திங்கள், 20 ஜூலை, 2009

கூகுள் என்ஜினியரிங் - சுவாரஸ்ய பதிவு

எல்லோரும் சுவாரஸ்ய பதிவு, சுவாரஸ்ய பதிவுன்னு எழுதி தள்ளுராங்களே,. அதுக்கு விருது வேற வாங்கி கலக்குறாங்களேன்னு நினைச்சுகிட்டு இருக்கிறப்ப செந்தாழல் ரவியின் விருது என் அன்பிற்குரிய பதிவாளர் திரு எவனோ ஒருவன் வழிமொழிதலின் காரணமாக எனக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவருக்கு எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

இதன் காரணமாக எனக்கு ஒரு வேட்கையும், உற்சாகமும் தோன்றியது. இது வரை எப்படி எழுதினாய் என்பது முக்கியமில்லை. இனிமேலாவது ஒழுங்காய் எழுத வேண்டும் என தோன்றியது. அதன் காரணமாக மிக,மிக,மிக யோசித்தேன். எல்லோரும் டெக்னிக்கல் பதிவு போடுகிறார்கள்,.. நாமும் ஏதாவது போடலாமே என தோன்றியது. ஆனால் அதற்கு ஏதாவது டெக்னிக்கலாக ஏதாவது தெரிந்திருக்க வேண்டுமே என யோசித்த போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எல்லாரையும் போல் SAP, ஜாவா, சுமத்ரான்னு ஓவராக போக கூடாது, என் அறிவுக்கு எட்டியதாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் எல்லோருக்கும் பலனளிப்பதாகவும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்த போதுதான் எனக்கு கூகுள் நியாபம் வந்தது. எங்கள் பொறியியலில் எந்த ஒரு சிக்கலுக்கும் நாங்கள் விடை நாடி செல்வது கூகுள். ஒரு கேள்வியை நீங்கள் தூக்கி வீசினால் அது ஓராயிரம் பதில் தரும். இப்படி கூகுள் மூலம் நாங்கள் உருவாக்கும் என்ஜினியரிங், கூகுள் என்ஜினியரிங் என எல்லோராலும் அழைக்கப்படுகிறது (ஹி ஹி தலைப்பு வந்துருச்சு).

எனக்கு இருக்கும் தலையாய பிரச்சனை கடவு சொல்லும், ரகசிய குறியீடும் (அதாங்க user name, password). ரகசிய குறியீட்டை நான் அடிக்கும் போது யாராவது பார்த்துவிடுவார்கள் என பீதியின் காரணமாக நான் தப்பு தப்பாய் அடித்து நிறைய அக்கவுண்டுகள் காலியாகிவிட்டன. எனவே இதையே நம் தலைப்பாக கொள்ளலாம் என நினைத்து தேடி அழைந்தபின் கூகுளினால் எனக்கு அட்டகாசமான பதில்கள் கிடைத்தன. இவை எனக்கு எளிய முறையாகவும், எல்லோருக்கும் புரியும்படி ஒரு டெக்னிக்கல் பதிவு போட வாய்ப்பாகவும் அமையும் என்பதால், இந்த வழி முறைகளை கீழே இணைத்துள்ளேன். எல்லோரும் படித்து உங்கள் பார்வைகளை பகிரலாம். ஆனால் ஒரு நிபந்தனை, அவை கீழே சொன்னது போல் எளிய முறையில் இருக்க வேண்டும்,.. ஆமா,..

முறை ஒன்னு

நீங்கள் கீ பேடை மறைத்துவிடுங்கள், யாராலும் பார்க்க முடியாது.முறை ரெண்டு

நீங்கள் மானிட்டரை மறைத்து விடுங்கள், ஏற்கனவே கீ பேடும் மறைந்து இருப்பதால் உங்களின் ரகசிய குறியீடு மேலும் பாதுகாப்பாகிறது.

முறை மூணு

இது மிக மிக பாதுகாப்பான முறை. இதன் மூலம் உங்கள் ரகசிய குறியீட்டை நீங்களும் உங்கள் மானிட்டரும் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் இந்த முறை வலுவானதாக இருக்கிறது. இதில் என்ன ஒரு வசதி என்றால் நீங்கள் யார் என்பது கூட தெரியாது. இதனால் நீங்கள் என்ன வேணாலும் பார்க்கலாம். இந்த முறையின் காரணமாக நீங்கள் இரட்டை பலனை அடைகிறீர்கள் (technically speaking duel benefit).என் டெக்னிக்கல் பதிவிற்கு என் ஆலோசராக இருந்த பதிவர் பரட்டைக்கு என் நன்றி.
அடுத்ததாக நான் சுவாரஸ்ய விருதை வழங்குவது மூவருக்கு,..

