வெள்ளி, 8 மே, 2009

கவித கவித

உழுதவனுக்கு உணவில்லை - நன்றாக
படித்தவனுக்கு வேலை இல்லை

நெய்தவனுக்கு உடை இல்லை - கடை
திறந்தவனுக்கு விலை இல்லை.

பொற்கொல்லொன் உருக்குகிறான் ஒரு கருகாமணிக்கு
நெல் விதைப்போன் உருகியே போய்விட்டான் ஒரு நெல்மணிக்கு,

சொல்லிக் கொடுப்பவனுக்கு கரும்பலகையில் வாழ்க்கை
கேட்டுப் பெற்றவனுக்கோ உலகம் முழுக்க யாத்ரை

அனைவருக்கும் உள்ளது வருமான வரி - இங்கே
அரசியல்வாதிக்கு மட்டும் தொப்பையில் வரி

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - வாழப்போகும்
இடமெல்லம் உதை வாங்கும் இனம் தமிழினம்

ஏழைக்கு மட்டுமே இலவச அரிசி - மற்ற
எல்லாருக்கும் இங்கே உள்ளது வாய்க்கரிசி

இந்தியாவில் இல்லையடா சுதந்திரம் - நீ
வாழும் வாழ்க்கை ஒரு கருமாந்திரம்.


பின் குறிப்பு
இது T Rajender எழுதிய கவித அல்ல,..நான் எழுதியதே,.. எல்லொரும் என்னயே துப்பலாம்,.. (T Rajenderன் சில பாடல்கள் உண்மையிலேயே சிறப்பானவை,.. ஒரு தலை ராகத்தில் வரும் இது குழந்தை பாடும் தாலாட்டு, வாசமில்லா மலரிது ஆகியவற்றின் பாடல் வரிகள் உச்ச கட்ட கற்பனையின் படைப்புகள்)

6 கருத்துகள்:

Thamira சொன்னது…

சுமார்.!

jothi சொன்னது…

ரொம்ப நன்றி ஆதி. அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நல்லா முயற்சி பண்ணுரேன்

Tech Shankar சொன்னது…

s u p e r

//இது T Rajender எழுதிய கவித அல்ல,..நான் எழுதியதே,..

jothi சொன்னது…

ரொம்ப நன்றி, இது போன்ற பின்னூட்டங்கள் என் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கிறது.

கலகலப்ரியா சொன்னது…

//இந்தியாவில் இல்லையடா சுதந்திரம் - நீ
வாழும் வாழ்க்கை ஒரு கருமாந்திரம்//

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு..

jothi சொன்னது…

ரொம்ப நன்றி கலகலப்ப்ரியா,. ஏழையின் குடிசைக்கு விஜயம் செய்ததிற்கு நன்றி.

கருத்துரையிடுக