வெள்ளி, 11 டிசம்பர், 2009

என் கேள்விக்கு என்ன பதில்?


  1. எனக்கு மட்டும் அல்ல, இங்கு தமிழ் படிக்கும் அனைவருக்கும் திருக்குறளைப் பிடிக்கும். ஆனால் திருவள்ளுவர் எழுதிய அந்த திருக்குறள் எங்கு இருக்கிறது? யாரிடம் இருக்கிறது. எவருக்காவது தெரியுமா? சொல்லுங்களேன்.
  2. தமிழ் நாட்டில் சில ஆறுகள் ஓடுகின்றன. அதில் பலவற்றில் தண்ணீர் இல்லை. (இதில் கூவத்தை கணக்கில் சேர்க்காதீர்கள்). அதில் வைகையும் உண்டு. எனக்கு தெரிந்து மதுரையில் வெள்ளம் என ஒரே ஒரு முறை கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த வைகை கடலில் கலக்காது என எல்லோருக்கும் தெரிந்த தகவல்.வைகை ஆறு என்பது இருப்பது உண்மை. ஆனால் எங்கே அது காலி ஆகிறது? அதாவது முற்று பெறுகிறது?
  3. எனக்கு தெரிந்து பழந்தமிழர்கள் இயற்கை மட்டுமே வணங்கி வந்து இருக்கிறார்கள். இப்போதும் எங்கள் கிராமத்தில் பொங்கலின்போது காட்டையும், மாட்டையும் சுத்தப்படுத்தி மண்ணை வைத்து கும்பிடுவதுதான் வழக்கம். எனக்கு தெரிந்தவரை என் பல கிராமத்து நண்பர்களின் வீடுகளிலும் இதுதான் நடக்கிறது. ஆனால்,.. (ம்ம்ம் கேள்வி வந்துவிட்டது?) எப்போது நம் இயற்கை பஞ்சபூதங்கள் பஞ்சரானது?? நாம் மண்ணாய் வணங்கும் பூமி திருமாலிற்கு ரெண்டாம்தாரமானாள். ஆற்றையும் சிவனிற்கு ரெண்டாம்தாராமாக்கி கொண்டையில் உட்காரவைத்தார்கள். வாயு, ஆகாயம் எல்லோரையும் மூன்றாம்தர கடவுள் ஆக்கினர். நம் மூதையாரை அசுரர் ஆக்கினார்கள். இதை செய்தது யார்?? எப்போது நம் இயற்கை பஞ்சபூதங்கள் பஞ்சரானது?? எப்படி?
  4. பொதுவாக எல்லா உயிரினங்களும் நீந்தும் தன்மை கொண்டவை. வண்டு, எலி, பூனை, மாடு, யானை என எல்லா அளவில் உள்ள உயிரினங்களும் நீந்தகூடியவை. ஒரு முறை NGCயில் யானை அடித்த நீச்சலைப் பார்த்து அசந்துவிட்டேன். சின்ன வயதிலேயே எனக்கு இந்த சந்தேகம் இருந்ததால் ஒரு முறை எங்கள் குட்டையில் எங்கள் வீட்டு பூனையை தூக்கிப் போட்டு அது அழகாக நீந்திவரும் காட்சியை கண்டு ரசித்து(????) இருக்கிறேன். ஏன் பாலாய் போன ஆறறிவு ஜீவன் மட்டும் ஆற்றில் தவறி விழுந்து சாகிறது. மனித உயிரினம் நீச்சலை தொலைத்தது எப்போது?




