திங்கள், 27 செப்டம்பர், 2010

பதிவுலக அருஞ்சொற்பொருள்

பொதுவாக நம் பக்கத்திற்கு வரும் புதிய பதிவர்களின் கஷ்டத்தை போக்க இந்த அருஞ்சொற்பொருள் சேவை,..

சொம்பு :
பதிவுலக பிரச்சனைகளில் நடுவில் மாட்டிக்கொள்ளும் அப்பாவியை துவம்சம் செய்யும் ஆயுதம். இரண்டு குரூப் டமால் டுமீள் என சண்டை போட்டுக் கொள்ளும் போது "நாமெல்லாம் சண்டை போட வேணாம் தல" என வரும் இவர்களை ரெண்டு க்ரூப்பும் சேர்ந்து காலி செய்துவிடும், சண்டைகளில் பஞ்சாயித்து பண்ண கையில் "சொம்பை" தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான் என வர்ணிப்பதால் இப்பெயர்க் காரணம் வந்தது.

ஆப்பு:
இப்படி ரொம்ப நல்லவனாக நாம் சமாதனத்தூதுவனாக செல்லும் போது நம் நண்பன் ஒருவனே காலை வாரிவிடுவான். இதன் பெயர்தான் ஆப்பு. சில நேரங்களில் நம் எழுத்து இடறி நாமே நம்மை வாரிக் கொள்வோம். இது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு,..

தோப்பு
தனியாக இது போன்ற சண்டைகளில் நாம் மாட்டிக்கொள்ளும் போது அங்கிருக்கும் மொத்த பதிவர் கூட்டமே நமக்கு சேர்த்து வைக்கும் எண்ணிக்கையிலடங்கா ஆப்புகளுக்கு தோப்பு என பெயர்,.. பொதுவாக தோப்பில் சிக்கி கொள்ளும் பதிவர் ஒன்று பதிவுலத்தைவிட்டு ஓடி விடுகிறார்,. இல்லை என்றால் தன் நிலை பிறள்கிறார் (பாருங்க ,.. நான் எப்படி டீசண்டா சொல்லுறேன்)

பின்னூட்டம்
ஆப்பு வாங்குவதற்கு/வைப்பதற்கு நாம் பயன்படுத்தும் உளி. இது முழுக்க ஒரு பதிவை படித்தபின் தமிழீஷ் ஓட்டைத் தவிர இதையும் சன்மானமாக அளிக்க வேண்டியது. ஆனால் பலர் படிக்காமலேயே எழுதி வைத்துவிட்டு செல்வதுதான் கொடுமை. இதைதான் ஆப்புடன் கூடிய பல்பு என பதிவுத்துறை வர்ணிக்கிறது (அதாம்பா,.. பதிவர்கள் இருக்கும் துறை). யாருக்கும் ஆப்பு வைக்காமல் தன் வருகையை மட்டும் பதிவு செய்வதை "மீ த ப்ர்ஸ்ட்" என வரையரை செய்யப்படுகிறது (burst இல்ல first,.. வந்த உடனே ஒரு மனுஷன் burst ஆனா என்னவாகிறது),.. இதன் மூலம் (அட,.ச்சை,.. அதாம்பா origin) என்னவென்றால் முதல் காலத்தில் பின்னால் (இது பேக் சைடு இல்ல) குத்தி குத்திக் காட்டி பதிவர்களை ஊக்கப்படுத்தியதால் பிற்காலத்தில் இது மறுவி பின்னூட்டம் என அழைக்கப்படுகிறது. (ஷ்ஷ்ஷ்ப்பாடா,. மூச்சு வாங்குது)

மொக்கை
ஒரு பதிவரால் ஹிட் ஆகுமா/ ஆகாதா என சந்தேகத்துடன் எழுதும் பதிவு. ஆனால் பதிவுலக நடைமுறைகளின்படி (அப்படின்ன இன்னாபா??) இவை ஹிட் ஆகிவிடும். இதன் மூலம் எப்படியென்றால் முதலில் பதிவுகளை அனுபவம் இல்லாமல் பெரிதாக (அதாம்பா மொக்கையாக) எழுதிவிடுவர், அது பெரும்பாலும் ஒத்தை ஓட்டுடன் சொத்தையாக நிற்கும்.

