திங்கள், 1 ஜூன், 2009

இது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு


அப்பாடா, ஒரு வழியாக ஊருக்கு கிளம்ப போகிறோம். சென்னையிலிருந்து துபாய் வந்து 6 மாதமாகி விட்டது. பெற்றோரைப் பார்க்க முடியவில்லை, மனைவியை பார்க்க முடியவில்லை. அதைவிட என் அருமைக்குழந்தையை பார்க்க முடியவில்லை. என்ன செய்ய வீட்டுக்கடன் இருக்கே,. இந்தியாவில் இருந்தால் 20 வருஷம், இங்கேன்னா ஒரே வருஷம். ஓட்டிதானே ஆக வேண்டி இருக்கு,..

பெட்டியை எடுத்து வச்சாச்சு.அப்பாவிற்கு வாங்கிய சுகர் மெசின்னயும், மனைவிக்கு இங்கே வாங்கிய அந்த 24 கேரட் நகையை எடுத்து வச்சாச்சு. மகனிற்குதான் கொஞ்சம் தேடி அலைந்து அந்த அசல் போலவே இருக்கும் அந்த ஏரோபிளெனை வாங்கினேன். நான் சென்னையில் இருந்து கிளம்பும்போது ஏர்போர்ட்டில் அவன் அழவே இல்லை. அவன் வானத்தில் பறந்து போகும் அந்த ப்ளைட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே சிரிப்புதான். வீட்டிற்கு அவர்கள் என்னை வழி அனுப்பி சென்றபின் என்னைக் காணாமல் இரவு பூரா அவன் அழுது கொண்டே இருந்திருக்கிறான். இப்போது என்னை மறந்தேவிட்டதாக என் மனைவி சொல்லுகிறாள்.

நான் மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். காரணம் அவன் என்னை விட்டே பிரியமாட்டான். நான் சென்னையில் office கிளம்பும்போது அவன் தூங்கி கொண்டிருப்பான். நான் சத்தமில்லாமல் ஓடிவிடுவேன். மாலை நான் வந்ததும் என் மீது தாவி ஏறுவான். அப்பா, அப்பா என நொடிக்கொரு முறை சொல்லுவான். நான் கீழே உட்கார்ந்து சாப்பிடும்போது என் தொடை மடியில் உட்கார்ந்து கொள்வான். கண்டிப்பாக அது என் வலது தொடையாக இருக்கும். உடனே என் மனைவி கத்துவாள். "டேய் அவரை சாப்பிடவிடேண்டா".

காலையில் சென்னையில் இறங்கியவுடன் பார்த்துக் கொள்கிறேன், என்னை எப்படி மறந்து இருப்பான் என்று. நான் போனவுடன் கையை தூக்குவேன்,.. "அப்பா" என்று ஓடி வருகிறானா, இல்லையா என்பதையும் பார்த்து விடுகிறேன். அவன் வந்தவுடன் அவன் வயிற்றில் கடிக்கவேண்டும், அவனிற்கு வலிக்காத மாதிரி.

அப்பாடா ஒரு வழியாக ப்ளைட்டில் வந்து உட்கார்ந்தாச்சு. விமான பணிப்பெண் பார்த்து சிரித்தாள். உதட்டில் அழகான புன்னகை இருந்தது. அவள் கண்களில் என் கருமை நிறத்திற்கு வெள்ளையர்கள் தரும் மரியாதை நன்றாக ஒட்டிக்கொண்டிருந்தது. நான் முன்னால் இருந்த புத்தகத்தின் படம் பார்க்க ஆரம்பித்தேன்.

"ட்ங்க் ட்ங்க்,.."

நிசப்தம். அப்பாடா ப்ளைட் கிளம்பிருச்சு போல இருக்கு,..

"ட்ங்க் ட்ங்க்,."

மீண்டும் நிசப்தம், "டேய் ப்ளைட்டை கிளப்புறேன்னு சொல்லுங்கடா,".. மனதிற்குள் நான்.

"ட்ங்க் ட்ங்க்,."

"சார்,."

இதென்ன குமாரின் குரல்,..அவனும் ஊருக்கு வர்ரான்னா,.. திரும்பினேன்.

"ஓ மை காட்"

குமார் என்னை பார்த்து சிரித்தான்,..
.
"சார்,. ரொம்ப நேரமாய் காலிங் பெல்லை அடிச்சிட்டுருக்கேன், வண்டியில் ஜாகிரும், இஸ்மாயிலும் உட்கார்ந்திட்டுருக்காங்க,.."

