வெள்ளி, 24 ஜூலை, 2009

வெளி நாடு வாழ் இந்தியர்கள் சிங்கங்களா இல்லை குரங்குகளா??

இந்த பதிவை முழுசாக படிக்க நினைப்பவர்கள், நேற்றைய இதன் முந்தைய பதிவையும் சேர்த்து படியுங்கள். இது முந்தைய பதிவு மன்றத்தின் தொடர்ச்சி,..


தீர்ப்பு என்ன சொல்ல ?

வெளி நாடு வாழ் இந்தியர்கள் என்றாலே உங்களுக்கு இளக்காரமாய் போய்விட்டது. உலகிலேயே பிறந்த மண்ணிற்கே பணத்தை அனுப்பும் கூட்டம் எது தெரியுமா? அது இந்தியனின் கூட்டம்தான். 2007 ஆம் ஆண்டு உலக வங்கி கணக்குப்படி இந்தியாவிற்கு வந்த NRI பணம் மட்டும் 27 பில்லியன் டாலர்கள்,.. (1.2 லட்சம் கோடி இந்திய ரூபாய்). சொந்த மண்ணிற்கு தேசத்திற்கு பணம் அனுப்பும் நாட்டு மக்களில் இந்தியாவே முதலில் இருக்கிறது. இது அன்னிய நேரடி தொழில் முதலீடுகளைவிட மூன்று மடங்கு அதிகம். இந்த பொன் முட்டையிடும் வாத்தை இழக்க இந்தியா தயாரில்லை. அதனால்தான் NRIகளுக்கு சலுகையாக வழங்குகிறது. உங்கள் பணத்தை கலர் டிவியாகவும், கேஸ் ஸ்டவ்வாகவும் அரசு வழங்கிய போது அமைதி காத்த நீங்கள் NRI என்றதும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? நாங்கள் என்னதான் சம்பாரித்தாலும் எங்கள் பணம் இங்குதானே வருகிறது? அது உங்களுக்கு போனஸ்தானே. துபாய் சொன்னதுபோல் ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வை சௌகர்யமாக அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. அது சிங்கமாக இருந்தாலும் சரி, இல்லை குரங்காக இருந்தாலும் சரி. அது அவைகளின் சொந்த உரிமை. எனக்கொரு பிரச்சனை என்றால் யார் வருவார்? நான் தானே பார்த்து கொள்ளவேண்டும்? நீங்கள் யாரும் வருவீர்களா?? இல்லையே, எனக்கும் என் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கும் நாங்கள் சேர்க்கிறோம்.இதில் அடுத்தவர்களுக்கு என்ன பிரச்சனை?? என் பாதுகாப்பிற்காக என் உழைப்பில் நான் சம்பாரிக்கும் பணத்தை கேள்வி கேட்க நீங்கள் யார்??

இப்படியெல்லாம் நம்ம வெளி நாடு வாழ் இந்தியர்கள் கேக்குராங்க,..ஆனா எனக்கு தோன்றது இது தான்,..நீங்கள் (NRI) எவ்வளவு பேர் போயி எவ்வளவு காசு அனுப்பினீங்க,.. என்ன மாற்றம் வந்துச்சு? இல்லையே ஏன்.? காரணம் என்ன? நீங்கள் சம்பாதிப்பதை உங்களின் குடும்பம் முன்னேற பயன்படுத்துகிறீர்கள். வீடு வாங்க, நிலம் வாங்க, பேங்கில் போட இப்படி பல. இதனால் உங்கள் குடும்பம் முன்னேறியது. ஆனால் நாடு?? இது ஏற்ற தாழ்வுகளை உருவாக்கும் காரணியா இல்லையா? ஆனால் அன்னிய நேரடி முதலீடுகள் வரும் போது அது நாட்டிற்கு நல்லது. காரணம் பணம் வீடாகவும், காராகவும் முடங்குவதில்லை.அன்னிய முதலீடு தொழிலை பெருக்குகிறது. உற்பத்தியை அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கும் போது நாட்டினுடைய வளர்ச்சியை கண்கூடாக காணலாம். அதனால்தான் அரசாங்கம் நேரடி அன்னிய முதலீடுகளில் கவனம் செலுத்துகிறது. இதுதான் காரணம்.

