நிலவில் நிலை நாட்டப்பட்ட கொடி எந்தவொரு வளி நிலையும் (atmosphere) இல்லாமல் எப்படி படபடக்கிறது?
படங்களில் உள்ள பொருட்களின் நிழல்கள் வெவ்வேறு கோணங்களில் உள்ளன, TV studioவில் வரும் பிம்பங்களை போல இங்கும் அங்கும் இருக்கிறது.
வானவெளி முழுக்க விண்மீன்களால் ஆனது. ஆனால் எந்த புகைபடத்திலும் ஏன் அது விழவில்லை?
நிலவில் நிலை நாட்டப்பட்ட கொடி எந்தவொரு வளி நிலையும் (atmosphere) இல்லாமல் படபடக்கிறது?
நிலவில் கொடியானது படபடப்பதாக எந்த வீடியோவும் இல்லை, ஆம்ஸ்ராங்க் கையில் தொட்டபோது சிறிது ஆடியதை தவிர. அப்படியே ஆடியிருந்தால் அது இன்றும் தொடர்ந்து ஆடி கொண்டே இருக்கவேண்டும். காரணம் எந்த வளி நிலையும் (atmosphere) , உராய்வும் (friction) இல்லாததால் இன்றும் படபடத்துக்கொண்டே இருக்க வேண்டும்
படங்களில் உள்ள பொருட்களின் நிழல்கள் வெவ்வேறு கோணங்களில் உள்ளன, TV studioவில் வரும் பிம்பங்களை போல இங்கும் அங்கும் இருக்கிறது.
மேலே சொன்னது உண்மையானால் ஒரே ஒரு பிம்பம் மட்டும் எப்படி வருகிறது. நிறைய ஒளி மூலங்கள் இருப்பது உண்மையானால் நிறைய நிழல்கள் வரவேண்டும் இல்லையா? கூற்று தவறே.
வான்வெளி முழுக்க விண்மீன் களால் ஆனது. ஆனால் எந்த புகைபடத்திலும் ஏன் அது விழவில்லை?
புகைப்படக்காரர்கள் எடுத்தது அதிக வெளிச்சம் கொண்ட பளபளக்கும் பொருட்களை. இதனால் அதிவிசை மூடு திறன் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் மங்கலான பின் பகுதிகள் இருட்டாகவே தெரியும்.
நிலவில் விழுந்த ஷூ காலடிதடங்கள், போலியானவை. காரணம் காலடித்தடங்களை நிலைத்து வைக்க ஈரப்பதம் தேவைப்படும். இல்லையென்றால் வறண்ட மணலில் மூடிக்கொள்வது போல் மூடிக்கொள்ளும்.
நிலவில் உள்ள மணல் வெவ்வேறு அளவும், வெவ்வேறு வடிவமும் கொண்டவை. இவற்றை அச்சாக நிலை நிறுத்த ஈரப்பதமோ, உள்ளழுத்த விசைகளோ (compressible forces) தேவையில்லை. பூமியில் கூட இதே மாதிரி துகள்கள் இருக்கின்றன. தரையில் முகத்திற்கு பூசும் தூளை தூவிவிட்டு அதன் மேல் நடந்து பாருங்கள். தெரியும்.
அப்போலா நிலவில் இறங்கியதாக கூறப்படும் கல்லில் C என்ற அடையாள எழுத்து உள்ளது. அது அடையாளத்திற்காக வைக்கப்பட்ட கல். இது முழுக்க முழுக்க நாடகம்.
நாஸாவின் நெகடிவிலும், முதன் முதலில் வெளிவிட்ட புகைப்படங்களிலும் இது இல்லை. பின்னால் மீண்டும் எடுக்கையில் முடி இல்லையென்றால் நார் சிதைந்து வந்து இருக்கலாம்.
நிலவை ஆராய சென்றவர்கள் இறங்கும் போது, மீண்டும் கிளம்பும் போதும் ஏற்கனவே ஒருவர் நிலவில் நின்று அவர்களை புகைப்படம் எடுப்பதாக தெரிகிறது. நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங் என சொல்லும் போது ஏற்கனவே ஒருவர் அங்கு இருப்பது எப்படி???
ஆம்ஸ்டிராங்க்கின் சின்ன நடை (வீடியோ) ஈகில் லாண்டரின் (பயணித்த ஊர்தி) வெளியில் வைத்து இருந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது. ஆம்ஸ்டிராங்கின் மற்ற ஸ்டில் புகைப்படங்கள் மற்றொரு பகுதியிலிருந்து ஆல்டரினால் எடுக்கப்பட்டது.