"சாரி குமார் தூங்கிட்டேன், அஞ்சு நிமிஷத்துல வந்துர்ரேன்"

பாத்ரூம் ஸவரை போட்டேன். அதற்கு முன்னாலேயே தாரை தாரையாக வந்துகொண்டிருந்தது என் கண்களில் இருந்து கண்ணீர். ஸவரின் சத்ததில் என் அழுகை வெளியில் கேட்டிருக்க நியாயமில்லை.

21 கருத்துகள்:

jothi சொன்னது…

இந்த கதை எழுதி முடிக்கும்போது நான் அழுதிவிட்டுருந்தேன்,..

பெயரில்லா சொன்னது…

kashatama iruku padikumbodhe... :(

jothi சொன்னது…

ரொம்ப நன்றி. இன்னும் 3 நாளைக்குதான் கஷ்டம். நான் ஜுன் 5 சென்னையில் இருப்பேன். அது வரைக்கும் பல்லைக்கடித்துக் கொண்டு ஓட்டணும். அது வரை 'ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தொன்ற வேண்டுமா'ன்னு பாடிகிட்டே இருக்க வேண்டியதுதான்,.

கலகலப்ரியா சொன்னது…

அட என்னங்க நீங்க... இப்டி இருக்கீங்க.. இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. சில கஷ்டங்கள் கூட ஒப்பிடறப்போ.. ஆனாலும் படிச்சதும் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாய்டுத்துங்க.. அடுத்த வாரம் அப்டி திரும்பி இப்டி பார்க்க வந்துடும்க.. அது வரைக்கும் பாடுற பாட்ட சந்தோஷமாவே பாடுங்க.. all the best..

கிரி சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க

jothi சொன்னது…

//இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. //
அது சரி,.தலைவலி தனக்கு வந்தால் தான் தெரியும்.
//சில கஷ்டங்கள் கூட ஒப்பிடறப்போ//
உண்மைதான். கடவுள் நம்மளை நல்லாத்தான் வச்சிருக்கான்,..
//all the best..//
thanks

jothi சொன்னது…

//நல்லா எழுதி இருக்கீங்க//

ரொம்ப நன்றி கிரி.

கலகலப்ரியா சொன்னது…

|இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. சில கஷ்டங்கள் கூட ஒப்பிடறப்போ|

:O:O:O தோடா.. இது ரெண்டும் சேர்த்து படிக்கணும்.. பிரிச்சி போட்டு பின்னூட்டம் போட்டா எப்டி.. யப்பே.. சரியான ஆளுங்கடா சாமி..

jothi சொன்னது…

ஹா ஹா ஹா

போங்க,. உங்களை ஏமாத்தவே முடியாது போலிருக்கு,.. ஒண்ணாதான் எழுதனும், என்ன பண்றது மனசாட்சி ஒத்துக்கமாட்டிங்குது.thanks for your comments.

கலையரசன் சொன்னது…

மனசு என்னவோ பன்னுச்சுங்க, உங்க கஷ்டம்!
எனக்கும் தெரியும் உங்க உணர்வு என்னவென்று..
ஏன்னா நானும் துபாய்தான்!

உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்க...
நாங்க துபாய்ல பதிவர் சந்திப்பு போடுறோம்!
மேலும் விபரங்களுக்கு 050-7174360
&
http://venkatesh-kanna.blogspot.com/

Unknown சொன்னது…

வாவ்
நல்ல உணர்ந்துஎழுதியிருக்கிங்க,
வாழ்த்துக்கள்
இவன்
www.tamilkudumbam.com

Balaganesan Swaminathan சொன்னது…

very nice post.
I remember my travelling days. Parting kids is a real torture. At least, I got to go home once a week to see them. When you hear that they are sick or when they accomplish something,... it just makes it very hard.

