சில நேரங்களில் இயற்கை சுவாரஸ்யமான பல தகவல்களை நமக்கு விட்டு செல்கிறது. இதே போல ஒரு பதிவை நாம் ஏற்கனவே பார்த்தாச்சு. இது இரண்டாம் பகுதி
டால்பின்கள் ஒரு கண்ணை திறந்து கொண்டே தூங்கும்.(நான் ஒரு வாயை திறந்துகொண்டே தூங்குவது வழக்கம்)
நிலத்தில் மைல் என்பது 6080 அடி. கடல் நீரில் (நாட்டிகள் மைல்) 6280 அடி. (மைலும்,அடியுமே குழப்பம், இதில் இன்னும் வேற,..)
ஜெல்லி மீன்களில் 95% தண்ணீர். தோராயமாக ஒரு மனிதனின் உடலில் 66% பங்கு நீர். (நமக்கு தெரிந்த ஒரே தண்ணி,..வுவாக்க்க்க்க் தண்ணி,..)
போலார் கரடிகள் இடதுகை பழக்கமானவை.(இடது கைகள் ஆட்களை பார்த்திருக்கேன் ஆனால் போலார் கரடிகளை பார்த்தது இல்லை,நீங்க யாராவது??)
நத்தைகள் தொடர்ந்து முன்று வருடம் தூங்ககூடும். எறும்புகள் சுத்தமாக தூங்குவதில்லை. (எங்க ஆபீஸ்ல எறும்பு மாதிரி வேல பாக்க சொல்றாய்ங்க, ஆனா எனக்கு நத்தை மாதிரி இருக்க ஆசை,..)
ஹம்மிங்க் பறவைகள் என்ற ஒரே பறவையினம் மட்டுமே பின்னோக்கி பறக்கும். கங்காரு மட்டும் பின்னோக்கி நடக்க முடியாது.(காரணம் எனக்கு தெரியும் கங்காருக்கு முன்னோக்கி வைத்த காலை பின்னோக்கி வைக்க பிடிக்காது)
கையின் முட்டிகளை நாக்கால் தொடுவது நடக்காது ஆனால் ஒரு சிலர் இதிலும் வெற்றி பெற்று உள்ளனர்.(என் பையன் நாக்கால் மூக்கை தொடுவான்)
கண்களை திறந்துகொண்டே தும்முவது என்பது நடக்காத காரியம். (தும்மிக்கொண்டே கண்களை திறக்க முடியுமா??? ம்ம்ம்,.இப்படியெல்லாம் யோசிக்க கூடாது, மூளை வேஸ்டாகுதுல்ல??)
லட்சக்கணக்கான மரங்கள் அணிலால் நடப்படுகின்றன. பழங்களை, விதைகளை அவசரத்தில் புதைத்துவிட்டு பின் மறந்துவிடுவது அவைகளின் வழக்கம். (லட்சக்கணக்கான மரங்கள் அரசாங்கத்தால் வெட்டப்படுகின்றன. மரங்களை அவசரத்தில் வெட்டிவிட்டு பின் வெட்டப்பட்ட மரங்களை மறந்துவிடுவது அவர்களின் வழக்கம்)
போரில் இறந்த ராணுவ அதிகரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது ஜப்பானின் வழக்கம்.(1956ல செத்தஅம்பேத்காருக்கு 1990ல நாம் கொடுக்குற பாரத ரத்னா மாதிரி இல்லாம இருக்கணும் ,..)
டெலிபோனை கண்டுபிடித்த கிரகாம்பெல் மனைவிக்கோ, மாமியாருக்கோ போன் பண்ணியதில்லை. காரணம் அவர்கள் காதுகேளாதவர்கள்.(ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம்)
பூமியின் சுழலும் வேகம் குறைவதால் இன்னும் மில்லியன் ஆண்டுகளில் லீப் வருடம் இருக்காது. (எல்லாம் சரி. பூமி இருக்குமா??? நல்லா பண்றாய்ங்க ஆராய்ச்சி,..)
