நம் அரசாங்கத்திற்கு 3.3 பில்லியன் டாலர் நோக்கம்
அந்த நிறுவனத்திற்கு 457 மில்லியன் டாலர் கொடுக்கவேண்டிய கவலை,..
பத்திரிக்கைகளுக்கு மென்ன தீனி
தொழிற்சாலைகளுக்கு நல்ல பாடம் (lessons learned என வர்ணிப்பார்கள்)
ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நடந்தது என்ன?? (root cause)
நமக்கு??,.. போனது உயிர்,.. இந்த இந்தியாவே இப்படிதான்,..
போன உயிர்களுக்கும் அங்கே பிறந்த தினம் முதல் நோயால் சாகாமல்
செத்துக்கொண்டிருக்கும் அந்த போபால் மக்களுக்கு??
ஆம், கேட்பதற்கு நாதியில்லை.
------------------------------------------------------------------------------
1984, Dec 2 :
இரவு மணி 09:00 - குழாய்களை நீரால் சுத்தப்படுத்தும் பணி ஆரம்பிக்கிறது
இரவு மணி 10:00 - வினைகலனில் நீர் உட் புகுந்து அதிவேக வினையாக மாற்றமாகிறது.
இரவு மணி 10:30 - அதிக நச்சு வாயுக்கள் அவசர வெளியேற்றியின் வழி வெளியேறுகிறது
இரவு மணி 10:30- வெளியே மக்களுக்கு இருமல், கண் எரிச்சல், வாந்தி துவக்கம்
Dec 3:
இரவு மணி 00:30 - மிக நீண்ட அபாய சங்கு ஊதி, பின் அணைக்கப்படுகிறது.ஆலைக்குள் மட்டும்
இரவு 1:00 போலீஸ் எச்சரிக்கை ஆனது, மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். யூனியன் கார்பைடு நிறுவனம் நச்சுக்கசிவை மறுக்கிறது.
இரவு 2:00 வெளியே மருத்துவமனையில் மக்களுக்கு பார்வை மந்தமடைவதும், வாந்தியும், முச்சு திணறலும் அதிகரிக்கிறது
இரவு மணி 2:10 - மிக நீண்ட அபாய சங்கு ஊதி, பின் அணைக்கப்படுகிறது. ஆலைக்கு வெளியே,.
இரவு மணி 4:00 - வாயுக்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது
காலை 6:00 - "அனைத்தும் சுமூகமாக உள்ளது" மக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு
டிசம்பர் 3 காலை 6:00 மணியுடன் அனைத்தும் சுமூகமாய் முடிந்துவிட்டதா??
-----------------------------------------------------------------------------------
இன்று போபாலை பற்றி நிறைய ஆராய்ச்சிக்கட்டுரை வந்து விட்டன.
ஏன் நடந்தது
எப்படி தடுத்து இருக்கலாம்??
யார் காரணி?
விபத்திற்கு முன் என்ன என்ன விபத்துக்கள் நடந்தன? எப்படி?
அடுத்தது என்ன நடக்கலாம் (போபால் மக்களுக்கும், யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கும்)??
இப்போது போபால்,.. இப்போது யூனியன் கார்பைடு நிறுவனம்,...
dow நிறுவனம் போபாலை வாங்கியதன் பின்னணி. IIT மாணவர்கள் dow நிறுவனத்தில் வேலையை தூக்கி எறிவது ஏன்?
இப்படி நிறைய,..
ஆனால் போபால் நகர குடும்பங்கள் வாங்கிய அடியில் எலும்புகள் மிச்சமிருக்கிறதா??
எத்தனை முறை பாடம் படித்தாலும், எத்தனை முறை செருப்பால் அடிவாங்கியும் நமக்கு ஏன் புத்திவரவில்லை?? (மகாமகம் 200 பேர், திருச்சியில் கல்யாண மண்டபத்தில் 50 பேர் பலி, கட்டிவைக்கப்பட்ட மன நல நோயாளிகள் அப்படியே எரிந்து இறந்த கொடூரம், கும்பகோணம் பள்ளி குழந்தைகள் வெளியே வரமுடியாமல் எரிந்த கொடுமை, நேற்று கூட ஆசிரியையுடன் குழந்தைகள் கொத்தாக சாவு,. பெத்த மனசு எப்படி துடிதுடித்திருக்கும்?)
