சனி, 26 பிப்ரவரி, 2011

காருக்கு பெட்ரோல் தேவையில்லை


காற்றினால் ஓடும் கார்கள், கேட்கவே இனிப்பா இருக்கா? என்ன‌ கார‌ண‌ம்? காற்று எல்லாப்பக்கமும் இலவசமாய் கிடைக்கிறது முக்கியமாக பெட்ரோல் மாதிரி தீர்ந்து போகப்போவதில்லை. இதுதான் நம் கண்ணுக்கு தெரிந்து,.. தெரியாதது??? நிறைய இருக்கு,..தொடர்ந்து படியுங்கள்,..




அப்படி என்ன பொல்லாத‌ தொழில் நுட்பம்,.??

காற்றினால் ஓடும் கார்களுக்கு ஒரு முழுக்க காற்றடைத்த பலூனை அடிப்படை உதாரணமாக சொல்லலாம். பலூனில் முழுக்க காற்றடித்துவிட்டு பின் வாய்ப்பகுதியில் உள்ள நூலை எடுத்து விடுங்கள்,.. பலூன் கட்டுப்பாடில்லாமல் இங்கும் அங்கும் ஓட ஆரம்பிக்கும். இதேதான் காருக்கும். பலூன் அடிப்படை தத்துவத்தையே காருக்கு பயன்படுத்தி, கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில்தான் அறிவியல் தொழில்நுட்பம் அடங்கி இருக்கிறது,..

காரில் பெட்ரோலுக்கு பதில் உள்ள டாங்கில் காற்று மிக மிக அழுத்தத்தில் அடைக்கப்படுகிறது. பின் அந்த காற்று மெதுவாக வெளியேற்றும் போது அந்த ஆற்றலானது கார் இஞ்சின் மூல‌ம் சக்க‌ர‌ங்க‌ளை ஓட‌ வைக்கிற‌து. (இங்குதான் நிறைய பிரச்சனைகள். அதை தொழில் நுட்ப உலகம் சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறது).



கார் காற்றில் ஓடுவதால் என்ன பலன்கள்?

நான் முன்பே சொன்னது போல காற்று எளிதாக‌ இல‌வ‌ச‌மாக‌ தீர்ந்து போகாம‌ல் கிடைக்கிற‌ ஆற்றல் கடத்தி. 60 ரூபாய் கொடுத்து டேங்கை முழுக்க அடித்துக்கொண்டால் 2௦௦ கிலோமீட்டர் வரை செல்லலாம் அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு 3௦ பைசா. இதே நிலையில் பெட்ரோலுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 4 ருபாய். எஞ்சினில் எதுவும் எரிக்கபடாததால் மாசு வெளியாவது கிடையாது (மாசு - சிம்பிளாக இதை நான் சொன்னாலும் இனி வரும் காலங்களில் இது மிக மிக முக்கியம். இல்லையென்றால் ந‌ம்ம‌ துறைமுக‌ம் கொடைக்கான‌லில் இருக்கும்),

த‌டைக்க‌ல்லாய் உள்ள‌ பிர‌ச்ச‌னைக‌ள்,.

இதன் அதிகபட்ச வேகம் குறைவு (மணிக்கு அதிகபட்சம் 100-140 கிலோ மீட்டர் மட்டுமே), ஆனால் இது ந‌ம்ம‌ ஊரு சாலை நெருக்க‌டிக்கு தாராள‌மாக‌ போதும்

அதிக அழுத்தத்தில் காற்று அடைக்கப்படுவதால், விபத்தின் போது வெடிக்கும் போது தீப்பற்றி கொள்ளக்கூடிய ஆபத்தெல்லாம் இல்லை. ஆனால் காற்று கார் ஒரு பலூன் போல என்பதால் வெடிக்கும் போது வண்டி எங்கோ தூக்கி வீசப்படலாம் (ராக்கெட் மாதிரி வெச்சுக்குங்களேன். ஆனால் இது ச‌ரி செய்ய‌ப்ப‌ட்டுவிடும். (குக்க‌ர்ல‌ அதிக‌ அழுத்த‌ம் வ‌ந்துவிட்டால் மேலே இருக்கிற‌ சேப்டி வால்வ் மாதிரி இதுக்கும் ரெடியாகிகொண்டு இருக்கிற‌து)

இப்ப‌டி என்ன‌தான் பிரச்ச‌னைக‌ள் இருந்தாலும் அவை ச‌ரி செய்ய‌க்கூடிய‌ நிலையில் அவை இருப்ப‌தாய் என‌க்கு புல‌ப்ப‌டுகிற‌து.

2008 ஆம் ஆண்டு டாட்டா மோட்டார்ஸினால் இந்த கார்கள் 2010 ஆம் ஆண்டு மார்க்கெட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டாலும் இன்னும் தொழில் நுட்ப சிக்கல்களால் கார்கள் மார்க்கெட்டிற்கு வரமுடியவில்லை,..

