புதன், 3 ஜூன், 2009

வேதிபொறியியல் (chemical engineering) படிக்கலாமா? வேண்டாமா?




இது என்னுடைய துறை. +2 முடித்து வரும் பதிவர்களின் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு குழந்தைகளுக்கு இப்பதிவு உதவியாக இருக்கும் என்பதால் எழுதுகிறேன். நான் +2 முடித்ததும் வேதியியல் (chemistry) பிடிக்கும் என்பதால் இத்துறையை தேர்வு செய்தேன். ஆனால் வந்த பின் தான் தெரிந்தது இது வேறு என்பது. எனவே என் மகனிற்கு வேதியியல் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் chemical engineering சேர்க்க வேண்டும் என நினைத்தால் நான் வேண்டாம் என்றே வழி மொழிவேன். காரணம் இங்கே வேதியியல் ஒரு அறிவு அவ்வளவுதான். பிறகு வேதிபொறியாளர் என்பவர் யார்?. An engineer who works as a mechanical engineer and think as a chemist is a chemical engineer. அணுவன்றி அமையாது உலகு என்பார்கள், வேதிபொறியல் இல்லாத துறையே இல்லை எனலாம். அறிவியலும், கணிதமும் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் இத்துறைக்கு வரவேற்கதக்கவர்கள். வேதிப்பொறியியல் எங்கு எங்கு பயன்படுகிறதென்று பார்க்கலாம்.

Petrochemicals (R&D,design,production)

pharmaceticals (R&D,design,production)

Cement (R&D,design,production)

Food Process Industries (R&D,design,production)

Paint (R&D,design,production)

Power & Energy (R&D,design)

Ore Refining industries (R&D,design)

Pollution control (R&D,)

Nuclear Energy (R&D,design,production)

healthcare (R&D,design,production)

plastics & polymer (R&D,design)

Paper Industry (R&D,design,production,)

Dyeing Industry (R&D,design,production,)

Oil and Gas (R&D,design,production)

Control Engineering (R&D,design)

Fertilizer Industry (R&D,design,production,sales)

பலம்
தொழில் திருப்தி (job satisfaction) - படிக்க மிக சுவாரஸ்யமாக ஆக துறை இது. குக்கரில் மட்டும் ஏன் அரிசி சீக்கிரம் வேகிறது அதில் சிறிது எண்ணெய் ஊற்றினால் இன்னும் சீக்கிரம் வேகுவதன் காரணம் என்ன என்பது முதல் பல அன்றாட கேள்விகளுக்கு இங்கு பதில்கள் உண்டு. (இதற்கான பதில்களை யாரும் சொல்லி தரமாட்டார்கள், ஆனால் முடித்து வரும்போது காரணத்தை அறியும் பக்குவம்,விவாதிக்கும் அறிவும் வந்திருக்கும்).கடலுக்குள் கிடக்கும் கச்சா எண்ணெய் எப்படி வெளியில் கண்டு வந்து பிரித்து சமையல் எரிவாய் முதல் தார் வரை எப்படி சுத்திகரிப்பு செய்கிறார்கள் என்பது வரை இங்கு படிக்கலாம் It is more conceptual based Engineering. .
தொழில் பாதுகாப்பு (Job Security) - மார்க்கெட் அவுட் என என்றைக்கும் உங்கள் வேலைக்கு பிரச்சனை வராது. காரணம் எப்போதுமே இருக்கும் தேவைகள் (demand). கொஞ்சம் கஷ்டமானாலும் எந்த உள் துறையிலும் (Inter decipline) நீங்கள் மாறி கொள்ளலாம்.
சுதந்திரம் - மிக அதிகபட்சமான விருப்ப துறைகள் (freeness to select the interesting area)

சம்பளம் - அதிக அளவு சம்பளம் (விபரம் கீழே)

சுயதொழில் - தன்னிச்சையாக small sclae industry ஆரம்பிக்கலாம் (அரசு மான்யமும் உண்டு).
வெளி நாடு வாய்ப்பு - மற்ற துறைகளுடன் ஒப்பிடும் போது மிக அதிக சம்பளத்தில் எளிதாக வெளி நாட்டு வாய்ப்புகள் உண்டு (70 000 USD to 130000 USD) (5 வருட அனுபவம் குறைந்தபட்சம்)

