சனி, 12 மார்ச், 2011

ந‌ம் அணு உலைக‌ள் எந்த‌ அள‌விற்கு பாதுகாப்பான‌வை??

ந‌ம் அணு உலைக‌ள் எந்த‌ அள‌விற்கு பாதுகாப்பான‌வை???

ந‌ம் அணு உலைக‌ள் பாதுகாப்பாக‌ இருக்கின்ற‌ன‌ என‌ அணு ஆற்ற‌ல் முறைப்ப‌டுத்தும் க‌ழ‌க‌ த‌லைவ‌ர் atomic energy regulatory board (AERB) பார்த்த‌சார‌தி இன்றைக்கு சொல்லி இருக்கிறார்.

"ந‌ம் அணு உலைக‌ள் 8.9 ரிக்ட‌ர் அள‌விற்கு தாங்கும் என‌ உறுதியாக‌ சொல்ல‌ முடியாது. ந‌ம் அணு உலைக‌ளின் ஸ்திர‌த்த‌ன்மை ப‌ற்றி க‌ழ‌க‌ம் மீண்டும் ஆய்வு செய்யும். 2001ல் 7.7 ரிக்ட‌ர் பூக‌ம்ப‌ அள‌வை குஜ‌ராத் அனுப‌வித்த‌போது ந‌ம் அணு உலைக‌ள் பாதுகாப்பாக‌த்தான் இருந்த‌ன‌. மேலும் இந்தியாவில் உள்ள‌ அணு உலைக‌ளில் 8.9 ரிக்ட‌ர் அள‌விற்கு நில‌ ந‌டுக்க‌ம் வ‌ரும் என‌ எதிர்பார்க்க‌ முடியாது. கார‌ண‌ம் இந்தியாவில் இம‌ய‌ம‌லை ப‌குதிக‌ள் ம‌ட்டுமே அதிநில‌ந‌டுக்க‌ப் ப‌குதிக‌ளில் வ‌ருகிற‌து. ம‌ற்ற‌ப‌டி ந‌ம் அணு உலைக‌ள் இருக்கும் இட‌ங்க‌ள் பூக‌ம்ப‌ம் தாக்குவ‌த‌ற்கு வாய்ப்பு குறைந்த‌ ப‌குதிக‌ள்தான்.

பூக‌ம்ப‌ அடிப்ப‌டையில் இந்தியாவையும் ஜ‌ப்பானையும் தொட‌ர்புப‌டுத்தி ப‌ய‌ம் கொள்ள‌ அவ‌சிய‌ம் இல்லை. கார‌ண‌ம் ஜ‌ப்பான் அதிநில‌ந‌டுக்க‌ப் ப‌குதியில் இருக்கிற‌து."

இன்று ஜ‌ப்பானில் ந‌ட‌ந்த‌ அணு உலை வெடிப்பு.



உண்மைதான். இந்தியாவையும் ஜ‌ப்பானையும் நில‌ ந‌டுக்க‌ வாய்ப்புக‌ளில் ஒரே வகையில் சேர்க்க‌ முடியாது. இந்தியாவின் மொத்த‌ மின் தேவையில் 4% ம‌ட்டுமே அணு உலைக‌ளில் இருந்து பெற‌ப்ப‌டுகிற‌து. ஆனால் ஜ‌ப்பானில் அணு உலைக‌ள் அதிக‌ம். ஜ‌ப்பானின் மொத்த‌ மின் தேவையில் 34% அணு உலைக‌ளில் இருந்து பெற‌ப்ப‌டுகிற‌து.

ந‌ம் நாட்டில் உள்ள‌ பிரச்ச‌னை ம‌க்க‌ள் நெருக்க‌ம். க‌ல்பாக்க‌த்திலியோ இல்லை கூடாங்குள‌த்திலியோ பாதிப்புக‌ள் ஏற்ப‌ட்டால் அத‌ன் பின் விளைவுக‌ள் மிக‌ மோச‌மான‌தாக‌ இருக்கும். கார‌ண‌ம் சுனாமியினால் அந்த‌ த‌லைமுறையின் வாழ்க்கை ம‌ட்டுமே பாதிக்க‌ப்ப‌டும். ஆனால் அணு உலையின் பாதிப்புக‌ள் ப‌ல‌ த‌லைமுறைகளை பாதிக்கும்.அணு உலைக‌ளின் விப‌த்துக‌ள் அணு குண்டுக‌ளைவிட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌வை.

