ஐ லவ் யூ அவ்வளவு சாதாரணமானதாக எனக்கு தெரியவில்லை. அதுவரை பேசாத பெண்ணாகட்டும், இல்லை பழகிய தோழியாகட்டும் சொல்வதற்கு முன் லப் டப்புகள் எங்கோ போய்விடும். ஒப்புக் கொள்வாளோ, தப்பாய் எடுத்துக் கொள்வாளோ என்று நிறைய காதல்கள் சொல்லாமலேயே முடிந்திருக்கின்றன. ஓரினச்சேர்க்கையே சரி என்று சொல்லும் இன்றைய சூழ்னிலையில் காதலித்தால் தப்பில்லை என்றே சொல்வேன். ஏனென்றால் இப்போதைக்கு யாரையும் நம்ப முடியவில்லை. காதலரை/காதலியை தெரிந்து,அறிந்து கல்யாணம் செய்வது ஒன்றும் எனக்கு தப்பாக தெரிய வில்லை. எல்லோரும் அதை வாழ்வில் ஒருவரிடம் சொல்லி அந்த த்ரில்லிங்கை அனுபவிப்பதில் தவறில்லை. ப்பா,.. மறக்க முடியாத தருணங்கள். முதன் முதலில் காதலியிடம் சொல்வதாகட்டும் இல்லை காலம் முழுக்க வரும் மனைவியாகட்டும் முதன் முதலில் அதை சொல்லும் போது அது கண்டிப்பாக த்ரில்லிங்க்தான்,..
இன்று அப்படிப்பட்ட சுவாரஸ்யமான எனக்கு பிடித்த " ஐ லவ் யூ"க்கள் உங்களுக்காக,..
அலை பாயுதே
நேர்த்தியாக படமாக்கி இருப்பார் மணிரத்னம்.இந்த கதை நிறைய பேருக்கு பிடிக்காவிட்டாலும் எனக்கென்னவோ பிடித்துதான் இருந்தது. மணி ரத்னத்தின் பவித்ரமான காதல்களில் இதுவும் ஒன்று. மாதவனும், ஷாலினியும் காதலர்களாக போட்டி போட்டு நடித்திருப்பர். எனக்கு பிடித்த ஐ லவ் யூக்களில் இது முதன்மையானது. (என்னா songs இல்ல??)
காக்க காக்க
அடுத்து ஆயுசு முழுக்க காதலிக்கவே பிறந்த ஜோடி ஜோதிகா மற்றும் சூர்யா. ஜோதிகாவின் அழகில் ஜோதி மயங்கிருந்த வேளை பார்த்து சூர்யாவிடம் தன் காதலை சொல்லிவிடுவார் (ஹி ஹி சரி சரி). கடல் கரை ஓரத்தில் நடக்கும் இந்த காதலின் வெளிப்பாடு மிக ரம்யமாக இருக்கும். ஆனால் ஜோதிகா கடைசியாக நடித்த மூன்று படங்களிலும் முற்றிலும் வித்தியாசமான பாத்திரங்களில் செம கலக்கல் நடிப்பு (பச்சை கிளி முத்துச்சரம், மொழி, சில்லென்று ஒரு காதல்). காக்க காக்க படத்தில் வரும் இந்த சீன் எனக்கு பிடித்த ஐ லவ் யூக்களில் ஒன்று. பார்த்து ரசியுங்கள்.
மௌனராகம்
இதுவும் மணி ரத்னம்தான். காதல் காட்சிகளை ரசிக்கும்படி எடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். இளையராஜாவின் மிக மிக மிக அட்டகாசமான மனதை சுழட்டும் அந்த பிண்ணனி இசையில், மௌனராகத்தில் கார்த்திக் ரேவதியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தடாலடியான காட்சி எனக்கு பிடித்த ஐ லவ் யூக்களில் ஒன்று. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை தமிழுக்கு சொன்ன படம். அப்போது கார்த்திக் எல்லா திரைப்படத்திலும் கதா நாயகனாக செம கலக்கு கலக்கினார். இப்போது கூட கலக்குகிறார் அரசியலில் காமெடியனாக,..
வழக்கம்போல் தமிழிஸில் ஓட்டுப் போட மறந்துவிடாதீர்கள் நண்பர்களே,..

14 கருத்துகள்:
ஹி்ம்ம்ம்... கல்யாணம் ஆச்சா?
ம்ம்ம்,.. ஒரு முறை,..