எனக்கு தெரிந்தவரை பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஆனால் பணமின்றி வாழ்க்கையும் இல்லை. அதனால் உங்கள் தேவைகளுக்கு உங்கள் லட்சியங்களுக்கு வெளிநாடு செல்வதில் தவறில்லை. போய் உலகத்தை தெரிந்து கொள்ளுங்கள். உலகத்திலுள்ளவனுக்கு என்ன தேவை என அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உயர்வதற்கு என்ன என்ன வழி இருக்கிறதென்று பாருங்கள். உன் இந்தியன் ஒருவன் உயர்வதற்கு கூட வழி இருக்கா என்பதையும் பாருங்கள். பருந்துகள் மேலே பறக்கும்போது சின்ன பட்டங்களையும் தூக்கிகாட்டுவதில் ஒன்றும் தவறில்லை. பருந்திற்கும் ஒன்னும் நட்டமில்லை. நீங்கள் எப்படியோ நாட்டின் பவளங்கள்தான். கடல்தான் பெரிய பரப்பு அதுதான் நிம்மதி என பவளம் எங்கோ ஒரு கடலில் நீங்கள் கிடப்பதில் என்ன பலன். அது இருக்கிற இடத்தில் இருந்தால் தங்கத்திற்கும் பதிப்பு, பவளத்திற்கும் மதிப்பு.

உலகிலேயே முதல் நிலை பணக்காரரான லஷ்மி மிட்டல் தெரியுமா? நிறப்பாகு பாடு காட்டும் கூட்டத்திலிருந்து வர எப்படி போராடிருப்பார். பாராட்டக்கூடிய விஷயம். ஆனால் அவர் மகள் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? தங்கத்தை குழைத்து அதில் வைரத்தை ஒட்டி ஆடையாய் செய்து மகளிற்கு திருமணம் செய்தார். இவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். ஆனால் எல்லா நாடுகளிலும் முதலீடு செய்துள்ளார். இந்தியாவிலும் ஏதோ பிச்சைகாசு அளவிற்கு முதலீடு என்று கேள்வி. என்னைப் பொருத்தவரை மிட்டல் ஒரு தவறான உதாரணம். (மகள் கல்யாணத்திற்கு முன்னூறு கோடி செலவழித்த புண்ணியவான்) அவனைபோல் யாரும் இருக்காதீர்கள் என்பதற்குத்தான் இந்த பதிவு மன்றமே. அந்த ஆளிற்கு சத்யம் ராஜூ எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்வேன்.



அதனால் வெளி நாடு செல்லுங்கள், உழைத்து பொருள் ஈட்டுங்கள். அந்த பொருளை வைத்து அங்கேயே இருக்காதீர்கள். நம் நாட்டிற்கு திரும்ப வாங்க. முதலீடு கொண்டு புதிய தொழில் தொடங்குங்கள். அங்கு வேலையில்லாமல் அடாவடியாக திரியும் நம்ம மாடசாமிக்கு ஒரு வேலை போட்டுக்கொடுங்கள். திருந்துவான்.

அதனால் நீங்கள் யாருக்கோ உழைப்பதற்கு இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் உழை என்று சொல்கிறேன்.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்
கோன் உயர நாம் உயர்வோம்.

சிங்கங்கள் குரங்காவதில் தப்பில்லை. சுற்று சூழலில் பெரும் ஆபத்து வந்தால் உணவில்லாமல் சிங்கங்கள்தான் முதலில் சாகும். குரங்குகள் அல்ல. உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் குரங்குகள் துபாய்லேயே இருந்து கடைசி காலத்தில் இங்கு வந்தால் மற்ற சிங்கமும் கண்டுக்காது, எந்த குரங்கும் கண்டுக்காது. அது காட்டிற்கு நல்லதில்லை.

பதிவு பிடித்திருந்தால் மத்தவங்க காவ்யா மாதவானிற்கு போட்ட ஓட்டை நீங்க எனக்கு போடுங்க,..


32 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நான் உங்கள் கருத்தை ஏற்கிறேன்.. நன்றி நண்பரே!!

jothi சொன்னது…

மிக்க நன்றி குறை ஒன்றும் இல்லை. அடிக்கடி நம்ம வலைப்பக்கம் வாங்க

கலையரசன் சொன்னது…

நான் உங்க தளபதி மன்னா!

