வெள்ளி, 17 ஜூலை, 2009

எதை சொல்ல





என்னை மதித்து என் பள்ளி அனுபங்களை எழுத சொல்லி என்னை தொடர் பதிவிற்கு அழைத்த திரு. செந்தில் வேலிற்கு என் மனமான நன்றி. மற்றவர்களை போல் என் பள்ளி வாழ்க்கை பசுமை நிறைந்து இல்லாமல், இன்னல் மட்டுமே நிறைந்ததாக இருந்தது. பள்ளி வாழ்க்கை என்றதும் அது மின்னலாய் வந்து போகும். அதில் எதை சொல்ல

நண்பகல் சத்துணவிற்காக தட்டுடன்
பசி நிறைய வரிசையில் நின்றதா - இல்லை
தாமதமாய் வந்து சாம்பாரில்லாமல் வெறும்
சோற்றோடு குழாய் தண்ணி விட்டு தின்னதையா?

பேனாவில்லாமல் அடுத்தவனிடம் திருடி
கணிதத்தில் வாங்கிய 100 மதிப்பெண்ணா - இல்லை
அடிபட்டு ரத்தம் ஒழுக மைதானத்தில்
டென்னிஸ் பந்தில் விளையாடிய கால்பந்தா?

டியூசன் வராததால் நொண்டி சாக்கு சொல்லி
வாரம் முழுக்க முட்டி போட வைத்த ஆசிரியரா - இல்லை
100 ரூபாய் கட்டமுடியால் பள்ளியின் வெளியில் நின்ற போது
எனக்கு பணம் கட்டிய வெங்கடேஸ்வரன் ஆசானையா?

பதினோராம் வகுப்பில் முதன் முதலாக போட்ட
என் அண்ணனின் பழைய பேண்ட்டா - இல்லை
பத்தாம் வகுப்பு வரை நைந்து நூலாகி
ஒட்டுப்போட்ட என் காக்கி டவுசரா?

தினமும் தனியாய் செருப்பில்லாமல் 8 கிமீ
நடந்து படித்த அரசு நாடார் பள்ளியா? - இல்லை
புரியாத மாணவர்களுக்கு அணித்தலைமை மாணவனாய்
இருந்து எடுத்த சிறப்பு வகுப்புகளா?

நவம்பர் தீபாவளியின் கோஆப்டெஸின் புது துணிக்கு
சனவரியிலியே தேடி பார்த்த நாட்காட்டியா? - இல்லை
தோட்டத்தில் சாணி அள்ளனுமே விடுமுறை ஏன் வருகிறது
என பள்ளி திறப்பிற்கு ஏங்கி காத்திருந்த ஜூன் மாதங்களா?

கண்கள் சிவக்க கிணற்றில் போட்ட
கல்லை எடுத்து வந்த மூச்சு விளையாட்டா - இல்லை
கூட வந்த நண்பன் குளிக்க, பத்து ரூபாய் காசில்லாமல்
அவன் துணிக்கு வெளியில் காவல் நின்ற நீச்சம் குளமா?

ஆங்கிலத்தில் பலவீனமாய் இருக்கேன் என
கவனமெடுத்து சொல்லி தந்த தோழியா- இல்லை
அவன் விரும்பிய தோழி என்னுடன் இருக்கிறாளென
வீட்டில் சொல்லி அடி வாங்கித்தந்த நண்பனா?

ஆடிக்காற்றில் மதிய வெயிலில் நெல்லையையும் உமியையும்
பிரித்து வேலை செய்த அந்த சாணி மொழுகிய முறமா? - இல்லை
தீபாளியன்று கறி எடுத்து சாப்பிடுகையில் அப்பாவிற்கு மட்டும்
ஏன் கறி அதிகம் என கணக்கு போட்ட தட்டுகளா??

அடிபட்ட குருதி அழிந்து போனாலும்
வலி மறைந்து போனாலும்,
அது விட்டு சென்ற காயங்கள்
சரியாய் வந்து நினைவுபடுத்தும்.
கொடியது கொடியது
இளமையில் வறுமை கொடியது ,..

