- உங்களில் எத்தனை பேர் குரானையும், பகவத்கீதையும் முழுமையாக படித்திருக்கீர்கள்? முழுமையாக படிக்காத, அறியாத ஒன்றைப்பற்றி பேச,எழுத நமக்கு என்ன யோக்யதை இருக்கிறது?
- நமக்கு நம் அப்பாவை தெரியும்,தாத்தாவை தெரியும், கொள்ளுத்தாத்தவை தெரியும் இல்லை அதிகபட்சம் கொள்ளுத்தாத்தவின் கொள்ளுத்தாத்தாவை தெரியும். ஒரு நூற்றாண்டு கால மூதையாரின் சரித்திரம் மட்டுமே தெரியும். அதற்கு முன்? நம் மூதையாரின் சரித்திரமே நமக்கு சரியாக தெரியாது. எப்போதோ தோன்றிய பகவத்கீதையையும், எங்கேயோ தோன்றிய குரானையும் என்ன முழுசாக தெரியும்? இல்லை தெரிந்தால்தான் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கப்போகிறது? இங்கே பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கே ரெண்டு பெண்டாட்டிகாரர். நாம் தினமும் வணங்கும் சாமியிலியே இத்தனை முரண்பாடுகள். எங்கோ யாரால் எப்போதோ எழுதப்பட்ட பகவத்கீதையிலும், குரானிலும் எந்த அளவிற்கு உண்மை தொடர்ந்து வந்து இருக்கப்போகிறது?
- இந்து, இந்து என கூச்சலிடும் கூட்டம் திருச்சி லால்குடியில் இரு தலித்கள் தங்கள் மலத்தை மாற்றி மாற்றி தின்ன வேண்டும் என பஞ்சாயத்து சொன்ன போது எங்கே போயின? (ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா). சரி விடுங்கள், தாங்கள் ஒதுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்கள், சிறுபான்மையினரின் சொந்தக்காரர்கள் இங்கே உருகி கொண்டிருக்கிற கம்னியூஷ்டகள் எங்கே போயின?
- 1925 ஆண்டு வரை கல்கத்தா டெல்லிக்கு அடுத்த மிகமுக்கிய நகரம். ஆனால் இன்றைக்கு?? எந்த கம்பேனி அங்கே வருகிறது? என்ன தொழில் வளர்ச்சி அங்கே இருக்கிறது? சிங்கூர் கலவரத்தில் எத்தனை விவசாயிகள் கொல்லப்பட்டனர்? 40 ஆண்டுகாலம், முழுக்க முழுக்க தங்கள் ஆட்சியில் ஒரு மண்ணங்கட்டியையும் வைக்காத, ஒரு மானிலத்திற்கு எந்த முன்னேற்றத்தையும் தராத இந்த கம்னியூஷ்டகள் நாட்டின் வளர்ச்சி பற்றி, பாதுகாப்பு பற்றி, மக்களின் வாழ்க்கைதரம் பற்றி பேச என்ன துப்பு இருக்கிறது?
- இங்கே மற்ற மதத்தினற்கு அளிக்கும் சுதந்திரம், பேச்சுரிமை மற்ற நாடுகளில் இருக்கிறதா? இல்லை, முஸ்லீம் நாடுகளில் வேலை பார்க்கும் நம் முஸ்லீம் சகோதரர்களை சமமாக, அவரும் நம்ம இனம் என்ற பாவிக்கிற எண்ணமாவது வெளினாட்டு இஸ்லாமிர்களுக்கு இருக்கிறதா? இல்லவே இல்லை. அவர்களை பொறுத்தவரை, இவன் இந்தியன், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்றுதான் பிரிக்கிறார்கள். இது ஏன் நம்மவர்களுக்கு புரியவில்லை?
- ஏர்வாடியில் மனம் குன்றியவர்கள் தீயுடன் எரிக்கப்பட்டபோது வராத போபம், பச்சிளங்குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் எரிக்கப்பட்ட போது வராத கோபம், மகாமகத்தில் குவியல் குவியலாக செத்தபோது வராத போபம், அமைச்சர் 50000ஆயிரம் கோடி அமுக்கியபோது வராத கோபம், பக்கத்து தேசத்தில் மக்கள் செத்து குவியல் குவியலாக புதைக்கப்பட்டபோது வராத போபம், ஒத்த ஜீன் கள் கம்பிகளுக்குள் கற்பழிக்கப்பட்டபோது வராத போபம், சோறில்லாத ஜன நாயக நாட்டின் மானில ஆளுனர் 87 வயது சல்லாபத்தில் வராத கோபம்,தண்டமாய்ப் போன வேட்டைகாரனுக்கும், பாலாய்போன நற்குடிக்கும், ஒண்ணுமில்லா திருனீருக்கும் வந்து தொலைக்கிறது,...
த்த்த்த்த்த்தூ,... வானத்தை நோக்கிதான் உமிழ வேண்டி இருக்கிறது.
.
7 கருத்துகள்:
//தண்டமாய்ப் போன வேட்டைகாரனுக்கும், பாலாய்போன நற்குடிக்கும், ஒண்ணுமில்லா திருனீருக்கும் வந்து தொலைக்கிறது,...//
சபாஷ்....
சரியான தாக்குதல்.....
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......
வாங்க சங்கவி, என்னதான் நாம் முயன்றாலும் நம் பார்வைகளை மறைத்துவைத்துக்கொண்டு எங்கோ பார்ப்பது போல நடக்க முடியவில்லை
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடமும் எல்ல இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்
//வானத்தை நோக்கிதான் உமிழ வேண்டி இருக்கிறது///
ம்ம்.........
வாங்க,..Kiruthikan Kumarasamy
ம் ம்,... புத்தாண்டு வாழ்த்துக்கள்
good....
Wish you happy new year
Thanks pradeep, wish you the same,..Enjoy totally
கருத்துரையிடுக