காவ்யா மாதவனுக்கு போட்டாங்கன்னா..
அவருக்கு இருக்கு...
புகழ்!

உங்களுக்கும் போட்டாச்சி!!

jothi சொன்னது…

ரொம்ப சரி. காவ்யா மாதவனும் நானும் ஒண்னா??

உங்கள் கருத்தை வழி மொழிகிறேன். நான் அப்படி எழுதி இருக்க கூடாது. நான் கூட அதுக்கு ஓட்டு போட்டேன்.

அப்புறம், பதிவை பத்தி ஒண்ணுமே சொல்லல,.. அது கிடக்குதுங்கிறிங்களா?? அதுவும் சரி.

உங்க லேடஸ்ட் பத்து சூப்பர்

thina சொன்னது…

மன்னிக்கவும். தங்களுடையே கருத்து தவறு மற்றும் ஆழமான சிந்தனை செய்யாத ஒன்று.

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி தினா. என் பார்வையில் அது சரி,உங்கள் பார்வையில் தவறாக இருக்கலாம். எப்படி என்று சொல்லுங்கள். உங்கள் வாதத்தையும் சொல்லுங்கள்

கபிலன் சொன்னது…

இங்க இருக்க இந்தியனும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியனும் ஒன்று தாங்க. நம்ம ஊர்ல வேலை செய்ற டிரைவர்க்கு 3000 ரூபாய் சம்பளம், வெளிநாடுகளில் வேலை செய்கிற டிரைவர்க்கு 100,000 சம்பளம். அவ்வளவு தான். மத்தபடி எல்லோரும் ஒன்னு தான். அவரவை பிழைப்பு அவரவர்க்கு. ஏதோ இந்தியாவை முன்னேற்றவேண்டும் என்கிற எண்ணத்தில் நம் ஊருக்கு பணம் அனுப்புகிறார்கள் என்று கூறுவது உலக மகா பொய். அவரவர் வீட்டிற்கு அனுப்புகின்றனர். அங்கு ஒரு ஷாம்பூ வாங்குவதை விட, நம் ஊரில் ஷாம்பூ வாங்குவது சுலபம், காசும் ரொம்ப கம்மி.அதான் அனுப்புராங்க. நான் பார்த்த வரைக்கும் NRI க்கள் பலர் நம்ம ஊரை கேவலப்படுத்துறதுலேயும், கிண்டல் பண்றதுலேயும் தான் ரொம்ப அக்கறை காட்டுற மாதிரி! ரோடு சரி இல்ல, ஊழல், சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்ல...அது இதுன்னு.....இவங்க எங்க படிச்சாங்கன்னு மறந்தே போயிடுறாங்க.!

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல கருத்து ஜோதி...வாழ்த்துக்கள்!..

Beski சொன்னது…

என்ன தலைவா அதுக்குள்ள ரிசல்ட் வந்துட்டா?
ஃப்ரீயா இருக்கும்போது படிச்சி நல்ல கருத்தா போடலாம்னு பாத்தேன். நீங்க ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கீங்களே! (இல்லன்ன ரொம்ப வெட்டியா இருக்கீங்களா?).

அப்புறம் படிச்சி விரிவான கருத்து போடுறேன், நா மறந்தாலும் என்கிட்ட கருத்து வாங்காம நீங்க விடக்கூடாது. ஓக்கே?

jothi சொன்னது…

//ஏதோ இந்தியாவை முன்னேற்றவேண்டும் என்கிற எண்ணத்தில் நம் ஊருக்கு பணம் அனுப்புகிறார்கள் என்று கூறுவது உலக மகா பொய்.//

வருகைக்கு நன்றி கபிலன். ஆம், ஒப்புகொள்கிறேன் கபிலன். அதனால்தான் நேரடி அன்னிய முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை விளக்கி இருக்கேன்

jothi சொன்னது…

//ரோடு சரி இல்ல, ஊழல், சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்ல...அது இதுன்னு.....இவங்க எங்க படிச்சாங்கன்னு மறந்தே போயிடுறாங்க.!//

