வியாழன், 16 செப்டம்பர், 2010

நமக்கு காதல் வந்து விட்டதை எப்படி தெரிந்து கொள்வது???

நம் காதலுக்கு நம் காதலி ஓகே சொல்றது இருக்கட்டும். நாம் காதலில் விழுந்துவிட்டோம் என்பதை நாமே எப்படி தெரிந்து கொள்வது???

  • மனசு ஒரே பக்கம் சுத்திக் கொண்டிருக்கும். அது ஒரு பிகரின் பக்கமாக இருக்கவேண்டும் என சொல்ல வேண்டியதில்லை. துரதிர்ஷ்டவசமாக மூன்றாம் நபரின் கண்களுக்கு அந்த பிகர் பேய் மாதிரி இருந்தாலும் அது பற்றி கவலையில்லை.
  • நண்பர்கள் தொடர்பு குறையும்.அதற்காக பிகருடன் தொடர்பு அதிகரித்துவிட்டது என அர்த்தமில்லை. பிகருடன் எப்படி பேசுவது என்ற யோசனையில் காலத்துடன் நாம் தனித்திருக்கும் நேரம் அதிகரிக்கும். மூளை முழுக்க அதுக்கு மட்டுமே செலவழிக்கப்படுவதால் படிப்பிற்கும் நமக்கும் தொடர்பு அத்துப்போகும். தேர்வில் முட்டை வாங்கி அதை வேக வைத்து சாப்பிட்டாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. ஆகையால் வகுப்பில் முதல் இடத்தில் வருவோம், கடைசியிலிருந்து!!!!!!!!!!!.

  • காதலியுடன் தொத்திக்கொண்டே செல்லும் அவள் தோழி பேயாக தெரியும். எப்போதோ தனியே வரும் நம் ஆளுடன் பேசலாமெனப் பார்க்கையில், நம் கூடவிருக்கும் நமது நண்பர்கள் நாயாக தெரியும்.

  • நண்பர்களுக்கு தொத்தலாக தெரிவது நமக்கு ஸ்லிம்மாக தெரியும். நண்பர்களுக்கு தொப்பையாக தெரிவது நமக்கு கட்டையாக தெரியும். நமக்கு அழகான மாதுளை தோரணாமாக தெரிகிற பற்கள் நண்பர்களுக்கு கூரான மாவிலை தோரணமாக தெரியும். நமக்கு மின்னலாக தெரிகிற பார்வை நண்பர்களுக்கு 1.5 பின்னமாக தெரியும். நமக்கு பொழிவான நிலவாக தெரிகிற முகம், நண்பர்களுக்கு மலிவான டாஸ்மார்க்காக தெரியும்,.. இப்படி நிறைய்ய இடம்மாறு தோற்றப்பிழைகள்.


  • மணிக்கணக்கில் காத்திருப்போம், நிறைய்ய்ய்ய பொய் சொல்வோம், அடிக்கடி முகம் கழுவி கண்ணாடி பார்ப்போம், தனியாக சிரிப்போம், பொய்யாக கோபப்படுவோம். மெய்யாக பைத்தியமாவோம். பசிக்கும் ஆனா சோறு இறங்காது, இரவு வரும் ஆனா தூக்கம் வராது,..தூக்கத்தில் முனங்குவோம், நேரத்திற்கு தூங்கமாட்டோம்,.. ஆனா நேரத்திற்கு விழிப்போம், பல் தேய்க்கப்போவோம் ஆனாலும் மறந்து குளித்துவிட்டு வருவோம். பரிட்சை எழுத போவோம் ஒண்ணும் தெரியாமல் முழித்துவிட்டு வருவோம்.


  • மனசு பட்டாம்பூச்சியாய் சிறகை விரிக்கும். பர்சு கொட்டாங்குச்சியாய் இழந்து நிற்கும்.


  • நேற்று இனிப்பான கனவாக இருக்கும், இன்று படபடக்கும் பட்டாம்பூச்சியாக இருக்கும், நாளை ,.???? அதைப்பற்றி என்ன கவலை,..
(பி.கு இந்த கவலை இல்லைன்னா கண்டிப்பா உங்க காதல் கைகூடும்,... ஏன்னா அந்த எதிர்கால கவலைல்லதான் நிறைய லவ்வு புட்டுக்குது,..)

ஆக மொத்தம்,..

மொபைலில் சார்ஜ் இருக்காது, airtel சிம்மில் பைசா இருக்காது,..வகுப்பில் வருகை இருக்காது, அதனால் பரிட்சையில் மார்க் இருக்காது, பேச்சில் உண்மையிருக்காது, நாக்கில் சத்தியம் இருக்காது, ஆனால் ஆச்சர்யம் வாயில் நாற்றமிருக்காது,. பர்சில் பணமிருக்காது, நெஞ்சில் பயமிருக்காது,..இந்த இல்லை எல்லாம் ஆமாவா? அப்படின்னா சாரி,.. நீங்க லவ்வுதான் பண்றீங்க,..

உங்களுக்காக ஒரு பிகர் பண்ணிக்கிட்டு இருக்கு.கிளம்புங்க,.. நான் எப்ப yahoo mail வந்தாலும் என்னை டிஸ்டர்ப் பண்ர இந்த பொண்ணு கூட கார்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்துட்டு உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்றேன்.

7 கருத்துகள்:

jothi சொன்னது…

something problem with my template,.. please excuse my dear friends,..

கலகலப்ரியா சொன்னது…

ரொம்பத் தேவையான ஆராய்ச்சி....

ஹைய்யோ ஹைய்யோ...

=))))...

jothi சொன்னது…

//கலகலப்ரியா சொன்னது…

ரொம்பத் தேவையான ஆராய்ச்சி....

ஹைய்யோ ஹைய்யோ...

=))))...//

என்ன பண்றது,.. நமக்கு வர்ரதுதானே எழுத முடியும்,.. எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்,..சீரியசாக எழுதுவதற்கு இன்னும் ஆண்டுகள் இருக்கின்றன.

ரொம்ப நாளைக்குபின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ப்ரியா.

கமலேஷ் சொன்னது…

ரைட்டு.)))))))))))))))))))))-

jothi சொன்னது…

வாங்க கம்லேஷ்,. எப்படி இருக்கீங்க

Kousalya சொன்னது…

சாதாரணமா எழுதினா மாதிரி தோணினாலும் உண்மையில் என் பார்வைக்கு கவிதையாகத்தான் தெரிகிறது....

நல்ல அனுபவம் தெரிகிறது (எழுத்தில் என்றுதான் சொன்னேன்...!!? )

:))

jothi சொன்னது…

வாங்க கௌசல்யா,..

மிக்க நன்றி. எனக்கு என்ன பண்றதுனே தெர்ல,.. இப்படி கவிதைன்னு சொல்லிட்டீங்களே,..

எழுத்தில் எனக்கு ஒண்ணும் அனுபவமெல்லாம் இல்லைங்க,.. காதலில் மட்டுமே அனுபவம் ,..( எங்களுடையது பெற்றோரின் சம்மதத்துடன் இனிய காதல் திருமணம்,..)

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கௌசல்யா,..

கருத்துரையிடுக