பலவீனம்
JOB AFTER GRADUATION -முடித்தவுடனேயே மற்ற துறைகளைப் போல் வேலை கிடைப்பது கஷ்டம். அதற்கான உட்கட்ட அமைப்புகள் இன்னும் தமிழகத்தில் இல்லை.
சம்பளம் - இந்தியாவில் இன்றைக்கு சம அனுபவத்தில் மென்பொறியாளரக்கு இணையான சம்பளம் கிடைக்காது. ஆனால் நாள்தோறும் பென்/வன் பொறியாளர்களின் எண்ணிக்கை இங்கு புற்றீசல் போல பெருகி கொண்டு வருவதால் மற்றதுறைகளுக்கான கிராக்கி அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவே கூடிய விரைவில் மற்ற துறை நிபுணர்கள் பென்/வன் பொறியாளர்களை விட அதிக சம்பளம் வாங்குவார்கள், (சிறந்த உதாரணம் - CA)
SYLLABUS கடினமான பாடங்கள், மிக விரிவான பாடங்கள் (உதாரணமாக மற்ற பொறியியல் துறைகளில் 2 வருடங்களுக்கு பிறகு கணிதயியல் பாடங்கள் வருவதில்லை. ஆனால் வேதிப்பொறியியலில் 3 ஆண்டுகள் முடிய துணைப்பாடமாக வரும்)
பெண்களுக்கான வாய்ப்புகள் பெண்கள் இத்துறையில் வேலை செய்வது கொஞ்சம் கடினம். திறமை இருந்தாலும் பெண் என்பதால், அவர்களின் அசவ்கரியங்க்களை காரணம் காட்டி ஒதுக்கும் துறை இது. ஆனால் இத்துறையிலேயே, bio technology (இந்தியாவில் இன்னும் முழுமையாக வளரவில்லை, எனவே exposure குறைவு) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகள் (Research & Development) பெண்களுக்கு சிறப்பாக அமையும். பெண்களே வெளி நாட்டு மேற்படிப்பு என செல்லும் போது அங்கே இந்த பிரச்சனைகள் இல்லை.
சுயதொழில் - துரதிஷ்டமாக துவக்க முதலீடு அதிகமாக தேவைப்படுகிறது, எனவே குடும்ப பின்னணி கொஞ்சம் அவசியமாகிறது.



கவனத்திற்கு..

நான் மேலே என் துறையின் பலம் மற்றும் பலவீனங்களை ஒப்பிட்டு உள்ளேன். கை ஒன்றாலும் விரல்களின் நோக்கம் வேறுபடுகிறது. அதைப்போலவே ஒவ்வொருவரின் குடும்ப சூழ்னிலையும் வேறுபடும். ஒருவருக்கு காலேஜ் முடித்தவுடன் கட்டாயம் வேலைக்கு, சிலருக்கு வேலைக்கு சென்றுதான் ஆக வேண்டும் என்று இருக்காது. சிலருக்கு கல்யாணத்திற்கு முன் வேலை போதும், எனவே முடிவு உங்கள் கையில்

