திங்கள், 22 ஜூன், 2009

கேள்விகளும் பதிலகளும் - என்னைப் பற்றி என்ன சொல்ல

மொத்தம் எட்டு பதிவை போட்டுவிட்டு என்னைப் பற்றி நானே எழுதவதற்கு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. என்னைப்பற்றி நானே சொல்லாவிட்டால் வேறு யார்தான் சொல்லுவார்?. அதனால்தான் இந்த மொக்கை பதிவு. இதில் உள்ளது உள்ளபடியே நான்,...
  1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
    பெற்றோர் வைத்த பேரே. மற்றபடி என் கண்ணில் ஜோதியெல்லாம் கிடையாது. (இன்னும் சொல்லப்போனால் தூரத்துப்பார்வை குறையினால் பவர் கிளாஸ் போட்டிருக்கேன் ஹி ஹி,..) என் பேர் கல்லூரியில் படிக்கும் போது பிடிக்கவில்லை. ஜோதி என்ற பெண்ணை கூப்பிடுவதற்காக என்னை கூப்பிடுவார்கள் (கொஞ்சம் கிளர்ச்சியாகவும் நிறைய வருத்தமாகவும் இருக்கும்),.. ஆனால் இப்போது என் பேர் எனக்கு பிடித்துதான் இருக்கிறது.

  2. கடைசியாக அழுதது எப்பொழுது
    May 31,.. இது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு பதிவு கதை எழுதி முடித்தபோது,..
    சின்ன விஷயத்திற்கு விழி ஒரம் ஈரம் ஆவதும், பெரிய விஷயத்திற்கு தைரியமாக இருக்கவேண்டும் என நினைப்பதும் என் சுபாவம்.
  3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
    முதலில் அழகாக இருந்தது. இப்போது எழுதுவற்கு பதில் தட்டுவது அதிகமாகி விட்டபடியால் எழுத்து அசிங்கமாகி கொண்டே வருகிறது.
  4. பிடித்த மதிய உணவு என்ன?
    நல்ல வெயில் காலத்தில் விளையாடிவிட்டு, பின் கிணற்றில் நீச்சல் அடித்து குளித்துவிட்டு பின்னர் பழைய நீர்த்த சோறில் நிறைய மோர்விட்டு சர்க்கரைவர்த்தி கீரையை தொட்டிக்கொண்டு சாப்பிடுவது (அட அட என்ன சுவை??) ரொம்ப பிடிக்கும்.
  5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
    மிக விரைவில் நண்பர்களை பெறுவது என் சுபாவம் மற்றும் அதிர்ஷ்டம். ஆனால் எல்லோருடனும் எல்லையுடன் இருப்பது என் குணம்.

  6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
    கிணற்றில்/ஆற்றில் குளிப்பதுதான் எனக்கு மிக பிடிக்கும். உப்பான கடல் தண்ணீர் அறவே பிடிக்காது. பீச் மணலில் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.

  7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
    கண்களையும் வார்த்ததைகளையும்

  8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
    பிடிச்சது
    கருணை குணம், எந்த சூழ்னிலையிலும் ஜால்ரா போடாதது, எந்த கட்டத்திலும் அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பது.
    பிடிக்காதது
    கொஞ்சம் சோம்பேறி, கையில் இருப்பதை கொடுத்துவிட்டு வானத்தை பார்க்கும் அளவிற்கு ஈகை குணம், கொஞ்சம் அழகான பெண் வந்தால் மனைவி அருகில் இருந்தாலும் இன்னும் சைட் அடிக்கும் கெட்ட குணம்.