கிண்டல் பண்ணுகிறார்கள் என்பது உண்மைதான் கபிலன். நீங்கள் சொன்ன மாதிரி சிலர் எல்லாவற்றிற்கும் நொல்லது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நான் பார்த்த வரை நிறைய பேர் அப்படி இல்லை. ஊருக்கு வருகிறோம் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே சந்தோசம் கரை புரண்டு ஓடும். வெளி நாடுகளிலேயே பிறந்து வளர்கிற அடுத்த சந்ததிகளதான் இந்த மாதிரி கமெண்ட் அடிப்பது. அவர்களுக்கு இந்தியாவை விட அந்த வெளி நாடுதான் வசதி (மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களை தவிர). அதை நான் தவறென்றும் சொல்லமாட்டேன். கடற்கரையில் வைத்த பலா மரம் சுவையாய் இல்லாததிற்கு பலா என்ன பண்ணும்?? மண்ணு அப்படி

jothi சொன்னது…

//நல்ல கருத்து ஜோதி...வாழ்த்துக்கள்!..//
வாங்க ராஜாராம், அடிக்கடி இந்த வலைப்பக்கம் வாங்க. கருத்திற்கும் நன்றி

jothi சொன்னது…

//என்ன தலைவா அதுக்குள்ள ரிசல்ட் வந்துட்டா?
ஃப்ரீயா இருக்கும்போது படிச்சி நல்ல கருத்தா போடலாம்னு பாத்தேன். நீங்க ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கீங்களே! (இல்லன்ன ரொம்ப வெட்டியா இருக்கீங்களா?).//

என்ன பண்றது எனக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை. அன்று மட்டும்தான் இது மாதிரி பெரிய்ய்ய்ய பதிவுகள் போடமுடியும். வெள்ளிக்கிழமை சும்மா இருப்பதால்தான் பதிவு போட முடிந்தது.

jothi சொன்னது…

//
அப்புறம் படிச்சி விரிவான கருத்து போடுறேன், நா மறந்தாலும் என்கிட்ட கருத்து வாங்காம நீங்க விடக்கூடாது. ஓக்கே?//

கண்டிப்பாக,. நீங்கள் போட்ட பின்தான் அடுத்த பதிவே போடலாம்னு இருக்கேன்

Natraj சொன்னது…

You people have to understand onething,of course we are sending money to our family but the Govt is getting valuable Foreign Exchange.
If somebody Investing in India, that money is repatriable, where as the money sent by us will stay in India only.
We are struggling a lot in the Foreign soil without any rights. As we are out side India, the competion in Job market is less in India. Imagine, if all the NRI s are back, you will loose your Job.

jothi சொன்னது…

Welcome to my blog friend.

//where as the money sent by us will stay in India only.//

Agreed with you, the money stays in India only. Is it having any impact on value of Indian Rupee? ie Is this helps to increase the money value? Then what is the use? Because of you (we) are sending huge amount of money which is the top most in the world, is have any impact on Indian economy making bright?? Because of NRI money, unfortunately indirectly increasing the land cost and other immovable assets which is making very difficult to purchase a land/hub for a common public. This makes more gap between poor and rich which is very dangerous to any nation, results high degree of theft and stealing etc. None of the economy will encourage the rise up in gap between poor and rich.

jothi சொன்னது…

//We are struggling a lot in the Foreign soil without any rights.//

We are not asked NRI to take risk in foreign soil. It is your wish/commitment to attain your goal. It is nowhere related a common public in India. You are taking risk and you are paid for the risk.

jothi சொன்னது…

//As we are out side India, the competion in Job market is less in India...//

Although all over world high recession, still many software companies/ banks/ design companies are going for campus interview. Now India is made a situation directly/indirectly without its skilled employee no quote will go as cheap. The job offloading from other nations to India is much much high.

jothi சொன்னது…

//Imagine, if all the NRI s are back, you will loose your Job.//

No need of making imagine, now you can find very openly, those who came from US due to job recession are facing problem to get a job because neither they are cat nor tiger. As I told earlier job offloading from other nations much much high in India, still many companies are facing problem to get some good experience candidates. So don't worry, we are having all range of job opening here and getting job is not a problem today, of course if you are not a fake. But good comedy is fake people also getting the good job with much number, although HR knows it, they could not able to stop to select because they need the people.

Many people are thinking that India is poor country but it is not,only the Indians are poor, not India.