எப்படி.??? எல்லாம் குழப்பமா இருக்கா??? எனக்கும் அப்படிதான் இருக்கு. இந்த குழப்பத்தில ஓட்டு போடவும், பின்னூட்டம் இடவும் மறந்திடாதிங்க,..
அப்பதான் பூமியின் எடையை, நிலவின் எடையை எப்படி கண்டுபிடிக்கிறாங்கன்னு பின்னால் வரும் பதிவுகள்ள .சொல்லுவேன்
15 கருத்துகள்:
பழைய கருத்துகள்தான்.. இருப்பினும் ஆழமான பகிர்வு பாராட்டுகள் நண்பா
//பழைய கருத்துகள்தான்.. இருப்பினும் ஆழமான பகிர்வு பாராட்டுகள் நண்பா//
ஆம், நண்பரே. கடந்த நாற்பது வருடங்களாக இது நடக்கிறது. ஆனால் எனக்கு இப்போதுதான் தெரிகிறது. வேறு யாரும் இது பற்றி பதிவு ஏதும் போட்டார்களா என்பதுதான் என் கவலை.
Good post jothi! :)Thanks for some informations...
போனது பற்றி சந்தேகம் இருந்தால் அங்கு ஒரு reflector வைத்துள்ளார்கள் அதன் மூலம் பூமியில் இருந்து அகச்சிவப்பு கதிரை கொண்டு அதன் இருப்பிடத்தை சோதிப்பதை “Myth Busters" தொடரில் காண்பிப்பது எப்படி?
//Good post jothi! :)Thanks for some informations...//
நன்றி. ஆகாய நதி. பொழிலனக்கு பிறந்த நாள் டிரஸ் வாங்கியாச்சா??
//போனது பற்றி சந்தேகம் இருந்தால் அங்கு ஒரு reflector வைத்துள்ளார்கள் அதன் மூலம் பூமியில் இருந்து அகச்சிவப்பு கதிரை கொண்டு அதன் இருப்பிடத்தை சோதிப்பதை “Myth Busters" தொடரில் காண்பிப்பது எப்படி?//
நிறைய கேள்விகள், நிறைய பதில்கள்,.. ஆனால் கேள்விகள் குறைந்தபாடில்லை,.வருகைக்கு நன்றி
Yeah jothi... i Have hot so many dresses for him... :))) and some toys as gifts! :)
yes Jothi! I have got so many dresses for him! :))
மிக்க நன்றி ஆகாய நதி. என்ன பதிவுகளையே காணோம்?? .பிறந்த நாள் பதிவு அட்டகாசமாக இருக்கணும் ஆமா,..
ம்ம்ம்ம்ம்ம்.... அமெரிக்கா சொன்னா நம்பணும். அத்த வுட்டுட்டு............
சரிதான் ஜூலியட். இந்த மாதிரில்லாம் டைம் வேஸ்ட் பண்ணாதிங்கன்னு சொல்ல வர்ரீங்க,.. ரைட்டு,. மிக்க நன்றி வருகைக்கு
jothi, youtube தேடினால் நிறைய video clips கிடைக்கிறது. நானும் http://chummaah.blogspot.com/2009/07/blog-post_20.html இனைப் பதிவிட முன்னர் இந்த சந்தேகங்களையும் கிளப்பலாமா என்று யோசித்தேன். ஆனால் சில video clips களில் கொடியினை கையினால் அசைய விடாமலும், சுருண்டு கிடப்பதை நேராக்கி வீடுவதும் தெளிவாகக் தெரிகிறது. ஆகவே சந்தேகம் வேண்டாம்.
//ஆனால் சில video clips களில் கொடியினை கையினால் அசைய விடாமலும், சுருண்டு கிடப்பதை நேராக்கி வீடுவதும் தெளிவாகக் தெரிகிறது. ஆகவே சந்தேகம் வேண்டாம்.//
வருகைக்கு நன்றி வலசு.
எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இது பற்றி நிறைய விவாதங்களை படித்து குழம்பி போனதுதான் மிச்சம்
I have seen 7 videos [ each 45 - 1 hour ] available in 8 hours 18 minutes [ DVD ]. Then people may not have any doubt. Still some may
I have seen 7 videos [ each 45 - 1 hour ] available in 8 hours 18 minutes [ DVD ]. Then people may not have any doubt. Still some may
கருத்துரையிடுக