  9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது
    பிடிச்சது
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சுத்தமான காதல், போன வாரம் சமைத்த அதே மெனுவை திரும்ப வழங்காமல் கவனமுடனும் மிக அக்கறையுடன் சமைத்து போடும் கை, கடினமான உழைப்பாளி, என்னை பார்ப்பதை போலவே என்னை பெற்றோரையும் கவனித்துக் கொள்ளும் அருமையான குணம், சின்ன சின்ன பரிசுகளிலேயே திருப்தி அடையும் எண்ணம், நான் என்னவெல்லாம் மறப்பேன் என நினைவில் வைத்து சரியான நேரத்தில் நியாபப்படுத்தும் கவனம், எந்த சூழ்னிலையிலும் அவளுக்கென்று இருக்கிற நல்ல குணங்களை மாற்றிக் கொள்ளாதது. இப்படி பல பல பள பள
    பிடிக்காதது
    முன் கோபம், தன் உடம்பை பற்றி கவலைப்படாமல் வேலை செய்து கொண்டே இருப்பது, நண்பர்களின் நட்பை பாதுகாக்காதது.

  10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
    என் மனைவி மற்றும் குழந்தை. (இவர்கள் என் அருகில் இல்லாதது மிகப் பெரிய வருத்தம்).

  11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
    தீப்பற்றி எரியாத ஆரஞ்ச் நிறத்துடன் கூடிய முழு நீள ஆடை (ஹி ஹி சேப்டி டிரஸ்,.. ஆபீஸ் லஞ்ச் டைமில் எழுதிக் கொண்டு இருக்கிறேன்)

  12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
    யுவன் இசையில், இளைய ராஜா குரலில் கற்றது தமிழில் வரும் " பறவையின் கூட்டில்" பாடல். மிக அருமையான் பாடல், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இசை. அற்புதமான வரிகள்,..

  13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
    White is my favorite color. ஆனால் வெள்ளை நிறத்தில் எங்கே எழுதுவது??

  14. பிடித்த மணம்?
    அடுக்கு மல்லி, தாழம்பூ, புது மழையில் எழும்பும் கரிசல் மண்ணின் மணம், அடை மழையில் வரும் அவித்த வேர்க்கடலை, தட்டப்பயிறு மணம், மார்கழியில் காலை 5 மணிக்கு கிடைக்கும் சுக்கு காபியின் மணம், சில நேரங்களில் என் மனைவி சமைக்கும் போது வரும் கருகிய வாசனை ( அப்போதுதானே வெளியில் சாப்பிட என் மனைவி வருவாள்).

  15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன? கலகலப்பிரியா,..
    http://kalakalapriya.blogspot.com/ இவரின் கவிதைகள் பாரதியின் அக்கினி குஞ்சுகள். உரிமையாக பின்னூட்டம் எழுத சொல்லும், எழுதும் நல்ல பதிவர்,.. இப்போதுதான் மழலையர் பள்ளியில் படிப்பதாக கேள்வி,...

  16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
    ஆகாய நதியின் கட்டுரைகள் ஒரே வகை என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைரம். முத்து,பவளம்,மாணிக்கம் என பல வகைகள் இருந்தாலும் வைரம் வைரம்தானே?? அவர் எழுதிய "திருமணச் சடங்குகள் தமிழில் நடந்தால் என்ன? " எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. அவரிடம் எனக்கு பிடிக்காதது, அவரே அவர் பதிவை மொக்கை என வர்ணிப்பது மட்டுமே. மற்றபடி தரமான பதிவு தருவதில் அவர் முதல் வரிசையில் அமர வேண்டியவர்,.

  17. பிடித்த விளையாட்டு?
    பொதுவாக எல்லா குழு விளையாட்டுகளும் நான் ஆடியிருக்கேன். அதனால் எல்லாமே எனக்கு பிடிக்கும். ரொம்ப பிடித்தது என்றால் சின்ன வயசில் நாங்கள் கிணற்றில் ஆடும் ரக்பி (அரை மணி நேரம் விளையாண்டால் 1 மணி நேரம் சாப்பிடும் அளவிற்கு பசியெடுக்கும்)

  18. கண்ணாடி அணிபவரா?
    ஆம். கடந்த இருபது வருடங்களாக,..