தங்கமணி
பதிவுலகத்தால் துவைத்துப்போடப்படும் விவரமான அப்பாவி மனைவிமார்கள். (ஆனால் வீட்டில் எல்லாத்துணியையும் துவைப்பது நம் பதிவர்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே,.) இதற்கான பெயர்காரணம் குறித்து முறையான ஆதாரங்கள் இல்லை,.. ஆனால் வீட்டில் உள்ள மனைவிமார்கள் அடிக்கடி "தங்கம்" வாங்க "மணி" கேட்பதால் தங்கமணி இந்த பெயர் வந்திருக்கலாம்,.. (இதில் expert நம்ம பதிவர் ஆதிதான்,.. சான்சே இல்ல,. அவரின் கற்பனை தங்கமணி கதைகளுக்கு நான்/என் அலுவலக நண்பர்கள் அடிமை என்றே சொல்லலாம், நேரம் கிடைத்தால் புது பதிவர்கள் அங்கே விஜயம் செய்யுங்கள்,. தானாகவே எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்)

பிரபலப்பதிவர்
இது மிகமிக முக்கியம் நண்பர்களே,.. இவர் பதிவர்களுக்கு முன்னோடியாக பதிவுலகத்தால் கருதப்படுகிறார். ஆனால் செயல்கள் எல்லாம் பின்னால் இருந்து நகர்த்துபவையாக இருக்கும். இவர்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என அரிச்சுவடிகளில் (அரிச்சுவடியா? ஆத்திச்சூடியா,.. அய்யயோ சரியா தெர்லயே) தேடிப்பார்த்த போது இவர்கள் போற இடமெல்லாம் பிராபலம் வருவதால் பிராபலப்பதிவர், பிராபலபதிவர் என அழைக்கப்பட்டு பின்னர் தொழில்னுட்ப வளர்ச்சியால் பிரபலப்பதிவர்கள் ஆனார்கள்,..

இவர்கள் இல்லாமல் மூத்தபதிவர்கள் என்ற வகை உள்ளது. இவர்களில் இரண்டு பிரிவு உள்ளது. ஒன்று வயதான பதிவர்கள் (மரியாதைக்காக யாரும் இவர்களை ஒண்ணும் சொல்லமாட்டார்கள்,..), இன்னொன்று 2007ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள். வருஷத்திற்கு ஒரு 10 பதிவைப் போட்டுவிட்டு பாத்துக்கப்பா,.. நான் ஜெயிலுக்கு போய்ட்டேன், ஜெயிலுக்கு போய்ட்டேன்,, நானும் ரௌடிதான் (பதிவர்தான்) என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் ஒரு பதிவு போட்டாலும் சும்மா நச்சுன்னு போடுவாங்க,.. நேரப்பற்றாக்குறையாலும், தங்கமணிகளின் தொந்தரவாலும் இவர்கள் இப்படி பாதி பதிவராகவும், முக்கால்வாசி வாசகராகவும் ஆகிவிட்டார்கள்.