  5. ஆற்றலை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஒரு வகையில் இருக்கிற ஆற்றல் இன்னொரு வகையில் மாறுகிறது. ரொம்ப சரி. ஆனால் காலங்காலமாக பூமிக்கு வரும் சூரியனிடம் இருந்து வரும் ஆற்றல் என்னவாகிறது?? அது எங்கே தொலைகிறது.?
இப்போதைக்கு இது போதும். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டம் போடுங்கள். பதில் தெரியாதவர்கள் ஓட்டையாவது போடுங்கள் (என்னாத்துக்குன்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க கூடாது)

25 கருத்துகள்:

adhiran சொன்னது…

பதில் ஒன்று:
தெரியாது.
பதில் இரண்டு:
மதுரையை தாண்டி மேலூருக்கு பக்கமே அது வாய்க்காலாய் பிரிக்கப்பட்டு விட்டது. அதில் ஒரு வாய்க்கால் ராமநாதபுரம் வரை சென்று கடலிலும் கலக்கிறது.
பதில் மூன்று:
ராகுல சாகிருத்தாலையா , தேவிபிரசாத் சட்டோபாத்தியாய, கோசாம்பி, அம்பேத்கர் போன்றவர்களின் நூல்களில் இதற்கான பதில்கள் நிறைய இருக்கிறது..போ.வேல்சாமி, ச. தமிழ்ச்செல்வன் போன்றோரும் உதவுவார்கள்.
பதில் நான்கு:
மனிதன் நீந்துதலை தொலைக்கவில்லை...கண்டுபிடித்தான்.
பதில் ஐந்து:
விரயமாகிறது..!

jothi சொன்னது…

1.//தெரியாது//.
மிக்க நன்றி, யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.

2.//மதுரையை தாண்டி மேலூருக்கு பக்கமே அது வாய்க்காலாய் பிரிக்கப்பட்டு விட்டது. அதில் ஒரு வாய்க்கால் ராமநாதபுரம் வரை சென்று கடலிலும் கலக்கிறது//
இதற்கும் மிக்க நன்றி. ஆனால் ஒரு ஆற்றை முழுமையாக பயன்படுத்துவது என்பது ஒரு சிறந்த வழிகாட்டல். கழிவு என்பதை எந்த அளவிற்கு மிக குறைக்கிறமோ, அந்த அளவிற்கு பயனீடு அதிகரிக்கும்.

3.//ராகுல சாகிருத்தாலையா , தேவிபிரசாத் சட்டோபாத்தியாய, கோசாம்பி, அம்பேத்கர் போன்றவர்களின் நூல்களில் இதற்கான பதில்கள் நிறைய இருக்கிறது..போ.வேல்சாமி, ச. தமிழ்ச்செல்வன் போன்றோரும் உதவுவார்கள். //
மிக நல்ல தகவல், ஆனால் இவற்றை தேடவேண்டும். கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

4.//மனிதன் நீந்துதலை தொலைக்கவில்லை...கண்டுபிடித்தான்//
ஒப்புக் கொள்ளமாட்டேன். ஆடும், மாடும் நீச்சலை கண்டுபிடித்தனவா?? கண்டிப்பாக பரிணாம வளர்ச்சியில்தான் தொலைந்திருக்கிறது. இதற்கு பதிலும் அங்குதான் கிடைக்கும் என நினைக்கிறேன்.

5.// விரயமாகிறது..!//
இதையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆற்றல் விரயம் என்பதே அது இன்னொரு வகை ஆற்றல் ஆகும். உதாரணமாக மோட்டாரை எடுத்துக் கொள்ளுங்கள், அது மின் ஆற்றலினை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது. இதில் நாம் விரயம் நாம் வர்ணிப்பது உராய்வினால் விரயமாகும் ஆற்றல் ஆகும். ஆனால் அது உண்மையில் வெப்ப ஆற்றலாக மாறுகிறது. அது நம்மால் பயன்படுத்தப் படாமல் இருப்பதால் விரயம் என வர்ணிக்கிறோம். ஆனால் அதுவும் ஒரு ஆற்றலின் வகையே என்பது என் தாழ்மையான கருத்து.

thanks for your all the comments athiran

கமலேஷ் சொன்னது…

சத்தியமா சொல்றேன் நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது...
ஆனால் எனக்கு ஒன்னும் மட்டும் தெளிவா தெரியுது...
உங்களக்கு உடனடியா மருத்துவர் உதவி தேவை...
(தப்பா எடுத்துக்காதிங்க சும்மா) நிறைய யோசிக்கிறீங்க பதில் கிடச்சா கட்டாயம் என்னக்கும் சொல்லுங்க.
வாழ்த்துக்கள்...

jothi சொன்னது…

//உங்களக்கு உடனடியா மருத்துவர் உதவி தேவை...//

வாங்க கமலேஷ்.

