ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

பொறியியலில் எதற்காக தமிழ் மொழி???

இரண்டு நாளைக்கு முன் நம் கல்வித்துறை அமைச்சர் பொறியியல் தமிழ் வழியில் கொண்டுவருவதற்கான ஆவண செய்யப்படும் என சொன்னார். அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதற்கான ஒரு அலசல்.

நான் முழுக்க முழுக்க தமிழ் வழியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தவன். பிறகு முற்றிலும் மாறுபட்ட சூழ்னிலையில் அண்ணா பல்கலைகழகத்தில் வேதிப்பொறியியல் படித்துவிட்டு இப்போது எங்கோ குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.

கண்டிப்பாக நான் படித்த போது இருந்த சூழ்னிலை இப்போது இல்லை. நான் படித்த போது மொத்தமே 18 பொறியியல் கல்லூரிகள்தான். அதில் 8 அரசு கல்லூரிகள். அதில் ஒரு சீட் வாங்குவதற்குள் போதுமடா சாமி என ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியல்ல. 12ஆவது பாஸானால் போதும். என்ன துறை வேண்டுமானால் வாங்கி கொள்ளலாம். (என்ன கொடுமையடா சாமி??, பொறியியல் அந்த அளவிற்கு கேவலமாய் போச்சு). நான் படிக்கும் போதே தமிழ் வழியில் படித்தால் மதிப்பெண் விழாது. இப்போதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஏன் தமிழில் கற்க வேண்டும்.??



நான் பொறியல் முடித்தவுடன் சுமார் ஒரு வருடம் காஞ்சிபுரத்தில் கல்லூரி விரிவாளராய் பணி புரிந்தேன். உண்மையில் மிக சந்தோசமான நாட்கள் அவை (யாருக்குன்னு கேள்வி கேட்க கூடாது). உலகில் மன திருப்தியான தொழில் எதுவென்றால் அது ஆசிரியத்தொழில் என்றே நான் சொல்வேன்.

பொதுவாக தமிழ் வழி படித்து கல்லூரி வரும் மாணவர்களுக்கு மொழி மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும். காரணம் பொதுவாக தமிழ் வழி படித்து வரும் மாணவர்கள் மனப்பாடம் செய்வதில்லை. ஓரளவு பொருளறிந்து படிப்பதுதான் அவர்கள் வழக்கம். ஆனால் ஆங்கில வழி வரும்போது முழுமையான பொருளை அவர்களால் அடைய முடியாது. ஒரு வேளை அகராதி வைத்துப்படித்தால் ஓரளவு பொருள் புரிந்து படிப்பர். ஆனால் அதை ஒரு வாக்கியமாக எழுதி முடிப்பதற்குள் பரிட்சை நேரம் மூணு மணி நேரம் ஓடிவிடும். தேர்வு முடிவுகள் வரும் போது ஒன்னு தவறி இருப்போம் இல்லை ஜஸ்ட் பாஸ் பண்ணி இருப்போம். ஓரளவு புரிந்து இனி எல்லா தேர்விலும் நன்றாக நம்மால் மதிப்பெண் வாங்க முடியும் என நம்பிக்கை வரும் போது நாலு வருடம் ஓடி இருக்கும். அப்போது கையில் 60% மார்க் இருக்கும். எவன் வேலைக்கு நம்மை எடுப்பான்??

தமிழ் வழிக் கல்வியின் பொதுவான பிரச்சனை இதுதான். நான் விரிவுரையாளராக இருந்த சமயத்தில் இதை மிக கவனத்தில் எடுத்துக் கொண்டேன். நான் அனுபவித்ததை என் மாணவர்கள் அனுபவிக்ககூடாது என்ற ஒரே எண்ணம்தான்.

என் முறை இதுதான். போனவுடன் பழைய வகுப்பிலிருந்து 5 நிமிடம் கேள்வி (பலன்: பசங்களுக்கு தூக்கம் போய்விடும்). பிறகு தமிழில்தான் ஆரம்பிப்பேன். சீரான இடைவெளியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் வந்து கொண்டே இருக்கும். எனவே மாணவர்கள் பாடத்தை நன்றாக புரிந்து கொள்வார்கள். புத்தகத்தை பிரிக்கும் போது கண்டிப்பாக பயம் இருக்காது. படிக்க ஆர்வமாகவும் இருக்கும்.இந்த முறை மிக பலனளித்தது. மிக கடினமான பாடங்களில் கூட மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தார்கள். சுற்று வ்ட்டாரங்களில் இருந்து மாணவர்கள் என் மாணவர்களின் நோட்ஸை வாங்கி சென்று படித்தார்கள். ஒரு ஆசிரியருக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும்??