உதார‌ண‌மாக‌ செர்னோபிலில் 1986ல் ஏப்ர‌ல் 26 நிக‌ழ்ந்த‌ அந்த‌ அணு உலை விப‌த்து மிக‌ மோச‌மான‌து. த‌குதி குறைந்த‌ ஆட்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஆலை வெடித்த போது ஜ‌ப்பான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட‌ போது வ‌ந்த‌ க‌திர்வீச்சைவிட‌ 400 ம‌ட‌ங்கு அதிக‌ம் வெளிப்ப‌ட்ட‌து. இது கிட்ட‌த்த‌ட்ட‌ 20 அணு குண்டுக‌ளை போட்டால் வ‌ரும் பாதிப்பிற்கு ச‌ம‌ம்.





இந்த‌ க‌ட்டுரையின் நோக்க‌ம் நாம் பாதுகாப்பாக‌ இல்லை முடிவு செய்து அனைவ‌ரையும் ப‌ய‌முறுத்த‌ அல்ல‌. அணு உலைக‌ள் எந்த அள‌விற்கு ஆப‌த்தான‌வை எனச் சொல்ல‌வே இந்த‌ ப‌திவு. ந‌ம் தொழிற்சாலைக‌ளில் பாதுகாப்பிற்கு என்ன‌ விலை என்ன‌வென்று அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே. ம‌ற்ற‌ தொழிற்சாலைக‌ளில் ந‌ட‌க்கும் விப‌த்தைப் போல‌ அணுமின் உற்ப‌த்தி நிலைய‌ங்க‌ளையும் சேர்த்துக்கொள்ள‌ முடியாது.

ஊழ‌ல் ம‌ழிந்துள்ள‌ அர‌சு நிர்வாக‌ம், க‌வ‌லைப்ப‌டாம‌ல் நிர்வ‌கிக்க‌ப்ப‌டும் ஆப‌த்து & பாதுகாப்பு கோட்பாடுக‌ள் (Hazardous & safety Law) போன்ற‌வை நம் ம‌க்க‌ளின் வாழ்க்கை ஸ்திரத்த‌ன்மையை கேள்விக்குறியாக்குகின்ற‌ன‌. ஏனெனில் ந‌ம் அர‌சாங்க‌மும், ம‌க்க‌ளும் ஒரு இந்திய‌ப்பிர‌ஜையின் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை ஒண்ணுமே (Zero) இல்லைதான் என‌ சொல்ல‌ வேண்டும். என‌வே எல்லாம் ந‌ல்ல‌ப‌டியே ந‌ட‌க்கும் என‌ வாழ்க்கையை பாஸிட்டாவாக‌ எடுத்து போய்க்கொண்டிருப்போம்.


.

15 கருத்துகள்:

செங்கோவி சொன்னது…

இன்று நானும் அந்த செய்தியைப் பார்த்தவுடன், இதைத் தான் நினைத்தேன். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலவாறு முறையிட்டும், நம் மக்கள் நலன் அரசு காதில் போட்டுக்கொள்ளவே இல்லை..வெறும் 4% மின்சாரத்திற்காக, மக்களின் உயிருடன் விளையாடுகிறது நம் ..அல்ல..அமெரிக்காவின் கைப்பாவை அரசு! நல்ல இடுகை ஜோதி!

jothi சொன்னது…

அப்ப‌டி இல்லை செங்கோவி. ந‌ம்மிட‌ம் உள்ள‌ அணு உலைக‌ளில் இருந்து மின்சார‌ம் என்ப‌து வெறும் க‌ண்துடைப்பிற்காக‌.அது ந‌ம‌து நாட்டின் பாதுகாப்பிற்காக‌ முழுக்க‌ செல‌விட‌ப்ப‌டும் என்ப‌து என் அனுமான‌ம். ந‌ம்மிட‌ம் மிக‌ அதிக‌மான‌ நில‌க்க‌ரி வ‌ள‌ம் உள்ள‌து. அதைப்போல‌வே, காற்று, அலைக‌ளினால் மின்சார‌ம் தயாரிப்ப‌த‌ற்கும் ந‌ம்மிட‌ம் சிற‌ந்த‌ வ‌ள‌ங்க‌ள் உள்ள‌து.

