வெள்ளி, 1 அக்டோபர், 2010

தூக்கணாங்குருவி, சுவாரஷ்யங்களின் பெட்டகம்,..


ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,..

தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம்.
இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,..

தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான்.

வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது.



கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு (??) போட்டு காட்டபடும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளை சார்ந்தது. (இவைகளிலுமா??)


செழிப்பான நீர் பகுதி, உயரமான பனை/தென்னை மரம், போன்ற இடங்களில் கூட்டை கட்டுகின்றன. கூட்டம் கூட்டமாக வாழும் இவைகளின் கூட்டத்தில் 20-30 வரை கூடுகள் இருக்கும். ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன.




கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி வாசலில் இருந்து பறந்து செல்லும் பெண் குருவிக்களுக்கு சமிக்கை கொடுக்கும் (என்னை பார் என் கூட்டை பார்). பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும். அதற்கு திருப்தி இருந்தால் இணைவிற்கு ஓகே சொல்லிவிடும்.



பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண்குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார் போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. சில நேரங்களில் உட்கட்ட அமைப்புகளில் திருப்தியுறாத பெண் பறவைகள் தாங்களே தன் விருப்பத்திற்கு ஏற்றது போல கட்டிக்கொள்கின்றன.(அப்போது ஆண் பறவைகள் மிக டென்சனாய் இருக்கும்,.. கிளைண்ட் பிடிக்கலைன்னு project கேன்சல் பண்ணிட்டா??),..



ஆனால் கூட்டின் வடிவமைப்பை விட அது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறதா என்பதே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் கூடு முழுமையடையும்,. பெண் பறவை 3-4 முட்டைகளை இடும் (அதுக்கு மேலே விட்டா கூடு கீழே விழுந்திரும்மில்ல,..),. பெண்பறவை 15 நாள் வரை அடைகாக்கிறது.குஞ்சு ஓரளவிற்கு வளர்ந்து பறந்து சென்றுவிடட்டவுடன் ஆண் குருவி அடுத்த பெண் குருவிக்கு அடுத்த கூட்டை காட்ட ஆரம்பிக்கிறது. பறவைக்குஞ்சு அருகில் உள்ள பகுதிகளுகு இடம் பெயர்கிறது. அப்படி இடம் பெயர்ந்தாலும் அதி இரண்டு கீ.மீக்குள்தான் இருக்கும்,.




இவை ஆச்சர்யம் வாய்ந்த புத்திசாலிப்பறவைகள். நகரங்களில் இருப்பவர்கள் இரவில் ஒளி தரும் மின்மினிப்பூச்சிகளை பார்த்திருக்க வாய்ப்பில்லை,.. இந்த தூக்கணங்குருவிகள் இந்த பூச்சிகளை எடுத்து ஈரமான களிமண்ணில் வைத்து தன் கூட்டின் சுவற்றில் ஒட்டிவிடும். இதனால் இரவு கூட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும்.

வழக்கமாக நாங்கள் கிராமத்தில் முதுகு சொறிய இவற்றின் பழைய கூட்டைப் பயன்படுத்துவது உண்டு. இந்த முறை ஊருக்கு போன போது நைலானாலான தேய்ப்பான் கிடைத்தது. என்னவென்று விசாரித்தால் நாமதான் நெல்லும் போடறதில்ல, கம்பும் போடறதில்லை, எப்படி குருவி தென்னை மரத்தில் கூட கட்டும் என பதில் வந்தது,. உடம்போடு ஒட்டாத அந்த நைலான் உதவியால் அழுக்கு தேய குளித்துவிட்டு வந்தேன். ஆனால் மட்டும் அந்த குற்ற உணர்ச்சி அப்படியே தொக்கி நிற்கிறது,.. தூக்கணங்குருவிகளின் மறைவு யாரால்??


நம் குழந்தைகள் இன்னும் எவற்றையெல்லாம் இழக்கப்போகின்றனர் எனத் தெரியவில்லை,.. அவர்களின் தூக்கணாங்குருவிகள் கம்ப்யூட்டரோடு முடிந்துவிடுமா??