1. கலகலப்பிரியா,.. ( பாரதியின் தங்கை, அக்கினி குருதி தெரிக்கும் இவர்களின் கவிதைகளுக்கு நான் அடிமை)
2. சாதிக் அலியின் தமிழ் குருவி (பதிவுகள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என நினைக்கும் பதிவுகளுக்கு சொந்தகாரர்)
3. ஆகாய நதி ,.. (எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வை பக்கத்தில் நடப்பது போல் எழுத்தில் கொண்டு வரும் திறமைசாலி)

என் வாழ்த்துக்கள், நண்பர்களே,..


இந்த பதிவு சுவரஸ்யமாக இருந்துச்சுன்னு நம்புரேன்,.. இதை நம்பாதவர்கள் என் முன்னால் உள்ள பதிவிற்கு செல்ல பரிந்துரைக்கிறேன்,..

மீ ப்ர்ஸ்டுபெத்த மனசு


எவனோ ஒருவனிற்கு மீண்டும் என் நன்றிகள்.
33 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

சுவாரஸ்யம்னு சொன்னதுக்கு இப்படியா?
இதுக்கு ஒரு முன்னுரை வேற... என்னமோ ஏதோன்னு அப்படியே கீழ வந்தா... உண்மையிலேயே சுவாரஸ்யம்தான்.
---
ராஜ்... உங்க கவுண்டர இங்க கொஞ்சம் கவனிக்கச் சொல்லுங்க.

jothi சொன்னது…

மிக்க நன்றி எவனோ ஒருவன், நீங்க தப்பா நினைக்க கூடாதுன்னு நினைச்சுக்கிட்டே பதிவை போட்டேன். தப்பா நினைக்கவில்லை என்றே நம்புகிறேன்,.. வருகைக்கு நன்றி,.. பள்ளிக்கூடம் ரெடியாயிடுச்சா?? படிக்க மிக்க ஆவலாய் உள்ளேன்.

கலையரசன் சொன்னது…

உங்களுக்கும், வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

வாங்கியவர்களின் தளத்திற்க்கு சுட்டு கொடுத்தால் நாங்களும் படிப்போம்!!

jothi சொன்னது…

/உங்களுக்கும், வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

வாங்கியவர்களின் தளத்திற்க்கு சுட்டு கொடுத்தால் நாங்களும் படிப்போம்!!//

வாழ்த்துக்களுக்கு நன்றி. கண்டிப்பாக என் பதிவு யாரும் இங்கே தொடாததாக இருக்கும்.


மன்னிக்க,.. இணைத்துவிடுகிறன்.

jothi சொன்னது…

கண்டிப்பாக என் அடுத்த பதிவு யாரும் இங்கே தொடாததாக இருக்கும்.

சந்ரு சொன்னது…

நல்ல பதிவு உங்களுக்கும் உங்கள் மூலமாக விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல சுவாரஸ்யமாதான் இருக்கு நண்பரே

எவனோ ஒருவன் சொன்னது…

//பள்ளிக்கூடம் ரெடியாயிடுச்சா?? படிக்க மிக்க ஆவலாய் உள்ளேன்.//

ரெடி பண்ணிட்டே இருக்கேன். அது பக்கம் பக்கமா போய்கிட்டே இருக்கும்போல. சீக்கிரம் போட்டுர்றேன்.

பிரியமுடன்.........வசந்த் சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம் தொடர் கலக்கல்ஸ்.........

Joe சொன்னது…

விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் ஜோதி.

மின்னஞ்சலில் வந்ததை தமிழாக்கம் செய்து ... இதை விட தரமான இடுகைகளைத் தரலாமே நீங்கள்?

ஆகாய நதி சொன்னது…

கலக்கலா இருந்துச்சு! ஏற்கனவே பார்த்த படித்த விஷயமானாலும் உங்க நடை அருமை... :))

ஆகாய நதி சொன்னது…

அய்யோ எனக்குமா விருது!!!???

ரொம்ப நன்றி! :)

உங்களுக்கும் மற்றவர்களூக்கும் எனது வாழ்த்துகள்!

