ஜ் அதிகம் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
- சூடான பொருட்கள் ஆறின பின் உள்ளே வைக்கவும். அதே போல் ப்ரிஜில் வைத்த மாவை எடுத்து தோசை சுடும் போது ஒரு அரை மணி நேரம் முன்னதாக வெளியே எடுத்து வைத்துவிடுங்கள். இது மின்சாரத்தை சேமிக்க உதவாது. மாறாக கேசினை பயன்படுத்தும் அளவை குறைக்கும்.
- ப்ரிட்ஜ் பின்னால் உள்ள காயில்களில் தூசி படிந்தால் துடைத்து விடவும்,. அதிகமான தூசி மின்சாரத்தை அதிகப்படுத்தும்.
- ஹீட்டர்களை தேவையில்லாமல் அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஹீட்டர்களின் உள்ளே உள்ள coilகளை முறையாக சுத்தம் செய்யவும். சுத்தப்படுத்தபடாத coilகளினால் அதிகம் மின்சாரம் செலவாகிறது
- கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தாமல் இருக்கையில் அணைத்துவிடுங்கள். அப்படியே CPU மட்டும் பயன்படுத்த வேண்டுமென்றால் மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
- பேட்டரி சார்ஜர், லேப்டாப் பவர் கனெக்டர் போன்றவை மாட்டி இருந்தாலே மின்சாரத்தை இழுக்கும். எனவே அவற்றை பயன்படுத்தவில்லை என்றால் அணைத்துவிடுவது நல்லது.
- கம்பியூட்டர்களை ஸ்லீப் மோடில் வைப்பதால் 40% வரை மின்சாரம் மிச்சப்படுத்தலாம்
மின்சாரம் தொட்டால்தான் ஷாக் அடிக்கும்,. சம்சாரம் நம்மை பார்த்தாலே ஷாக் அடிக்கும். அதனால்தான் சம்சாரம் அது மின்சாரம்,.. ஹி ஹி இது சும்மா,.. வீட்டிற்கு எஜமானி சம்சாரம்தானே,. எனவே நாம் மிச்சப்படுத்தும் ஒவ்வொரு கிலோ வாட்டு(kW)க்கும் நம் மனைவியின் பங்கு மிக முக்கியம்.அதற்காக ஆண்களுக்கு சம்பந்தமில்லை என அர்த்தமாகாது.
-----------------------------------------------------------------------------------------
இன்று ஏன் இந்த பதிவு என நினைக்கிறார்களா?
நீங்கள் TV போட்டுக்கொண்டு பேப்பர் படிக்கிறீர்கள். உண்மையில் பார்த்தால் உங்களுக்கு தேவைப்படாத மின்சாரத்திற்கு எங்கோ ஒருவர் நிலக்கரியை எரித்து மின்சாரத்தை அனுப்பி வைக்கிறார். ஆனால் அதை நாம் பயன்படுத்தவில்லை. இதனால் சூழ்னிலை சூடாகிறது, பனிக்கட்டி உருகிறது, ஓசோன் ஓட்டை ஆகிறது, மழை பொய்கிறது. இப்படி நிறைய.இதன் விளைவுகளை இன்று முழுமையாக அனுபவிக்காவிட்டாலும் நம் சந்ததிகள் கண்டிப்பாக அனுபவிக்க நேரும். ஆதலால் மின்சாரத்தை சேமிப்பு எந்தளவிற்கு முக்கியமோ அதைவிட மிக முக்கியம் பயன்படுத்தப்படாமல் செலவாகும் மின்சாரம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முதன்முதலில் பூமி நாள் 2007ல் ஆல் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்று இரவு 8:30 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைப்பதால் மிக அதிகமான அளவு கொண்ட மின்சாரம் சேமிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு 100 மில்லியன் மக்கள் பங்கெடுத்தார்கள். நாமும் இதை கண்டிப்பாக அமல் படுத்த முயற்சி செய்வோம். (தமிழ் நாட்டில் ஏற்கனவே ரொம்ப பவர்கட் எனக்கேள்விப்பட்டேன்)
நாம் மிச்சப்படுத்தும் ஒரு குண்டுபல்பின் மின்சாரத்தால் வரும் பலன்கள் நிறைய, அதனால் இந்த பதிவை கண்டிப்பாக தொடர்கிறேன் (பின்னூட்டமோ, ஓட்டோ வரவில்லை ஒன்று கூட வரவில்லை என்றாலும்),.
.