மிக‌ முக்கிய‌மான‌ கார‌ண‌ம் ந‌ம்மிட‌ம் உள்ள‌ தோரிய‌த்தில் அள‌வு உல‌கில் உள்ள‌ மொத்த‌ அள‌வில் 25%. தோரிய‌ அணுப்பிள‌விற்கான‌ தொழில் நுட்ப‌த்தை ஒரு சில‌ நாடுக‌ள்தான் கொண்டிருக்கின்ற‌ன‌. இப்போது ந‌ம்மிட‌ம் அணு உலைக‌ள் இருந்தாலும் அத‌ன் மூல‌க்கூறுவிற்கு நாம் அய‌ல் நாட்டையே ந‌ம்பி உள்ளோம்.இன்றைக்கும் நாம் ர‌ஷ்யாவிற்கு க‌ட்டிக்கொண்டிருக்கும் இந்த‌ தொகையின் அள‌வு மிக‌ அதிக‌ம். ந‌ம்மிட‌ம் தோரிய‌த்தினை பிள‌ப்ப‌த‌ற்கான‌ தொழில் நுட்ப‌ம் வ‌ந்து விட்டால் நாம் ஓர‌ள‌வு அணுத்தொழில் நுட்ப‌த்தில் த‌ன்னிரைவு பெற்று விட‌லாம்.

இப்போது உள்ள‌ அணுப்பிள‌விற்கான‌ தொழில் நுட்ப‌த்தை அமெரிக்காவில் உள்ள‌ ஒரு சில‌ நிறுவ‌ன‌ங்க‌ள் கொண்டிருக்கின்ற‌ன‌. அத‌ற்காக‌த்தான் இந்த‌ போராட்ட‌ம். இதை ப‌ற்றி சொல்ல‌ வேண்டுமானால் இன்னும் ஒரு ப‌திவு தேவைப்ப‌டும்.

Samy சொன்னது…

Jothi , waiting for your new post on thorium atomic fission.samy.

ஜெய்லானி சொன்னது…

பயமாதான் இருக்கு என்ன செய்ய . :-(

jothi சொன்னது…

@ samy. க‌ண்டிப்பாக‌ சாமி. நிச்ச‌ய‌ம் கூடிய‌ விரைவில் ப‌திவை போடுகிறேன்.

jothi சொன்னது…

@ஜெய்லானி,. சாவு என்ப‌தை ஒருவ‌ருக்கு த‌விர்க்க‌முடியாது. ஆனால் த‌ன் ச‌ந்த‌தி கையில்லாம‌ல், மூளை வ‌ள‌ரச்சி இன்றி,.அந்த‌ வாழ்க்கை கொடுமை. அத‌ற்கு அந்த‌ வாழ்க்கை இல்லாம‌லேயே போய்விட‌லாம்,..

கூடல் பாலா சொன்னது…

செர்னோபிலில் ஆபத்தான அணு உலையை அமைத்த அதே ரஷ்யர்கள்தான் கூடங்குளத்திலும் அணு உலை அமைகிறார்கள் .இந்த அணு உலையை நம்பலாமா ?

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

இந்தியாவுல அணு உலைகள் வச்சிட்டாங்க....இப்ப அணு பாதிப்பு வராம எப்படி பாதுகாக்கணும் என்பதுதான் முக்கியம்...

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

jothi சொன்னது…

கூட‌ல் பாலா, முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றி.

