திங்கள், 18 ஜனவரி, 2010

இறைவனை காண்போம்,

குழந்தையின் சிரிப்பில்,.

soooooooo cute,. .


ஞாயிறு, 17 ஜனவரி, 2010

பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்?



பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்?

இந்த கேள்விக்கு பறவைகள் பல அற்புதமான சுவாரஸ்யமான தத்துவங்களை நமக்கு சொல்லிவிட்டு செல்கின்றன. தொடர்ந்து படிக்க,..

நாம் பறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால் அவை ஒரே சீராக V வடிவத்தில் பறப்பதை காணலாம். சென்னையில் காக்கை மட்டுமே காண முடியும் என்பதால் கொஞ்சம் வெளியில் வந்து செங்கல்பட்டில் சீதோஷண காலங்களில் பார்த்தால், நீண்ட தொலைவிலிருந்து வரும் கொக்கு நாரை போன்ற வெளி நாட்டுப்பறவைகள் இந்த வடிவத்தில் பறப்பதை காணலாம். ஒரு பறவை முன்னணியில் பறந்தும் பின்னால் வரும் பறவைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதையும் பார்க்கலாம். பொதுவாக இதன் வடிவம் V என இருக்கும். அதன் காரணம் என்ன?


இந்த கேள்விக்கான பதிலானது மிக ஆழ்ந்து பார்க்கும் அறிவியலை நமக்கு தருகிறது. அதை மேலும் நாம் தெளிவாக உணர்ந்தால் ஒரு அற்புதமான மேலாண்மை தத்துவத்தை புரியவைக்கிறது.

ஒரு கேள்விக்கு இரணடு பதில்கள்.

காரணம் ஒன்று

பறவைகள் இது போல பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன. இதனால் அவை வெகு தூரம் அவை தொடர்ந்து பறக்க முடிகிறது. அவை தனியாக பறப்பதினால் பயன்படுத்தப்படும் ஆற்றலைவிட இது போல் V வடிவத்தில் பறப்பதினால் அவைகளின் ஆற்றலில் 70% வரை சேமிக்கின்றன.



பொதுவாக தனியாக ஒரு பறவை பறக்கையில் காற்றில் அதன் பின்னிழுக்கும் விசை (drag force) மிக அதிகமாக இருக்கும். பறவைகள் இது போல V வடிவில் பறப்பதால் அதன் பின்னுழுக்கும் விசை வலுவிழந்து சமதனப்படுத்தப்பட்ட மிதக்கும்விசை காரணமாக பறவைகள் தொடர்ந்து வெகு தூரம் இலகுவாக பறக்கின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து பறவைகளும் இதன் காரணமாக எளிதாக பறப்பதில்லை.




மேலே உள்ள பறவைகளில் சிவப்பால் வட்டமிடப்பிட்டவை, காற்றிற்கு எதிராக பறக்கையில் அதிகபட்ச உராய்வினால் மிக அதிக ஆற்றலை எடுத்துக்கொள்கின்றன. எனவே மிக விரைவில் சோர்வடைகின்றன. அப்படி சோர்வடையும்போது பின்னால் வருகிற பறவைகள் தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டு முன்னே வந்து தொடர்ந்து பறக்கின்றன. சோர்வடைந்த பறவை பின்னே தொடர்ந்து வரும். இப்படியே தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொடர்ந்து பறக்கின்றன. இதன் காரணமாக அனைத்து பறவைகளும் தலைமை பொறுப்பை ஏற்கிற வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் சோர்வடையும் போது நடுவில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன.

காரணம் இரண்டு

இது போல பறப்பதால் எந்த பறவையும் அதன் சக பறவையை எந்த நிலையிலும் பார்க்க முடியும். இதனால் மிக நீண்ட தூரம் பறக்கையில் அனைத்துப்பறவையும் சக பறவைகளின் பார்வையில் இருக்கும். தொலைந்து விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் அவை தொடர்ந்து கூட்டத்தை பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.

கற்றது கல்வி (lessons learned)

In Science

ஆற்றலை மிச்சப்படுத்துதல் (utilization energy) - முறைப்படுத்தப்பட்ட சமச்சீர் விசையின் காரணமாக பறவைகள் தங்கள் ஆற்றலை 70% வரை மிச்சப்படுத்துகிறது. நாம் மதியம் பன்னிரெண்டு மணிக்கு நல்ல சூரிய வெளிச்சத்தில் எல்லா திரைசீலையையும் இறக்கிவிட்டு அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான விளக்குகளை எரிய வைத்துக்கொண்டிருக்கிறோம். கேட்டால் ஆற்றல் சிக்கன பல்ப் (energy efficient bulb ) என பதில் வேறு,..

In Management

மேலாண்மையில் இது ஒரு நல்ல முறைப்படுத்தப்பட்ட சிஸ்டம் (organized system). இந்த பறவையின் கூட்டத்தில் எந்த பறவைக்கும் எந்த நிலையும் (position) நிரந்தரம் இல்லை. முன், பின், நடு, ஓரம், விளிம்பு என அனைத்து நிலையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து பிறந்தும் பின் செத்தும் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவைகளின் காலங்காலமான இந்த வேடந்தாங்கல் வாழ்க்கை சுழற்சி,..? ஆம்,. அது அழிவதில்லை.. வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே போல ஒரு நிறுவனத்தில் யார் எந்த பதவியை விட்டு சென்றாலும் அதன் செயல் பாதிக்ககூடாது. அதன் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டு இருக்க வேண்டும். அதுவே சிறந்த நிறுவனம். உங்கள் நிறுவனம் அப்படிப்பட்டதா???




பதிவு பிடித்து இருந்தால் தமிழீஷில் ஒரு ஓட்டு.




வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டே,..

ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அது புத்தாண்டே,.

2009 ஆண்டில் கடைபிடித்தது
பதிவுலகம் பொழுதுபோக்கே. முக்கிய கடமைகள் இருக்கும் போது பதிவுகள் எழுத/படிக்க வேண்டிய அவசியமில்லை.( வருட கடைசியில் 4 மாதம் முழுக்க எழுதவில்லை,.)

2010 ஆண்டில் கடைபிடிக்க வேண்டியது
எதற்காக பதிவு போடுகிறோம் என அறிந்து அடுத்தவரின் காலத்தையும் நம் காலத்தையும் வீணடிக்காமல் பதிவு போட வேண்டும். நோக்கம் இல்லாத எந்த பதிவும் குப்பையே. அறிவியல்/தொழில்நுட்பம்/விவசாயம் சம்பந்தமான பதிவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என இருக்கிறேன் (அவைதான் கேட்பாரற்று கிடக்கின்றன).

அலசி, ஆராய்ந்து, உள்வாங்கி, தக்க சமயத்தில், வெளிக்கொணரும் எந்த காரியமும் வெற்றியே,..

அதை இந்த டைகர் உட்ஸின் அற்புதமான, நினைத்தே பார்க்கமுடியாத இந்த ஷாட் சொல்லும்.

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Just do it,..





.