நன்றி: http://didyouknow.org/fastfacts/
சுவாரஸ்யங்கள் தொடரும்,..
ok,.. இவ்ளோதூரம் வந்து படிச்சாச்சு, அப்டியே தமிழீஸ்ல ஒரு ஓட்டை போட்டு போங்க,..
.
9 கருத்துகள்:
அது சரி... அருமையான தகவல்கள்... பிராக்கெட் ... முடியல...
உங்களுக்கு மொத்தம் எத்தன வாய்..? ஸ்ஸ்ஸபா...
(நான் ஒரு வாயை திறந்துகொண்டே தூங்குவது வழக்கம்) நேர்மை?
குட்
வாங்க ப்ரியா,..
//உங்களுக்கு மொத்தம் எத்தன வாய்..?//
ஒண்ணே ஒன்னுதாங்க,..டால்பினுக்காவது ரெண்டு கண்ணுல ஒன்ன திறந்திட்டு தூங்குது. இருக்கிற ஒரு வாயையும் திறந்து தூங்குற நம்மதான பெரிய ஆளு??
மிக்க நன்றி,..
வாங்க கார்த்திகேயன். நேர்மையா,.. அது எங்க இருக்கு,.. நா ஏதாச்சும் உளரிட்டனா??
ஹா ஹா ஹா
//(நான் ஒரு வாயை திறந்துகொண்டே தூங்குவது வழக்கம்)//
எல்லாருக்கும் ஒருவாய்தானே இருக்கு...உங்களுக்கு எப்படி? தெளிவாக்குங்க இல்லன்னா தப்புதப்பா நினைக்கத்தோணுது:-)
மரங்கள் அணிலால் நடப்படுவதும் அதுக்கு கொடுத்த கமெண்டும் சூப்பர்...
நடத்துங்கய்யா...நடத்துங்க
//இல்லன்னா தப்புதப்பா நினைக்கத்தோணுது:-)//
ஆத்தாடி,.. எல்லாம் ஆரம்பிச்சதிலிருந்து அதையே கேக்குறிங்களே,. எனக்கு இருக்குறது ஒரு வாய், ஒரு வாய், ஒரு வாய்
மிக்க நன்றி நாஞ்சில்
அய்யய்யோ நான் சொல்ல நினைச்சது முழுசா உங்ககிட்ட ரீச் ஆகாம சிக்கல்ல மாட்டிகிட்டேனா?
@ ஜோதி
//3.நீ போனால் எனக்கென்ன (உன் உழைப்பு உனக்கு என் உழைப்பு எனக்கு ரகம். இந்த ரகம் பொதுவாக கம்மி)
துபாய்ல நாம காய்றது நமக்குதானே தெரியும்.//
இதுக்கு நான் சொல்ல நினைச்ச மேட்டர் வேற.
உள் நாட்டுல இருக்குற நாங்களாவது, வேலை செய்யுற இடத்துல எதாவது பிரச்சனைன்னா நீயுமாச்சு...உன் வேலையுமாச்சு அப்படின்னு உதறிட்டு வந்துடுவோம்.
ஆனா உங்களை மாதிரி வெளி நாடுகள்ல இருக்குறவங்க எவ்வளவு பெரிய சிக்கல்னாலும் கடன், குடும்பம் அப்படின்னு பல காரணங்களை நினைச்சு சகிச்சுகிட்டு இருக்கீங்க.
//வெளிநாட்டுல போய் காயுற உங்க மாதிரி ஆளுங்களுக்கு//
வெளிநாட்டுல போய் காயுற உங்க மாதிரி ஆளுங்களுக்காக குரல் கொடுக்க உள்ளூரில் காயும் ஒருவனின் ஆவேசக் குரல் அப்படின்னு டைப் பண்ண நினைச்சது ஆளுங்களுக்கு அப்படின்னு நின்னுடுச்சு.