  19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
    சேரனின் அனைத்து படங்களும்.
    நகைச்சுவைப் படங்களுக்கு முதல் இடம். சண்டை காட்சி படங்களுக்கு பெரிய கும்பிடு,.. (சிம்பு படம் ஒன்று கூட பார்த்தது இல்லை,..விஜய் படம் ஒன்று கூட திரையரங்கில் பார்க்கவில்லை), சேரன், தங்கர்பர்ச்சன் பெரும்பாலான படங்களும் திரையரங்கிலேயே பார்த்தாச்சு.

  20. கடைசியாகப் பார்த்த படம்?
    கேள்வி திரையரங்கு என்றே கருதுகிறேன். கடைசியாக பார்த்த்து "வாரணம் ஆயிரம்"

  21. பிடித்த பருவ காலம் எது?
    கார்காலம். (எல்லோரும் நினைவில் வைத்து இருக்கும் 16 வயதிலிருந்து 20 வயது வரைக்குட்பட்ட பருவ காலம் கூட ரொம்ப பிடிக்கும்).

  22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
    What went wrong by trevor.
    பொதுவாக technical/ non-technical என பிரித்து படிப்பது இல்லை. எனக்கு உபயோகமான பிடித்தவைகளை மட்டுமே படிப்பதால் இதில் பிரிவு ஏதும் இல்லை. நாவல்களோ, தொடர்கதைகளோ படிக்கும் பழக்கம் கிடையாது. சமையல் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் என பல புத்தகங்களை படித்து இருக்கேன். நான் படித்ததில் உட்சகட்ட முட்டாளாக நான் கருதுவது, என் பத்தாவது புத்தகங்கள். அப்போது ஒவ்வொரு பாடமும் எத்தனையாவது பக்கம் என்பது கூட அத்து படி.

  23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
    2 மாதத்திற்கு ஒரு முறை

  24. உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
    குழந்தையின் சிரிப்பு,.
    யாருடைய அழுகையும், கல்லை வைத்து இரும்பை உராயும் சத்தம்

  25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
    லண்டன் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி (வேலை நிமித்தம் சென்ற போது சுற்றி பார்த்தது ஹி ஹி,.. நமக்கு அண்ணா யுனிவர்சிட்டி காம்பஸ்ல படிச்சதே பெரிய்ய விஷயம்)

  26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
    கண்டிப்பாக நிறைய,..
    நன்றாக பாடுவேன், ஆடுவேன் (இப்ப இல்ல), எல்லா விளையாட்டுகளும் பேர் சொல்லும் அளவிற்கு விளையாடுவேன், விவசாயமும் செய்ய தெரியும், ராக்கெட் எரிபொருளின் தேவைகளும் தெரியும், கற்றது கையளவு, கல்லாதது உலகளவு.

  27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
    எந்த இடத்திலும் யாரையும் ஏதோ ஒரு காரணம் காட்டி பிரித்து (partiality) பார்ப்பதும், முறையான மரியாதை மறுப்பதும் எனக்கு சுத்தமாக பிடிக்காது.. ஏற்ற தாழ்வுகளையும், அதையே காரணம் காட்டி வழங்கப்படும் இலவசங்களையும் கூட எனக்கு பிடிக்காது. படகு வழங்குவதற்கு பதில் நீச்சல் சொல்லி தருவது நல்லது என நினைப்பவன்.

  28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
    சோம்பேறி தாத்தா.
    விடுமுறை நாட்களில் இப்படி அப்படி அசைவது கூட கிடையாது,

  29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
    என் கிராமமும் எங்கள் தென்னம் தோப்பும் எனக்கு மிக பிடித்த இடங்கள் (தனி பதிவு வருகிறது) . கொடைக்கானலும், டேராடூனும் நான் ரசித்த பிற பகுதிகள்.