.

32 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

உண்மையான சுவராஸ்யங்களின்
பெட்டகம்.

Prathap Kumar S. சொன்னது…

ச்சே..அட்டகாசம்... தனது பெண்குருவியை கவர பகட்டாக கூட்டை கட்டுவது தமாசாக இருக்கிறது. நானும் சின்னவயசுல மரத்து இந்த கூட்டை பார்த்துருக்கேன். இப்போ மரத்தையும் காணோம் கூட்டையும் காணோம்... மனிதர்களின் கான்க்ரீட் கூடுதான் இருக்கிறது.:)

jothi சொன்னது…

வாங்க கமலேஷ்,.. உண்மைதான்,.

jothi சொன்னது…

//இப்போ மரத்தையும் காணோம் கூட்டையும் காணோம்... மனிதர்களின் கான்க்ரீட் கூடுதான் இருக்கிறது.:) //

அழகாக சொன்னீர்கள் நாஞ்சில்,.. தூக்கணாங்குருவிகளின் கூட்டிற்கு ஃபேன் தேவையில்லை,.. ஆனால் நமக்கு??

ஆனந்தி.. சொன்னது…

உண்மை தான் ஜோ..இதெல்லாம் இந்த புகைப்படங்களில் தான் இனி ஆசை தீர பார்த்துக்கலாம் போலே..மரம் இருந்தால் தானே பறவை கூடு கட்ட..எல்லாமே வெட்டி பிளாட் போட்டு வித்தாச்சே..அப்புறம் எங்க இதெல்லாம்??

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

மிக அருமையான பதிவு மற்றும் தகவல்கள் அண்ணா..

சில மாதங்களுக்குப் பிறகு ஃபார்ம்க்கு வந்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

jothi சொன்னது…

வாங்க அனந்தி, தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்,..

இயற்கையினை பேணாமல் நாம் செய்துகொண்டிருப்பது மிகப்பெரிய தவறு,. அதை காலம் உணர்த்தும்,..

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி,..

என்ன பதிவுகளையே காணோம்,.. ஹிட் ஆகவில்லை என வருத்தம் கொள்ளாதீர்கள்,.. தொடர்ந்து எழுதுங்கள்,..

jothi சொன்னது…

//நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life //


நாட்டி சொல்லிட்டு நாட்டியாவே அனுப்பி இருக்கீங்க போல இருக்கு,.. இங்க கத்தாரில் link போகலை,.. site is blocked, so I am removing your comment (first time in my blog!!)

Extremly sorry

jothi சொன்னது…

//மிக அருமையான பதிவு மற்றும் தகவல்கள் அண்ணா..

சில மாதங்களுக்குப் பிறகு ஃபார்ம்க்கு வந்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். //

வாங்க செந்தில்,.. எப்படி இருக்கீங்க,..
இன்னும் மெனக்கெட்டு பதிவு எழுத ஆரம்பிக்கல்லை,. வந்து ரெண்டு வருசமாச்சு இன்னும் உருப்படியா ஒரு பதிவையும் போடலைன்னு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு,.. பார்க்கலாம் செந்தில்,.

அடிக்கடி வாங்க

ஆ.ஞானசேகரன் சொன்னது…

மிக அருமையான பகிர்வுங்க ஜோதி.... புகைப்படங்கள் மற்றும் உங்களின் அலசல் அழகும் ஆதங்கமும் இருக்கின்றது.... இன்னும் தொடருங்கள்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

jothi சொன்னது…

//மிக அருமையான பகிர்வுங்க ஜோதி.... புகைப்படங்கள் மற்றும் உங்களின் அலசல் அழகும் ஆதங்கமும் இருக்கின்றது.... இன்னும் தொடருங்கள்//

வாங்க ஞானசேகரன்,.. கருத்திற்கும் பகிர்விற்கும் நன்றி,..
என்ன பண்றது,.. நம்மால் பதிவு போடமாடுமே போடமுடிகிறது,..

