கத்தாருக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்டாலும் இங்கு எங்கும் சுத்தவில்லை. அதற்கு அவசியம் ஏதும் இல்லை என்பதே என் அனுமானமாக இருந்தது. பச்சையான அழகான கிராமத்திலிருந்து வந்த எனக்கு இந்த ஊர் சுத்தமாக பிடிக்கவில்லை. (அப்படிதான் சொல்லுவேன்,.. காரணம், சென்னையில் ஆரம்பித்து திண்டிவனத்திற்குள் இந்த ஊர் முடிந்துவிடும்),.. இருந்தாலும் குடும்பம் இல்லாமல் பைத்தியம் பிடிப்பதுபோல் இருந்ததால் ரமதான் விடுமுறைக்கு வெளியே கிளம்பினோம். ஆனால் இந்த அனுபவம் எனக்கு மறக்கமுடியாத நினைவாக பதிந்துவிட்டது.
நாங்கள் ஒரு 18 பேர் மூன்று வாகனத்தில் கிளம்பினோம். பாலைவனம் 70 கிமீ தூரம். அதை 45 நிமிடத்தில் அடைந்தாச்சு.
முதலில் ஒட்டக சவாரி,. நாங்க போய் உட்கார்ந்தவுடன் ஒட்டகம் கத்திய கதறல் மனசை என்னவோ செய்தது,.. போட்டோ மட்டுமே எடுக்கமுடிந்தது,.. (ச்சீ ச்சீ பயமெல்லாம் இல்லைங்க,..). நாம ஏறி உக்காந்து ஒட்டகம் செத்துப் போச்சுன்னா அப்புறம் வெள்ளைத் துணி போட்டு ஒட்டகம் மேய்க்க வேண்டியதுதான், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நண்பர்களை ஏற்றிவிட்டு ஒரு க்ளிக்,..
பிறகு பாலைவனத்தை சுற்றிப்பார்க்கும் சவாரி. என்னை சுத்திலும் மணலை இங்குதான் பார்க்கிறேன். மெதுவாக சீராக கொண்டிருந்த வண்டி ஒரு கணத்தில் 70 டிகிரீ கோணத்தில் மேலே ஏறி (செங்குத்தாக??) சராலென கீழே இறங்க ஆரம்பித்தது. வைரமுத்து எழுதிய வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாமல் ஓடுகிற உருண்டையின் அர்த்தம் அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. அதன் படங்கள் வரிசையாக உங்களின் பார்வைக்கு,..
வெள்ளை நிறத்தில் ஒரு மண்ணை நான் இங்குதான் பார்க்கிறேன். அடுத்த படத்தில் செங்குத்தாக இறங்கும் வாகனம்
கரணம் புரண்டாலும் மரணம்,..(சீட்பெல்ட்டெல்லாம் இருக்கு,.. இருந்தாலும் நமக்கு நேரம் சரி இல்லைன்னா என்னவேணாலும் நடக்கும்),. கீழே உள்ள முதல் படத்தில் வண்டியின் பின்னால் பறக்கும் மணல், வண்டி செல்லும் வேகத்தை சொல்லும்,.
சில நேரங்களில் கீழேயிருந்து மேலே வருகிற வாகனங்கள் தெரியாது,..பின் என்ன?? கிஸ் கிஸ்தான்,. நாம் க்ரஸ் க்ரஸ்தான்,.
இந்த பாலை வனத்திலும் இப்படி ஒரு தெளிவான நீர் பரப்பா?? மிக்க ஆச்சர்யப்பட்டு போனேன்,.
பிறகுதான் கடல் உட்புகு நீர் (backwater) என்று தெரிந்தது. கீழே உள்ள படம் நான் தான்,..எனக்கு கிழே ஒரு 60 அடி இறக்கம்,.. அதனால்தான் வயிற்றில் ஒரு கலக்கம்,. ஹி ஹி,.
ஒரு வழியாக சவாரி செய்துவிட்டு எங்களுக்கென டிராவல்ஸ் ஒதுக்கி இருந்த அந்த கேம்ப்பை வந்தடைந்தோம்,.