Beski சொன்னது…

//வெளி நாடு செல்லுங்கள், உழைத்து பொருள் ஈட்டுங்கள். அந்த பொருளை வைத்து அங்கேயே இருக்காதீர்கள். நம் நாட்டிற்கு திரும்ப வாங்க. முதலீடு கொண்டு புதிய தொழில் தொடங்குங்கள். அங்கு வேலையில்லாமல் அடாவடியாக திரியும் நம்ம மாடசாமிக்கு ஒரு வேலை போட்டுக்கொடுங்கள்//

எனக்குத் தெரிஞ்சு, நிறைய பேரு இப்படித்தான் திரும்பி வர்றாங்க. ஆனா, இங்க ஒழுங்கா அதப் பண்ண முடியும்னு நெனைக்கிறீங்களா?

சிவாஜி படத்துல ஒரு NRI படும்பாடு சும்மா கதை மாதிரி நெனச்சுடாதீங்க... அது உண்மையும் கூட.

இங்கு நடக்கும் ஊழல் அடாவடிகளைப் பொறுத்துக்கொண்டாலொழிய இங்கே காலம் தள்ள முடியாது.

Joe சொன்னது…

ஜோதி,
அதான் இத்தனை வோட்டுக்கள் விழுந்திருக்கே?
நான் வரலைன்னா என்ன?

பணிச்சுமை, சின்னபள்ளிகுப்பம் செல்ல ஏற்பாடுகள் போன்ற காரணங்களால், இடுகைகள் அதிகம் எழுத முடியவில்லை, பின்னோட்டங்களும் இட முடியவில்லை.

கார்த்திக் சொன்னது…

வெளி நாடுகளுக்கு போய்ட்டு திரும்ப இந்தியாவுக்கே வரணும்-னு நினைக்கிராங்க.. ஆனா யாரும் வரதே இல்ல..

jothi சொன்னது…

//எனக்குத் தெரிஞ்சு, நிறைய பேரு இப்படித்தான் திரும்பி வர்றாங்க. ஆனா, இங்க ஒழுங்கா அதப் பண்ண முடியும்னு நெனைக்கிறீங்களா? //
கண்டிப்பாக பண்ணலாம் எவனோ ஒருவன். இது போன்ற செயல்களுக்கு கண்டிப்பாக பாஸிட்டிவ் அப்ரோச் தேவைப்படுகிறது. திரையில் வருகிற சிவாஜியை ஏன் நம்புகிறீர்கள். நேரில் வெற்றிகரமாய் செய்கிற சரத்பாபுவை பாருங்கள். நிஜமிருக்க நிழலை ஏன் பார்க்க வேண்டும்? .இதற்கு தான் பாஸிட்டிவ் அப்ரோஸச் வேண்டும் என சொல்கிறேன். பாதைகள் எவ்வளவு கோணலாக இருந்தாலும் பார்வைகள் தெளிவாக இருந்தால் நோக்கங்களை அடைவது சிரமமில்லை.

jothi சொன்னது…

//அதான் இத்தனை வோட்டுக்கள் விழுந்திருக்கே?
நான் வரலைன்னா என்ன?

பணிச்சுமை, சின்னபள்ளிகுப்பம் செல்ல ஏற்பாடுகள் போன்ற காரணங்களால், இடுகைகள் அதிகம் எழுத முடியவில்லை, பின்னோட்டங்களும் இட முடியவில்லை.//

இந்த பதிவே உங்களுக்காகதான். போன பதிவில் நீங்கள் சொன்ன அந்த பின்னூட்டதிற்குதான் இந்த பதிவு. 5 பதிவில், 2 மொக்கையாகவும் 3 ஏதோ கருத்து கொண்டும் பதிவுகளை இடுகிறேன். மொக்கைகள் ஹிட் ஆவதும் கருத்துகள் டக் ஆவதும்தான் நடக்கிறது.

இந்த பதிவே உங்களுக்காகதான். போன பதிவில் நீங்கள் சொன்ன அந்த பின்னூட்டதிற்குதான் இந்த பதிவு. 5 பதிவில், 2 மொக்கையாகவும் 3 ஏதோ கருத்து கொண்டும் பதிவுகளை இடுகிறேன். மொக்கைகள் ஹிட் ஆவதும் கருத்துகள் டக் ஆவதும்தான் நடக்கிறது.

