செவ்வாய், 2 ஜூன், 2009

உங்கள் பதிவு பிரபலமாக வள்ளுவன் காட்டும் வழிகள்

ஆற்றல் அழிவின்மை விதி (நன்றி : 8ஆம் கிளாஸ் அறிவியல் நன்றாய் எடுத்த ஆசிரியர்) எப்படி எல்லா இடங்களிலும் பொருந்துமோ அதைப் போலவே 2000 வருடங்களுக்கு முன் எழுதிய திருக்குறளும் எல்லா இடங்களிலும், எல்லா கால கட்டத்திற்கும், எல்லாதுறைகளிலும், பொருந்தும் என்பதை ஒரு மொக்கையாக சொல்லி இருக்கேன். மற்றபடி உங்கள் திறமையே உங்கள் புகழ் பாடும்.

அகர முதல எழுத்தெல்லம் ஆதி

பகவன் முதற்றே உலகு

முதல் பின்னூட்டம் ஆதிக்கு இட்டால் உங்கள் பெயரை எல்லோருக்கும் தெரிந்து கொள்வார்கள். காரணம்?? அவருக்கு தமிழிஸீல் வரும் ஓட்டைவிட அவருக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகம். அவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். அதனால் நிறைய பேர் பார்ப்பார்கள்!!! (தெரிந்து ஒன்னும் ஆகாது என்பது வேற விஷயம்,.. சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்,.... வசிஷ்டர் ஆதி என்னை மன்னிப்பாராக,.. )

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்

நாண நன்னயம் செய்து விடல்.

பின்னூட்டத்தில் ஹாய் சொன்னால் பதிலுக்கு ஹாய் சொல்லு. டேய் நாயே சொன்னால் பதிலுக்கு ஆருயீர் நண்பரே என்று சொல்லு.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

எல்லா பின்னுட்டத்திற்கும் ஒரு பதில் பின்னூட்டம் போடு,. நன்றி சொல்லிவிடு. மறந்துவிடாமல் அவர் வலைக்கு சென்று உங்கள் கவிதை சூப்பர்னு கூசாம பொய் சொல்லு,..

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்ற் மாகும் இறைக்கு

(பொருள்: முன்னே தன் குற்றத்தைக்கண்டு நீக்கிக் கொண்ட பிறகு பிறருடைய குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானால் அவனிற்கு என்ன குற்றம் உண்டாகும்??)

நன்றாக புலம்பு,.. அவன் இதனை கண்டுக்க மாட்டிங்றான், இவன் காசு புடுங்குறான், ஐ. நா சபையே இல்ல, இங்கே யவனும் சரி இல்ல, பொண்டாட்டி டி.வி பார்க்கவிடமாட்டிங்குறா அப்படீன்னு எல்லாத்துக்கும் எல்லாரைப்பத்தியும் ஆபீஸ் கம்ப்யூட்டர்ல, ஆபீஸ் நேரத்துல, ஆபீஸ் இன்டெர்னெட் கனெக்சன்ல மாசத்துக்கு ஒரு புகார் பதிவை போட்டுக்கிட்டே இரு,.. (யவருமே பாலோ பண்ண முடியாத குறள் இது. வெற்றியே குறிக்கோளாய் கொண்டவர்கள் குறளை ஓரத்தில் வைத்துவிட்டு உங்கள் குரலை உயர்த்திக் கொண்டே இருங்கள். எல்லோரும் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லனும்!!!)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சில நேரங்கள்ள இந்திய ராணுவம் கோவையில் க.மூ.சா தொண்டர்களிடம் தோல்வி, பிரபாகரன் இறந்தார் என செய்தி பதிவு வரும். அது போன்ற பதிவுகளை போடும் முன்பு உண்மையை தெரிந்து கொண்டு போடு.

தோன்றின் புகழோடு தோன்றுக ஆக்திலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

நீங்கள் சில நேரங்களில் மிக பிரபலமானவராக இருக்கலாம். நீங்கள் பதிவுத்துறைக்கு (இது ரெஜிஸ்டர் ஆபிஸ் இல்ல,.. பதிவுத்துறை என்றால் பதிவர்கள் இருக்கும் துறை) வந்தால் மிக குறுகிய காலத்தில் மேலே வந்து விடுவீர்கள்.