உடை மாற்றிவிட்டு வாலிபால் ஆடினோம்,..(எவ்வளவு நாளாச்சு இப்படி வியர்க்க வியர்க்க வாலிபால் விளையாடி,..)
பின்னர் ஆசைதீர ஒரு ஜலக்கீரிடை,.. கடல் உப்புத் தண்ணீயானாலும் ஆழமில்லாத தெளிவான நீர்,..
பின் சாப்பிட்டுவிட்டு (சர்ர்ர்ர்ர்ரிரி) நிம்மதியான ஒரு உறக்கம்,..
அடுத்த நாள் சூரிய உதியத்தை பார்த்துவிட்டு கடற்கரை ஓரமாக மீண்டும் தோகாவை நோக்கி,..
நாங்கள் நிற்பது ஒரு உச்சி,..
ம்ம்ம்ம்,... அவ்வளவுதான் ரமதான் விடுமுறை முடிஞ்சு போச்சு,.. இனிமேல் என்ன செக்கிழுக்க வேண்டியதுதான்,.. என்ன கொடுமை இது??? ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம ECR ரோட்ல பைக்ல சுத்தறது மாதிரி வருமா?? கரெக்கிட்டா நான் சொல்றது???
.
.
8 கருத்துகள்:
பாலைவன அனுபவப்பகிர்வு, படங்கள் நல்லா இருக்கு.
ஜாலியா இருந்திருக்கீங்க:))
வாங்க நிகழ்காலத்தில்,
உண்மையில் கத்தாரில் UAE மாதிரி எந்த பொழுதுபோக்கு வசதிகளும் கிடையாது. ஆகையால் இந்த பயணம் மனதில் இருந்த அனைத்துக்கவலைகளையும் வெளியே தூக்கி எறிய உதவியாக இருந்தது. வருகைக்கு நன்றி.
வளைகுடா நாட்டுல பாலைவனத்தைதான் சுத்தமுடியும்... இதே மாதிரி துபாய்லயும் டெசர்ட் சஃபாரி இருக்குது...
கத்தாருக்கு அமீரகம் பெட்டர்னு நினைக்கிறேன்...:)
//வளைகுடா நாட்டுல பாலைவனத்தைதான் சுத்தமுடியும்.//
உண்மைதான்,..
//கத்தாருக்கு அமீரகம் பெட்டர்னு நினைக்கிறேன்//
இதுவும் உண்மைதான்,.. அங்கு இடுப்பு ஆட்டமெல்லாம் உண்டாமே,.. ஒரு முறை செந்தில் பதிவில் படித்தேன்
வருகைக்கு மிக்க நன்றி பிரதாப்
அருமையான பகிர்வு... அழகான படங்கள்... இன்னைக்குதான் உங்கள படத்தில பார்க்கறேன்னு நினைக்கறேன்... என்னதான் பயம்மா இருந்தாலும் தெனாவெட்டா போஸ் கொடுக்கறீங்க பாருங்க... அங்கதான் நீங்க நிக்கறீங்க... :o)
//
கலகலப்ரியா சொன்னது…
அருமையான பகிர்வு... அழகான படங்கள்... இன்னைக்குதான் உங்கள படத்தில பார்க்கறேன்னு நினைக்கறேன்... என்னதான் பயம்மா இருந்தாலும் தெனாவெட்டா போஸ் கொடுக்கறீங்க பாருங்க... அங்கதான் நீங்க நிக்கறீங்க... :o) //
டோட்டல் டேமேஜ்,.. ம்ம்ம் இதுக்கெல்லாம் நாங்க கவலைப்படமாட்டோம். (அதுக்காக பயமா? அப்படின்னா? என்றும் கேட்கமாட்டேன்,.).
வருகைக்கும், பகிர்விற்கும் நன்றி ப்ரியா
எப்போஎப்போ எங்கே இருக்கோமோ அப்போ அப்போ அதை என்ஜாய் பண்ணிக்கணும் ..so என்ஜாய்
வாங்க பத்மா,.. வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி,..தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்க
நேற்றைய நாளை நினைத்து பெருமூச்சுவிடுவதைவிட, நாளைய நாளை நினைத்து கவலைப்படுவதிவிட, இன்றைய நாளை மகிழ்ச்சியாக செலவிடுவோம்
கருத்துரையிடுக