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அழிந்து வரும் பறவை இனத்தை காக்க....அருமையான பதிவை எழுதினீர்கள் வாழ்த்துகள்....அந்த பறவைகள் எல்லாம் சேர்ந்து உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லட்டும்...எங்கள் வாழ்த்துகளுடன் சேர்ந்து....

ஜெயந்தி சொன்னது…

உங்கள் எழுத்துக்கள் எல்லாம் சிந்திக்க வைக்கிறது. நீங்க திண்டுக்கல்லா நானும் திண்டுக்கல்தான்.

jothi சொன்னது…

வாங்க குரு,..வாழ்த்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

jothi சொன்னது…

வாங்க ஜெயந்தி,. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கூட,..

உங்கள் பதிவுகளை ஏற்கனவே படித்திருக்கிறேன்,. நீங்கள் திண்டுக்கல் என சொல்லும்போது மிக்க மகிழ்ச்சி,.. நானும் திண்டுக்கல்தான்,..

எஸ்.கே சொன்னது…

தூக்கணாங்குருவி படங்கள் மிக அழகாக உள்ளன! நன்றி!

jothi சொன்னது…

many thanks S K

Sriakila சொன்னது…

அழகானப் படங்கள்!

ரசிக்க வைக்கிறது.

jothi சொன்னது…

thanks srikila,..

ஆனந்தி.. சொன்னது…

brother jothi..where are you??

jothi சொன்னது…

thanks Ananthi,..I am in chennai and left qater for some reasons,.. will come back to blogs soon,.. what happened to you? No pages nowadays? please keep posting,..

ஆனந்தி.. சொன்னது…

oh..jothi..happy to see your reply...ddnt u see my post..??? take care brother..:))

சிவகுமாரன் சொன்னது…

ஆகா. ஆச்சரியமான தூக்கனாங் கூட்டைப் பற்றி மிக அருமையான பதிவு.

அன்புடன் மலிக்கா சொன்னது…

குருவிகளின் சாம்ராஜ்யத்தை
கூடுகட்டி காட்டும் அழகே அழகுதான். மிக ஆகிய புகைப்படங்கள் அருமையான விளக்கவுரை.

//நம் குழந்தைகள் இன்னும் எவற்றையெல்லாம் இழக்கப்போகின்றனர் எனத் தெரியவில்லை,.. அவர்களின் தூக்கணாங்குருவிகள் கம்ப்யூட்டரோடு முடிந்துவிடுமா//

உன்மைதான் அந்த கவலை மனதை ஆட்க்கொள்கிறது அடிக்கடி..

Vijay சொன்னது…

அருமையான பதிவு. நகரங்களில் வாழும் இன்றைய சந்ததியினருக்கு Discovery Channel இல் மட்டும்தான் இவற்றையெல்லாம் பார்க்க முடிகிறது.

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து!

jothi சொன்னது…

வாங்க‌ சிவ‌குமார‌ன்,.. தாம‌தமான‌ பின்னூட்ட‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும், வாழ்த்திற்கு மிக்க‌ ந‌ன்றி

jothi சொன்னது…

வாங்க‌ ம‌லிக்கா,.. தாம‌தமான‌ பின்னூட்ட‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும், வாழ்த்திற்கு மிக்க‌ ந‌ன்றி

உண்மைதான்,..இன்றைய‌ குழ‌ந்தைக‌ள் வாழ்க்கை நாலு சுவ‌றுக்குள் அட‌ங்கிவிடுகிற‌து,.. அத‌ற்கு சிட்டுக்குருவி வாழ்க்கை ப‌ர‌வாயில்லை

jothi சொன்னது…

வாங்க‌ விஜ‌ய்,.. ந‌ன்றி,.. டிஸ்க‌வ‌ரியில் பார்த்து என்ன‌ செய்வ‌து,க‌ண்ணு போற‌துதான் மிச்ச‌ம்,..

jothi சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
jothi சொன்னது…

ந‌ன்றி அருணா,..த‌மிழ் ம‌ண‌த்தில் க‌ல‌க்குங்க‌

karthik சொன்னது…

arumai ...

கருத்துரையிடுக