கல்லூரிகள்

INDIAN INSTITUTE OF TECHNOLOGY - சென்னை
NATIONAL INSTITUTE OF TECHNOLOGY - TRICHY
UNIVERSITY DEPARTMENTS OF ANNA UNIVERSITY CHENNAI, ACT CAMPUS
COIMBATORE INSTITUTE OF TECHNOLOGY, COIMBATORE
SRI RAM ENGINEERING COLLEGE, PERUMALPATTU - CHENNAI
VEL HIGH TECH SRI RANGARAJAN SAKUNTHALA ENGINEERING COLLEGE
SRI VENKATESWARA COLLEGE OF ENGINEERING, SRIPERUMBADUR
SRI SIVASUBRAMANIYA NADAR COLLEGE OF ENGINEERING - THIRUPORUR POST
ST.JOSEPH'S COLLEGE OF ENGINEERING, CHENNAI - 600 119
ADHIPARASAKTHI ENGINEERING COLLEGE, MELMARUVATHUR
ARULMIGU MEENAKSHI AMMAN COLLEGE OF ENGINEERING (NEAR KANCHIPURAM)
ARUNAI ENGINEERING COLLEGE, TIRUVANNAMALAI
ADHIYAMAAN COLLEGE OF ENGINEERING,HOSUR (AUTONOMOUS)
ERODE SENGUNTHAR ENGINEERING COLLEGE - ERODE
KONGU ENGINEERING COLLEGE, ERODE (AUTONOMOUS)
ANJALAI AMMAL MAHALINGAM ENGINEERING COLLEGE - THIRUVARUR
MOHAMED SATHAK ENGINEERING COLLEGE, RAMANATHAPURAM
ST.MICHAEL COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY,KALAYARKOIL-சிவகங்கை.

மற்றும்

அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அம்ரிதா பல்கலைகழகம்.


18 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல அருமையான, உபயோகமான பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி.

Mathu சொன்னது…

Hi, am a chemical engineering graduate... working as a design engineer in Oil & Gas. I agree with most of ur points. but salary is not that high as u mentioned. (My experience..:-))
well, wer r u? wat r u doing?

பெயரில்லா சொன்னது…

Hi,
Your post is fine. But you forget to include Faculty of Technology, Annamalai University in your list. It is one of the oldest chemical engineering department (50 years) in India.

Regards,
Senthil

tshankar89 சொன்னது…

Hi,

Also please include Amrita University in Coimbatore for B.Tech Chemical

Regards,
Sankara N.T

பெயரில்லா சொன்னது…

//bio technology (இந்தியாவில் இன்னும் முழுமையாக வளரவில்லை, எனவே exposure குறைவு) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகள் (Research & Development) பெண்களுக்கு சிறப்பாக அமையும்.//

வாழ்வில் நொந்து போக விரும்புவோர் தவிர மற்ற
மற்ற யாரும் பயோடொக்னாஜி சேர வேண்டாம். பிஎச்டி படித்தால்தான் வேலை கிட்டும். அதுவும் postdoctoral என்ற அடிமை வேலை. அமெரிக்காவில் துப்புறவு தொழிலாளிக்கு ஹார்வேடில் (Harvard university) postdoctoral பணி செய்யும் postdoctoral என்னை விட சம்பளம் அதிகம். பொதுவாக biology சம்பந்தபட்ட படிப்புக்களை தவிர்க்கவும்,மருத்துவம் தவிர.

jothi சொன்னது…

மிக்க நன்றி பாஸ்கர். அடிக்கடி வலைப்பக்கம் வாங்கள்.

jothi சொன்னது…

மிக்க நன்றி மது. நான் சென்னை அண்ணாபல்கலைகழகத்தில் வேதிபொறியியல் படித்துவிட்டு இப்போது கத்தாரில் வேலை பார்க்கிறேன். சம்பளத்தைப் பற்றி வெளிப்படையான தகவல்கள் இல்லை. மேலும் நான் சொன்னது அமெரிக்க மார்க்கெட் நிலவரம். மேலும் அங்கு சராசரியாக மென்பொறியாளரைவிட வேதிப்பொறியியல் நிபுணர் அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்பதை உறுதியாக கூற முடியும். மற்ற நாடுகளில் இந்திய கல்வியை காரணமாக காட்டி குறைந்த சம்பளம் தருகிறார்கள். இப்போது சேரும் மாணவர்கள் பத்து ஆண்டு கழித்துவரும் போது கண்டிப்பாக மாறிவிடும் என நம்புகிறேன். இப்போது இந்தியாவில் வரும் சம்பள உயர்விற்கும், அமெரிக்காவில் ஒவ்வொரு வருடம் வரும் சம்பள உயர்வும் இதையே நிரூபிக்கின்றன்.