அடுத்து நான் அழைக்க நினைப்பது எவனோ ஒருவன், மற்றும் ஆகாய நதி.
நன்றாக எழுத என் வாழ்த்துக்கள்.

நண்பர்களே படித்து பிடித்திருந்தால் தமிழிஸில் மறந்துவிடாமல் ஒட்டு போடுங்கள், வர வர ஒண்ணும் ஹிட் லிஸ்ட்ல வரமாட்டிங்குது.


.

25 கருத்துகள்:

கும்மாச்சி சொன்னது…

மனதை எதோ செய்கிறது, கொடிது கொடிது இளமையில் வறுமை.

jothi சொன்னது…

உண்மைதான் கும்மாச்சி.

வருகைக்கு மிக்க நன்றி கும்மச்சி. தமிழிஸில் ஓட்டளித்ததிற்கும் நன்றி.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஹேய் அற்புதமா அழகா தாங்கள் படித்த இளமை காலத்தை கவிதையா சொல்லிட்டீங்க,,,,

jothi சொன்னது…

மிக்க நன்றி வசந்த். இது கவித மாதிரியா இருக்கு,.. இதற்கும் மிக்க நன்றி வசந்த்.

போன் பண்ணவே இல்ல, உங்க நம்பரும் தரவே இல்ல???

Thamiz Priyan சொன்னது…

அண்ணே! என் பதிவுக்கு கமெண்ட் போட்டதால் சொல்றேன்னு நினைக்காதீங்க... நீங்க எழுதியது எல்லாம் கண் முன்னாடி இருக்கு.. சேம் சேம் பீலிங்.. என்னால் இப்படி எழுத தெரியலியேன்னு பொறாமையா இருக்கு..:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

என் அழைப்பே ஏற்று பள்ளி நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

நல்ல பதிவு. உங்கள் பதிவைப் படிக்கும் போது நீங்கள் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது எனப் புரிகிறது. "Tough times never lasts, Tough people does" என்கிற ஆங்கில வாக்கியம் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

மேலும் உணர்வுள்ள பதிவைகளை எழுத வாழ்த்துகள்

jothi சொன்னது…

//சேம் சேம் பீலிங்.. //

சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் முதலில் போட்ட படமும் நீங்கள் உங்கள் பதிவிற்கு போட்ட படமும் ஒன்றே. வழக்கமாக விகடன் பார்க்கும் போது உங்கள் பதிவு வந்திருந்தது. சரி பார்க்கலாம் என பார்த்தால், நான் கூக்லியில் எடுத்த அதே படம். சரியென்று மாற்ற வேண்டியதாகிவிட்டது. எதற்காக சொல்கிறேன் என்றால் "சேம் பீலிங்."

//என்னால் இப்படி எழுத தெரியலியேன்னு பொறாமையா இருக்கு..:)//
சும்மா காமெடி பண்ணாதீங்க,.. உங்கள் படைப்புகள் எங்களுக்கு தெரியாதா.??????\

வருகைக்கு நன்றி. என்னால் முடிந்த நல்ல பதிவுகளை இட முயற்சிக்கிறேன்.

jothi சொன்னது…

//நல்ல பதிவு. உங்கள் பதிவைப் படிக்கும் போது நீங்கள் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது எனப் புரிகிறது.//

மிக்க நன்றி செந்தில்வேலன். கண்டிப்பாக முட்கள் நிறைந்த பாதைதான்,.. இப்போதுதான் ரோஜாக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன,..

Admin சொன்னது…

நல்ல பதிவு அதுவும் கவிதையிலே சொன்னது அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்...

ஆகாய நதி சொன்னது…

Good one but romba sogama iruku padichathum... thanks for inviting me :)ekalappai work anathum kandippa post poduren :)

தேவன் மாயம் சொன்னது…

கவிதை வடிவில் பதிவா!!
அருமை!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கவிதை வடிவில் சிறு பராயம் அழகாய் இருந்தது....