உங்களக்கு உடனடியா மருத்துவர் உதவி தேவை...

கடவுளே யோசிக்கிறது குத்தமாயா?? மருத்துவர் யோசிக்காமால் மருந்து கொடுத்தால் நான் என்ன செய்வது????

கண்டிப்பாக சொல்கிறேன். வருகைக்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

யப்பா சோதி என்னம்மா யோசிக்கிறீக ......

திருக்குறள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டதப்பா ஓலைச்சுவடி எவ்வளவு நாளைக்கு தாங்கும் 300 வருசமே பெரிய விசயம்....

jothi சொன்னது…

//யப்பா சோதி என்னம்மா யோசிக்கிறீக ......//

இந்த கேள்வியும் அதன் பின்னால் உள்ள பதிலும் ஏதோ வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரில்ல தெரியுது. இருக்கட்டும்.

நீங்கள் சொன்ன பதில் சரியாக இருக்கலாம். ஆனால் அது எப்படி இத்தனை வருடங்கள் தொடர்ந்து வந்தது என தெரியவில்லை. அதை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிளை நூல்களின் வழி வந்து இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. தமிழ் தெரிந்தவர்கள் யாரேனும் உதவலாம்.

மிக்க நன்றி வசந்த். இந்த வாரம் உங்கள் வாரம் சிறந்த பதிவுகளை வழங்க வாழ்த்துக்கள்.

ஆகாய நதி சொன்னது…

questions padichuten answers padichutu ellam unga puniyathula therinthukollalam :)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

கேள்வி நல்லாயிருக்கு! பதில் யோசிக்கலாம் வாங்க ஜோதி

Prathap Kumar S. சொன்னது…

//திருக்குறள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டதப்பா ஓலைச்சுவடி எவ்வளவு நாளைக்கு தாங்கும் 300 வருசமே பெரிய விசயம்....//

தப்பு வசந்த். திருக்குறள் அழிந்திருந்தால் நாம் இப்போது எப்படி அதை அறி யமுடிந்திருக்கும். அகிலஉலக தமிழ் ஆராயச்சி கழகத்திடம்தான் அனைத்து பழங்காலத்து ஓலைச்சுவடிகளும் இருக்கிறது என்று எதிலோ படித்த நினைவு. திருக்குறளும் அங்குதான் இருக்கும்..

//ஏன் பாலாய் போன ஆறறிவு ஜீவன் மட்டும் ஆற்றில் தவறி விழுந்து சாகிறது.//

பாழாய் போன...அறிவுஜீவிகள் வாழ்கைத்தேவையானவற்றை தவிரை அனைத்தையும் கற்க முயல்கிறான்.
மற்றக்கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாதுங்க...

ஆமா இந்தமாதிரில்லாம் யோசிக்கிறதுக்கு உங்களுக்கு யாரு சொல்லிக்கொடுத்தது. இதுக்கெல்லாம் பதில் சொல்ல சொக்கனைத்தான் கூப்பிடவேண்டும்...சொக்கா எங்க இருக்கிறாய்? இதோ ஜோதி கூப்பிடறாரு..

adhiran சொன்னது…

பரிணாமத்தின்படி மனிதர்கள் நீரை விட்டு வெளியேறியவர்கள்.. மனிதன் ஒரு நிலப்பிராணி. அவனது தேவைக்காக நீச்சலை கற்றிருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.

