செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ரிஸ்க் எடுக்கலாமா?

கதை 1

ஒரு ஊரில் ஒரு கண்டிப்பான மேனேஜர். இருந்தார். அவருக்கு எல்லாரும் மிக சரியாக வேலை செய்ய வேண்டும், ஓபி அடிக்கக்கூடாது என்பதில் மிக கண்டிப்பானவர். ஆனால் அவர் மிக நல்லவர் என எல்லோரும் புகழ வேண்டும் நினைப்பவர். (அவர் பெயர் ஜோதி இல்லை என்பது இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்குமே,..)

கம்பேனி நஷ்டமானாலும் CEOவும் அவரின்பால் மிக்க மரியாதை வைத்திருந்தார். உன்னுடைய கண்டிப்பே உன் பலம் பார்த்தசாரதி என அடிக்கடி புகழ்வார்.

அன்று பார்த்தசாரதி CEOவுடன் ரவுண்ட்ஸ் முடித்து திரும்பினார். அப்போது அவர் ஆபீஸ் வாசலில் பைலுடன் உட்கார்ந்தவாரே பெஞ்ச்சில் தூங்கிக் கொண்டிருக்கும் அவனைக் கண்டதும் அவருக்கு கோபம் தலைக்கேறியது. உள்ளே வரசொல்லிவிட்டு அறைக்குள் சென்று நேராக பீரோவை திறந்தார்.

"இந்தா பத்தாயிரம் உன் மூணு மாத சம்பளம், இனிமேல் இந்தபக்கம் தலை வைத்துபடுக்காதே, கிளம்பு"

"சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

"கிளம்புரியா, இல்லை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளவா????,.. எல்லாரும் நல்லா கவனிச்சுகுங்க, ஒழுங்கா வேலை செய்யலைன்னா,. எல்லாம் வீட்டுக்கு போக வேண்டியதுதான்"

CEO முன் முகம் சிவப்பாகி கர்ஜித்தார். பயத்தில் தூங்கியவன் ஓடிவிட்டிருந்தான்.

" இந்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவையா பார்த்தசாரதி??"

"வேற வழி இல்லை சார், இல்லைன்னா நமக்கு வர்ர நஷ்டம் ஜாஸ்தியாகிட்டே இருக்கும், என்னம்மா ரோசி பயந்துட்டியா" ஸ்டேனோவைப்பார்த்து கேட்டார்,.

"இல்லை சார், வந்தது என் சொந்தக்காரர்தான் resume கொடுக்க வந்திருந்தார். நீங்க கத்தியதில் பயந்து ஓடிட்டார்,.. நாளை அந்த பத்தாயிரத்தை வாங்கி கொடுத்திடுரேன், sorry sir"

இப்போ CEO பீரோவை திறந்து கொண்டிருந்தார்,.

நமக்கு ஆப்பு வர்ரணும்னா அது நம்மளாலதான் வரும்,..Assumptions are always dangerous.


----------------------------------------------------------------------------------------------
கதை 2

ஒரு ஊரில் ஒரு வாலிபன் இருந்தான். அவன் மிக்க கடவுள் பக்தி கொண்டவன். அதுவும் அவனிற்கு விநாயகர் என்றால் மிக்க இஷ்டம். அவனிற்கு ஒரு காதலி இருந்தாள். அவளுடன் இணைய வேண்டும் என்று அவனிற்கு மிக்க ஆசை.




ஒரு நாள் கடவுளிடம் தான் ஒரு கணமாவது அவளுடன் இணைய வேண்டும் என்ற தன் அவாவை சொன்னான். முதல்முறை நம்மிடம் ஒன்று கேட்கிறானே என பிள்ளையாரும் ஒப்புக்கொண்டார்.

அவன் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தான். அவனுடன் இணைவது ஒரு "Fevicol bond" போல இருக்கவேண்டும் என விரும்பினான்.

அடுத்த நாள் அவள் காதலியிடம் பேசிப்பார்க்கலாம் என பிள்ளையார் அவளிடம் அவன் வேண்டுகோளை சொன்னார்.

"பிள்ளையாரே, நான் இன்னோருவரை காதலிக்கிறேனே,.." இது அவள்.

பிள்ளையாரும் "கவலைப்படாதே,.. நான் உன் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்,.. நீ என் வேண்டுகோளை நிறைவேற்று" என்றார்.

"சரி, அவனுடன் ஒரு கணம் இணைவது எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை. அதற்கு உன் மேற்பார்வார்வையில், ஆசியுடன், சாட்சியுடன் தான் நடக்க வேண்டும் என சொன்னாள். பிள்ளையாரும் என் ஆசி கண்டிப்பாக உனக்கு உண்டு என சொன்னார்.



அடுத்த நாள் காலையில் அவர்கள் இருவரும் இரண்டரக் கலந்தார்கள்,..

எப்படி,..???

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

இப்படிதான்,.

again "Assumption always dangerous".

[ அய்யயோ,... இந்த பதிவு எனக்கு நானே வெச்சுக்கிர ஆப்பு மாதிரி இருக்கே, ஆப்புன்னாலும் சமாளிக்கிடலாம்,.. தோப்புன்னா என்ன பணறது?? ],....



.

4 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

ஏங்க இப்படி அநியாயம் பன்றீங்க.... பாவம் புள்ளையார் வேற இதுக்கு சாட்சியா...இதை மட்டும் புள்ளையாரு படிச்சாரு உங்களுக்கு சங்குதான்.

ஹ ஹ ஹ... அந்த நிழல் படத்தை வச்சி இந்த கதையை உருவாக்கினிங்களா..ரொம்ப நல்ல creativity . முதல் கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. தொடருங்கள்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

இரண்டாவது சூப்பர்:)

jothi சொன்னது…

வாங்க கமலேஷ். மிக்க நன்றி,.. நம்ம பிள்ளையாருதானே,..கோபிச்சுக்கமாட்டார்

jothi சொன்னது…

வாங்க நிகழ்காலத்தில்,.. வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி

கருத்துரையிடுக