Best wishes for your forthcoming trip.

jothi சொன்னது…

ரொம்ப நன்றி கலையரசன். நான் துபாய் இல்ல 'தோஹா'வில் வசிக்கிறேன். துபாய் என்றால் எல்லாருக்கும் தெரியும் என்பதால் எழுதினேன். இருந்தாலும் நான் துபாய் வரும்போது உங்களை சந்திக்கிறேன்.

jothi சொன்னது…

ரொம்ப நன்றி ப்க்.மிகச் சரியாக சொன்னீர்கள். என் மகனிற்கு காயச்சல். என்ன செய்ய இங்க உட்கார்ந்து கொண்டு,..

jothi சொன்னது…

ரொம்ப நன்றி bg.மிகச் சரியாக சொன்னீர்கள். என் மகனிற்கு காயச்சல். என்ன செய்ய இங்க உட்கார்ந்து கொண்டு,..

Joe சொன்னது…

ஜோதி,
கண் கலங்க வைத்து விட்டீர்கள்.

சில சமயம், short term assignments (90 days trip)-காக வெளிநாடு செல்லும்போது குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியாது. எப்போடா தொண்ணூறு நாள் முடியும் என்று இருப்பேன்.

ஜூன் 5, இதோ நெருங்கி விட்டதே?

இதை விடக் கொடுமை, பிலிப்பைன்ஸ் நாட்டின் பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்வது, "தாயில்லாமல் வளரும் தலைமுறை" என்றொரு டாகுமெண்டரி பிபிசி-யில் ஒளிபரப்பானது. அந்தக் குழந்தைகளின்/தாயின் மனநிலையை யோசித்துப் பாருங்கள்.

Bon Voyage!

jothi சொன்னது…

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி ஜோ. உங்களுக்கு 3 மாதம்தான், நான் குடும்பத்தை பிரிந்து வந்து 6 மாதமாகிவிட்டது. அதனால் இத்தனை ஏக்கமும் கிளம்புகிற மகிழ்ச்சியும்.

உண்மைதான் பிலிப்பைன்ஸ் வாழ்க்கைமுறை மிக சோகமானது. எல்லோரும் பிரிந்துதான் இருக்கிறார்கள். ஆனால் நம்மைபோல புலம்பிக்கொண்டு இருப்பதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள்??? நீங்கள் சொன்ன அந்த டாக்குமெண்டரி படத்தை நானும் பார்க்கிறேன். விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

ஆகாய நதி சொன்னது…

//
காலையில் சென்னையில் இறங்கியவுடன் பார்த்துக் கொள்கிறேன், என்னை எப்படி மறந்து இருப்பான் என்று. நான் போனவுடன் கையை தூக்குவேன்,.. "அப்பா" என்று ஓடி வருகிறானா, இல்லையா என்பதையும் பார்த்து விடுகிறேன். அவன் வந்தவுடன் அவன் வயிற்றில் கடிக்கவேண்டும், அவனிற்கு வலிக்காத மாதிரி.

//

அழுகை வருது... என் கணவரும் இப்படி தான் கவலைப் பட்டுகிட்டு இருக்காங்க... நானும்... ஆனால் எப்போதும் அவனிடம் அப்பா பற்றி ஏதாவது கூறிக்கொண்டே இருப்பேன் அப்போது தான் அவன் அப்பாவை மறக்கமாட்டான் என்று :(

ஆகாய நதி சொன்னது…

//
அதற்கு முன்னாலேயே தாரை தாரையாக வந்துகொண்டிருந்தது என் கண்களில் இருந்து கண்ணீர். ஸவரின் சத்ததில் என் அழுகை வெளியில் கேட்டிருக்க நியாயமில்லை.

//

:((((( நான் கூட நிஜமா சொல்றீங்கனு நினைச்சா பிலைட்ல ஏறி உட்கார்ந்தாச்சுனு சொல்லும் போதே புரிந்துபோச்சு :(

jothi சொன்னது…

//அழுகை வருது... என் கணவரும் இப்படி தான் கவலைப் பட்டுகிட்டு இருக்காங்க... நானும்... ஆனால் எப்போதும் அவனிடம் அப்பா பற்றி ஏதாவது கூறிக்கொண்டே இருப்பேன் அப்போது தான் அவன் அப்பாவை மறக்கமாட்டான் என்று :(//

நன்றி ஆகாய நதி. என் மகனைப் பார்த்தேன். மறக்க முடியாத தருணங்கள்,.. (ஹி ஹி தனி பதிவு). நீங்கள் நல்ல அம்மாவென்று தெரிகிறது.

அரங்கப்பெருமாள் சொன்னது…

என்னங்க நீங்க... எனக்கும் வீட்டுஞாபகம் வந்துவிட்டது

கருத்துரையிடுக