உள்ளூரில் காயுற ஆளுன்னு ஏன் சொன்னேன்?
நான் வேலைக்கு போன நிறுவனங்களின் முதலாளிகள் எல்லாருமே கோடீஸ்வரர்கள்தான். அதற்காக நான் அவங்க சொத்து எல்லாத்தையும் என் பேருல எழுதி வைக்க சொல்லலை. பேசிய ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதிக்குள்ளாகவாவது எதிர்பார்ப்பேன். ஆனால் கிடைக்காது. வேலையும் செய்து அவங்களுக்கு நிதியும் அளிக்கிற அளவுக்கு வசதி இருந்தா நான் ஏன் அவங்ககிட்ட வேலைக்குப் போறேன்?
இப்போது நம்ம நாட்டுல நிலமை என்னன்னு தெரியுமா? ஒரு பக்கம் திறமையான பணியாளர்களுக்கு சரியான வேலையும் நியாயமான ஊதியமும் கிடைக்குறது இல்லை.
இன்னொரு பக்கம் ஊழியர்களை நன்றாக வைத்துக்கொள்ள நினைக்கும் முதலாளிகளுக்கு விசுவாசமான பணியாளர்கள் வாய்ப்பதில்லை.
அதாவது இந்த இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. நல்ல மனைவி - கணவன் அமைவது மட்டுமல்ல...நல்ல முதலாளி - நல்ல பணியாளர் வாய்ப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்.
ஊதியப் பிரச்சனையால்தான் வேலையைத் தூக்கிப் போட்டுவிட்டு கைத்தொழில் செய்துகொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு தொழிலிலும் சிரமங்கள் உண்டு என்பது தெரியும்.நான் வெளிநாடு சென்றது இல்லை என்றாலும் அங்கே செல்பவர்கள் வாழ்வில் எவ்வளவு விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்தவன்தான்.
அதிலும் சில சமயங்களில் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும்போது தாய்நாடாக இருந்தால் அடுத்த நொடி அந்த சூழ்நிலையை உதறிவிட்டு வெளியேறிவிடலாமே...வெளிநாட்டில் இருந்தால் இத்தகைய நேரத்தில் சிறைத்தண்டனையை விட மோசமாதவாக அல்லவா தோன்றும்...- இது மாதிரி எல்லாம் சிந்திப்பவன் நான்.
இதற்கு பின்னூட்டம் இடும்போது நான் செய்த ஒரே தவறு, நான் சொல்ல நினைத்ததை தெளிவாக எழுதாததுதான்.
மேலும் சந்தேகங்கள் இருந்தால் என் தளத்தில் பின்னூட்டம் இடவும். தெளிவாகப் பேசினாலே தொண்ணூறு சதவீத பிரச்சனைகள் காணாமல் போய் விடும்.
*******************
நான் சொன்னது...
//நான் ஒருத்தன் இருக்குறது தெரியாததால இப்படி சொல்லிட்டாரு. இனிமே மைண்டுல வெச்சுக்குங்க. (நான் எவ்வளவு நல்லஅவன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டுனா கூட, அப்படியான்னு கேட்டுட்டு போய்கிட்டே இருக்காங்க.//
அடுத்தவங்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படாத ஆளுன்னு சொல்ல வந்தேங்க.
*******************
@ ஜோதி
//வெளிநாட்டுல போய் காயுற உங்க மாதிரி ஆளுங்களுக்கு உள்ளூரில் காயும் ஒருவனின் அவலக்குரல்...ச்சை...ஆவேசக் குரல்.//
என்ன சொல்ல வர்ரிங்க??
நாங்க என்ன இந்தியாவின் சொத்தை அள்ளிக்கிட்டு போனாமா??
இந்தியாவின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிச்சோமா?
வெளி நாடு வந்து கோட்டை கட்டினோமா?