கவிஜ
இது கூட மிக மிக முக்கியம். கிட்டதட்ட மனசாட்யே இல்லாமல் எல்லா பதிவரும் கைவைக்கும் இடம் இதுதான். (நான் கூட அந்த கொடுமையை இரண்டு முறை செய்திருக்கேன்,. நல்ல வேளை ஹிட் ஆகாததால் யாரிடமும் " ஹிட்" ஆகாமல் தப்பித்தேன். சில நேரங்களில் கவிதையின்பால் உள்ள ஆர்வக்கோளாற்றில் நண்பர்கள் கவிதையை விளக்கம் கேட்டு "இது கூட தெர்ல" என பெரிய தோப்பு (விளக்கம் மேலே) வாங்கிய அனுபவம் கூட உண்டு). இதற்கு உள்ள ஒரே பிளஸ்பாய்ன்ட் இப்படிதான் இதை எழுத வேண்டும் என்ற எந்த எந்த வரையரையும் இல்லாதது. இப்போது நம் புத்திசாலி பதிவர்கள் படங்களில் வந்த நல்ல பாடல்களையே பதிவாய் போட்டு கவிதை எபக்டில் பேமசாகி விடுகிறார்கள். நான் கூட அப்படி போடலாம் என இருக்கேன் யாராச்சும் சாப்ட் காப்பி இருந்தா என் மெயிலுக்கு அனுப்பிவையுங்க,.. நான் எப்படியாச்சும் அதை கஷ்டப்பட்டு பதிவாக்கிவிடுகிறேன்,..
இதற்கான பெயர்காரணம் மிக எளிது,. தன் படைப்பு கவிதை என உறுதியாக நினைக்கும் புலவர்கள் தன் படைப்பை கவிதை என்றே அழைக்கிறார்கள். ஆனால் சிலர் இதை போய் நாம் கவிதைன்னு சொல்லலாமா?? நீதி தாங்குமா,..செங்கோல் வீங்குமா என நினைத்துவிட்டு அதை கவித, கவிஜ, கவி, கவித்தை (இவர் வித்தக கவிஞராம்,. அதனால் தன் படைப்பை இப்படி அழைக்கிறார்,.நான் கூட குரங்காட்டியா இருந்து கவிதை எழுத தாவிட்டார்னு நினைச்சேன்,..) என பயந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழைக்கிறார்கள்.

பெயரில்லா
பழம் தின்னு கொட்டை போட்ட பதிவர்களையே சும்மா நடு நடுங்க வைக்கும் வினையூக்கிகள் (அதாம்பா catalyst),.. இதன் பெயர்காரணமும் மிக சிம்பிள்.பெயரே இல்லாமல் வந்து பேர் போனபதிவர்களின் பேரை நாறடித்ததால் இந்த பெயர். பெயரில்லாங்கற பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல,..

ங்க்கொய்யால,.
சமீப காலமாக பதிவுலகில் பயன்படுத்தப்பட்டாலும் இதன் மூலமும் அர்த்தமும் இப்போது தெரியவில்லை. இதற்கு நம் பதிவர் கூட்டம் எனக்கு உதவும் என நினைக்கிறன்,..


.

30 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

கலக்கல்

jothi சொன்னது…

நன்றி ஞானசேகர்

ப.செல்வக்குமார் சொன்னது…

//சண்டைகளில் பஞ்சாயித்து பண்ண கையில் "சொம்பை" தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான் என வர்ணிப்பதால் இப்பெயர்க் காரணம் வந்தது.//

அட , அதுக்கு இதுதான அர்த்தம் ..!

ப.செல்வக்குமார் சொன்னது…

//பொதுவாக தோப்பில் சிக்கி கொள்ளும் பதிவர் ஒன்று பதிவுலத்தைவிட்டு ஓடி விடுகிறார்,. இல்லை என்றால் தன் நிலை பிறள்கிறார் (பாருங்க ,.. நான் எப்படி டீசண்டா சொல்லுறேன்)
//

அட பாவமே ..?!?

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஆனால் பலர் படிக்காமலேயே எழுதி வைத்துவிட்டு செல்வதுதான் கொடுமை. இதைதான் ஆப்புடன் கூடிய பல்பு என பதிவுத்துறை வர்ணிக்கிறது//

படிக்காம வேற பின்னூட்டம் போடுறாங்களா ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//இதன் மூலம் எப்படியென்றால் முதலில் பதிவுகளை அனுபவம் இல்லாமல் பெரிதாக (அதாம்பா மொக்கையாக) எழுதிவிடுவர், அது பெரும்பாலும் ஒத்தை ஓட்டுடன் சொத்தையாக நிற்கும்.//

அப்படியெல்லாம் இல்லீங்க ., நானெல்லாம் எழுதறது (!?!)எல்லாமே மொக்கைதான் ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

