வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

நரிக்குறத்தியும் பார்க் ஷெரட்டனும்


அது சென்னையின் மிக சிறந்த ஸ்டார் ஓட்டல்களில் ஒன்று. "சுற்றுப்புறங்களில் நிறுவனங்களின் பங்கு" என்ற தலைப்பில் தொழில் கூட்டமைப்புகளின் சார்பில் நடந்த கருத்தரங்கம் பங்கேற்பிற்காக சென்றிருந்தேன். சிறப்பாக நடந்த கொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் சார்பில் பேச வந்த அந்த பெண்மணிக்கு 35 வயதை ஒட்டி இருக்கும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த அந்த பெண் ஒரு லட்சம் வண்ணம் பொதிந்த ஜோதிகா பட்டுப்புடவையில் பேச்சை ஆரமித்தார். அட்டகாசமான ஆங்கில உச்சரிப்புகளும், முறைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களும், சிறப்பாக வடிமைக்கப்பட்ட pptயும் அவரை ஸ்டார் பேச்சாளர் என அனைவரும் சொல்லியதில் தவறே இல்லை என எனக்கு உணர்த்தியது. கேள்வி நேரத்திற்கு முன் தேனீர் இடைவேளை வந்ததால் எல்லோரும் வெளியில் உள்ள அறைக்கு வந்தோம். தேனீர் பருகிக்கொண்டே கீழே சாலையை பார்த்த போது, நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டு இருந்தது.




அது ஒரு குப்பை மேடு. அதன் அருகில் குருவிக்காரி என சென்னை மக்களாலும், குறத்தி என இதர பகுதிகளிலும் அழைக்கப்படும் ஒரு பெண்ணும் அவள் குடும்பமும் சேர்ந்து குப்பையில் பொறுக்கி கொண்டிருந்தார்கள் (தட்டச்சு செய்யும் போதே இந்த வார்த்தையை அடிக்க மனசு வலிக்கிறது, பார்க்கும் போது அது ஏனோ இல்லை. கண்கள் பார்த்து பழகிகொண்டு விட்டது, ஆனால் விரல்களுக்கு இது புதிது ). அவள் கையில் ஒரு கூர்மையான நீளமான கம்பி. அவள் அதை பயன்படுத்தி அங்கே இருந்த பிளாஸ்டிக் பைகளை குத்தி மேலே இழுத்து தன் தோளில் இருந்த பெரிய கோணிப்பையில் போட்டுக்கொண்டாள். அவள் இடுப்பில் சிறிய தொட்டி போன்ற வடிவமைப்பில் உள்ள துணியில் ஒரு பச்சிளம் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அருகில் அவள் கணவன் கையிலும் அதே மாதிரி நீளமான கம்பி, ஆனால் கம்பியின் முனை கூர்மையாக இல்லை. அதில் காந்ததை மாட்டி இருந்தான். அதை வைத்து கம்பி, இரும்பாலான மூடிகள் போன்ற பொருட்களை சேர்த்து தன் பையில் போட்டுக்கொண்டிருந்தான். அவன் தோள்பட்டைக்கு மேலே ஒரு குழந்தை உட்கார்ந்து இருந்தது. மூக்கு ஒழுகும் போல இருக்கிறது. மூக்கை தேய்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு இந்த காட்சி சில கேள்விகளை எழுப்பியது.



அடுக்களையில் இருந்த பெண்கள் சிறப்பாக சமூதாயத்திற்கு தங்கள் பங்கை உயர்த்தி வரும் வேளையில் இந்த குறவர் சமுதாயம் மட்டும் அப்படியே இருக்க என்ன காரணம்.? அவர்களின் சுய கட்டுப்பாடுகளா இல்லை சமூதாய திணிப்பா??






குழந்தை கருத்தரித்த நாளில் இருந்து குழந்தை பிறக்கும் வரை மருத்துவ ஆலோசனை பெற்றும் கடைசியில் சிசேரியன் ஆகும் பெண்களுக்கும், மருத்துவமனை பக்கமே போகாமல் சுக பிரசவம் ஆகும் குறத்தி பெண்களுக்கும் உடல் ரீதியாக அப்படி என்ன வித்தியாசம்?