வருகைக்கு நன்றி குறை ஒன்றும் இல்லை
உங்க பதிவ விட
மேலே சொல்லியிருக்கும் பதில் - ஆஹா! சேம் சேம் பிளட் (இப்படித்தான் நானும் ஜொள்ளுவேன்)
நல்ல காணோளி மிக்க நன்றி நண்பா
ம்ம்ம்... ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக காதலை சொல்லியிருந்தாலும் நம்ம படங்களில்... ஜோதிகா சூர்யாவிடம் சொன்ன அந்த காதல் தான் எப்பவும் என் முதல் சாய்ஸ்... காக்க காக்க... ஆல் டைம் ஃபேவரிட் :)
summa nachhhhhhhhhnu irunthuchu... super adhuvum kaka kaka chancea ella...
என்ன திடீர்னனு காதல் சாம்பார் வழியுது?
எல்லாமே எனக்கும் புடிச்சிருக்குங்க...
என்னது அலைபாயுதே நிறைய பேருக்கு பிடிக்கலையா.. என்ன கத வுடுறீங்க? பதிவு நல்லா இருக்கு.. ஆனாலும் எனக்கு ரொம்ப பழங்காலத்து ஆள் எழுதுற மாதிரி ஒரு பீலிங்கு..! சரி லேட்-ஆ வந்தாலும் லேட்டஸ்ட்-னு சமாளிப்போம்! :-s
//உங்க பதிவ விட
மேலே சொல்லியிருக்கும் பதில் - ஆஹா! சேம் சேம் பிளட் (இப்படித்தான் நானும் ஜொள்ளுவேன்)//
வாங்க ஜமால்,. எனக்கு அப்படி எழுததான் பிடிக்கும். ஜொள்ள முடியாது. அப்புறம் மஹாலஷ்மி பத்ரகாளிதான் ஆகி விடுவாள்,..
//நல்ல காணோளி மிக்க நன்றி நண்பா//
வாங்க ஞானசேகரன்,.. நல்ல தமிழ்.
நானும் என்னால் முடிந்த வரை தமிழில் எழுத முயற்சி பண்ணுகிறேன்,..பார்க்கலாம்,..
சுத்தமான தமிழில் எழுத ஆசைதான் (குறைந்த பட்சம் ஆங்கிலத்தை தவிர்க்கலாம்,..)
இனி வரும் பதிவுகளில் இதை கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும்,..
//ம்ம்ம்... ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக காதலை சொல்லியிருந்தாலும் நம்ம படங்களில்... ஜோதிகா சூர்யாவிடம் சொன்ன அந்த காதல் தான் எப்பவும் என் முதல் சாய்ஸ்... காக்க காக்க... ஆல் டைம் ஃபேவரிட் :)//
வாங்க ஆகாய நதி,..
எனக்கு கூட காக்க காக்க பிடித்தமான படங்களில் ஒன்று,.. ஆனால் அந்த வன்முறை,.. கொடுமை,..
ஆனால் ஜோதிகா, சூர்யா காதல் காட்சிகள் மிக அற்புதமாக வந்திருக்கும்,..
//summa nachhhhhhhhhnu irunthuchu... super adhuvum kaka kaka chancea ella...//
உண்மைதான்,.. மற்ற இரண்டிற்கும் கூட குறைச்சல் என சொல்ல முடியாது,.. என்னால் துல்லியமான காணொளியை ஏற்ற முடியவில்லை.
வருகைக்கு மிக்க நன்றி அழகேஸ்.,.. அடிக்கடி வாங்க
//என்ன திடீர்னனு காதல் சாம்பார் வழியுது?//
சாம்பாரோ, ரசமோ,.. அது கணிப்பொறியுடன் முடிந்துவிட்டது.வெளியில் சொன்னால்/பார்த்தால் நாம் சட்னிதான்.
//எல்லாமே எனக்கும் புடிச்சிருக்குங்க...//
மிக்க நன்றி கலை. அடிக்கடி வருகைக்கு மிக்க நன்றி
//என்னது அலைபாயுதே நிறைய பேருக்கு பிடிக்கலையா.. என்ன கத வுடுறீங்க? பதிவு நல்லா இருக்கு.//
மிக்க நன்றி கலகலப்ரியா,..
அலை பாயுதே கதையை பற்றி அப்போது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. எனக்கு தெரிந்தே அலைபாயுதே பாணியில் திருமணம் செய்தவர்கள் நிறைய பேர்,..
//பழங்காலத்து ஆள் எழுதுற மாதிரி ஒரு பீலிங்கு..! சரி லேட்-ஆ வந்தாலும் லேட்டஸ்ட்-னு சமாளிப்போம்! :-s//
நீங்கதான் பாலர் பள்ளியில் படிக்கிறவங்களாச்சே ( எங்கேயோ எழுதனமாதிரி இல்ல? நமக்கு கொஞ்சம் நினைவாற்றல் கூட,..). என்னை மாதிரி பதினாறு வயசு பையங்கள் எழுதும்போது உங்களுக்கு அப்படிதான் இருக்கும்,..
வருவைக்கு நன்றி ப்ரியா
கருத்துரையிடுக