செவ்வாய், 30 ஜூன், 2009

வாங்க மீண்டும் கிராமத்திற்கு

பார்த்த இடமெல்லாம் பாலைவனமாய் பார்த்து நொந்து நூலாய் போன எனக்கு இந்த விடுமுறை மிகுந்த எதிர்பார்ப்பை தந்தது. விளை நிலங்கள் வீட்டுமனைகளாகவும், சிறப்பு பொருளாதர மண்டலங்களாகவும் மாறி வரும் வேளையில் எங்களுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் லாபம் தரவில்லை என்றாலும், எங்கள் நிலத்தில் விளைந்த உயர்ரக அரிசி இது என்று விருந்தினருக்கு முழுதிருப்தியாக பரிமாற வைக்கிற காரணத்திற்காகவே இன்னும் இங்கே சொல்லிக் கொள்ளும் வகையில் விவசாயம் நடக்கிறது. எவ்வளவு சோகம் என்றாலும் ஒரு வாரம் முன் விதைத்த நெல், எங்கள் நிலத்தில் பச்சை ஆடை உடுத்தி செலுமையாக நம்பிக்கையாக நிற்கும் அழகை பார்த்தவுடனேயே சோகம் மறைந்து உற்சாகம் புகுந்துவிடும். இந்த முறை திரும்ப உழைக்க வெளி நாடு செல்ல வேண்டுமே என்ற மீளாத சோகத்தில் இருக்கையில் விஜயம் செய்து "க்ளிக்" செய்த புகைப்படங்கள் இவை. நான் கிளம்பும் போது சோகம் மறைந்து, பக்கத்தில் உள்ள பத்து ஏக்கரையும் கண்டிப்பாக வாங்க வேண்டும் என இன்னும் வைராக்கியமும், நம்பிக்கையுமாக கிளம்பினேன்.

இது வரை நான் கவனித்ததில்லை என் ஊர் சாலைகள் இத்தனை அழகா என்று,.. கத்தாரில் சாலையின் இரு ஓரங்களிலும் பாலைவனத்தை பார்த்த பிறகே தெரிகிறது கற்பூர வாசனை.






எங்கெல்லாம் நீர் இருக்கிறதோ அங்கெல்லாம் உயிர் ஒன்று கண்டிப்பாக இருக்கிறது. கிணற்றில் தெரிகிற நீர் மட்டத்தில் இருந்து கீழே ஒருவர் மேல் ஒருவராக ஆறு பேர் நிற்கலாம். அத்தனை ஆழம்.



சுற்றிலும் பச்சை பச்சை மேலும் பச்சை





சுற்றிலும் தென்னை மரங்கள் நடுவில் ஒரு சின்ன ஓட்டு வீடு. குளிர் சாதனப்பெட்டியின் தேவைகளை தென்னை மரங்கள் தூக்கிவீசுகின்றன.













நான் வைத்த தென்னைகள் என் நாலு சந்ததி உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது.




தண்ணியின்றி அமையாது பார். (பார், உலகத்தை குறித்தாலும் சரி, பாத்தியை குறித்தாலும் சரி இல்லை அரசாங்கம் நடத்தும் டாஸ்க்மார்க் ஆனாலும் சரி, பொருள் ஒன்றுதான், நீரன்றி அமையாது உலகு). நாற்று நட நிலம் ஆயத்தமாக இருக்கிறது (தமிழிற்கு நன்றி செந்தில்)






நடுவதற்கு ஆயத்தமாக இருக்கும் நெல் நாற்று




நட்டபின் செழித்து நிற்கும் நாற்று





இங்கே அனைவருக்கும் வாழ்வு உண்டு,

எங்களிற்காக உழைக்கும் மாடுகள்




தோட்டத்து காளைகளின் குடி நீர் தொட்டி.




வீட்டு காளைகளின் குளி நீர் தொட்டி.




எங்களுக்கு சுத்தமான பால் தரும் பசுக்களின் அடுத்த தலைமுறைகளுடன் எங்களின் எதிர்கால தலைமுறை (அண்ணன் மகள்)






இங்கே அனைவருக்கும் வாழ்வு உண்டு,

வெயில், மழை, காற்று என அனைத்திலும் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு,.

எங்களுக்கு மட்டும் எங்கள் தந்தையே பாதுகாப்பு (இது எப்டி இருக்கு???)




மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாங்க மீண்டும் கிராமத்திற்கு




13 கருத்துகள்:

ரவி சொன்னது…

ஆஹா ஆஹா...

ஈரமும் சேறும் புல்லும் கலந்த ஒரு வாசனை மூக்கில் வந்து படருதுங்க உங்க பதிவின் படங்களை பார்க்கையில்...

jothi சொன்னது…

மிக்க நன்றி ரவி.அடிக்கடி வலைப்பக்கம் வாங்க,.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அழகான படங்கள்

கலையரசன் சொன்னது…

அருமையான படங்கள் + எழுத்து நடை!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

jothi சொன்னது…

மிக்க நன்றி வசந்த்.

jothi சொன்னது…

வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி கலையரசன். இது போன்ற பின்னூட்டங்கள் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என உந்துகின்றன.

jothi சொன்னது…

ஐ,.. இதை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. விகடனில் என்னுடைய இந்த பதிவு வந்துள்ளது. தமிழிஷில் நான் போட்ட பதிவு எந்த ஆதரவும் இல்லாமல், நான் போட்ட ஒரே ஒரு ஓட்டுடன் ஒத்தையாக சொத்தையாக நிற்க, நான் விகடனில் வருமென்று சத்தியமாக நினைக்கவில்லை. சமூதாய அக்கரையுடன் பசுமை விகடன் தரும் விகடனிற்கு என் நன்றி.

பெயரில்லா சொன்னது…

பொறாமையா இருக்கு உங்கள் படங்கள் பார்க்க, கொடுத்து வைத்தவர் நீங்கள்

jothi சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி மயில். நீங்கள் பொறாமை பட அவசியமில்லை, எனக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே, இருந்து என்ன பண்ண?,.. இந்தியாவில் வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியானது.

Vidhya Chandrasekaran சொன்னது…

அருமையான் புகைப்படங்கள். ஊர் நியாபகங்களை கிளப்பிவிட்டது.

jothi சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி வித்யா. இனிமேல் நாம் கிராமங்களை புகைப்படங்களில்தான் பார்ப்போம் போலிருக்கு

ஆகாய நதி சொன்னது…

Super pictures.... chenceless :)

Great post!

jothi சொன்னது…

//Great post! //

நன்றி.ஆனால் வஞ்ச புகழ்ச்சி அணி ஒன்றும் இல்லையே?

கருத்துரையிடுக