பிரபல பதிவருக்கு இப்படி ஒரு விளக்கமா ..? ஏதாவது பிராபல பதிவர்கள் வாங்களேன் .. இவரு உங்களை பத்தி என்னமோ எழுதிருக்காரு ..

drbalas சொன்னது…

நல்ல நகைச்சுவை..!

jothi சொன்னது…

////சண்டைகளில் பஞ்சாயித்து பண்ண கையில் "சொம்பை" தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான் என வர்ணிப்பதால் இப்பெயர்க் காரணம் வந்தது.//

அட , அதுக்கு இதுதான அர்த்தம் ..! //

வாங்க செல்வக்குமார்,.. இந்த ஒரு வார்த்தையை நான் கடந்த ஆண்டு முதல் படித்து வந்தாலும்,.. சமீபத்தில் உண்மைத்தமிழன் பதிவை படிக்கும் போதுதான் புரிந்தது.

jothi சொன்னது…

//அட பாவமே ..?!? //

ம்ம்,. பாவம் செல்வக்குமார்,. எங்கிட்ட ஒரு பெரிய லிஸ்டே இருக்கு

jothi சொன்னது…

//படிக்காம வேற பின்னூட்டம் போடுறாங்களா ..? //

ம்ம்,

jothi சொன்னது…

//அப்படியெல்லாம் இல்லீங்க ., நானெல்லாம் எழுதறது (!?!)எல்லாமே மொக்கைதான் ..!! //

ச்சே சே,..நாமன்னு சொல்லுங்க,.

jothi சொன்னது…

//பிரபல பதிவருக்கு இப்படி ஒரு விளக்கமா ..? ஏதாவது பிராபல பதிவர்கள் வாங்களேன் .. இவரு உங்களை பத்தி என்னமோ எழுதிருக்காரு .. //


பாத்திங்களா,.. நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா?? பிரபலப்பதிவரெல்லாம் நம்ம சைடு வரமாட்டாங்க,.. அந்த தைரியத்திலதான் இந்த பதிவைப்போட்டேன்,,

வாங்க செல்வக்குமார்,.. மிக்க மகிழ்ச்சி,. உங்க வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்
ரொம்ப நன்றி,.. அடிக்கடி வாங்க,.

jothi சொன்னது…

வாங்க பாலா,.. (நீங்க டாக்டரா??)

உங்கள் குஷ்பு பதிவு அட்டகாசம். என் கிராமத்து நினைவுகளை கொண்டு வந்துவிட்டது

கொசுறு (என் அப்பவின் பெயரும் முத்துப்பாண்டிதான்)

சிநேகிதி சொன்னது…

நல்லா இருக்குங்க

jothi சொன்னது…

நன்றி ஸ்னேகிதி

அருண் பிரசாத் சொன்னது…

பதிவுலகத்தை துவச்சி காய போட்டுடீங்க

Phantom Mohan சொன்னது…

பதிவு நல்லாருக்கு...பிரபல பதிவர்களை வாருவது போல வந்து கடைசியில் கொஞ்சம் பெருமையா எழுதிருக்கீங்க:)

டுபுக்கு, ங்க்கொய்யால,. இது ரெண்டுமே மிக மோசமான கெட்ட வார்த்தை (கொஞ்சம் பிரிச்சு படிச்சா உங்களுக்கே புரியும்) நம்ம மதுரை சுத்து வட்டாரத்தில்; வடிவேலு புண்ணியத்தில் இது நகைச்சுவையாக மாறியது...சென்னையில் ”த்தா” என்பது தற்பொழுது ஆங்கிலத்தில் "is, was" போல் தேவைப்படும் பொழுது சேர்த்துக்கொள்வார்கள்.

jothi சொன்னது…

மிக்க நன்றி. அருண் பிரசாத்

வருகைக்கும் & பகிர்விற்கும் மிக்க நன்றி. அருண் பிரசாத்.