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

யாரையும் வலைப்பதிவில் கிண்டல் செய்யாதீர்கள். அதே நபர் பின்னொரு நாளில் உங்கள் மோசமான கவிதையை நாறடிப்பார்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

(பொருள் : நல்ல ஆண்மை என்பது தன் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுதல்,..) சக பதிவரின் பிறந்த நாள், அவர் குழந்தையின் பிறந்த நாள் நினைவு வைத்து ஒரு பதிவு போடு. நண்பர் ஆவியில் கதை எழுதியது பாராட்டி ஒரு பதிவு போடு. எல்லாவற்றையும் போட்டுவிட்டு பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தால், வீட்டில் பட்டினி போட்டுவிடுவார்கள். இதற்கு பரிகாரமாக நீங்கள் காதல் ரசம் சொட்ட சொட்ட காலையில் ஒரு காதல் கவித பதிவு போட்டுவிடுங்கள். மாலை வீட்டில் சுடசுட ரெடியாக இருக்கும். (எந்த அளவிற்கு சூடு என்பது உங்களுக்கு வரும் பின்னூட்டத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும்)

நன்றி : ஆசிரியர் - திருக்குறள் (ஜோதி, இம்புட்டு நல்லவனாடா நீ )

26 கருத்துகள்:

tamilnadunews சொன்னது…

nalla yosanaithaan

tamilraja சொன்னது…

ungalin sol sariye !

jothi சொன்னது…

ரொம்ப நன்றி தமிழ் நாடு நியூஸ். அடிக்கடி வலைப்பக்கம் வந்து போங்கள்,.. ஹி ஹி ஹி

jothi சொன்னது…

ரொம்ப நன்றி தமிழ் ராஜா.

Suresh சொன்னது…

வாழ்த்துகள் நல்லா எழுதுறிங்க

தமிழர்ஸ் தமிழ்ஷிலும் சேர்த்துடிங்க உங்க பதிவை..

ஜோ பதிவில் பார்த்தேன்..

கண்டிப்பா இன்னும் சிறிது காலத்தில் நீங்க பட்டைய கிளப்புவிங்க நல்ல நகைச்சுவையோடு இருக்கு உங்க எழுத்து..

வாழ்த்துகள் நண்பா வினோத், கண்ண எல்லாம் உங்க ஏரியா சைடு தான் வேளை பாக்குறாங்க..

ஏதேனும் உதவி வேணும்னா அதுவும் பதிவு சம்பந்தமா கேளுங்க ..

நன்றி நட்புடன்
நண்பன் சுரேஷ்

Suresh சொன்னது…

பாலோ பண்ணலாம் என்றால் உங்களிடம் பாலோவர் கேட்ஜட் இல்லை, :-) சேர்த்தவுடன் சொல்லுங்க பாலோ பண்ணிடுறேன்

jothi சொன்னது…

ரொம்ப நன்றி சுரெஷ். டானிக் சாப்டது போல இருக்கு. வலைப்பக்கத்தில் நிறைய சேர்க்கை வேலைகள் இருக்கு. ரெண்டு நாள்ள ஊருக்கு வந்தவுடனே add பண்ணிறேன். நான் பதிவுலகத்திற்கு புதுசு. ஒவ்வொரு முறை எழுதும் போதும் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என நினைத்து கொண்டே எழுதுகிறேன், பார்க்கலாம்,..

//ஏதேனும் உதவி வேணும்னா அதுவும் பதிவு சம்பந்தமா கேளுங்க//

கண்டிப்பாக உங்கள் சேவை எனக்கு தேவை. thanks

Suresh சொன்னது…

ரொம்ப நல்லாவே எழுதுறிங்க தோழா

புதிய பதிவர்களுக்கு என்று கிரிகான்ஸின் சில பதிவுகளை போட்டு இருக்காரு தருகிறேன்

தீப்பெட்டி சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்..

பிரியமுடன்.........வசந்த் சொன்னது…

ஃபால்லோவ் கேட்ஜெட் இணைக்கவும்

TAMILKUDUMBAM சொன்னது…

ஆவ்வ்வ்....

ஆதிமூலகிருஷ்ணன் சொன்னது…

நான் நண்பர்களாக கொண்டுள்ள அத்தனை பதிவர்களுமே என்னை விட பிரபலமானவர்களே. ஆகவே உங்கள் விளக்கம் பொருந்தாது. உங்கள் முந்தைய பதிவுகளை படித்தில்லை. நேரமிருப்பின் முயல்கிறேன். இந்த பதிவின் மூலமே ஒரு சோறு பதம் என்பது புரிகிறது. நான் குறள் ரசிகன். தொடருங்கள், வாழ்த்துகள். முக்கிய அறிவுரை.. தமிழில் எழுத்துப்பிழையைக் கவனமாக தவிருங்கள். குறளிலும் தவறிழைத்துள்ளீர்கள்.