ஆம் விஷயம் இதுதான்.

புரிந்து செய்கிற எந்த காரியமுமே வெற்றிதான். இந்த புரிதலுக்கு தடையாக இருப்பது மொழி.அந்த தடைக்கல்லை உடைக்கதான் இப்போது தமிழ் வழிக்கல்வி பாடக்கல்வியாக வழிமொழியப்பட்டு உள்ளது. முதலில் இதன் வசதிகளை பார்க்கலாம்.

1. பொருளறிந்து படிப்பதால் பாடங்கள் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும்.(பிதாகரஸ் பார்முலாவும், அல்ஜீப்ராவும் நன்றாக இன்னும் நியாபகம் இருக்கிறது). எங்கோ எப்போது இது பலனளிக்கும். சிக்கலான சூழ்னிலையை நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்களின் பார்வை கண்டிப்பாக ஆங்கில மாணவர்களிடம் இருந்து வேறுபடும். பெரும்பாலான சிக்கல்களுக்கு ஆங்கில வழி மாணவர்களைவிட உங்கள் பதில்கள் நேரடியான, பொருத்தமான விடை அளிக்கும். இதேதான் வேலையிலும். இதனால் நீங்கள் செய்யும் தொழில் உங்களுக்கு கடினமாக இருக்காது. நீங்கள் தொழிலையும் காதலிப்பீர்கள். அடுத்து என்ன செய்யணும் என்பதற்கான பதில் உங்களிடம் இருக்கும்.

2. எப்போது உங்கள் தொழில் உங்களுக்கு சுலபமாக இருக்கிறதோ, கொஞ்ச நாளில் போரடித்துவிடும். அடுத்து என்ன பண்ணலாம்? என்ற கேள்வி தொக்கி நிற்கும். எப்போது நீங்கள் உங்களிடம் கேள்வி கேட்க ஆரம்பிக்கீர்களோ, அப்போதே நீங்கள் வெல்ல ஆரம்பிக்கிறீர் என அர்த்தம்.

3.பொதுவாக தன் தாய் மொழியில் சொல்லிக் கொடுக்கிற நாடுகள் தனக்கென ஒரு தனித்துவம் கொண்டவையாக இருக்கும். எந்த ஒரு நாட்டிற்கும் அந்நிய செலவாணி ஒரு முக்கியமான துறை.

ஜப்பான் - எலெக்ட்ரானிக்ஸ்
ஜெர்மனி - ஆட்டோமொபைல் தொழில் நுட்பம், உயர் நிலை ஆராய்ச்சிகள்
கொரியா - கட்டுமானம்,
சீனா - எல்லாவற்றிலும்
ரஸ்யா - ராணுவத்தொழில் நுட்பங்கள்,
இப்படி நிறைய நாடுகள்,..

நம் நாட்டை எடுத்துக் கொண்டால் இப்போதைக்கு IT, BPO, KPO, offsourceing போன்றவை. இவற்றால் நாட்டிற்கு என்ன பலன்?? பணம் வருகிறது என்ற ஒன்றைத்தவிர. ஆனால் எப்போதெல்லாம் மேலே சொன்ன துறைகள் அடி வாங்குதோ நமக்கும் அடி வாங்கும். அதாவது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த நாட்டினை நம்பி இருக்கிறோம். எந்த ஒரு நாட்டிற்கும் இது ஆபத்தானாது. உங்களுக்கென ஒரு தனித்தன்மை இருப்பது பலமே. ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் சின்னது என்றாலும் அந்த நாட்டிற்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. ஐரோப்பா நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தொழில் நுட்பம் சிறப்பாக இருக்கும்.அதுதான் அவைகளின் பலமே. நாமும் நமக்கென ஒரு தொழில் தனித்துவத்தை உருவாக்காத வரையில் வல்லரசு கனவுதான்,..