  30. எப்படி இருக்கணும்னு ஆசை?
    ஒரு பள்ளி ஆரம்பித்து நான் கற்றதை எல்லோருக்கும் சொல்லி கொடுத்து அடுத்த தலைமுறையில் ஒரு நாலு பேர் என் பேரை ஆயுசு வரைக்கும் நினைவு கூறும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. கண்டிப்பாக அதை செய்வேன். அது என் லட்சியம்.

  31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
    செய்தாச்சு,..

  32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
    யாருடைய வயிற்றிலும் அடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். அதைவிட வேறு என்ன வேண்டும்?

  33. பிடித்த பதிவர்கள்
    ஆதி, வித்யா மற்றும் சாதிக் அலியின் தமிழ் குருவி


21 கருத்துகள்:

ஆகாய நதி சொன்னது…

நல்ல பதில்கள் :)

ஆனால் என்னை கொஞ்சம் நிறையாவே புகழ்ந்துட்டீங்க :) நன்றி!

ஆகாய நதி சொன்னது…

//படகு வழங்குவதற்கு பதில் நீச்சல் சொல்லி தருவது நல்லது என நினைப்பவன்.
//

சூப்பர் போங்க :)


சரி 33வது கேள்வி இத்தொடரில் இல்லாத புதிய கேள்வியா இருக்கே???

ஆகாய நதி சொன்னது…

//
எப்படி இருக்கணும்னு ஆசை?
ஒரு பள்ளி ஆரம்பித்து நான் கற்றதை எல்லோருக்கும் சொல்லி கொடுத்து அடுத்த தலைமுறையில் ஒரு நாலு பேர் என் பேரை ஆயுசு வரைக்கும் நினைவு கூறும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. கண்டிப்பாக அதை செய்வேன். அது என் லட்சியம்.


//

நல்ல எண்ணம் :)

என்னுடைய பல கருத்துகளோட ஒத்துப் போகுது உங்க பதில்கள் :)))

உதாரணம்
//
5,24,27,30, இவற்றிற்கான பதிகளும் கொடைக்கானலும், டேராடூனும் நான் ரசித்த பிற பகுதிகள்.

சின்ன விஷயத்திற்கு விழி ஒரம் ஈரம் ஆவதும், பெரிய விஷயத்திற்கு தைரியமாக இருக்கவேண்டும் என நினைப்பதும் என் சுபாவம்
//

இவையெல்லாம்....:)))

ஆகாய நதி சொன்னது…

நல்ல மனையாளின் இன்பம் ஒரு கோடி அனுபவிங்க :)

Suresh சொன்னது…

உண்மையா மனசில் இருந்து வந்த பதில்கள்...

நல்ல எழுத்து நடை, உங்களை புரிந்து கொள்ள உதவியது..

நீங்கள் தமிழர்ஸில் உங்களது இடுகைகளை பகிர்ந்து கொண்டால் இன்னும் நிறையா பேரை சென்று அடையும் அல்லவா

jothi சொன்னது…

//நல்ல பதில்கள் :)

ஆனால் என்னை கொஞ்சம் நிறையாவே புகழ்ந்துட்டீங்க :) நன்றி!//

நன்றி ஆகாய நதி.

உண்மையை சொன்னேன். தப்பா???

jothi சொன்னது…

//சரி 33வது கேள்வி இத்தொடரில் இல்லாத புதிய கேள்வியா இருக்கே???//

இந்த கேள்வி தேவை என நான் என நினைத்தேன். இதிலிருந்து என் ரசனை எந்த வகையானது என மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவும்.

jothi சொன்னது…

//என்னுடைய பல கருத்துகளோட ஒத்துப் போகுது உங்க பதில்கள் :)))

உதாரணம்
//
5,24,27,30, இவற்றிற்கான பதிகளும் //

ரொம்ப மகிழ்ச்சி,

jothi சொன்னது…

//நீங்கள் தமிழர்ஸில் உங்களது இடுகைகளை பகிர்ந்து கொண்டால் இன்னும் நிறையா பேரை சென்று அடையும் அல்லவா//

மிக்க நன்றி சுரேஷ்.

