வியாழன், 2 ஜூலை, 2009

மெழுகுகள் கரைந்துவிட்டன, ஆனால் வெளிச்சம் மட்டும் அப்படியே இருக்கிறது.

நான் ஒரு வெறித்தனமான இசை ரசிகன். இசையை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் நான் கொஞ்சம் அதிகம். எனக்கு சங்கீதம் சுத்தமாய் தெரியாது. வெறும் கேள்வி ஞானம் மட்டுமே. கேள்வி அறிவு என்றால், சினிமாவில் வரும் ஸ ரி க ம ப த நி களை அப்படியே பாட தெரியும் அவ்வளவுதான்,. (இதுக்கு பேர் கேள்வி அறிவா? அறிவுக்கு மரியாதையே இல்லாமல் போச்சுன்னு நீங்க சொல்றது கேக்குது, IAS அதிகாரியை மாடு மேய்க்க போன்னு சொன்ன அரசியல்வாதி இருக்குற ஊருதான இது,..இதையும் கண்டுக்காதிங்க,..)

நான் இளமையில் (அப்ப இப்ப??) ஒரு நாளுக்கு பத்து முறை ரசித்த பாடல்களை இப்போது இரவு பதினோறு மணிக்கு மேல்தான் FMல் கேட்க முடிகிறது. இன்னும் ஒரு ஐந்து வருடங்களில் அது மூன்று மணியாகிவிடும். சினிமா பாடல்களை வைத்து பிழைப்பு நடத்தும் வானொலியே இப்படி சிறந்த கலைஞர்களை தூக்கி ஓரத்தில் போடும் போது, பொழுதுபோக்கிற்காக பாடல் கேட்கும் சாதாரண மக்களைப்பற்றி என்ன சொல்லமுடியும். நிறைய சிறந்த பாடகர்களை மறந்துவிட்டார்கள். ஆனால் பாட்டு பேருந்தில் (அதாங்க பாட்டு பஸ்,.. புரியாதவங்க இந்த பதிவை பாருங்கள்) செல்லும் போது "தம்பி கொஞ்சம் சவுண்ட் வைப்பா" என்று வேண்டி கேட்கும் குரலிற்கு சொந்தகாரர்கள் இவர்கள். பாடகர்களின் பெயர்களை நிறைய பேர் மறந்து போயிருப்பார்கள், ஆனால் அந்த குரல் என்றோ ஒரு நாள் அவர்களை லயிக்க வைத்திருக்கும். அப்படிபட்ட பாடகர்களை இங்கே சொல்லி இருக்கேன். படித்து பின்னூட்டமிடுங்கள்.

பின்குறிப்பு:
நிறைய பேர் இது பெயர் மறக்ககூடிய இவர் குரல் இல்லை. இவர் இன்னும் பெயர் மக்களின் மனதில் உள்ளது என சண்டைக்கு வரலாம். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான் கை ஒன்றாலும் விரல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. நீங்கள் கட்டைவிரலையும், ஆட்காட்டி விரலையும் சொல்லுகிறீர்கள். நான் கடவுள் வணங்கும் போது முன்னால் வரும் சுண்டு விரலை சொல்லுகிறேன். பார்வைகள் வேறுபடுகின்றன. அவ்வளவுதான்.

வாங்க பதிவுக்கு போலாம்,.. ஸ்டார்ட் மியூசிக்,.

P B சீனிவாஸ்
ஒரு ஆண் பாடகரின் குரல் இப்படிதான் இருக்க வேண்டும் என நான் நினைத்த கனவு குரலிற்கு சொந்தகாரர். எட்டு மொழிகளை சரளமாக பேச தெரிந்த இவர் பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் பாடிய அற்புதமான பாடகர். எம்ஜியார், சிவாஜி என முன்னனி நடிகர்கள் இருவருக்கும் பாடல்களை பாடிய TMS க்கு போட்டியாக தன் குரலை மட்டுமே பலமாய் வைத்து தனித்து நின்றவர். அவர் பாடிய பாடல்களில் பேர் போனவை இவை,.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,.. (போலீஸ்காரன் மகள்)
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
ரோஜா மலரே ராஜ குமாரி
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
வளர்ந்த கலை மறந்துவிட்டால் கேளடா கண்ணா
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே
பூஜைக்கு வந்த மலரே வா
நிலவே என்னிடம் நெருங்காதே
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

AM ராஜா

சிறந்த பாடகர் மற்றும் இசை அமைப்பாளர். இவர் பாடிய பல பாடல்கள் சிறந்த வெற்றி பெற்றவை. மெல்லிசை பாடல்களுக்கு சீனிவாஸிற்கு சிறந்த போட்டியாக இருந்தவர். 1989 ஆம் ஆண்டு திருனெல்வேலி அருகே ரயில் விபத்தில் மரணமடைந்ததாக வலைப்பக்கங்களில் படித்தேன். பாடல்கள் பின்வருமாறு.