எதையுமே சாதாரணமாய் எடுத்துக்கொள்வது சரியா.? தனிமனிதனுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் சமுதாயத்திற்கு?
------------------------------------------------------------------------------
போபால் நமக்கு சொல்லும் பாடம் என்ன??
பாதுகாப்பை பாதுகாப்பதே பாதுகாப்பு.
ஆம்,..
சில நொடிகளுக்கு அவசரப்பட்டு பேருந்துக்கடியில் சக்கரத்திற்கு அடியில் கிடக்கும் மாணவனின் பெற்றோரை நினைக்கையில்,..
வருங்கால கணவருடன் பேசிக்கொண்டு ரயிலில் அடிபடும் பெண்ணிற்காக, வருங்காலகணவனின் உள்ளத்தில் ஓடும் அந்த குற்ற உணர்ச்சிகளை கேட்கையில்,...
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம்.????
25 ஆண்டுகளாகியும் தன் சந்ததி மனவளர்ச்சி குன்றி சுத்துவதைப் பார்த்தால் எந்த ஆன்மா சாந்தியடையும்??. முடிந்தால் 25 வருடம் அந்த ஊமையாகி போய்விட்ட ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
21 கருத்துகள்:
நண்பா,.. சரியான பகிர்வு
நம்நாட்டில்தான் பாதுகாப்பை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இருக்கின்றார்கள்... நேற்றுகூட நாகபட்டினம் அருகில்... பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் விபத்தில் பலர் மரணம்....... என்னத்த சொல்ல ஓட்டுனர்கள் அலைபேசியில் பேசியபடி ஓட்டுவதால் இப்படிப்பட்ட அவலங்கள்..... இரண்டு சக்கர வாகனங்களில் கூட அலைபேசியில் பேசிக்கொண்டே ஓட்டுவதை பார்கின்றபொழுது கல்லால் அடிக்க வேண்டும் போல இருக்கு????
சபாஷ்.......... அருமையான பதிவு
இதைபடிக்கும் போதே எனக்கு மனது வலிக்கிறது
போபாலில் இருப்பவர்கள் அன்று அங்கே
எவரேனும் உயிர் தப்பியிருந்தால் அவர்களது மனது..........
//பாதுகாப்பை பாதுகாப்பதே பாதுகாப்பு//
சிறந்த சிந்தனைகள் நண்பா
தங்களின் இந்த இடுகைக்கு பாராட்டுக்கள்
இன்னும் பாதிப்பிலிருந்து மீளாமல் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பிரார்த்திக்கிறேன்...
மிக்க நன்றி சேகரன். பாடங்களை நாம் கற்றுக்கொள்வதில் விருப்பமில்லை. அதனால்தான் தினம் ஒரு புதிய பாடம். வெவ்வேறு பரிணாமங்களில்,..
//எவரேனும் உயிர் தப்பியிருந்தால் அவர்களது மனது,../
கண்டிப்பாக அதை வர்ணிக்கமுடியாது சங்கவி. நமக்கு அதன் பிரச்சனைகளின் ஆழம் தெரியவில்லை. ஏனென்றால் அது மறக்கப்பட்டது. என்னை பொருத்தவரை அது இன்னொரு ஜாலியன்வாலாபாத் படுகொலை.
//எவரேனும் உயிர் தப்பியிருந்தால் அவர்களது மனது..........//
கண்டிப்பாக அதை வர்ணிக்கமுடியாது சங்கவி. நமக்கு அதன் பிரச்சனைகளின் ஆழம் தெரியவில்லை. ஏனென்றால் அது மறக்கப்பட்டது. என்னை பொருத்தவரை அது இன்னொரு ஜாலியன்வாலாபாத் படுகொலை.
//இன்னும் பாதிப்பிலிருந்து மீளாமல் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பிரார்த்திக்கிறேன்...//
வருகைக்கு மிக்க நன்றி வசந்த். கண்டிப்பாக பிரார்த்தனை செய்வோம்,..