தனித்துவம் எப்போது வரும்? நாம் என்ன செய்கிறோம் என்பதை புரிந்து செய்யும்போது,..





4. தாய் மொழியில் துவக்கத்தில் படித்தவர்கள் மிக சிறந்த அறிஞர்களாக இருப்பதைக் கண்டிருக்கலாம்.

அறிஞர் என சொல்லிவிட்டு அண்ணாவைப் பற்றி சொல்லாவிட்டால் எப்படி?

அண்ணா ஒரு முறை அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது ஒரு நக்கலான வெள்ளைக்காரன் பின் வரும் கேள்வியைக் கேட்டான் (நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் சொல்கிறேன்)


"Can you construct a sentence in English by using because three times in it?"

அண்ணா மின்னலாய் உடனடியாக பதில் சொன்னார்,.

"No sentence ends in because, because, because is a conjunction"

அவர் மட்டுமல்ல,..

ராமானுஜர், C V ராமன், சந்திரசேகர், M.S சுவாமி நாதன், அப்துல்கலாம், இப்படி நிறைய பேர்,..

ஆனால் இன்று ?????????????????????

CTRL C & CTRL V

நாளை முடிக்கிறேன்,..


.

24 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் நண்பா,... உண்மை என் ஓட்டு உங்களுக்குதான்..

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நண்பரே.. ஹீம்ம்ம்ம்.. கணிணி சம்பந்தப்பட்ட பாடங்களை தூய தமிழில் படித்தால் கண்டீப்பாக தேறுவது மிக மிக கடினம் :(

அண்ணாமலையான் சொன்னது…

கரெக்டா சொன்னீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

மொழி விளையாட ஆரம்பித்தால் சரிஆகிவிடும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

நல்ல பதிவுங்க ஜோதி..

உங்கள் கட்டுரையில் பல இடங்களில் உடன்படுகிறேன். சில இடங்களில் இல்லை. எந்த மொழியில் படித்தாலும் புரிந்து உணர்ந்து படித்தால் கண்டிப்பாக சிறப்பாக சிந்திக்கவும் முடியும், பணியாற்றவும் முடியும் என்பதே என் கருத்து.

இதில் தாய் மொழியாக இருந்தால் இன்னும் நல்லது.

நீங்கள் அழகப்பா முன்னாள் மாணவரென்றால், நான் உங்க ஜூனியர் :)

malar சொன்னது…

நினைவில் வத்துக்கு கொள்வது கடினம்....

jothi சொன்னது…

வாங்க ஞானசேகரன்.மிக்க நன்றி

jothi சொன்னது…

//நண்பரே.. ஹீம்ம்ம்ம்.. கணிணி சம்பந்தப்பட்ட பாடங்களை தூய தமிழில் படித்தால் கண்டீப்பாக தேறுவது மிக மிக கடினம் :(//

ஒப்புக்கொள்கிறேன் ராஜ். என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்??

jothi சொன்னது…

வாங்க அண்ணாமலை,.. அடுத்த பதிவு எப்ப ??? ரொம்ப ஆவலா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். ரஜினி படம் மாதிரி உங்க பதிவு. எப்ப வந்தாலும் ஹிட்டாகும்,..

jothi சொன்னது…

/மொழி விளையாட ஆரம்பித்தால் சரிஆகிவிடும்//

வாங்க டாக்டர். ஊருக்கு வர்ரேன்,.. பார்க்கலாமா??

jothi சொன்னது…

உங்கள் கருத்தை முழுக்க நான் வழிமொழிகிறேன் செந்தில்,..

நீங்க a c techக்கா??? சொல்லவே இல்லை?? எந்த ஆண்டு முடித்தீர்கள்?? (அப்புறம் நான் சொல்றேன் ஜூனியாரான்னு)

jothi சொன்னது…

இல்லைங்க மலர். தாய் மொழியில் படித்தால் நன்றாக நினைவில் இருக்கும். அதற்கு நான் கியாரண்டி.