தனிமையிலே இனிமை காண முடியுமா?
மாசிலா உண்மை காதலி
பாட்டு பாடவா
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
வாடிக்கை மறந்தது ஏனோ
வாராயோ வெண்ணிலாவே
ஆடாத மனமும் ஆடுதே

ஜெயசந்திரன்

மெல்லிய குரல் வளத்துடன் இன்னும் சிறப்பாக பாடி கொண்டிருக்கும் சிறந்த பாடகர். இளைய ராஜாவின் இசையின் இவரின் பல பாடல்கள் தேன். மலையாளத்திலும், தமிழிலும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.

ராசத்தி உன்ன காணாத நெஞ்சு
காத்திருந்து காத்திருந்து
தாலாட்டுதே வானம்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே வானம்
கன்னத்தில் முத்தமிட்டால்
கத்தாழங்காத்து வழி
என் மேல் விழுந்த மழைத்துளியே

தீபன் சக்கரவர்த்தி

புகழ் பெற்ற திருச்சி லோகனாதனின் மகன். இருந்தாலும் தன் குரலினை மட்டும் வளமாக கொண்டு கடினமான பாடல்களையும் எளிதாக பாடவல்லவர். உதாரணம் காதல் ஓவியத்தில் வரும் பூஜைக்காக சூடும் பூவை சூறையாடல் முறையோ.

பூஜைகாக சூடும் பூவை - காதல் ஓவியம்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
பூங்கதவே தாழ் திறவாய்
நதியில் ஆடும் பூவனம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்- பன்னீர் புஷ்பங்கள்

வாணி ஜெயராம்

மூன்று முறை தேசிய விருதுகளை வாங்கிய அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகர். 18 மொழிகளில் பாடிய ஒரே பெண் பாடகர். இவர் பாடிய சிறந்த பாடல்கள் நிறைய இருந்தாலும் குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டும் உஙகளுக்காக,..

என்னுள்ளே ஏனோ – (ரோசாப்பூ ரவிக்கைகாரி)
இலக்கணம் மாறுதோ
வா வா என் வீணையே ல ல
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது - இளமை ஊஞ்சலாடுகிறது
வசந்த கால நதிகளிலே தெய்வமங்கை நீரலைகள் - மூன்று முடிச்சு
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், - அபூர்வ ராகங்கள்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - புன்னகை மன்னன்
மேகமே மேகமே - பாலைவன சோலை

உமா ரமணன்

உமா ரமணன், துரஷ்டமான பாடகர்களில் ஒருவர். இவர் பாடிய பல பாடல்கள் அட்டகாசமானவை. குறிப்பாக பன்னீர் புஷ்பங்களில் வரும் ஆனந்தராகம் கேட்கும் காலம்,.. எனக்கு பிடித்த பாடல்களில் முதலிடத்தில் வகிக்க கூடியது. அந்த காலகட்டத்தில் இப்போது உள்ளது போல் சிறந்த ஒலி நிபுணத்துவம் இல்லை. இல்லையென்றால் இந்த பாடல்களை கேட்பதற்கே ஆயிரம் காதுகள் வேண்டும். (அவ்வளவு செவுடான்னு கேக்க கூடாது,..காண கோடி கண்கள் வேண்டும் சொல்லுமோது கம்முனு இருக்கிங்கள,.. அது மாதிரிதான் இதுவும்)

ஆனந்தராகம் கேட்கும் காலம் - பன்னீர் புஷ்பங்கள்
பூவண்ணம் போல நெஞ்சம்
பொன் மானே கோபம் ஏனோ
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
பூங்கதவே தாழ் திறவாய்
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
ஆறும் அது ஆழமில்ல