நல்ல ரசனை தோற்றதில்லை(என்னையே ரசிக்கிறீர்களே.. ஹிஹி..) கவனம், பொறுப்பு இன்னும் இருந்தால் நிறைய செய்வீர்கள்.. வாழ்த்துகள்.!

jothi சொன்னது…

நன்றி சுரேஷ், தகவலுக்கு நன்றி.

jothi சொன்னது…

//நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்//

நன்றி தீப்பெட்டி. பாஸ்'ன்னு என்னை தயவுசெய்து சொல்லதிங்க (ரொம்ப வயசாய்ட்ட மாதிரி feeling) . இப்பதான் நான் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

jothi சொன்னது…

நன்றி வசந்த். நான் இணைக்க முயற்சி செய்தேன்.HTML பிரச்சனை. இணைத்துவிடுகிறேன்.

jothi சொன்னது…

நன்றி தமிழ் குடும்பம்.

jothi சொன்னது…

//நான் நண்பர்களாக கொண்டுள்ள அத்தனை பதிவர்களுமே என்னை விட பிரபலமானவர்களே. ஆகவே உங்கள் விளக்கம் பொருந்தாது. //

நன்றி ஆதி. நான் பதிவுலகிற்கு புதிசு. யார் பிரபலமானவர்கள் என்று தெரிய இன்னும் கொஞ்சம் நாளாகும் என நினைக்கிறேன். நான் அந்த குறளை தேர்வு செய்ததிற்கு காரணமே ஆதி என்ற பேர்தான். மற்றபடி வேறு ஒன்றுமில்லை. ஏதாவது தப்பாய் எடுத்துக் கொள்வீர்கள் என நினைத்தேன். பாராட்டியேவிட்டீர்கள். மேன்மக்கள் மேன்மக்களே.

jothi சொன்னது…

// முக்கிய அறிவுரை.. தமிழில் எழுத்துப்பிழையைக் கவனமாக தவிருங்கள். குறளிலும் தவறிழைத்துள்ளீர்கள்.//

தமிழ் வழி படித்து இவ்வளவு தவறிழைப்பது கஷ்டமாக உள்ளது. இனிவரும் பதிவுகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

jothi சொன்னது…

//நல்ல ரசனை தோற்றதில்லை(என்னையே ரசிக்கிறீர்களே.. ஹிஹி..) கவனம், பொறுப்பு இன்னும் இருந்தால் நிறைய செய்வீர்கள்.. வாழ்த்துகள்.!//

உண்மைதான். முதன்முதலில் வித்யாவின் பதிவுகள்தான் எனக்கு அறிமுகமாகின. இம்ப்ரஸ் ஆகி இருக்கும்போது ஒரு பின்னூட்டம் வழியாக உங்கள் பதிவுகள் படித்தேன். ரொம்ப இம்ப்ரஸ் ஆகிதான், சரி நாமும் கல்லெறிந்துதான் பார்க்கலாமே என்று எறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை எறியும்போது என்னை அறியாமல் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். பார்க்கலாம். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஆதி.

பெயரில்லா சொன்னது…

aha aaaaa

ஆகாய நதி சொன்னது…

//
மறந்துவிடாமல் அவர் வலைக்கு சென்று உங்கள் கவிதை சூப்பர்னு கூசாம பொய் சொல்லு,..
//

ஆகா! இப்படிதானா அங்கேயும் பின்னூட்டம்... ஹி ஹி ஹி சும்மா லொல்லுக்கு கேட்டேன் :))))

ஆகாய நதி சொன்னது…

//
எல்லாவற்றையும் போட்டுவிட்டு பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தால், வீட்டில் பட்டினி போட்டுவிடுவார்கள். இதற்கு பரிகாரமாக நீங்கள் காதல் ரசம் சொட்ட சொட்ட காலையில் ஒரு காதல் கவித பதிவு போட்டுவிடுங்கள். மாலை வீட்டில் சுடசுட ரெடியாக இருக்கும்.
//

ம்ம்ம்ம் முடியல... வீட்டு விலாசம் சொல்லுங்க... உடனே அவங்கள போயி பார்க்கிறேன் :)

jothi சொன்னது…

//ஆகா! இப்படிதானா அங்கேயும் பின்னூட்டம்... ஹி ஹி ஹி சும்மா லொல்லுக்கு கேட்டேன் :))))//

ச்சி,. ச்சி. உங்கள் படைப்புகள் உண்மையிலேயே சூப்பர். ஒன்றே ஒன்றுதான் உங்கள் படைப்புகளில் பிடிக்காது. உங்களின் நல்ல படைப்பையும் நீங்களே மொக்கை என வர்ணிப்பதுதான் பிடிக்காது.

jothi சொன்னது…

//ம்ம்ம்ம் முடியல... வீட்டு விலாசம் சொல்லுங்க... உடனே அவங்கள போயி பார்க்கிறேன் :)//
ஜோதி வெளிச்சமாய் இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா???

இரா.அன்புராஜா சொன்னது…

Hi jothi,

you have a gift of free flow writing.Some of your stories are super. Some are so funny. Keep writing. Thanks.

jothi சொன்னது…

Anbu,

Thanks for complements,.. Now-a-days blogging eating my time like anything,. I will try to keep writing,..

Thanks anbu

கருத்துரையிடுக