செர்னோபில் விப‌த்திற்கு பிர‌ச்ச‌னை தொழில் நுட்ப‌ம் அல்ல‌.முழு தொழில் த‌குதிய‌ற்ற‌ ஆட்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தால் வ‌ந்த‌ விப‌த்து,. அத‌னால் கூடாங்குள‌ம் ந‌ம்ப‌லாம்,. ப‌ய‌ப்ப‌டாதீர்க‌ள்.

jothi சொன்னது…

//இந்தியாவுல அணு உலைகள் வச்சிட்டாங்க....இப்ப அணு பாதிப்பு வராம எப்படி பாதுகாக்கணும் என்பதுதான் முக்கியம்...//

த‌மிழ்வாசி ரொம்ப‌ ச‌ரி,..

எப்ப‌டி தின‌மும் ஒரு ப‌திவு போட்டு க‌ல‌க்குறீங்க‌

கூடல் பாலா சொன்னது…

நன்றி ஜோதி . நீங்க சொல்றது மாதிரி தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது உண்மைதான் ஆனா இங்கே வளரலியே.எதை வச்சு இப்படி சொல்றேன்னா கூடங்குளம் அணுமின் நிலையம் 2007 ல் செயல்படுத்த திட்டமிட பட்டிருந்தது , ஆனால்
நம்மவர்களுக்கு தொழில் நுட்பம் தெரியாததால்தான் இன்னும் அதை செயல்படவைக்கமுடியவில்லை .இதை சமீபத்தில் அவர்களே ஒப்புகொண்டிருக்கிறார்கள்.செயல்படவைப்பதற்கே சிரமம் என்றால் விபத்து வந்தால் எப்படியோ ?
உள்ளூர் காரனா வேற ஆகிட்டனா கொஞ்சம் பயம் ஜாஸ்திதான் ....

jothi சொன்னது…

வாங்க‌ கூட‌ல் பாலா,..

பொதுவாக‌ எல்லா ப்ராஜ‌க்ட்டுக‌ளும் மிக‌ச்ச‌ரியாக‌ சொன்ன நேர‌த்தில் முடிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. அத‌ன் பின் நிறைய‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் கூடாங்குள‌ம் ப்ராஜ‌க்டில் வேலை பார்த்தார்.ர‌ஸ்யாவின் project management team (PMT) மிக‌ க‌ண்டிப்பான‌து.மிக‌ சிறிய‌ பிழை என்றாலும் அந்த‌ ஃபைலை ரிஜெக்ட் செய்ய‌ப்ப‌டுகிற‌து. இத‌னால் க‌ண்டிப்பாக‌ கால‌ தாம‌த‌மாகும்.

ஒண்ணுமில்லா க‌த்திபாரா பால‌மே 3 வ‌ருட‌ம் கால‌ தாம‌த‌மான‌து.கூடாங்குள‌ம் மிக‌வும் முக்கிய‌மான‌ ஒன்று என்ப‌தால் அதிக‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌ப்ப‌டுகிற‌து.

jothi சொன்னது…

//இதை சமீபத்தில் அவர்களே ஒப்புகொண்டிருக்கிறார்கள்//

எங்கே ப‌டித்தீர்க‌ள் என‌ சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் bala

கூடல் பாலா சொன்னது…

வணக்கம் ஜோதி .தங்கள் தங்கள் நண்பர் ஒருவர் கூறியதாக சொல்லியிருந்தீர்கள் .ஆனால் எனது நண்பர்கள் நூற்றுக்கணக்கானோர் அணு மின் நிலையத்தில் வேலை செய்கிறார்கள் .அவர்கள் சொல்வதை வைத்துதான்
நான் கூறினேன் .மேலும் ஒரு சிறிய தகவல் நானும் கூடன்குளதில்தான் வசித்து வருகிறேன் .விரைவில்
எனது ப்ளாக் ல் இது குறித்த சில தகவல்களை தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன் .

jothi சொன்னது…

ந‌ல்ல‌து கூட‌ல் பாலா. நான் ஆவ‌லுட‌ன் காத்திருக்கிறேன். ந‌ன்றி

கருத்துரையிடுக