வலசு - வேலணை சொன்னது…

வாழ்த்துக்கள்

jothi சொன்னது…

//நல்ல பதிவு உங்களுக்கும் உங்கள் மூலமாக விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி,.. சந்ரு,.. உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்

jothi சொன்னது…

//நல்ல சுவாரஸ்யமாதான் இருக்கு நண்பரே//

மிக்க நன்றி ஞானசேகரன்.

jothi சொன்னது…

//ரெடி பண்ணிட்டே இருக்கேன். அது பக்கம் பக்கமா போய்கிட்டே இருக்கும்போல. சீக்கிரம் போட்டுர்றேன்.//

நிறைய எழுதினால் மக்கள் படிக்கமாட்டேங்காராங்க,.. உஷார்

jothi சொன்னது…

//ம்ம்ம்ம்ம்ம் தொடர் கலக்கல்ஸ்.........//

மிக்க நன்றி,.. வஸந்த்,.. உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்

jothi சொன்னது…

//கலக்கலா இருந்துச்சு! ஏற்கனவே பார்த்த படித்த விஷயமானாலும் உங்க நடை அருமை... :))//

மிக்க நன்றி ஆகாய நதி

jothi சொன்னது…

//அய்யோ எனக்குமா விருது!!!???

ரொம்ப நன்றி! :)

உங்களுக்கும் மற்றவர்களூக்கும் எனது வாழ்த்துகள்!//

என்ன இது,.. உங்களைவிட சின்னவன் நான் (வலைப்பக்கத்திற்குதான்), எனக்கே கிடைக்கும் போது உங்களுக்கென்னா??

வாழ்த்துக்களுக்கு நன்றி

jothi சொன்னது…

//விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் ஜோதி.

மின்னஞ்சலில் வந்ததை தமிழாக்கம் செய்து ... இதை விட தரமான இடுகைகளைத் தரலாமே நீங்கள்?//

மிக்க நன்றி ஜோ.

மனம் திறந்த விமர்சனத்திற்கு முதலில் என் நன்றிகள். நானும் நல்ல பதிவுகள் எழுதிகொண்டுதான வருகிறேன். என் முந்தைய பதிவுகளை படித்து பார்த்தால் தெரியும்.

எனக்கும் என் மூளையை கசக்கி பதிவு போடணம்னு ஆசைதான். பொறுப்பான நாகரிகமான பதிவுகள் முன்பே போட்டுள்ளேன். ஆனால் அவை துரதிர்ஷ்டமாக எந்த பின்னூட்டமோ, தமிழிஷில் ஓட்டோ வாங்குவது இல்லை. எனக்கும் மாதவராஜைப் போல நச் பதிவுகள் போடத்தான் ஆசை. ஆனால் அவை கடலில் போட்ட பெருங்காயமாக கரைந்து போகின்றன. காரணம் எனக்கு அவரைப் போல 200 ப்பாளோயர் கிடையாது. கட்டுரை என்றால் 200ல் 20 பேராவது படிப்பார்கள், பின்னூட்டம் இடுவார்கள். என் நிலை அப்படியல்ல, இருப்பது 10 பேர் அதில் எத்தனை பேர் படிப்பார்கள் என தெரியாது. அதில் எத்தனை பேர் வெளிப்படையான விமர்சனம் தருவார்கள்? என் ப்பாளோயரை தக்க வைக்கவும், புது பாளோயரை இணைக்கவும் எனக்கு அவ்வப்போது சில ஹிட் தேவைப்படுகிறது. இதனாலேயே அவ்வப்போது மொக்கை பதிவு வந்துவிடுகிறது. என் நிலையை நியாயம் என சொல்லவில்லை. ஆனால் தவிர்க்கமுடியவில்லை என சொல்ல வருகிறேன். உதாரணமாக நீங்களே என் ஹிட் பதிவை மட்டுமே பார்க்கிறீர்கள். இதற்கு முன் என் "எதை சொல்ல" "பெத்த மனசு" போன்ற பதிவுகளை பார்த்தால் அவை கண்டிப்பாக மோசம் என சொல்லமாட்டீர்கள். ஆனால் அவை செம ஊத்தல்ஸ்,..ஹிட் ஆகி இருந்தால் பின்னூட்டம் வந்திருக்கும், என்னை எழுத்துகளை மெருகூட்டக் கூடிய ஒரு வாய்ப்பாக கூட அது அமையலாம். (நீங்கள் இப்படி சொன்னவுடன் அடுத்த பதிவு அட்டகாசமாக போட வேணும்னு தோனுதல, அதைப்போல).