ஆற்றை பற்றிய உங்கள் கருத்து பிடிபடவில்லை.

நான் விசாரித்ததில் உண்மையான திருக்குறள் பதிவின் ஓலைச்சுவடி உலகத்தில் இல்லை என்றே சொல்கிறார்கள். ஆனால் உண்மை யாருக்கும் தெரியாது.

adhiran சொன்னது…

வெப்ப ஆற்றல் விண்வெளியில் (வெற்றிடத்தில்) எந்த வினையும் இல்லாமல் வெப்ப ஆற்றலாகவே இருப்பதால் அது விரையமாகிறது என்று சொன்னேன். இது தவறாக கூட இருக்கலாம்

jothi சொன்னது…

//questions padichuten answers padichutu ellam unga puniyathula therinthukollalam :)//

உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது. அதிரன் மூலமாக எனக்கு சில க்ளு கிடைத்திருக்கிறது. ஆராய வேண்டும்.

jothi சொன்னது…

//கேள்வி நல்லாயிருக்கு! பதில் யோசிக்கலாம் வாங்க ஜோதி//

வருகைக்கு நன்றி ஞானசேகரன். பதிலும் என்னுடன் சேர்ந்து முயற்சி செய்யுங்கள்.

jothi சொன்னது…

//தப்பு வசந்த். திருக்குறள் அழிந்திருந்தால் நாம் இப்போது எப்படி அதை அறி யமுடிந்திருக்கும். அகிலஉலக தமிழ் ஆராயச்சி கழகத்திடம்தான் அனைத்து பழங்காலத்து ஓலைச்சுவடிகளும் இருக்கிறது என்று எதிலோ படித்த நினைவு. திருக்குறளும் அங்குதான் இருக்கும்..//

நான் வசந்துடன் ஒத்துப்போகிறேன். பொதுவாக ஓலைச்சுவடிகள் குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த முடியும். அவைகளின் தரம் குறையும் போது நாம் மீண்டும் எழுத வேண்டும் (இப்போது ஸ்டார் செராக்ஸ் போனால் சிம்பிள்ளாக முடித்து விடலாம். அது காகிதங்களுக்கு). மேலும் விளக்கங்களுக்கு கீழே உள்ள இணைப்பை பார்க்க,.

http://archives.chennaionline.com/cityfeature/manu.asp

jothi சொன்னது…

//ஆமா இந்தமாதிரில்லாம் யோசிக்கிறதுக்கு உங்களுக்கு யாரு சொல்லிக்கொடுத்தது. இதுக்கெல்லாம் பதில் சொல்ல சொக்கனைத்தான் கூப்பிடவேண்டும்...சொக்கா எங்க இருக்கிறாய்? இதோ ஜோதி கூப்பிடறாரு..//

.

எப்போதோ யோசித்தது,.. இப்போது பதிவுகளாக,..மிக்க நன்றி,. நாஞ்சில் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்

jothi சொன்னது…

//பரிணாமத்தின்படி மனிதர்கள் நீரை விட்டு வெளியேறியவர்கள்.. மனிதன் ஒரு நிலப்பிராணி. அவனது தேவைக்காக நீச்சலை கற்றிருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.//

ஆடு, பூனை, மாடு, யானை அனைத்துமே நிலப்பிராணிகள்தான்,.. அவை எப்படி நீந்துகின்றன?

jothi சொன்னது…

//ஆற்றை பற்றிய உங்கள் கருத்து பிடிபடவில்லை.