அதும‌ட்ட‌ம‌ல்ல‌,.இது உல‌க‌ பொருளாத‌ர‌த்தையே புர‌ட்டிப்போடும் என்ப‌தால் எந்த‌ அர‌சாங்க‌மும் முறையான‌ பாஸிடிவ் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை எடுக்க‌வில்லை. சும்மா கிடைக்கிற‌ பெட்ரோலை கன்னாபின்னாவென்று விலை நிர்ண்ய‌ம் செய்யும் அதிகார‌வ‌ர்க்க‌த்திற்கு இது பிர‌ச்ச‌னைக‌ள் த‌ரும் என்ப‌தால் த‌ன்னால் முடிந்த‌ அள‌விற்கு முட்டுக்க‌ட்டைக‌ளை போட்டுக்கொண்டு இருக்கிற‌து.



ரோட்டிற்கு வ‌ருவ‌த‌ற்கான‌ சாத்திய‌கூறுக‌ள்

ஆனால் ம‌ற்ற‌ நாடுக‌ள் போலில்லை இந்தியாவின் நிலை,..

நாளாக‌ நாளாக‌ நாம் பூமியில் இருந்து எண்ணெயை எடுத்து கொண்டே இருக்கிறோம். ஒரு சொட்டு கூட‌ எண்ணெய் இல்லை என‌ சொல்ல‌க்கூடிய‌ நாட்க‌ள் ரொம்ப‌ தொலைவில் இல்லை,.. (இத‌ற்கு இன்னும் அதிக‌ப‌ட்ச‌ம் 60 ஆண்டுக‌ள்தான், இப்போதே ஓம‌னில் எடுக்க‌ப்ப‌டும் எண்ணெயில் 98% த‌ண்ணிதான் இருக்கிற‌து, 2% ம‌ட்டுமே எண்ணெய்),.. ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் உள்ள‌ க‌ச்சா எண்ணெய் கிண‌றுக‌ளும் நிறைய‌ வ‌ற்ற‌ துவ‌ங்கிவிட்ட‌ன‌. என‌வே பெட்ரோலைவிட்டு வ‌ந்தாக‌ வேண்டிய‌ க‌ட்டாயத்தில் உல‌க‌மே இருக்கிற‌து,..

அதும‌ட்டம‌ல்ல‌ இந்தியாவின் பொருளாதார‌த்தை நிர்ணயிக்கும் கார‌ணியாக‌ விவசாய‌த்திற்கு அடுத்த‌ப‌டியாக‌ க‌ச்சா எண்ணெய் உள்ள‌து. கார‌ண‌ம் ந‌ம்மிட‌ம் கிடைக்கும் க‌ச்சா எண்ணெய் ந‌ம் தேவையில் 20% ம‌ட்டுமே. மீதி 80% நாம் இற‌க்கும‌தி செய்கிறோம் (உல‌க‌ அள‌வில் இற‌க்கும‌தியில் நாலாவ‌து இட‌ம்),.. ந‌ம்முடைய‌ மொத்த‌ செல‌வில் பெரும்பாலான‌ தொகை க‌ச்சா எண்ணெய் இற‌க்கும‌திக்கே செல‌வாகிற‌து. நாளாக‌ நாளாக‌ க‌ச்சா எண்ணெய் உற்ப‌த்தி குறைவ‌தால் பெட்ரோல் விலை அதிக‌ரிக்கும். அது ம‌ட்டும‌ன்றி நம் அர‌சாங்க‌ம் ம‌க்க‌ள்தொகை அதிக‌ரிப்பை குறைக்க‌ எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காத‌தால் பெட்ரோல் தேவையும் அதிக‌ரித்துக்கொண்டே செல்லும். என‌வே இந்த‌ நிலையில் காற்று கார், மின்சார‌ கார் போன்ற‌வையே மாற்று வ‌ழி என்ப‌து திண்ண‌ம்.

டாடா நிறுவ‌ன‌ம் காற்று கார் த‌யாரிக்கும் உரிமையை பிரான்ஸ் நிறுவ‌ன‌த்திட‌ம் வாங்கி உள்ள‌து. நாளை இல்லாவிட்டாலும், நாளை ம‌று நாள் இல்லாவிட்டாலும் இன்னும் ஒரு 15 ஆண்டுக‌ளில் காற்று கார் ந‌ம் வீதிக‌ளில் வ‌ந்தால் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுவ‌ற்கு ஒன்றும் இல்லை. அப்போது க‌ண்டிப்பாக‌ ந‌ம் பொருளாதார‌ம் உச்ச‌த்தில் இருக்கும்,.. ந‌ம் ம‌க்க‌ள் தொகையையும் சேர்த்து,..

பெட்ரோல் இல்லாம‌ல் ஓடும் கார் உங்க‌ள் பார்வைக்கு



ம‌ற‌ந்துவிடாம‌ல் இண்டிலியிலும்,த‌மிழ்ம‌ண‌த்திலும் வாக்க‌ளித்து உற்சாக‌ப்ப‌டுத்துங்க‌ள்.


.

3 கருத்துகள்:

jothi சொன்னது…

இத‌ற்குதானே ஆசைப்ப‌ட்டாய் ஜோதி???

Kousalya Raj சொன்னது…

பெட்ரோல் விலை ஏற்றத்தை பற்றி கவலை பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு நல்ல தகவல் !! விரிவான விளக்கங்கள்...பகிர்வுக்கு நன்றி.

jothi சொன்னது…

வாங்க‌ Kousalya வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி

கருத்துரையிடுக