செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது,..??

ரொம்ப நாளாச்சு பதிவெழுதி,.. (பதிவராய் இருப்பதைவிட பார்வையாளராய் இருப்பதில் ரொம்ப சந்தோசம்,..)

என்னன்னே தெரிலைங்க,.. வர வர மூளையே வேலை செய்ய மாட்டிங்கீது,.. சமீபத்தில் அப்படி பாதித்தவை,..

--------------------------------------------------------------------------------

நான் எப்பவுமே சொன்ன டைமில் ப்ரொஜெக்டை முடித்து கொடுக்காததால் எனக்கும் என் ஜெனரல் மேனஜருக்கும் சண்டை,.. ஒரு கட்டத்தில் இது தினமும் நடப்பது போலாகிவிட்டது,.. நான் இது பற்றி என் முன்னாள் ஜுனியரிடம் புழம்பிக் கொண்டு இருந்தேன்,..

"ஏன்தான் எனக்கு வர்ற தலைங்களெல்லாம் இப்படி இருக்கனுங்கன்னு தெர்ல,..ச்சைன்னு ஆகி போச்சு "

"விடுங்க சார், இதுக்கெல்லாம் டென்சன் ஆக கூடாது . நேத்துதான் நான் ஒரு ஜோக் படித்தேன்,..அதாவது பாஸோடு விவாதிக்கிறது பன்னியோடு சகதியில் சண்டை போடுவது மாதிரி,. ஒரு டைமுக்கு அப்புறம் நாம ச்சை நாம இந்த பன்னிகூட சகதியோட நிக்கிறோம்னு சகதியோட நினைப்போம்,. ஆனா அந்த பன்னி என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கும்"

"ஹ ஹ " சிரித்து வந்தேன்,.. மனசில்ல இருந்த பாரமெல்லாம் இறங்கிருச்சு,..

"என்னங்க,.." மனைவி ,..

பன்னிக்கதையை சொன்னேன்,..

"சுரேசுக்கு மொதல்ல நீங்கதானே பாஸ்,..""

"#$%$^%^&*#^*&*&^"

பல்ப் வாங்கினதக்கு அப்புறம் அது குண்டு பல்பாய் இருந்தால் என்ன? டியுப் லைட்டாய் இருந்தால் என்ன??

-------------------------------------------------------------------------------------------------------------
என் நண்பரின் மகன் வீட்டிற்கு வந்திருந்தான்,.. DAV யில் ரெண்டாவது படிக்கிறானாம் (அது ஏன் DAV DAV ன்னு எல்லாம் அடிச்சுக்கிராங்கன்னு தெர்ல),. நான் வீட்டில் இருந்து ஆப்பிள் பழங்களை எடுத்துக்கொடுத்தேன்,.

"அங்கிள் வேணாம்"

"யே,. பழம் சாப்பிடு உடம்புக்கு நல்லது"

"சரி,. கழுவி தாங்க,..தோல்ல கிருமிகெல்லாம் இருக்கும்"

ச்ச்ச்சை,.. அவமானம்,. கழுவி கொடுத்தேன்,..

"உங்களுக்கு??????"

" நான் ஆரஞ்சு சாப்பிடுறேன்"

எடுத்து சாப்பிட உட்கார்ந்தேன்,.. ச்ச்ச்சை,..கழுவலையான்னு அவன் கேட்டாமறுபடியும் அவமானம் ஆகிவிடும்,.. கழுவி விட்டு வந்தேன்,..

"அங்கிள்,..நீங்கதான் ஆரஞ்சு தோலை சாப்பிட மாட்டிங்களே,.. ஏன் கழுவி தண்ணியை வேஸ்ட் பண்ணிங்க ????

" Brilliant" வழிந்துவிட்டு வந்தேன்,..


நண்பன் வந்தவுடன் முழுக்கதையை சொன்னேன்,..

"தோலை கீழே போட்டவுடன் அதை மாடுகள் சாப்பிட்டால் அவை பாதிப்பாகும் சொல்லி சமாளிக்கலமுன்னு பாத்தேன்,.. அப்புறம் எதுக்குன்னு விட்டுட்டேன்,.."

" நல்ல வேளை, நீ சொல்ல வில்லை" இது என் நண்பன்

" ஏன்"

"மாடுங்க எதையுமே கழுவி சாப்பிடறதில்லைன்னு என் மகன் சொன்னாலும் சொல்லுவான்"

பல்ப் வாங்கினதக்கு அப்புறம் அது டியுப் லைட்டாய் இருந்தால் என்ன?? கலங்கரை விளக்கம் பல்ப்பா இருந்தால் என்ன??

கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது,..??

-------------------------------------------------------------------------------------------

சரி வந்ததுக்கு ஒரு நியூஸ் சொல்லிவிட்டு போறேன்,..

கீழே உள்ளதுதான் கல்யாணத்துக்கான உலக முத்திரை,.. நம்ப முடியலைல்ல?????மறந்துவிடாமல் தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க,.. (வந்து ரெண்டு வருஷம் ஆனாலும் இப்போதுதான் தமிழ்மணத்தில் என் பதிவு வருகிறது,...)


.

12 கருத்துகள்:

நாஞ்சில் பிரதாப்™ சொன்னது…

ஹஹஹ. சூப்பர் பல்புகள்... இதுபோன்ற பல பல்புகள் வாங்கி குவிக்கு வாழ்த்துக்கள்.
மேரேஜ் சிம்பலை பார்த்தா கிலி அடிக்குது..:))

ஆனந்தி.. சொன்னது…

Hai Jo..:))) Welcome back...:)))

ஆனந்தி.. சொன்னது…

பல்பு எல்லாம் சூப்பர்...செமத்தியா இருக்கே அந்த மேரேஜ் சிம்பல் :))

சங்கவி சொன்னது…

நல்லா வாங்கியிருக்கறீங்க பல்பு...

jothi சொன்னது…

நன்றி நாஞ்சில்,..வாங்கின பல்ப்,.. பத்தாதா ? இன்னுமா குவிக்கனும்??

jothi சொன்னது…

நன்றி ஆனந்தி,.. சிம்பல் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது

jothi சொன்னது…

நானா வாங்கினேன்??? எல்லாம் எனக்கு கொடுக்கிறாங்க

ஜெய்லானி சொன்னது…

ஆஹா...சூப்பர் :-)) சிரிக்கவும் சிந்திக்கவும் நல்ல ஜோக் ...!!

jothi சொன்னது…

rompa thanks jailani

பிரியமுடன் பிரபு சொன்னது…

கீழே உள்ளதுதான் கல்யாணத்துக்கான உலக முத்திரை,.. நம்ப முடியலைல்ல?????
///

Married ?

jothi சொன்னது…

//Married ?//

Yes Prabu

Abarna சொன்னது…

nallaruku..

கருத்துரையிடுக