வைகை ஆற்றைப்ப்ற்றி தேட வேண்டும்,.. மீண்டும் வருகிறேன்,.. பதிலுடன்

நான் விசாரித்ததில் உண்மையான திருக்குறள் பதிவின் ஓலைச்சுவடி உலகத்தில் இல்லை என்றே சொல்கிறார்கள். ஆனால் உண்மை யாருக்கும் தெரியாது.//

உண்மைதான், வாய்ப்பில்லை.

jothi சொன்னது…

//வெப்ப ஆற்றல் விண்வெளியில் (வெற்றிடத்தில்) எந்த வினையும் இல்லாமல் வெப்ப ஆற்றலாகவே இருப்பதால் அது விரையமாகிறது என்று சொன்னேன். இது தவறாக கூட இருக்கலாம்//

என்னுடைய கேள்வி பூமிக்குள் பற்றியது. பூமிக்குள் வரும் சூரிய ஆற்றல் என்னவாகிறது??

விண்வெளியில் சூரியஒளி வெப்ப ஆற்றலாக வருவதில்லை. அது மின் காந்த ஆற்றலாக வருகிறது. செறிவூட்டப்பட்ட அணுக்களின் வெப்பஆற்றலினால் உருவாகும் அதிர்வுகள் மின் காந்த ஆற்றலாய் மாறி வெப்ப கதிர்வீச்சால் பூமியையும் அடைகின்றன. பூமிக்கு பின்னால் உள்ள கோள்களில் உள்ள வெப்பம் அவற்றின் தூரத்திற்கு ஏற்ப குறைந்து கொண்டே செல்கிறது. காரணம் தூரம் அதிகமாக அதிகமாக கதிர்வீச்சின் தாக்கம் குறைந்துகொண்டே போகிறது.

மீண்டும் வருகைக்கு நன்றி அதிரன்

angel சொன்னது…

1.
athu oru olai suvadi ipo enga irukunu theryla but conform ah enkita illa

angel சொன்னது…

6.
the energy is absorbed by plants for photosynthesis.
and transformed for evaporation
also it is absorbed by soil for plants in minute quantities
the products such as wood too consist a little bit heat energy from the sun

jothi சொன்னது…

//athu oru olai suvadi ipo enga irukunu theryla but conform ah enkita illa//

It might be destroyed by nature

jothi சொன்னது…

//the energy is absorbed by plants for photosynthesis
and transformed for evaporation
also it is absorbed by soil for plants in minute quantities
the products such as wood too consist a little bit heat energy from the sun//

I appreciate your correlating the energy transfer from sun to other end user.

let us assume your statement is correct. based on research the total energy consumed by photosynthesis is 100,000,000,000,000 watt. If law of conservation energy is true,. where is this energy is going??

I will let you know,..

thanks angel for your comments

ரிஷபன் சொன்னது…

திருக்குறள் ஒருத்தரால எழுதப்பட்டது அல்ல.. வள்ளுவர் என்பது பொதுப் பெயர்.. அதனால்தான் சில/பல குறள்கள் ஒரே அர்த்தம் தருபவையாக இருக்கின்றன.. என்று நான் படித்திருக்கிறேன்..மனிதன் முதல்ல இயற்கையை வழிபட்டான்.. அப்புறம் எப்ப மாறிச்சு.. ஏள்வி ஓக்கே.. இப்ப அரசியல்வாதியையும், சினிமா நடிகர்களையும் வழிபடறாங்களே.. அது எப்ப ஸ்டார்ட் ஆச்சுன்னு தெரியுமா..

jothi சொன்னது…

எப்பவோ போட்ட பதிவு, எப்பவோ ஹிட்டாகுது,.. ஒண்ணும் புரியல,..

jothi சொன்னது…

உண்மையிலேயே எனக்கு இது புதிய தகவல்.வள்ளுவர் ஒரு ஆள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். வாசுகி அவர் மனைவி பெயர் என்பதும், அவர் சிறந்த பத்தினி என்றெல்லாம் கேள்விப்பட்டுருக்கேன். ஆனால் புதிய தகவல் ரிஷபன்,..

உங்கள் கேள்விக்கான பதில்,..

அது தமிழன் பிறந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டது,..

அதாவது மனித துதி

கருத்துரையிடுக