என் ப்ளக்கை நான் என் எண்ணங்களை கொட்டக்கூடிய இடமாக நான் கருதவில்லை. பகிர்வதற்கான இடமாக கருதுகிறேன். அதனால்தான் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

எனக்கு ஒரு பிரச்சனை " கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே" என வேலை செய்யமுடியாது. பலனில்லாமல் செய்கிற வேலை அது என்ன வேலை?? அது சேவையாய் இருந்தாலும் கூட.

நான் எழுதியதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்

jothi சொன்னது…

//வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி வலசு, அடிக்கடி என் வலைப்பக்கம் வாங்க

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

மூன்றாவது டெக்னிக் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

இதைவிட உபயோகப் படுத்திய உடன் மடிக்கணினியை அழித்துவிட்டால் சுலபமாக இருக்குமே தல

jothi சொன்னது…

//மூன்றாவது டெக்னிக் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

இதைவிட உபயோகப் படுத்திய உடன் மடிக்கணினியை அழித்துவிட்டால் சுலபமாக இருக்குமே தல//

உண்மைதான், ஆபிஸ்ல இந்த மாதிரி கொடுத்தா எப்ப்புடி இருக்கும்????


பனியன் ஈரமாயிருக்குன்னு யாராச்சும் வீட்டையே கொளுத்துவாங்களா தல,.. வேணா பனியனோட முன்புறம் மற்றும் எரிய வையுங்க,.. பின்புறம் காய்ஞ்சிராது??

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

ரைட்டு...நடத்துங்க..நடத்துங்க :))

(இனி அடிக்கடி வருவேன், அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு)

jothi சொன்னது…

வாங்க, வாங்க அப்துல்லா,.. உங்கள் பதிவுகளை நான் படித்துள்ளேன்.

கண்டிப்பாக அடிக்கடி வாங்க,.. நீங்களும் பதிவு நிறைய எழுதுங்க,..குறைக்காதிங்க

கலகலப்ரியா சொன்னது…

நன்றி நன்றி நன்றி... எனக்கு கை கால் ஒண்ணும் ஓட மாட்டேங்குது.. ரொம்ப நன்றிங்க..

jothi சொன்னது…

//நன்றி நன்றி நன்றி... எனக்கு கை கால் ஒண்ணும் ஓட மாட்டேங்குது.. ரொம்ப நன்றிங்க..//

கால் மட்டும் போதும்.கையையெல்லாம் ஒட வைக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்க எழுதினது எனகென்னமோ வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரியே தெரிகிறது.

கார்த்திக் சொன்னது…

முறை 3.. எதோ ஜலதோசத்துக்கு ஆவி பிடிக்கிராபுல இருக்குங்க

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

//சுமத்ரான்னு/// எப்படியோ பூனைக்குட்டி வெளியில் வநதாச்சு..
மிகவும் ரசித்தேன் நணபரே..

jothi சொன்னது…

// முறை 3.. எதோ ஜலதோசத்துக்கு ஆவி பிடிக்கிராபுல இருக்குங்க//


நம்மதான் ஆவி புடிக்கணும், ஆவி நம்மளை புடிக்க கூடாது.. முதல் வருகைக்கு நன்றி கார்த்திக், அடிக்கடி வாங்க

jothi சொன்னது…

////சுமத்ரான்னு/// எப்படியோ பூனைக்குட்டி வெளியில் வநதாச்சு..
மிகவும் ரசித்தேன் நணபரே..//


மிக்க நன்றி குறை ஒன்றும் இல்லை. அடிக்கடி வாங்க,.. என்ன பூனைக்குட்டி? எனக்கு ஒன்றும் புரியலை

சாதிக் அலி சொன்னது…

சுவாரஸ்ய விருதா? எனக்குமா? சுவாரஸ்யமாயிருக்கே!நன்றி ஜோதி .

jothi சொன்னது…

//சுவாரஸ்ய விருதா? எனக்குமா? சுவாரஸ்யமாயிருக்கே!நன்றி ஜோதி .//

என்னங்க சாதிக், நீங்க ப்ர்ஸ்ட் லிஸ்ட்லயே வர வேண்டியவுங்க,..

ஏன் இப்போது இடுகைகள் குறைந்துவிட்டது?? தொடருங்கள் நண்பரே

கருத்துரையிடுக