உங்கள் சூழ்னிலை எனக்கு புரிகிறது. அதனாலென்ன கஷ்டமெல்லாம் ஒன்னும் இல்லை.

jothi சொன்னது…

//வெளி நாடுகளுக்கு போய்ட்டு திரும்ப இந்தியாவுக்கே வரணும்-னு நினைக்கிராங்க.. ஆனா யாரும் வரதே இல்ல..//

வாங்க கார்த்திக். உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் அதன் சௌகர்யங்களுக்கு ஏற்ப வாழ உரிமை உண்டு. மனிதன் அதில் விதி விலக்கல்ல.

Suresh சொன்னது…

@ jothi

எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் நான் பாலோ செய்யும் பதிவர்களின் இடுக்கைகளை க்கூகிள் ரீடரில் படிப்பேன் உங்களது இடுக்க்கைகளை கூட நிறையா படிச்சி இருக்கேன்

தலைப்பு ஈர்க்கும் பதிவுக்ளை முழுசா படிப்பேன் ரீடரில் படிப்பதால் பின்னூட்டம் போடமுடிவதில்லை

ரொம்ப மனசை தொட்டா நோட் செய்து பின்னூட்டம் செய்வது உண்டு, ஏன் போனே போட்டு பேசினதும் உண்டு அப்படி தான் எவனோ ஒருவன், சக்திவேல், பித்தன் அவிங்க போன்ற பதிவர்கள் பழக்கம்

ஏன் நான் மதிக்கும் என நண்பன் வினோத் மற்றும் ஜமால் பதிவுகளில் கூட இப்போது எல்லம அடிக்கடி எனது பின்னுட்டம் பார்க்க முடியாது நேரம் கிடைக்கும் போது படிச்சிடுவேன் பின்னூட்டம் மிஸ் ஆகிடும்..

இப்போது இளவரசு என்ற ஒரு பதிவரின் ஒரு பதிவு படிச்சிட்டு அந்த் எழுத்து என்னை அவரோட பழைய பதிவுகள் ஒரு 7 பதிவை படிக்க வைச்சது ரசிச்சேன்

அப்படி தான் அவிங்க ராசாவும்..

படிப்பதுக்கே நான் பாலோ செய்வது உண்டு எல்லாத்தையும் படிக்க மாட்டேன் நல்ல பதிவுக்ள் இல்லை தலைப்பே உள்ளே இழுக்கும்

நேரத்தை பொறுத்தே நண்பா

பின்னூட்டம் மற்றும் மெயில் முலமாக லிங்க் கொடுத்து படிக்க சொல்லுவார்கள் நண்பர்கள் அன்பு, மற்றும் அட்டைகத்தி, ஜோ ஆகியோர்
உடனே படிச்சிட்டு என் கருத்தை மெயிலிலோ இல்லை பின்னூட்டத்திலோ பதிவு செய்வேன்

இனி உங்க பதிவுகளை படித்தால் பின்னூடத்தில் பதிவு செய்கிறேன்

#கரக்கிட்டு,..

அன்னைக்கு சர்க்கரையை வச்சிட்டு போனவர்தான்.. அந்த பக்கம் ஆளையே காணோம்,.. சர்க்கரை கரைஞ்சு போய்ட்டாரு கு.ஒ.இ. அடுத்து யார் உப்பா வர்ராங்கன்னு தெரியல,..//

இப்பத்தான் திரும்பி வந்திருக்காரு... வெரட்டி விட்டுருவானுவ போலருக்கே! #

வாங்க உங்களுக்கும் சேர்த்தே அந்த பன்னூட்ட பதில்

சமீபத்தில் நான் படித்த உங்கள் இடுக்கைகள் பின்னூட்டம் தான் போடவில்லை

"# NRI சிங்கங்களா இல்லை குரங்குகளா??
# எதை சொல்ல
# மீ த ப்ர்ஸ்டு
# பெத்த மனசு
# எதிர் பதிவு : ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள்
# அடப்பாவி,.. ஆம்ஸ்டிராங் நிலவில் இறங்கியது ஏமாற்று ...

jothi சொன்னது…

அடடா என்ன சுரேஷ், இப்படி சீரியஸா எடுத்துகிட்டீங்க,.. நீங்க 2 வாரம் இல்லங்கறது எங்களுக்கு தெரியாதா? சும்மாதான் எழுதினேன்,.. மற்றபடி ஒன்றும் இல்லை சுரேஷ்.