jothi சொன்னது…

thanks senthil.
மன்னியுங்கள். நான் அண்ணாமலைப் பல்கலைகழகத்தை மறந்துவிட்டேன். அது தமிழ் நாட்டில் முதன் முதலில் தொடங்கபட்டது. இந்தியாவின் தலைசிறந்த ஆசிரியர்கள் அங்கு இருந்திருக்கார்கள். ஆனால் இப்போது எப்படி என்று தெரியவில்லை. அங்கு இருக்கும் வேதிபொறியியல் மாணவ்ர்களைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம் என கேள்விப்பட்டேன். ஆனால் அங்கு உள்ள ஆய்வு சாலைகள் தலைசிறந்தவை. பொதுவாக பெரும்பாலான தொழிசாலைகளில் ஒரு அண்ணாமலை மாணவரை ஒரு உயர்ந்த பதவியில் பார்க்கலாம். தகவலுக்கு நன்றி.

jothi சொன்னது…

நன்றி சங்கரா. எனக்கு இருப்பது தெரியாது. சேர்த்துவிடுகிறேன். எப்போது ஆரம்பித்தார்கள்??

jothi சொன்னது…

//பொதுவாக biology சம்பந்தபட்ட படிப்புக்களை தவிர்க்கவும்,மருத்துவம் தவிர.//

நன்றி. நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் சிவில் அப்படிதான இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. உயிரியல் சம்பந்தமான் படிப்புகள் மீண்டும் புத்துணர்ச்சி பெரும் என நம்புகிறேன். ஐ.டி மாதிரி வேலைகளை பண்ண முடியாதது, அரசாங்கம் முக்கியதுவம் தராதது, பாடங்களின் தரத்தில் இந்தியாவிற்கும் மற்ற வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கும் உள்ள பெருத்த வேறுபாடு இதன் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக உள்ளன. ஆனால் என்றோ நடக்கலாம் என்ற ஒரே ஒரு நம்பிக்கைகாக நம் வாழ்க்கையை தியாகம் செய்ய முடியாது.உண்மைதான். பின்னூட்டதிற்கு நன்றி.

ஆகாய நதி சொன்னது…

உபயோகமான பதிவு ஜோதி! அதிலும் இந்தத் துறையில் அனுபவம் உள்ள உங்களைப் போன்றோர் கூறுவது பெரிதும் பயன்படும்! :)

ஆகாய நதி சொன்னது…

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் :)32 கேள்விகள்

kanagu சொன்னது…

ரொம்ப உபயோகமான தகவல்கள் ஜோதி... அடுத்து வேதியியல் துறை எடுத்து படிக்க விரும்புபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் :)

Mathu சொன்னது…

Hi,
nice to c u here in qatar. me too.......
r u in QP/QG? am in Ramboll (hope u might have heard about this....LOL)

jothi சொன்னது…

நன்றி ஆகாய நதி. நேற்றுதான் மீண்டும் தோஹா வந்தேன். இந்தியாவில் என் கடுமையான பணிகள் மற்றும் கடமைகள் காரணமாக என்னால் உடனடியாக பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும்

jothi சொன்னது…

//உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் :)32 கேள்விகள்//

என்னையும் மதித்து தொடர் பதிவுக்கு அழைத்ததிற்கு மிக்க நன்றி. நாளை வெளிவிடுகிறேன்.

jothi சொன்னது…

வாங்க கனகு. வருகைக்கு மிக்க நன்றி. ஆனால் என் நோக்கம் நிறைவேறவில்லை. நான் இதைப் போலவே மற்ற துறை சார்ந்தவர்களின் கட்டுரைகளையும் எதிர்பார்த்தேன். ஆனால் ஒன்று கூட வரவில்லை. எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்

jothi சொன்னது…

மது மிக்க மகிழ்ச்சி. ராம்பெல் எனக்கு நன்றாக தெரியும். வருகைக்கு நன்றி. உங்கள் தொலைபேசி எண்ணை முடிந்தால் கொடுங்கள். நான் உங்களை தொடர்பு கொள்கிறேன். மிக தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

கருத்துரையிடுக