வணக்கம் ஜோதி! சிந்தனையைக் கிளறி அழத் தூண்டும் பதிவு!
சாதாரண மக்களின் உயிருக்கு மதிப்பில்லை என்பதற்கு இந்த துயர சம்பவமும் ஒரு உதாரணம் :(
வாங்க ஜோதி..! ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நல்ல பதிவு..! மனச என்னமோ பண்றது..!
வாங்க ஆகாய நதி. ரொம்ப நாளைக்கப்புறம் நீங்களும் பதிவுலகத்திற்கு வர்ரிங்க போல,..
இந்த பதிவை இன்னும் விலாவரியாக எழுதலாம் என நினைத்தேன்.
எழுதி என்ன நடக்கப் போகிறது. போன உயிர் போனததுதானே,..
வாங்க கலகலப்ரியா. முன்னணி பதிவராய் ஆகிவிட்டதால் இந்த பக்கம் வர மாட்டிங்கனு நினைச்சேன். வருகைக்கு நன்றி. ஆனால் மூன்று மாதத்தில் உங்கள் பதிவுகளில் நல்ல மாற்றம் மற்றும் மெருகு (ஆனால் புதிய டெம்ப்ளெட்தான் படிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு).
எனக்கு இலங்கையின் மலை சார்ந்த புகைப்படங்களை பார்க்கையில் அங்கே செல்ல வேண்டும் என நினைப்பதுண்டு.அந்த நாள் வருமா??
உண்மைதான்.. ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர வேறு எது செய்ய முடியும்...
இறந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் போதே இனி இந்த உலகில் எந்த மூலையிலும்
இது போன்ற ஒரு சம்பவம் நடக்க கூடாது என்று பிரத்தனை செய்து கொள்வோம்...
I'm not sure if the victims were really compensated properly. But then even crores of rupees will not heal their wounds or compensate for the pain & suffering of losing their beloved ones.
It's been a long time since I read your posts.
As usual, you are writing very good articles, Jothi. Keep up the good work!
(Sorry transliteration not working at times in the office)
வாங்க கமலேஷ். உண்மைதான் நம்மால் பிரார்தனை மட்டுமே செய்ய முடியும்.
கருத்திற்கு மிக்க நன்றி.
வாங்க ஜோ. உங்கள் பதிவுலகத்திற்கு வருவதே பெரிய விஷயமாக போய்விட்டது. இன்னும் பொறுப்பான பதிவுகள் நிறைய எழுத வேண்டி இருக்கிறது. ஆனால் நம் காலத்தை உண்ணுகின்றன. கருத்திற்கு மிக்க நன்றி ஜோ.
yes jothi appa va pakka trichy poiten so could not reach u people :(
படிக்கும்போதே மனது கனத்தது... எல்லாமே அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உதாசீனம்தான்..பொதுமக்களின் வாழ்க்கையில் விளையாடுவது அவர்களுக்கு பழகிவிட்டது.
அருமை நண்பர் ஜோதி டிசம்பர் 3 ஊரில் பயணத்தில் இருந்தமையால் இதற்கு பதிவு போட முடியாமல் போனது, உங்கள் பதிவு கண்ணீரை வரவழைத்தது நண்பா. அருமையாக தொகுத்தமைக்கு நன்றி,இனி தொடர்ந்து வந்து படிப்பேன்
வாங்க நாஞ்சில், தவறான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். இந்தியாவில் மக்கள் அதிகம் என்பதால் மக்களின் உயிருக்கு மதிப்பில்லை. ஆனால் போனது ஒரு பெரிய இடம் என்றால் வானத்திற்கு பூமிக்கும் குதிப்பார்கள். ஆனால் என்ன செய்ய?
வாங்க கார்த்திகேயன். உங்களின் பதிவு மிக அருமை. ஆனால் கண்களில் நீர் கோர்த்துவிட்டு ரசிக்க முடியவில்லை,..
//தவறான = தாமதமான //
கருத்துரையிடுக