எத்தனை பேரு ஆட்டோ அனுப்ப போறாங்கண்ணு தெர்ல

jothi சொன்னது…

//டுபுக்கு, ங்க்கொய்யால,. இது ரெண்டுமே மிக மோசமான கெட்ட வார்த்தை (கொஞ்சம் பிரிச்சு படிச்சா உங்களுக்கே புரியும்) நம்ம மதுரை சுத்து வட்டாரத்தில்; //

நீங்கள் சொன்ன முதல் வார்த்தை கெட்ட வார்த்தை என நன்றாக தெரியும். ஆனால் இப்போதுதான் இந்த இரண்டாவது வார்த்தை கெட்ட வார்த்தை என தெரிகிறது. முக்கியமான நல்ல (கெட்ட???) தகவல்,. இனிமேல் நம் நண்பர்கள் யாரும் பயன்படுத்தமாட்டார்கள் என நினைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி மோகன். அப்புறம் மதுரை சைடுன்னா எங்கே??

jothi சொன்னது…

//பதிவு நல்லாருக்கு...பிரபல பதிவர்களை வாருவது போல வந்து கடைசியில் கொஞ்சம் பெருமையா எழுதிருக்கீங்க:)//

அவர்கள் எங்கோ இருக்கிறார்கள். நான் போய் காலை வாரும் அளவிற்கு அவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. ச்சீ என சொல்லிப் போய் கொண்டே இருப்பார்கள்.

அடிக்கடி வாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ங்க்கொய்யால,.//

மெய் எழுத்தில் கூட தமிழ் வார்த்தைகளை ஆரமிக்கலாம் என்று நம் பதிவுலக தமிழ் வல்லுனர்கள் கண்டு பிடித்த வார்த்தைதான் ங்க்கொய்யால,.இது கூட தெரியலைனா நீங்க எப்படி பிராப்ள ச்சீ பிரபல பதிவர் ஆகுறது..

jothi சொன்னது…

வாங்க ரமேஷ்,.

//மெய் எழுத்தில் கூட தமிழ் வார்த்தைகளை ஆரமிக்கலாம் என்று நம் பதிவுலக தமிழ் வல்லுனர்கள் கண்டு பிடித்த வார்த்தைதான் ங்க்கொய்யால,.//
இல்லை ரமேஷ்,.. இது சங்கம் வளர்த்த மதுரை தந்த கெட்ட வார்த்தைகளில் ஒன்று,..வழக்கம்போல் நாம் அதை பயன்படுத்திக் கொண்டோம்.

//நீங்க எப்படி பிராப்ள ச்சீ பிரபல பதிவர் ஆகுறது.. /
ஏங்க உங்களுக்கு இந்த கெட்ட எண்ணம்??? நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா??

Aruna சொன்னது…

what is mean by thakali ?

jothi சொன்னது…

//what is mean by thakali ? //

I think it is tomoto,..

கமலேஷ் சொன்னது…

ரைட்டு :- செம form ல இருக்கீங்க, ஒன்னும் பண்ண முடியாது.

நல்ல நகைசுவையான பதிவு.

கமலேஷ் சொன்னது…

தங்களின் அதென்ன ஓசோன் துளை ? பதிவை தற்போதுதான் படிக்கிறேன் தோழரே..

விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் அருமையான பதிவு... ozone depletion - ஐ reaction -னோடு, விளக்கத்தையும் தந்திருகிறீர்கள்.

எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஐம்பதாவது பதிவுக்கு தாமதமான வாழ்த்துக்கள் தோழரே.

பயணங்களை தொடருங்கள்

jothi சொன்னது…

//நல்ல நகைசுவையான பதிவு. //

நன்றி கமலேஷ்,.. இது நகைச்சுவைக்காக எழுதிய பதிவு மட்டுமே,..

jothi சொன்னது…

///ஐம்பதாவது பதிவுக்கு தாமதமான வாழ்த்துக்கள் தோழரே./

நன்றி கமலேஷ்,.. அடிக்கடி வாங்க

அன்பரசன் சொன்னது…

சூப்பர்

கருத்துரையிடுக