வாழ்த்துக்கள்.....

jothi சொன்னது…

மிக்க நன்றி சந்ரு, உங்கள் சமீத்திய பதிவு அபாரம்

jothi சொன்னது…

சோகமாய் எழுத கூடாதுனுதான் நினைக்கிறேன்,.. ஆனால் என்ன செய்ய சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வருகிறது,.. நன்றி ஆகாய நதி,..

jothi சொன்னது…

மிக்க நன்றி தேவன் மாயம், வருகைக்கு மீண்டும் நன்றி

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி அபுபக்கர். வாழ்த்திற்கும் நன்றி

கலகலப்ரியா சொன்னது…

:).. இளமையில் வறுமை கொடிதுன்னாலும்.. வளர்றப்பவே பக்குவத்தை கொடுக்கிறது அதுதான்.. நிறைய பேருக்கு இது கிடைக்காததால வாழ்க்கைல நிறைய மிஸ் பண்றாங்க =) .. பதிவு பிரம்மாதம்ங்க!

கலகலப்ரியா சொன்னது…

இதையும் தாண்டி நிறைய்ய்ய்ய சந்தோஷமான விஷயங்கள் இருக்குமே.. ம்ம்.. இதெல்லாம் அத மறைச்சிட்டிருக்கு அவ்ளோதான்.. நல்லா பாருங்க.. :D

jothi சொன்னது…

//:).. இளமையில் வறுமை கொடிதுன்னாலும்.. வளர்றப்பவே பக்குவத்தை கொடுக்கிறது அதுதான்.. நிறைய பேருக்கு இது கிடைக்காததால வாழ்க்கைல நிறைய மிஸ் பண்றாங்க =) .. பதிவு பிரம்மாதம்ங்க!//

மிக்க நன்றி ப்ரியா,. (கலகலப்பிரியான்னு ரொம்ப பெருசா இருக்கு,.. இனிமே இப்படியே)

இதெல்லாம் மிஸ் பண்ண வேண்டியவைதான்.

ஆனால் நீங்க சொல்ற அந்த பக்குவம் உண்மைதான். என் மனைவியைவிட நான் நன்றாக சமைப்பேன்ன்னு என் மனைவியே சொல்லுவாள்,.. (ஆனா சொல்லி சொல்லியே ஞாயிற்றுக்கிழமை என் தலையில் கட்டிவிடுவாள். ஹி ஹி)

jothi சொன்னது…

//இதையும் தாண்டி நிறைய்ய்ய்ய சந்தோஷமான விஷயங்கள் இருக்குமே.. ம்ம்.. இதெல்லாம் அத மறைச்சிட்டிருக்கு அவ்ளோதான்.. நல்லா பாருங்க.. :D//

உண்மைதான் ப்ரியா. ஒரு முறை காபி பவுடர் வாங்குவதற்கு பதில் நீலம் வாங்கிட்டுவந்து காபி முழுக்க ச்சீ,.. பால் முழுக்க ஒரே நீலம்,.. அன்னைக்கு எங்கம்மா ஒண்ணுமே சொல்லல,.. அதனால அடுத்த முறையிலிருந்து சரியாக வாங்கிவந்து விடுவேன். ஆனால் இப்ப திரும்பவும் நியாகம் மறதி ஜாஸ்தியாடுச்சு!!!!!!!!!!!!!,..

jothi சொன்னது…

அதற்கு கல்யாணம் ஒரு காரணமல்ல,.. ஹி ஹி ஹி

Beski சொன்னது…

அருமையா இருக்கு.
நமக்கு இந்த மாதிரியெல்லாம் வருமானு தெரியல... சாதாரனமாவே ட்ரை பண்றேன்.

அழைத்தமைக்கு நன்றி.

jothi சொன்னது…

//அருமையா இருக்கு.
நமக்கு இந்த மாதிரியெல்லாம் வருமானு தெரியல... சாதாரனமாவே ட்ரை பண்றேன்.//

மிக்க நன்றி எவனோ ஒருவன்,. என்னை மாதிரி எல்லாம் எழுதாதீங்க. உங்க ஸ்டைலயே எழுதுங்க,.

Beski சொன்னது…

இதோ எனது பள்ளிக்கூடம் தொடர் - ஒரு தொடராய்.

http://www.yetho.com/2009/07/blog-post_21.html

jothi சொன்னது…

அருமை எவனோ ஒருவன்,.. உங்கள் அட்டகாசமான பதிவை தொடருங்கள்

கருத்துரையிடுக