SP சைலஜா

SPB யின் தங்கை. இவருக்கு நடிகை,பாடகர்,பின்னணி குரல் பல பரிணாமங்கள் உண்டு. அனைத்தையுமே சிறப்பாக செய்தவர் (உதாரணம் சலங்கை ஒலி). தமிழ், தெலுங்கு இரண்டிலுமே நிறைய பாடல்கள் பாடி உள்ளார். உங்களுக்காக சில பாடல்கள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
சிறு பொன்மணி இசைக்கும் சிறு இசையும்
சின்னஞ்சிறு வயதில் (மீண்டும் கோகிலா)
மாமே மச்சான் நீதானா (முரட்டுக்காளை)
உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி
நாத வினோதங்கள் பரம சுகங்கள்
ராசாவே உன்னைத்தான் எண்ணிதான்

ஜென்ஸி

நான் பிரமித்த பெண் பாடகர்களில் முதல் நிலையானவர். இவர் பாடிய பாடல்கள் மிக குறைவே, இருந்தாலும் பாடிய பாடல்கள் பெரும்பான்பவை அட்டகாசமான் ஹிட். குறுகிய காலத்தில் அற்புதமான மெலோடிகளை வழங்கிவிட்டு திருமணத்திற்கு பின் தமிழிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

காதல் ஓவியம் பாடும் காவியம்
என் வானிலே,- ஜானி
ஒரு இனிய மனது- ஜானி
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ஆயிரம் மலர்களே, மலருங்கள்
இதயம் போகுதே . எனையே மறந்து
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் (உல்லாச பறவைகள்)

இது பலர் மறந்துவிட்ட பின்னணி பாடகர்களுக்காக,..

மெழுகுகள் கரைந்துவிட்டன, ஆனால் வெளிச்சம் மட்டும் அப்படியே இருக்கிறது.

11 கருத்துகள்:

jothi சொன்னது…

அடடா கட்டுரை என்ன இவ்வளவு பெருசா வந்திருச்சு??

Joe சொன்னது…

அருமையான இடுகை ஜோதி.

இளைய தலைமுறை இன்னும் பழைய பாடகர்களை நினைவு வைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். என்னைப் போன்ற சிறுவர்களுக்கும் இது நல்ல தகவல் தரும் இடுகை, ஹீ ஹீ!

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி ஜோ. உயிருள்ள இசைக்கு சாவில்லை ஜோ. நீங்கள் சிறுவரா? அடடே இந்த பாடல்களை கேட்டே இருக்க மாட்டீர்களே. கேட்டுப்பாருங்கள், ஆனால் பாடல்களின் வரிகள் தெளிவாக புரியும் பரவாயில்லையா?

Joe சொன்னது…

சென்னைக்கு வந்திட்டு சொல்லாமே கொள்ளாமே போயிட்டீங்களோ, மறுபடியும் வெளிநாட்டுக்கு?

jothi சொன்னது…

மன்னிக்கவேண்டும் ஜோ. எனக்கு பதிவர் கூட்டங்களை பார்க்கும் போது என்னால் இது போல கூட்டங்களை தவறவிடுகிறோமே என வருத்தமாக இருக்கும். ஆனால் என்ன செய்வது, மூன்று ஆண்டுகள்தான் மீண்டும் வந்துவிடுவேன்.

இந்த முறை ஊருக்கு வந்து ஒரே ஒரு ஒரு முறை நெட் சென்று எனக்கு வந்து பின்னூட்டங்களுக்கு பதில் அளித்து திரும்பி சென்றுவிட்டேன். எனது தம்பியின் கல்யாண விஷயமாக முழுக்க அலைந்ததால் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.

Joe சொன்னது…

மன்னிப்பெல்லாம் தேவையில்லை, நண்பா.

முடிந்தால் சென்னையில் நான் வந்து சந்தித்திருப்பேன், அதற்காக கேட்டேன்.

jothi சொன்னது…

நன்றி. போன மாதம் சென்னையிலா இருந்தீர்கள்??

Joe சொன்னது…

நான் இந்தியா திரும்பி வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.

ஆகாய நதி சொன்னது…

All songa r super hit songs... :)

Good post! :)

jothi சொன்னது…

நன்றி ஆகாய நதி, பொழிலன் பிறந்த நாளைக்கு டிரஸ் எல்லாம் வாங்கியாச்சா?

Mathu சொன்னது…

all the songs are my favourite too.Ceylon Radio
did its best in those days.

கருத்துரையிடுக