சனி, 30 மே, 2009

எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது.

ஒரே மாதிரியான பதிவுகளை படித்து போரடித்துவிட்டதால் நம் பேனாவை தூக்கியே ஆகவேண்டிய சூழ்னிலை ஏற்பட்டு விட்டது. மற்ற பதிவர்கள் தங்கள் மொக்கையை நிறுத்தும்வரை இந்த மொக்கை தொடரும். (அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துரேனு நாயகன் கமல் மாதிரியெல்லம் நான் சொல்லலைங்க,..)

  • 747 ரக விமானத்தல் முதன் முதலில் உருவாக்கிய போது 75000 வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. விமானத்தில் உட்கார்ந்து இருக்கும்போது நமக்கும் வெளிப்பகுதிக்கு உள்ள குறைந்தபட்ச தொலைவு 7.5 செ.மீ. (நம் மூளை நமக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் உள்ள தொலைவையே யோசிக்கிறது).
  • டைட்டானிக் கப்பலை தயாரிக்க 7 மில்லியன் டாலர் ஆனது. ஆனால் அதையே படமாய் எடுக்க 200 மில்லியன் டாலர் ஆனது.( சும்மாவா?? 717 மில்லியன்ல லாபம் பார்த்தானுங்க,..).
  • ஆண்களின் சட்டையில் பட்டன்கள் வலதுபுறம் இருக்கும், பெண்கள் சட்டையில் இடதுபுறம் இருக்கவேண்டும். ( அர்த்தனாரீஸ்வரிடம் இருந்து உருவான கான்சப்ட்டா??)
  • தலையை திருப்பாமலே பின்னால் பார்க்கும் வடிவமைப்பை முயலும்,கிளியும் கொண்டிருக்கின்றன. (நல்ல வேளை. நமக்கு இல்லை. சும்மாவே சைட்ல வர்ர பிகரை பாத்துட்டு, நடந்து போறவன் காலுக்குள்ள வண்டிய பார்க் பண்றானுங்க,..).
  • இதயம் பம்ப் செய்யும் ரத்தம் 30 அடிதூரத்திற்கு செல்லும். (மன்னிக்கவும்,.. எனக்கு இதயத்தின் discharge pressure மட்டுமே தெரியும்).
  • மூளையில் 80% நீரால் ஆனது, கைரேகை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று தெரிந்ததே. நாக்கின் ரேகையும் அப்படியே. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை (தண்ணி நிறைய குடிச்சா மூளை வளருமாங்க????).
  • உங்களின் முகரும் சக்தி பத்து வயதாக இருக்கும்போது உச்சத்தில் இருக்கும். (அதனாலதான் அம்மாவின் சாப்பாடு சூப்பர்னு சொல்றோமோ? ச்ச,.. தப்பு தங்கமணிகளிடம் இல்லங்க,.. நம்மிட்டதான் இருக்கு)
  • அமெரிக்கா மற்றும் கனடா மக்கள் தொகையைவிட நம் வாயில் இருக்கும் பாக்டீரியா எண்ணிக்கை அதிகம். (வாயில இருக்கற பாக்டீரியா O.K. மனசுல்ல இருக்கிறது???.)
  • 300 எலும்புகளுடன் பிறக்கும் நாம் வளர்ந்த பின் 206 எலும்புகளை மட்டுமே கொண்டு இருக்கிறோம். நம் தொடை எலும்புகள் காங்க்ரீட்டை விட வலிமையானவை. (அதனாலதான் பயந்தங்கொள்ளிகளை தொடை நடுங்கின்னு சொல்றோம்மோ???)
  • எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது. (அதனால்தான் எலி எல்லாத்தையும் தைரியமாய் தின்னுதோ??).
  • யானை 4.5 கி.மீ. தொலைவில் உள்ள தண்ணீரையும் கண்டுபிடித்துவிடும். (ம்ம்க்க்கும்,.. எனக்கு 4500 கிமீ தொலைவில் இருக்கிற client தண்ணி காட்டுரான்,.. ஒண்ணும் தெரியல்ல,..).
  • சுறாமீன்கள் ஒரு வருடத்தில் 6000 பற்களை இழக்கின்றன. ஆனால் பற்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து விடுகின்றன. (டெய்லி கொத்து கொத்தாய் முடி கொட்டுகிறது,.. எங்கே வளர்கிறது??? நிலத்தின் பரப்பு சுருங்குவது போல முடியின் பரப்பும் சுருங்கி கண்டே போகிறது,..கொஞ்ச நாளில் நிலவை உன் முகத்தில் பார்த்தேன்னு பாடிய அதே காதலி, சூரியனை உன் தலையில் பார்த்தேன்னு பாட ஆரம்பித்து விடுவாள்),..