இந்த பதிவை எனக்கு தமிழிஷில் போட கூட விருப்பம் இல்லை. என் சுய தம்பட்டங்களை மற்றவர்கள் படித்து அவர்கள் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்ற எண்ணமே. இனி வரும் பதிவுகளை நான் தமிழர்ஸில் கண்டிப்பாக இணைக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி சுரேஷ்.

Joe சொன்னது…

ஆனால் வெள்ளை நிறத்தில் எங்கே எழுதுவது??

கரும்பலகையில் ...

jothi சொன்னது…

கலக்கிட்டிங்க ஜோ, நான் யோசித்தேன் வரவில்லை,.. ஆனால் பேனா என்ற சொன்னதால் க்ளிக் ஆகவில்லை. வருகைக்கு நன்றி

கலகலப்ரியா சொன்னது…

ரொம்ப அருமைங்க ஜோதி.. நம்மள வம்பில மாட்டி விட்டுட்டீங்களே.. முடிந்த அளவு சீக்கிரம் உங்க டெஸ்ட்-கு பதில் தயார் பண்றேன்.. கொஞ்சம் பொறுமை.. இப்போ வெளியூர்ல இருக்கேன்.. வந்து பேசிக்கறேன்.. வீட்ல எல்லாரும் நலமா.. வாண்டு எப்டி இருக்கு..

jothi சொன்னது…

நன்றி. கலகலப்பிரியா,.. பரிட்சை எல்லாம் நன்றாய் முடித்துவிட்டு வந்து கலக்குங்க,.. வீட்டில் அனைவரும் சுகம். அனைவரையும் பார்த்துவிட்டு மீண்டும் உழைக்க வந்தாச்ச்சு. பாவம் என் மகன்,.. என் மனைவி அவனிற்கு சோறு ஊட்டினால் என் மகன் என் படத்தை எடுத்து "ம்மா அப்பாவிற்கு" என்று என் படத்திற்கு சோறு ஊட்டுகிறானாம்,.. என்ன செய்ய???

ஆ.ஞானசேகரன் சொன்னது…

உங்களை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது..
பாராட்டுகள்

jothi சொன்னது…

மிக்க நன்றி,.. ஞானசேகரன்,.. நேரம் கிடைக்கும்போது என் வலைப்பக்கம் வாருங்கள்

ஆகாய நதி சொன்னது…

//
பாவம் என் மகன்,.. என் மனைவி அவனிற்கு சோறு ஊட்டினால் என் மகன் என் படத்தை எடுத்து "ம்மா அப்பாவிற்கு" என்று என் படத்திற்கு சோறு ஊட்டுகிறானாம்,.. என்ன செய்ய???
//

:(((

jothi சொன்னது…

:(((

மீண்டும் நன்றி ஆகாய நதி. என்ன செய்ய இங்கிருந்து என்னால் புலம்ப மட்டுமே முடிகிறது.

ச.பிரேம்குமார் சொன்னது…

உங்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது இந்தப்பதிவு மூலம். வாழ்த்துகள்

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி பிரேம்குமார். அடிக்கடி என் வலைப்பதிவிற்கு வாருங்கள்

malar சொன்னது…

''''படகு வழங்குவதற்கு பதில் நீச்சல் சொல்லி தருவது நல்லது என நினைப்பவன்.''''


#
''''யாருடைய வயிற்றிலும் அடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். அதைவிட வேறு என்ன வேண்டும்?''''


என்னை கவர்ந்தவை.

ஆனந்தி.. சொன்னது…

இந்த பதிவு படிச்சேன்..பதில்கள் எல்லாம் ரொம்பவே வித்யாசம்..கொஞ்சம் சுவாரஸ்யமான மனிதராய் இருப்பிங்க போலே..கலக்குங்க பாஸ்!

கருத்துரையிடுக