சல்யூட்
9 வயதில் பன்னிரெண்டாம் வகுப்பு,
10 வயதில் B.Sc (physics),
12 வயதில் M.Sc (physics),
21 வயதில் PhD (Quantum Computing) Indian Institute of Science (IISc) முடித்து இந்தியாவிலேயே மிக இளவயதில் முனைவர் பட்டம், 2003 ஆம் ஆண்டு டைம் பத்திரிக்கையால் "most gifted youngsters" எனப் புகழ்மாலை,
22 ஆம் வயதில் உலகப்புகழ் பெற்ற IIT BOMBAYல் Asst. Professor தேர்வாகி IITகளிலேயே மிக இளவயது பேராசியர் எனப் பெருமை.
மற்றும்
மற்றும்
"most gifted Asian youngsters" - TIME magazine,
"Superteen" - SCIENCE,
"Physics Prodigy" -TIMES
"Master Mind" - The WEEK
"one of the smartest Indian யூன்க்ச்டேர்ஸ்" - OUTLOOK
"Superteen" - SCIENCE,
"Physics Prodigy" -TIMES
"Master Mind" - The WEEK
"one of the smartest Indian யூன்க்ச்டேர்ஸ்" - OUTLOOK
பாட்னாவை சேர்ந்த "தாதாஹத் அவதார் துளசி"தான் இத்தனை பெருமைக்குரியவர்.
2001 ஆம் ஆண்டு நோபல்குழு வரை சென்ற இவரை ஒரு தகுதியும் அற்றவர் எனவும், மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார் எனவும் தூற்றியது. அதே ஆள் பின்னர் உலக அளவிலான பல பட்டங்களை பெற்றார்.
உலக அளவிலான பல்கலைகழகத்தில் இவருக்கு மிக அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் இந்திய அளவில் "க்வாண்டம் அடிப்படையில் அமைந்த அதிவேக கணிப்பொறியை உருவாக்குவதே தன வாழ்க்கையில் லட்சியம்" என்ற லட்சிய நோக்கோடு IIT பேராசியராக சேருகிறார்
IIT பக்கம் நுழைவதே பெரிதாக இருக்கையில், இவ்வளவு சின்ன வயதில் இத்தனை சிறப்புகளுடன் பேராசிரியராக அமரும் இவருக்கு நான் அடிக்கிற இந்த முதல் சல்யூட்டால் நான் பெருமை கொள்கிறேன்.
ஐடியா மாமு ஐடியா
டென்மார்க்கில் உள்ள க்ரௌன் ப்ளாஸா ஹோட்டல் தன் ஓட்டலில் 30 டாலர் மதிப்புள்ள மதிய உணவை இலவசமாக தருகிறது. அதற்கு நீங்கள் அங்கிருக்கும் சைக்கிளை 15 நிமிடம் ஓட்டினால் போதும். இதை ஓட்டும் போது இதனுடன் இணைத்துள்ள ஜெனரேட்டர் 10Wh அளவிற்கு மின்சாரம் தயாரிக்கிறது. இதை அதன் உள் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுகிறது. எப்புடி ஐடியா? உடம்பும் குறைஞ்சது, சோறும் கிடைச்சது மின்சாரமும் கிடைச்சது, சுற்றுசூழலும் பாதுகாப்பாச்சு. யாருக்கும் நட்டமில்ல.
கொஞ்சம் பெர்சனல்
இங்கே நான் மட்டும் தனியாக பேச்சுலராக ஓட்டிக் கொண்டிருப்பதால் சாப்பாட்டிற்கு கஷ்டம். வீட்டில் சாப்பிட்டு பழகிவிட்டதால் வெளியில் போய் சாப்பிடவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாகவும் நம் இயல்பான சோம்பேரித்தனத்தின் காரணமாகவும் சமைக்க முடியவில்லை. பிடிக்கவும் இல்லை. ஆனால் தங்கமணியிடம் மட்டும் வீட்டில்தான் சாப்பிடுகிறேன் என பொய் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு எடக்குமுடக்காண (அப்படின்னா என்னான்னு கேக்க கூடாது) ஒரு உரையாடல்,..
"சாப்பிட்டீங்களா??"
"இல்ல இனிதான் வீட்லபோய் சாப்பிடணும்"
"ஆமாங்க,.. நல்லா நியாபகம் வெச்சுக்குங்க,. வீட்டுலையே எதையாச்சும் சமைச்சு சாப்பிட்டுக்குங்க,.. உங்க உடம்புக்கு ஒத்துக்காது"
"ஆமா,. சரவணபவன்ல இருந்து பார்சல் வந்துருச்சு,..வீட்டுல போய்தான் சாப்பிடணும்,..(அய்யய்யோ,.. உளரிட்டேனே, ரவுண்டு கட்ட போறா,...)"
"ஆமாங்க,.. வீட்டுலேயே சாப்பிடுங்க,. கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க"
மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் - என்ன ஒரு ரம்மியமான பாடல் இல்ல,...
சமூகம்
ஒவ்வொரு வருடமும் கல்வியில் பெண்கள்தான் முதல் இடத்தில் வருகிறார்கள். இது பள்ளியாகட்டும், கல்லூரி ஆகட்டும். மதிப்பெண் சிறப்பாக எடுக்கும் மாணவிகள் தங்கள் பணிகளிலோ இல்லை சிறப்பான கண்டுபிடிப்புகளிலோ ஏன் ஜொளிக்கவில்லை??? கல்வியின் பலன் அதை முறையான பயன்பாடாக (Application) கொண்டு வருவதில்தான் இருக்கிறது. வெறும் பேப்பரில் மதிப்பெண்ணாக பைல் பண்ணி வைப்பதில் என்ன பலன். எங்கே இடிக்கிறது??? மகளீரை முன்னேறி வரவிடாமல் தடுப்பது எது ?
பார்க்க ரசிக்க
இது மனிதனால் உருவக்கப்பட்ட பூக்கள். பிரமிப்பான வேலை இல்லை??
பிடித்திருந்தால் ஒரு ஓட்டு,..
. OO.
4 கருத்துகள்:
லேபிள்ல போட்டிருக்கற மாதிரியே.. சுவாரஸ்யம்..
மிக்க நன்றி ப்ரியா
ஜோ..இது ஜுகல்பந்தி இசை கேட்டமாதிரி இருந்தது..இந்த அவியல் டைப் பதிவு நல்லா இருக்கு..மகளிர் பத்தி நீங்க சொல்லிருந்தது,,,ம்ம்..சரி தான்..நானும் இப்போ தான் அதை யோசிக்கிறேன்...u r right!!
வாங்க ஆனந்தி,..அதென்ன ஜுகல்பந்தி இசை?? எங்கேயாச்சும் படிச்சு தெரிஞ்ச்சுக்கிறேன். இது வரை எந்த மிக்சர் பதிவும் போடல,. இது ஒரு முதல் முயற்சியாக,.. இதன் உள்ளடக்க தலைப்பை மட்டும் அப்படியே வைத்துக்கொள்ளலாம் என இருக்கிறேன்,..
உங்களுக்காகதான் ஒரு பதிவு போடணும் இருக்கேன்,. ஆனா இந்த நேரம்தான்,..
வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ஆன ந்தி,..
கருத்துரையிடுக