சுவாரஸ்யங்கள் தொடரும்,..

18 கருத்துகள்:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த வரிகள் தாங்க... :)

//எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது. (அதனால்தான் எலி எல்லாத்தையும் தைரியமாய் தின்னுதோ??).//


வோட்டும் போட்டாச்சு :)

நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்திட்டுப்போங்க.. www.senthilinpakkangal.blogspot.com

jothi சொன்னது…

ரொம்ப நன்றி செந்தில். நான் உங்கள் வலைக்கு வந்து வெல்லம் சாப்ட்டுடேன். தமிழிஸில் மொய்யும் வச்சுட்டேன். துபாய்ல என்ன கம்பேனி???

jothi சொன்னது…

அடக்கடவுளே. தமிழிஸில் 13 வோட். பின்னூட்டம் ஒன்னே ஒன்னா? மொய் வைக்கிறவுங்க கொஞ்சம் giftம் வச்சிட்டு போங்களேன்,..

bala சொன்னது…

தங்கள் பதிவுகள் மிக நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

பக்கத்து வீட்டு அங்கிள் கூட ஜம்ப பண்ண மாட்டார்.. அவ்வளவு பெரிய தொப்பை.

அந்த அங்கிளோட மனைவி கூட வாந்தி எடுக்கமாட்டேங்குறான்னு தாய் புலம்புறா :D

jothi சொன்னது…

மிக்க நன்றி பாலா.அடிக்கடி என் வலைப்பக்கம் வாருங்கள்,..

jothi சொன்னது…

//பக்கத்து வீட்டு அங்கிள் கூட ஜம்ப பண்ண மாட்டார்.. அவ்வளவு பெரிய தொப்பை.

அந்த அங்கிளோட மனைவி கூட வாந்தி எடுக்கமாட்டேங்குறான்னு தாய் புலம்புறா :D///

ஹா ஹா ஹா,.. அருமையாக யானையும் எலியையும் சேர்த்துவிட்டீர்கள்,.. நல்ல ஜோக்,..

jothi சொன்னது…

நன்றி மதுவதனன்,..

பெயரில்லா சொன்னது…

மிகவும் ரசித்தேன்... நல்ல நகைச்சுவை.. தொடருங்கள்...

jothi சொன்னது…

ரொம்ப நன்றி கவின்,..

ஸ்ரீ.... சொன்னது…

வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

ஸ்ரீ....

jothi சொன்னது…

மிக்க நன்றி ஸ்ரீ....இன்னும் நன்றாக எழுத தொடர்ந்து முயற்சி செய்கிறேன்,..

கும்மாச்சி சொன்னது…

aiyaaa mokkai superunga

jothi சொன்னது…

மிக்க நன்றி கும்மாச்சி. அடிக்கடி வலைப்பக்கம் வந்து போங்கள்

கலகலப்ரியா சொன்னது…

:O:O:O

jothi சொன்னது…

அதென்னது? எல்லாத்துக்கும் ஓ போடுறீங்களா இல்லை எல்லாத்துக்கும் சைபர் போடுறீங்களா?? சாரிங்க,.கொஞ்சம் டீயுப் லைட்டுதான்,..என்ன பண்றது,?

ஆகாய நதி சொன்னது…

//
(தண்ணி நிறைய குடிச்சா மூளை வளருமாங்க????).
//

யாருக்கு??? :)))

சூப்பர் மிக்ஸர்... இது மொக்கை பதிவு இல்ல... :)

டிஸ்கி:

என்னை உருப்படியா ஏதாவது எழுதுனு சொன்னா எழுதிட்டு போறேன் அதுக்கு இப்படியா தனி பதிவே போட்டு சொல்லுறது... அவ்வ்வ்வ்...

jothi சொன்னது…

//யாருக்கு??? :)))

எனக்குதான்,..

//சூப்பர் மிக்ஸர்... இது மொக்கை பதிவு இல்ல... :)//

மிக்க நன்றி ஆகாய நதி.

//என்னை உருப்படியா ஏதாவது எழுதுனு சொன்னா எழுதிட்டு போறேன் அதுக்கு இப்படியா தனி பதிவே போட்டு சொல்லுறது... அவ்வ்வ்வ்...//

ச்சி,.. ச்சி,.. உங்களைப்போய் சொல்வேனா? உங்களின் கட்டுரைகள் ஒரே மாதிரி என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைரம். முத்து,பவளம்,மாணிக்கம் என பல வகைகள் இருந்தாலும் வைரம் வைரம்தானே??

கருத்துரையிடுக