வெள்ளி, 18 டிசம்பர், 2009

ரஜினி vs விஜய்விஜய் மற்றும் ரஜினியை ஒப்பிடலாமா? இது முறையான அளவு கோலாகுமா? என எனக்கு ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது. ஆனால் ஏழு முக்கியமான அளவுகோலில் ஒப்பிட்டு பார்க்கலாம்.ஒற்றுமைகள்

1.இருவருக்குமே பெரிய பெர்சானாலிட்டி கிடையாது.
2.ரஜினி சினிமாவில் நுழைந்து ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கையில் அவருக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையில் குழந்தைகள் என சில குறிப்பிடும் அளவு பங்கு உண்டு. விஜய்க்கும் அப்படியே.
3.இருவருக்கும் சில தனித்திறமைகள் உண்டு. ரஜினிக்கு ஸ்டைல். விஜய்க்கு டான்ஸ்.
4. இருவருமே ரிமேக் படங்களில் ஆர்வம் காட்டினார்கள். ரஜினி ஹிந்தி. விஜய் தெலுங்கு.
5.இருவருமே காதல் திருமணம்.
6.இருவருமே அழுகைகாட்சிகளில் ரசிகர்களை அழ வைப்பவர்கள் (இவர்கள் அழும் கொடுமையை பார்க்க முடியாமல்தான். இருவருமே கண்ணை மூடிக்கொண்டு விரலால் கசக்குவார்கள்).
7. நகைச்சுவை இருவருக்குமே நன்றாக வரும். ரஜினி அதில் பல மடங்கு மேல்.

வேற்றுமைகள்

1.ரஜினிக்கு அன்மீகம் பிடிக்கும். விஜய்க்கு அரசியல்.
2.ரஜினி தன் உழைப்பில் மேலே வந்தவர். விஜய் தந்தை உழைப்பில்.
3.விஜய் நல்ல பாடகர், உதாரணம் காதலுக்கு மரியாதையில் வரும் "எனது விழி" . ரஜினியின் குற்ற்ல் அனுபவம் மன்னனின் வழியாக எல்லாருக்கும் கிடைத்திருக்கும்.
4.ரஜினிக்கு ரசிகர் கூட்டம் உருவானது. விஜய்க்கு உருவாக்கப்பட்டது.
5.ரஜினி இயக்குனரின் சொல்பிள்ளை. ஆனால் இயக்குனர்கள் விஜயின் சொல்பிள்ளை.
6.ரஜினி தமிழின் சிறந்த இயக்குனர்கள் அனைவரின் படத்திலும் நடித்துவிட்டார். விஜய் சிறந்த இயக்குனர்கள் அனைவரின் படத்தையும் பார்த்துவிட்டார்.
7.விஜய்க்கு சினிமாத்துறை மிக பிடிக்கும். சினிமாத்துறைக்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும் (அப்படிதான் நினைக்கிறேன்).
8.ரஜினி பேச்சில் அனல் பறக்கும், நிஜத்தில் குழப்புவார் (அரசியல் வருவாரா மாட்டாரா). விஜய் பேச்சில் தூசு மட்டுமே பறக்கும் (அசினும், விஜயும் தந்த அந்த பேட்டியை பாத்தீங்களா??). நிஜத்தில் தெளிவாக இருப்பார் (அரசியல் கண்டிப்பாக உண்டு, அடுத்த முதல்வருக்கு உதய நிதிக்கு இவர்தான் போட்டி),..

(அய்யோ இந்த டைம் பாத்து போட்டுட்டேன். எத்தனை ஆட்டோ ப்ளேன்ல வருதுன்னு தெர்லயே,..)

5 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

எனக்கு தெரிந்த ஒற்றுமை.. எனக்கு இரண்டு பேரையுமே பிடிக்காது :)

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

//குறை ஒன்றும் இல்லை//

ரிப்பீட்டே.....

ஒற்றுமை: இரண்டு பேரும் மசாலா மன்னர்கள்.

வேற்றுமை :
ரஜீனி: ரஜீனியின் எளிமை மற்றும் சபை அடக்கம்
விஜய்: தலைக்கணம் அதிகம்..அதை பிரஸ்மீட்டிங்கில் பார்த்தோம்...

ஆமா... இந்த ரெண்டுபேரும் என்ன அணுவிஞ்ஞானிகளா??? ஒற்றுமை வேற்றுமைல்லாம் போடறீங்க...

jothi சொன்னது…

வாங்க குறை ஒன்றும் இல்லை. நிறைய பேருக்கு இது பொதுவான ஒற்றுமை

jothi சொன்னது…

வாங்க நாஞ்சில்

//ஆமா... இந்த ரெண்டுபேரும் என்ன அணுவிஞ்ஞானிகளா??? ஒற்றுமை வேற்றுமைல்லாம் போடறீங்க...//

அணு விஞ்ஞானிகளைப் பற்றியும் போட ஆசைதான். நீங்கள் இதே மாதிரி பின்னூட்டம் போட்டு ஆதரவு தந்தால் கண்டிப்பாக போடுகிறேன். என்னா சொல்றீங்க?

G.T.MURUGAN சொன்னது…

ஜோ நீங்க தீ யா ? எனக்கு தீ பிடிக்கும்

கருத்துரையிடுக