குற்றால குறவஞ்சி இலக்கியம் உண்டு, குறவன் பாத்திரம் நடிக்காத பிரபல நடிகர் இல்லை, குறவன் வேஷம் இல்லாத மாறுவேடப்போட்டி இல்லை,.. இப்படி பல விதங்களில் சமூதாயத்தின் பரிணாமங்களில் இருக்கும் இந்த கூட்டம் உண்மையில் மற்ற எல்லா மக்களிடமிருந்து தனித்து நிற்பது ஏன்?



சொந்தமாக வீடில்லை, நடைபாதைதான். அன்றைய நாள் இரவு உணவிற்கு காலையில் உறுதியளிக்க முடியாது, இரண்டு துணிக்கு மேலிருந்தால் அதிகம், இரண்டு குழந்தைகளுக்கு கீழிருந்தால் ஆச்சர்யம். காலைக்கடனை முடிக்க கஷ்டம், பொது இடத்தில் மற்றவர் பார்க்க குளிக்கும் துர்பாக்கியம், பசித்த குழந்தைக்கு பாலில்லாமல் தண்ணீர் ஊற்றும் கொடுமை,. இவ்வளவு பிரச்சனைகளிலும் இவர்களுக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் வருகிறது (படுத்தவுடன்) 5 மணிக்கெல்லாம் முழிப்பு வருகிறது. ஹாயாக சிறிது ஒயின் அருந்தி தூக்கம் வரவழைக்க முயற்சி செய்து புரண்டு படுக்கும் கூட்டத்திற்கும், படுத்தவுடன் தூங்கும் இந்த கூட்டத்திற்கும் உடல்ரீதியாக அப்படி என்னதான் வித்தியாசம்?






உண்மையாக சுற்று சூழலை காப்பவர் யார்? 1 லட்சம் வண்ணம் பொதிப்பதற்காக பல்வேறு சாயங்களை உருவாக்கி ஆறையும், ஊரையும் அசுப்படுத்தும் சாயத்தின் விளைவை தெரிந்தே அதை அணிந்து கொண்டு நுனி நாக்கில் பிளந்து கட்டும் அந்த பெண்ணா, இல்லை தன்னை அறியாமலேயே சுற்று சூழலை சுத்தம் செய்து பாதுகாக்கும் அந்த குறத்தியா?? இந்த கேள்விதான் எனக்கு கருத்தரங்கில் கேட்க வேண்டிய கேள்வியாக தோன்றியது. ஆனால் யாரிடம் கேட்பது என்றுதான் தெரியவில்லை.

19 கருத்துகள்:

கலகலப்ரியா சொன்னது…

வித்யாசமான பதிவு..! நல்லா இருக்குங்க.. ! கேள்வி எதுக்கும் எனக்கு பதில் தெரியாது..!

jothi சொன்னது…

வாங்க ப்ரியா,. மிக்க நன்றி.

இவை எல்லாருக்கும் தெரிந்த பதில்கள். உங்களுக்கு தெரியாமல் இருக்குமா??

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நியாயமான கேள்விகள்....

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//இந்த குறவர் சமுதாயம் மட்டும் அப்படியே இருக்க என்ன காரணம்.? அவர்களின் சுய கட்டுப்பாடுகளா இல்லை சமூதாய திணிப்பா??//

இரண்டும்.... இன்னும் அவர்களை பற்றி முழுமையாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. சில கிருஸ்துவ நண்பர்கள் அவர்களுடன் வாழ்ந்து சில மாற்றங்களை அவர்களுக்கு தந்துள்ளார்கள். ஆனால் அரசு ஏன் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பது புரியவில்லை. அவர்களின் சில பிரிவினரை பிற்படுத்தபட்ட வகுப்பில் வைத்துள்ளது.

நல்ல பகிர்வு நண்பா

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இவர்களை பற்றிய என் இடுகை நேரமிருந்தால் படித்து பார்க்கவும்

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நலல சிந்தனை!!நல்ல பகிர்வு!!!