வருகைக்கு நன்றி

ஜீவேந்திரன் சொன்னது…

உங்கள் கருத்து சரியானது. நான் ஜப்பான் சென்றிருந்தேன். அங்கு எல்லாமே அவர்களது மொழியில்தான். அது போல இப்போது நான் வாழும் ஐரோப்பாவிலும் சகல நாடுகளும் தத்தமது மொழியில்தான் சகல செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றன. அது ஏன் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஆங்கில மோகம் என்று தெரியவில்லை. சில வேளை...ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்ததால் இந்த மோகம் ஏற்பட்டிருக்கலாம் (அப்படித்தான் ஆராய்ச்சிகள் சொல்கின்றன). சீனா ஆங்கிலேயரிடம் அடிமைப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மையில் தாய்மொழியில் பட்டப் படிப்புகள் அவசியத்தேவைதன் ஜோதி

கலகலப்ரியா சொன்னது…

//
கண்டிப்பாக நான் படித்த போது இருந்த சூழ்னிலை இப்போது இல்லை.//

ஆமாம்... பதினெட்டாம் நூற்றாண்டில இருந்த மாதிரியா இப்போ... ஹும்... =))

கலகலப்ரியா சொன்னது…

//உண்மையில் மிக சந்தோசமான நாட்கள் அவை (யாருக்குன்னு கேள்வி கேட்க கூடாது).//

அதான் தெரியுமே... =))..

கலகலப்ரியா சொன்னது…

//தாய் மொழியில் துவக்கத்தில் படித்தவர்கள் மிக சிறந்த அறிஞர்களாக இருப்பதைக் கண்டிருக்கலாம்.//

என்னை ரொம்பப் புகழ்றீங்க ... கூச்சமா இருக்குப்பா...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

ஜோதி.. நான் 1997 முதல் 2001 வரை A.C.Techல் படித்தேன் :)

jothi சொன்னது…

//உங்கள் கருத்து சரியானது. நான் ஜப்பான் சென்றிருந்தேன். அங்கு எல்லாமே அவர்களது மொழியில்தான். அது போல இப்போது நான் வாழும் ஐரோப்பாவிலும் சகல நாடுகளும் தத்தமது மொழியில்தான் சகல செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றன. அது ஏன் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஆங்கில மோகம் என்று தெரியவில்லை. சில வேளை...ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்ததால் இந்த மோகம் ஏற்பட்டிருக்கலாம் (அப்படித்தான் ஆராய்ச்சிகள் சொல்கின்றன). சீனா ஆங்கிலேயரிடம் அடிமைப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.//

உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன். அடுத்த பதிவை தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை வழங்குங்கள். வருகைக்கு நன்றி ஜீவா

jothi சொன்னது…

//உண்மையில் தாய்மொழியில் பட்டப் படிப்புகள் அவசியத்தேவைதன் ஜோதி//

கண்டிப்பாக அவசியம். ஆனால் வேலைக் கிடைக்குமா? அதுதானே முக்கியம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தேனம்மை

jothi சொன்னது…

//ஆமாம்... பதினெட்டாம் நூற்றாண்டில இருந்த மாதிரியா இப்போ... ஹும்... =)) //

ஹூஹூம்,.. கண்டிப்பா இல்லை

jothi சொன்னது…

//அதான் தெரியுமே... =))..//

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?? நம்ம புகழ் இலங்கை வரைக்கும் பரவிருக்கு போல இருக்கு

jothi சொன்னது…

//என்னை ரொம்பப் புகழ்றீங்க ... கூச்சமா இருக்குப்பா...//

உங்களுக்கே அதிகமா தெரியல,.. நான் பதிவு போறதே பெரிசாப் போச்சு. இதுல நீங்க வேற இந்த ஓட்டு ஓட்டுறீங்களே,.. இது நியாமா? அடுக்குமா?
நன்றி ப்ரியா

jothi சொன்னது…

//ஜோதி.. நான் 1997 முதல் 2001 வரை A.C.Techல் படித்தேன் :)//

ஓஓ அப்ப நீங்க எனக்கு ஜூனியர்தான். கண்டிப்பா என்னை நீங்க காலேஜ்ல பாத்துருப்பீங்க,.. ஏன்னா நான் காலேஜ்ல ரொம்ப பேமஸூ,..ஆனா எந்த வாத்திட்டையும் என் பேர சொல்லி மட்டும் கேட்டுறாதிங்க,.. முக்கியமா லீமா ரோஸ் மிராண்டா,..

இப்ப எந்த கம்பேனி

கருத்துரையிடுக