வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பல்கலைகழகங்கள் எக்ஸ்போர்ட் நிறுவனங்களா??

இது இன்று படித்த தகவல்,.."சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராஜசேகர் ஷாம், பல்கலைக்கு நன்கொடையாக வழங்கிய 18 கோடியே 60 லட்சம் ரூபாயில் மாணவர் விடுதி மற்றும் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும்,''

இது இன்று நான் தினமலரில் படித்தது.

மிக பெருமையாக இருந்தது. ஒரு கணம் யோசித்தால் "பக்" என்று இருக்கிறது. ஆம் நாம் நம் ஆயுளின் பாதிக்கணக்கை முடித்துவிட்டோம். இது வரை நம் வாழ்ந்த நாட்களுக்கு என்ன செய்துவிட்டோம். இனி வாழப்போற நாட்களுக்கு என்ன செய்யப்போகிறோம். யாருக்கு? யாருக்கோ,.. அது சத்தியமாக நான் இல்லை,.. குடும்பம் இல்லை, நட்பு இல்லை. யாருக்கோ அவன் ஒரு சக மனிதன். கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது. பதில் இல்லாமல் இல்லை. தேட வேண்டும் அவ்வளவுதான்.

இந்த ராஜசேகர் உண்மையிலேயே க்ரேட்,.. இந்தியப்பணத்தை கொள்ளையடித்து ஸ்வர்ட்ஜ்லாந்தில் கொண்டு சேர்க்கும் கூட்டம் பிறந்த அதே ஊரில் பிறந்து சென்னைப்பல்கலைகழத்தில் படித்து,.. வெளி நாடு சென்று உழைத்து சம்பாரித்து,.. தன் உழைப்பை தன் வருங்கால இளைய தலைமுறைக்கு விட்டு செல்லுகிற இந்த பெருங்குணம் எத்தனை பேருக்கு வாய்க்கும்.??? சொல்ல வார்த்தை இல்லை. திரு ராஜசேகர்,.. உங்கள் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்,.. உங்கள் உழைப்பு அடுத்த தலைமுறைக்கு செல்கிறதா என்பதை தயவு செய்து கவனிக்காதீர்கள்,..அரசிலும் பல்கலைகழகத்திலும் உள்ள மத்திய தலைமுறைகள் அதை சர்ர்ர்ர்ரிய பயன்படுத்திக் கொள்ளும்,.. நாங்கள அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் "அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, அரசு மருத்தவ கல்லூரி போண்றவைகள் என்னை பொறுத்தவரை வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் நிறுவனங்கள்" என்று சாணியடித்துக் கொண்டிருப்போம்... கண்டுக்காதீங்க,.. ஆனால் அடுத்த தலைமுறை அதில்தான் படித்து முன்னேறும்,. அங்கே வகுப்பு எடுக்கிறார்களா என்பது யாருக்கும் தெரியாது,. அங்கே உள்ள செய்முறை வகுப்புகள் எந்த அளவிற்கு உலகத் தொழில் நுட்பத்தில் பின் தங்கி உள்ளன என்பது யாருக்கும் தெரியாது,..விடுதிகள் எந்த நிலையில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது,..ஆசிரியர்/சாதி அரசியல் எந்த அளவிற்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்ததலைமுறையும் அதில்தான் இரவு பகல் பாராது படிக்கும்,.. முன்னேறும்,..

நீங்கள்விட்டு சென்ற ஜோதி அணையாமல் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் அவசியம்.

நம் உழைப்பினை, அறிவை, அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவேண்டும் என்பது எத்தனை பேருக்கு இருக்கிறது (இதில் கூட உள் நாடு, வெளி நாடு இந்தியர்கள் என தயவு செய்து பிரிக்கவேண்டாம்,..),..சிறந்த அறிவு கொண்டபவர்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப பள்ளியிலோ, கல்லூரியிலோ வருடத்திற்கு ஏன் ஒரு நாள் வகுப்பெடுக்க கூடாது, சிறந்த அனுபவம் கொண்டபவர்கள் ஏன் வேலையில்லா நண்பர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டக் கூடாது,.. நல்ல ஊதியதினை உழைப்பின் மூலம் பெற்றவர்கள் ராஜசேகர் போல முயற்சி பண்ண கூடாது??,.. நம்மிடம் பதில்கள் இல்லாமல் இல்லை,. தேட வேண்டும் அவ்வளவுதான்,..3 கருத்துகள்:

jothi சொன்னது…

test

மதுரை பாண்டி சொன்னது…

உங்கள் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்\\

அவர் இன்னும் உயிரோடு தானே இருக்கிறார்?

jothi சொன்னது…

அவர் 2008 அண்டு இறந்துவிட்டதாக நாளிதழில் படித்தேன்.

வருகைக்கு நன்றி பாண்டி ,.. நீங்க மதுரையா நான் திண்டுக்கல்தான்,...

கருத்துரையிடுக