ஆகாய நதி சொன்னது…

//
இவ்வளவு பிரச்சனைகளிலும் இவர்களுக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் வருகிறது (படுத்தவுடன்) 5 மணிக்கெல்லாம் முழிப்பு வருகிறது. ஹாயாக சிறிது ஒயின் அருந்தி தூக்கம் வரவழைக்க முயற்சி செய்து புரண்டு படுக்கும் கூட்டத்திற்கும், படுத்தவுடன் தூங்கும் இந்த கூட்டத்திற்கும் உடல்ரீதியாக அப்படி என்னதான் வித்தியாசம்?
//
//
குழந்தை கருத்தரித்த நாளில் இருந்து குழந்தை பிறக்கும் வரை மருத்துவ ஆலோசனை பெற்றும் கடைசியில் சிசேரியன் ஆகும் பெண்களுக்கும், மருத்துவமனை பக்கமே போகாமல் சுக பிரசவம் ஆகும் குறத்தி பெண்களுக்கும் உடல் ரீதியாக அப்படி என்ன வித்தியாசம்
//
//
அடுக்களையில் இருந்த பெண்கள் சிறப்பாக சமூதாயத்திற்கு தங்கள் பங்கை உயர்த்தி வரும் வேளையில் இந்த குறவர் சமுதாயம் மட்டும் அப்படியே இருக்க என்ன காரணம்.? அவர்களின் சுய கட்டுப்பாடுகளா இல்லை சமூதாய திணிப்பா??
//

சரியான கேள்விகள் இதற்கு பதில் தெரிந்தும் புரியாமல் இருக்கிறோம் :(

அருமையான சிந்திக்கத் தூண்டும் பதிவு!

சுரேஷ்குமார் சொன்னது…

வாய் உள்ள குழந்தை பிழைத்து கொள்ளும் என்று சொல்வார்களே அதுதான் இது.அந்த பேச்சாளர் செய்யாமலே பேசுகிறார்.குறத்திக்கு பேச தெரியாவிலை அதான்.

நல்ல பதிவு...!.

Joe சொன்னது…

அருமையான இடுகை ஜோதி.

ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கியுள்ளீர்கள், எதற்கும் பதிலில்லை.

jothi சொன்னது…

//நியாயமான கேள்விகள்....//

வருகைக்கு நன்றி வசந்த். இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

jothi சொன்னது…

//ஆனால் அரசு ஏன் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பது புரியவில்லை.//

காரணம் ரொம்ப சிம்பிள். அவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லை. ஓட்டு இல்லை.அரசியல் கட்சிக்கு என்ன பலன் இருக்கப்போகிறது. வருகைக்கு மிக்க நன்றி ஞானசேகரன். சிங்கை நாதனுக்கு உங்கள் உழைப்பு அருமை.

jothi சொன்னது…

பதிவு முழுசாக படித்து பின்னூட்டம் இடுகிறேன் ஞானசேகரன். கண்டிப்பாக,.

jothi சொன்னது…

//நலல சிந்தனை!!நல்ல பகிர்வு!!!//

மிக்க நன்றி ராஜ்.

jothi சொன்னது…

//அருமையான சிந்திக்கத் தூண்டும் பதிவு!//

வாங்க ஆகாயநதி. மிக்க நன்றி,.. உங்களின் கடைசி பொழிலன் பதிவு மிக அருமை. பொழிலன் ஒரு அமுத சுரபி போல,.. உங்களுக்கு பதிவாய் வாரி தள்ளுகிறான்.

jothi சொன்னது…

//நல்ல பதிவு...!.//

மிக்க நன்றி சுரேஷ். அடிக்கடி வாங்க

jothi சொன்னது…

//ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கியுள்ளீர்கள், எதற்கும் பதிலில்லை.//

மிக்க நன்றி ஜோ. பதில்கள் உண்டு. ஆனால் கேள்விகள் கேள்விகளாக இருக்கிறதே,..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

ஜோதி.

அருமையான பதிவு. உண்மையிலேயே சுற்றுச்சூழலுடன் ஒத்து வாழ்வது அவர்கள் தான்.

நல்ல கவனிப்பு.. தொடருங்கள் :)

ஆகாய நதி சொன்னது…

wer r u jothi? kanama poiteenga :)

jothi சொன்னது…

sorry agaiyanathi for the late reply,.. Some issues,.. Will come soon

கருத்துரையிடுக