இந்திய மக்களின் ரத்தத்தை பிடுங்கி சுவிஸில் போட்டோமா? (நாங்க இது வரை சம்பாதித்து போட்டதைவிட இந்த கொள்ளையின் அளவு அதிகம், அவர்கள் யார்)
எங்களால் இந்தியாவிற்கு என்ன நட்டம், இல்லை என்ன லாபம் என நல்ல தளங்களில் தேடிப்பாருங்கள். விடை கிடைக்கலாம்.
***********************
@ ஜோதி
//வெளி நாடு செல்வது கோவலன் காலத்திற்கு முன் இருந்தே இருக்கிறது. அன்றிலிருந்து இது போன்ற அவேசக்குரல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யார் போகாமல் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் உழைப்பு நிஜம். நாங்கள் சிந்துகிற ரத்தம் உங்களை போன்ற ஒரு சிலருக்கு வியர்வையாக தெரிகிறது. அது எங்கள் குற்றமல்ல.
நீங்கள் ஆவேசப்படுவதால் எனக்கொன்னும் ஆகப்போவதில்லை, என்னைப் பார்த்து பரிதாபப்படுவதாலும் எனக்கொன்னும் ஆகப்போவதில்லை. அதைப்போலவே உங்களுக்கு. இதையேதான் உன் உழைப்பு உனக்கு, என் உழைப்பு எனக்கு என சொன்னேன். மற்றபடி நான் தவறாக சொன்னதாக எனக்கு தெரியவில்லை. இது உள்ளூருக்கும் பொருந்தும் வெளியூருக்கும் பொருந்தும்.//
நீங்க சொன்னதைத்தான் நானும் சொல்ல வந்தேன். என்ன.... வார்த்தை சிக்கிடுச்சு.
மிக்க நன்றி சரண்.
இப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்தேன். அதனால் தாமதமான பின்னூட்டம் மன்னிக்க.
உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு பிறகே உங்களின் பின்னூட்டத்தின் அர்த்தம் விளங்கியது. நாம் இருவரும் பார்த்ததும் கிடையாது, பார்ப்பதும் கிடையாது. இனிமேல் எங்கேயாவது பார்ப்போமா என்பதற்கும் உத்திரவாதம் கிடையாது. நாம் ஏன் ஒரு பலனும் இல்லாத உராய்வுகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.? அது அவசியமில்லை. என்றாவது உங்களை பார்க்க நேர்ந்தால், முதலில் இது போன்ற உராய்வுகள் நமக்கு நினைவில் வரும், அது எதற்கு என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால் உண்மையில் அது அனாவசியமானது என்றே முடியும். ஆதலால் "we will shake our hands"
//அதிலும் சில சமயங்களில் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும்போது தாய்நாடாக இருந்தால் அடுத்த நொடி அந்த சூழ்நிலையை உதறிவிட்டு வெளியேறிவிடலாமே...வெளிநாட்டில் இருந்தால் இத்தகைய நேரத்தில் சிறைத்தண்டனையை விட மோசமாதவாக அல்லவா தோன்றும்...- இது மாதிரி எல்லாம் சிந்திப்பவன் நான்.//
எங்களின் வலி உங்களுக்கு நன் கு தெரிந்திருக்கிறது. அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி.
//தெளிவாகப் பேசினாலே தொண்ணூறு சதவீத பிரச்சனைகள் காணாமல் போய் விடும்.//
உண்மைதான் வழி மொழிகிறேன்.
//நீங்க சொன்னதைத்தான் நானும் சொல்ல வந்தேன். என்ன.... வார்த்தை சிக்கிடுச்சு.//
No problem Saran. என் பின்னூட்டம் கூட நான் சொல்ல வந்ததை முறையாக சொல்லவில்லை என நினைக்கிறேன். என் மேலும் தவறு இருக்கலாம். அதனால்தான் இத்தனை மன சலனங்கள்.
அனைத்தையும் மறந்து கைகுலுக்குங்கள் நண்பரே. தமிழால் இணைவோம்.
கருத்துரையிடுக