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html

jothi சொன்னது…

மிக்க நன்றி குறை ஒன்றும் இல்லை.

எனக்கு யாராச்சும் இந்த விருது கொடுத்தா உங்களுக்கு கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனால் நீங்க முந்திட்டிங்க,..

அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே,..

நட்புடன் ஜமால் சொன்னது…

மேலோட்டமா கருத்து சொல்லிட்டு போக முடியலை.

இதில் நிறைய யோசிக்கனும், விவாதிக்கனும்.

கபிலன் சொன்ன கருத்தோடும் ஒத்து போகிறேன்.

ஒன்றை பதிவு செய்கிறேன்:

இந்தியாவில்: அவனுக்கென்னப்பா சீமையில் இருக்கான்.

சீமையில் : நீ இந்தியன் தானே.

--------------------------------

எங்கு போனாலும் நாங்கள் நிலையற்றவர்களாக ஆக்கப்படுகிறோம்.

காசு மட்டுமே வாழ்க்கைன்னு எங்க வாழ்க்கையை (மீட்க்கவே இயலாத) அடகு வச்சிட்டு எங்கட குடும்பத்தை மட்டும் நல் நிலைக்கு கொண்டு வருகின்றோம்.

நாட்டிற்கு எவ்வளவோ செய்ய வேண்டும் தான் அதை சிந்திக்கும் மனோநிலையில் எப்பொழுதுமே இருக்க விட்டதில்லை எங்களை.

இது குற்றம் அது குற்றம் ரோடு சரியில்லை மேடு சரியில்லைன்னு சொல்றதெல்லாம் வெளிநாடு செல்பவர்கள் மட்டுமல்ல - வெளி மாநிலங்கள் செல்பவர்கள் கூட அவர்கள் இருக்கும் இடத்தை இப்படித்தான் எதுனா சொல்லிக்கிட்டேயிருப்பாங்க.

உள் நாட்டு சுரண்டல் நிறுத்த பட்டால் நம்ம நாட்டை விட்டு பிழைப்பு தேடி அயல் நாட்டுக்கு ஏங்க போறோம் நாங்க ...

இது போல எல்லாமே கேள்வியா கேட்க்க தெரியும், ஆனால் தீர்வு கொடுக்கத்தான் இன்னும் தெரியவில்லை ...


[[ஓன்று சொல்றேன் இம்பூட்டு சொல்லிப்புட்டேன் - ஆதங்கம் கொட்ட ஒரு பொட்டி கிடைச்சிதா ... ]]

jothi சொன்னது…

முதல் வருகைக்கு மிக்க நன்றி ஜமால். என் பதிவின் நோக்கம் வெளி நாடு சென்று சம்பாதிப்பவர்களை பற்றி குற்றம் சொல்வது அல்ல. என் கட்டுரையின் நோக்கம் இந்தியாவில் படித்து விட்டு இந்தியாவின் சகல் விலை மலிவான வசதிகளை அனுபவித்து விட்டு வெளி நாடுகளில் நிரந்தரமாக தங்குபவர்களை பற்றியது.வெளி நாடு செல்பவர்கள் தங்கள் தாய் நாட்டையும் முன்னேற்ற வழி இருந்தால் ஏதாவது வழி இருந்தால் பார்க்கலாம் என்பதைப் பற்றிதான்.

ஆனால் வெளி நாடுகளில் இருக்கிற ஏதோ ஒரு முகம் தெரியாத மனிதர்களை கூட நம்பிவிடலாம். ஆனால் நம்பாளுங்களை எளிதில் நம்ப முடிவடில்லை. கேட்டால் எல்லோருமே சம்பாதிக்கதானே வந்திருக்கோம் என பதில் வரும்

jothi சொன்னது…

//இந்தியாவில்: அவனுக்கென்னப்பா சீமையில் இருக்கான்.

சீமையில் : நீ இந்தியன் தானே.//

அழகாய் சொன்னீர்கள். அவனுக்கெங்கே நீங்கள் என்ன குலமென்று தெரியாது, ஆனால் நீங்கள் இந்தியன் என்பது நன்றாக தெரியும். இங்கே பிராமணக்கும், சத்ரியனும் ஒன்னும்தான்.

கருத்துரையிடுக